PDA

View Full Version : காளான் குழம்பு

அனுராகவன்
27-01-2008, 01:04 AM
காளான் குழம்பு

தேவையான பொருட்கள் :

காளான் 200 கிராம்

மிளகு 25 கிராம்

ஏலக்காய் 5

பட்டை சிறிய துண்டு

கிராம்பு 4

பூண்டு 1

தேங்காய் 1 (துருவியது)

தக்காளி 4

பெரிய வெங்காயம் 2

கறிவேப்பிலை சிறிதளவு

மல்லித்தூள் 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

செய்முறை :

மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

காளானை கழுவி அதை இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு தக்காளியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, காளான், முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலாத்தூள் ஆகியவற்றையுப் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு அத்துடன் வெங்காயம், தக்காளியையும் சேர்த்துக் கிளர வேண்டும். தேங்காய்ப் பாலையும் அத்துடன் விட்டுக் கலக்கவும். இறுதியில் மல்லித்தூள், மிளகாயத் தூள் அதில் உப்பும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

என் வாழ்த்துக்கள்
-அனு

ஓவியன்
27-01-2008, 02:12 AM
ஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......!! :aetsch013:

சும்மா, லுலுவாயிக்கு.......
பகிர்வுக்கு நன்றி அனு...!! :)

ஜெயாஸ்தா
27-01-2008, 02:21 AM
ஆஹா... என்னது களானா? எனக்குப் பிடிக்குமே...! சும்மா லுலுவாயிக்கு இல்லங்க உண்மையாக காளன் சுவைக்கு நான் அடிமை. அதிலும் செயற்கையாய் விளைவித்த காளான்களை விட, இயற்கையான காளான்களின் சுவை அதிகம். முதல்நாள் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தால் மயில்களுக்கு மகிழ்ச்சி வருமோ இல்லையோ என் மனம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அதிகாலையில் என் பாட்டி எழுந்து தோப்பு, வயல்களுக்கு பார்வையிட சென்றுவிட்டு வரும்போது, காளான்களை பிடுங்கி வருவார். அதை அப்படியே முழு வெங்கயாத்துடன் சேர்த்து வறுத்து சாப்பிடும் சுவை... அப்பப்பா...... செத்துப்போன என் பாட்டியை நினைவுபடுத்திவிட்டீர்களே அனு.... !

மலர்
27-01-2008, 02:25 AM
ஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......!! :aetsch013:
ஓவியண்ணா...அக்கம் பக்கம் திரும்பாம மூக்கு முட்ட புடிச்சது மறந்துபோச்சா... :fragend005: :fragend005:
அனு அக்கா படிக்கிறப்போ ஈஸியா தான் இருக்கு...
செய்து பாத்தால் தான் தெரியும்.... :rolleyes: :rolleyes:
பகிர்வுக்கு நன்றி,,,,

தங்கவேல்
27-01-2008, 02:25 AM
அனுவுக்கு வாழ்த்துக்கள். சமையல் பற்றி எழுதினால் தான் எதிர் தாக்குதல் வராது என்று நினைத்திருப்பார் போல. அனுவின் பதிப்புகள் மன்றத்தை அலங்கரிக்க வேண்டும். காளான் சாப்பிட்டது இல்லை. முயற்சிக்கனும்...

அனுராகவன்
27-01-2008, 01:51 PM
ஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......!! :aetsch013:

சும்மா, லுலுவாயிக்கு.......
பகிர்வுக்கு நன்றி அனு...!! :)

ஒரு தடவ செய்து பாருங்கள் ஓவியன்..
நாந்தான் செய்முறையே கொடுத்திருக்கிறேனே..
அப்பரம் தெரியும் அதன் சுவை..
ம்ம் லொள்ளுக்கு கூட இருக்கு..
என் நன்றி

அனுராகவன்
27-01-2008, 01:56 PM
முதல்நாள் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தால் மயில்களுக்கு மகிழ்ச்சி வருமோ இல்லையோ என் மனம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அதிகாலையில் என் பாட்டி எழுந்து தோப்பு, வயல்களுக்கு பார்வையிட சென்றுவிட்டு வரும்போது, காளான்களை பிடுங்கி வருவார்.

ஓ அப்படியா பாட்டி இல்லையினா பரவாயில்லை.
நீங்களே செய்துபாத்துவிட்டு பதில் சொல்லுங்க ஜெயஸ்தா...
ம்ம் என் நன்றி உங்களுக்கு

அனுராகவன்
27-01-2008, 02:00 PM
சமையல் பற்றி எழுதினால் தான் எதிர் தாக்குதல் வராது என்று நினைத்திருப்பார் போல. அனுவின் பதிப்புகள் மன்றத்தை அலங்கரிக்க வேண்டும். காளான் சாப்பிட்டது இல்லை. முயற்சிக்கனும்...

நண்பரே தங்கவேல் அவர்களே !!
முதலில் என்ன எதிர் தாக்குதல் புரியலையே என்ன..??
அப்பரம் ஒருதடவை சுவைத்து பாருங்க...

அமரன்
27-01-2008, 05:44 PM
சுவையான குழம்பு.. மல்லித்தூளுக்குப் பதிலாக ஒரு நெட்டு மல்லி இலை போட்டால் சுவை அதிகரிக்கும்.. இதுபோன்ற சமயல்குறிப்புகளை தொடர்ந்து கொடுங்கள் அனு.

செல்வா
27-01-2008, 06:25 PM
ஆகா... யவனியக்கா யவனியக்கா... தம்பிக்கு ஒரு பார்சல் ஜித்தாக்கு....

செய்து பாத்தால் தான் தெரியும்.... :rolleyes: :rolleyes:

அதானே.. உங்களுக்கு செய்யறத பாக்க மட்டும் தானே தெரியும்..... :p

அனுராகவன்
27-01-2008, 10:09 PM
ஆகா... யவனியக்கா யவனியக்கா... தம்பிக்கு ஒரு பார்சல் ஜித்தாக்கு....

அதானே.. உங்களுக்கு செய்யறத பாக்க மட்டும் தானே தெரியும்..... :p

ஆமாம் செல்வா..
நீங்கள் சொல்வது சரியே..
செல்வா நீங்கள் செய்து பாருங்களேன்..
இதை யாரும் செய்யலாம்..
மிக எளிது.

அனுராகவன்
27-01-2008, 10:12 PM
மல்லித்தூளுக்குப் பதிலாக ஒரு நெட்டு மல்லி இலை போட்டால் சுவை அதிகரிக்கும்..

ம்ம் நல்ல அனுபவம் போல..
வெளிநாடுகளில் ஆண்களும் தனியேதான் சமைக்கிறார்கள்..
அதற்கு சுவை அதிகம்தான்

ஆதவா
28-01-2008, 01:39 AM
அடடே! காளான் குழம்பா?

இந்த செய்முறை உங்களுடையது என்றால் அதைப் பரீட்ச்சித்துப் பார்க்க எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? சமையல் குறிப்பு என்றாலே இப்போதெல்லாம் பயம்தான்.

இப்படித்தான் ஒருமுறை என் மனைவியை சத்தம் போட்டு காளான் குழம்பு வைக்கச் சொன்னேன். என்ன கோபத்தில் இருந்தாலோ தெரியவில்லை. காரத்தை அதிகம் போட்டு காளானைக் குறைத்துவிட்டாள்.. சதிகாரி.. (சதின்னாலே மனைவின்னு அர்த்தம்... அப்போ சதிகாரி? என்னையா???) அன்றைக்கு உடல் எல்லாம் எரியத் துவங்கியது. என் மனைவியோ அதில்தான் குளிர் காய்ந்தாள்.. அதனால் காளான் குழம்புக்கும் எனக்கு ஆகவே ஆகாது...

சரி நாம்தான் செய்வோமே என்று சிரமப்பட்டு செய்தால், குழம்பில் வெறும் தண்ணீருடன் காளான் இருந்தது... அதனோடு என்னென்ன போடுவது என்றே தெரியவில்லை. ஒரே குழப்பம். அன்று எடுத்த முடிவுதான். இனிமேல் காளான் குழம்பே சாப்பிடுவதில்லை என்று........

இதெல்லாம் நடந்து இருபத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்டது சகோதரி. இப்போது என் பேத்தி நன்றாக சமைக்கிறாள். ஹி ஹி சாப்பிடத்தான் பற்கள் இல்லை..

நல்ல பதிவு...
வாழ்த்துகள்

யவனிகா
28-01-2008, 03:20 PM
செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் அனு. நல்லா வந்தா நான் சாப்பிடறேன். வரலேன்னா அதுக்குன்னு ஆளு வெச்சிருக்கமல்ல...
அவங்க தலையில கட்டிட வேண்டியது தான். குறிப்புக்கு நன்றி அனு.

மலர்
28-01-2008, 03:57 PM
இப்படித்தான் ஒருமுறை என் மனைவியை சத்தம் போட்டு காளான் குழம்பு வைக்கச் சொன்னேன்.
இதெல்லாம் நடந்து இருபத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்டது சகோதரி. இப்போது என் பேத்தி நன்றாக சமைக்கிறாள். ஹி ஹி சாப்பிடத்தான் பற்கள் இல்லை..
:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused:

பென்ஸ்
28-01-2008, 04:00 PM

:confused::confused::confused::confused::confused::confused::confused:

மலர்
28-01-2008, 04:06 PM
:confused::confused::confused::confused::confused::confused::confused:
அது புரியாம தான் நாங்களும் போட்டிருக்கமில்ல.....
விளக்கம் குடுக்குற உட்டுட்டு நீங்களும் :confused: இப்பிடி போட்டா..:icon_rollout:

ஆதவா
28-01-2008, 04:15 PM
:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused:

:confused::confused::confused::confused::confused::confused::confused:

அது புரியாம தான் நாங்களும் போட்டிருக்கமில்ல.....
விளக்கம் குடுக்குற உட்டுட்டு நீங்களும் :confused: இப்பிடி போட்டா..:icon_rollout:

;););););););););)

மலர்
28-01-2008, 04:17 PM
;););););););););)
ம்ம் சுத்தமா ஒண்ணும் புரியலை..... :fragend005: :fragend005:
ஈஈஈஈஈஈஈஈ.... :sauer028: :sauer028:
ஏன் இப்பிடி.. :traurig001: :traurig001:

meera
28-01-2008, 11:43 PM
அட நன்றி அனு.

இதுக்கு போயி ஐஎஸ்டி போட்டு அம்மாவை உயிர வாங்கி செய்தா அப்படியும் சரியா வரலை.பாவம் சாப்டவர் ஒன்னும் சொல்லமுடியாம ஒருவலியா சாப்ட்டார்

meera
28-01-2008, 11:49 PM
ம்ம் சுத்தமா ஒண்ணும் புரியலை..... :fragend005: :fragend005:
ஈஈஈஈஈஈஈஈ.... :sauer028: :sauer028:
ஏன் இப்பிடி.. :traurig001: :traurig001:

கவலைபடாதே மலரு, அதுக்கெல்லாம் ஆதவா மதிரி புத்திசாலியா இருக்கோனும்.
:aetsch013::aetsch013:

தங்கவேல்
29-01-2008, 12:09 AM
செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் அனு. நல்லா வந்தா நான் சாப்பிடறேன். வரலேன்னா அதுக்குன்னு ஆளு வெச்சிருக்கமல்ல...
அவங்க தலையில கட்டிட வேண்டியது தான். குறிப்புக்கு நன்றி அனு.

அய்யயோ ..... இதுக்கு பேர் தான் சத்தமில்லாமல் கொலை செய்வதோ....

அனுராகவன்
30-01-2008, 12:38 PM
தங்கவேல்Quote:
Originally Posted by யவனிகா
செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் அனு. நல்லா வந்தா நான் சாப்பிடறேன். வரலேன்னா அதுக்குன்னு ஆளு வெச்சிருக்கமல்ல...
அவங்க தலையில கட்டிட வேண்டியது தான். குறிப்புக்கு நன்றி அனு.

அய்யயோ ..... இதுக்கு பேர் தான் சத்தமில்லாமல் கொலை செய்வதோ....
என்ன செய்வது சில மனிதர்களின் நடத்தையே ....
ம்ம் சமையல்பக்கம் சண்டை வேண்டாம்
என் நன்றி

அனுராகவன்
30-01-2008, 12:42 PM
அட நன்றி அனு.

இதுக்கு போயி ஐஎஸ்டி போட்டு அம்மாவை உயிர வாங்கி செய்தா அப்படியும் சரியா வரலை.பாவம் சாப்டவர் ஒன்னும் சொல்லமுடியாம ஒருவலியா சாப்ட்டார்

நன்றி மலர்..
அப்ப சாப்பிட்டவர் உடல்நிலை எப்படியிருக்கு.
ம்ம் தொடர்ந்து வாருங்கள்

விகடன்
23-05-2008, 05:39 AM
காளான் கறி....
சிறுவயதில் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல காளான், பேய்க்காளான் என்று சொல்லி தவத்தி எடுப்பர். எனக்கு சாப்பிட மட்டுமே தெரியும் ;) .

இருந்தாலும் ஒரு தடவை முயற்சிக்கலாம். பகிர்விற்கு நன்றி அனு.

Narathar
24-05-2008, 08:53 AM
அசைவப்பிரியர்களை சைவமாக்க காளான் கறி மிக்க உதவும்

SathyaThirunavukkarasu
24-05-2008, 11:41 AM
அனு நான் முயற்சி செய்தேன் நல்லா இருக்கு

மிக்க நன்றி

இதுவரை நான் காளான் மசாலா, காளான் 65 தான் செய்திருக்கிறேன் இதுவும் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது

சுட்டிபையன்
24-05-2008, 11:43 AM
ஆஹா காளான் கறியா, எனக்கு பிடிக்காதே......!! :aetsch013:

சும்மா, லுலுவாயிக்கு.......
பகிர்வுக்கு நன்றி அனு...!! :)

ஆகா காளான் கறியா எனக்கு ரொம்ப பிடிக்கும்
உண்மையாதான். அனு அக்கா ஒர்ர் ஆன்டி கிட்ட சொல்லி உங்க பங்க எனக்கு அனுப்பிடுங்க:icon_rollout::icon_rollout:

http://images.google.com/imgres?imgurl=http://bp3.blogger.com/_PrAvgW_UQiM/RngZDQXYvyI/AAAAAAAAAj0/Bh9NUg0Gmy0/s400/mushrooms1.jpg&imgrefurl=http://foodandspice.blogspot.com/2007_06_01_archive.html&h=300&w=400&sz=32&hl=en&start=3&tbnid=dqqPiP14cE91FM:&tbnh=93&tbnw=124&prev=/images%3Fq%3Dmushroom%2Bcurry%26gbv%3D2%26hl%3Den

அமரன்
24-05-2008, 01:13 PM
காளான் சாப்பிட்டா உடம்பு போடாதாங்கிறதையும் சொல்லுங்கள்.. இப்பவே சில வீடுகளில் கதவுகளை பெரிதாக்குவதாக கேள்விப்பட்டேன்..

ஓவியன்
25-05-2008, 08:19 AM
அசைவப்பிரியர்களை சைவமாக்க காளான் கறி மிக்க உதவும்

அசைவப்பிரியர்களைக் காளான் கறி சைவமாக்குகிறதா, இல்லை சைவமான அசைவப்பிரியர்கள் காளான் கறியை அசைவக் கறிகளுக்கு இணையாகக் கருதுகிறார்களா...???

ஓவியன்
25-05-2008, 08:24 AM
இதெல்லாம் நடந்து இருபத்திமூன்று வருடங்கள் ஆகிவிட்டது சகோதரி. இப்போது என் பேத்தி நன்றாக சமைக்கிறாள். ஹி ஹி சாப்பிடத்தான் பற்கள் இல்லை..

அடடே ஆதவாவின் வயது கூட இப்படித்தான் வெளியே தெரிகிறது...:aetsch013:

சூரியன்
25-05-2008, 09:05 AM
பகிர்வுக்கு நன்றி அக்கா.