PDA

View Full Version : இனிய வாழ்த்துஅனுராகவன்
27-01-2008, 12:55 AM
என் இனிய தமிழ்நெஞ்சங்களே-வாழ்த்துக்கள்
தமிழை உங்கள் மொழியாக்கி கொண்டதற்கு
எத்தனையோ மொழிகள் உலகில் இருக்கலாம்
தமிழுக்கு அவற்றுக் கிணைக் கிடையாது..!

பழந்தமிழர் தமிழை உயிரேனும் போற்றி காலமும் உண்டு
இன்றைய தமிழரும் அவ்வாறே இருக்க வேண்டும்.
அப்படி நீங்கள் இருந்தால் முதலில் உங்களுக்குதான்
என் முதல் வாழ்த்துக்கள்!!

வெளிநாட்டில் சிலந்தமிழர் தமிழை(டமில்) என்று
செல்வது அந்த நொடியே என் உயிர் மரித்துவிடுகிறது!

எத்தையோ தமிழ் இணையம் இருந்தாலும் தமிழ் மன்றம்
அவற்றுள் சிறப்பு!

நாமெல்லாம் ஒரு குடும்பம்
அதனால் நாம் காண்போம் இன்பம்
பிறகு நமக்கேது துன்பம்
வாருங்கள் தமிழ வளர்க்க எழுதுவோம் புது கதம்பம்!

தமிழா!!
என்ன தவம் செய்தோம் நமக்கு தமிழ் கிடைக்க
மறுப்பிறவி கிடைக்குமோ இதையடையா
இப்பிறவியே பயன்படுத்திக் கொள் தமிழா!!!!
வாழ்த்துக்கள் ஏராளம் அதனை சொல்ல
எழுத்துக்கள் தாராளம்...!!

ம்ம் வாழ்க தமிழ் ,,,!!
வாழ்க தமிழ் மன்றம்..!!
வாழ்க தமிழ்நெஞ்சங்கள்...!!
வாழ்த்த வேறு வார்த்தையுமில்லை...!!
வாழ்க வாழ்க...!!
வாழ்த்துக்கள்!!!

-அனு

அனுராகவன்
30-01-2008, 11:46 PM
வாழ்த்துக்கள் ஏராளம் அதில் இதுவும் ஒன்று வந்து பாருங்கள்..
என் நன்றி

ஜெகதீசன்
02-02-2008, 08:47 AM
அனு அக்கா::icon_b:

அருமையான தமிழ்க்கவிதைக்கு
இந்த வெளிநாடுவாழ் தமிழனின்
நல் வாழ்த்துக்கள்:icon_rollout::icon_rollout::icon_rollout:

அமரன்
02-02-2008, 09:25 AM
வாழ்வுதரும் தமிழுக்கும் மன்றுக்கும் தமிழில் ஒரு வாழ்த்து என்று வெறுமனே சொல்லிச்செல்ல முடியவில்லை.
வெளிநாடு வாழ் தமிழன் மட்டும் கொச்சையாக டமிழ் பேசுகிறான் என்பதை மென்மையாக மறுதலிக்கிறேன்...
விகிதசாரத்தின் அடிப்படையில் புலம்பெயர் தமிழர்களிடத்தில் அழகுதமிழ் அதிகமாக வாழ்கிறது அனு.
வாழ்த்தில் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கு வாழ்த்துகிறேன். உங்களுக்கு நன்றி நவில்கிறேன்.

சுகந்தப்ரீதன்
02-02-2008, 09:45 AM
அமரண்ணா.. நீங்கள் சொல்வதும் சரிதான்..! பிறந்த இடத்திலும் சரி புலம்பெயர்ந்த இடத்திலும் சரி.. தமிழை நேசிப்பவர்கள் தமிழை தரமாகத்தான் வைத்திருக்கிறார்கள்..! அதே சமயம் அனு அக்கா கூறுவது போல சில காட்சிகளும் எல்லா இடங்களிலும் நாம் காணக்கிடைப்பவைதான்...!

வாழ்த்துக் கவிதைக்கு வாழ்த்துக்கள் அக்கா..!!

அனுராகவன்
03-02-2008, 05:05 AM
அனு அக்கா::icon_b:

அருமையான தமிழ்க்கவிதைக்கு
இந்த வெளிநாடுவாழ் தமிழனின்
நல் வாழ்த்துக்கள்:icon_rollout::icon_rollout::icon_rollout:

ம்ம் நன்றி தம்பி..
நீங்க எந்த ஊர்..
எங்கு வசிக்கிரீகள்..
ம்ம் நன்றி மீண்டும் வாருங்கள்..

அனுராகவன்
03-02-2008, 05:11 AM
வாழ்வுதரும் தமிழுக்கும் மன்றுக்கும் தமிழில் ஒரு வாழ்த்து என்று வெறுமனே சொல்லிச்செல்ல முடியவில்லை.
வெளிநாடு வாழ் தமிழன் மட்டும் கொச்சையாக டமிழ் பேசுகிறான் என்பதை மென்மையாக மறுதலிக்கிறேன்...

என்ன செய்ய அமரனே..
வெளிநாடுகளில் சில மனிதர்கள் தமிழர்கள் என்ற போர்வை உடலுக்கு மட்டும்தான்..
உள்ளே ஆங்கிலதான் இருக்குமே தவிர தமிழா..
நாம் தமிழில் பேசினாலும் ...
இழிவான திட்டுதான் கிடைக்கும்..
ம்ம் தொடர்ந்து வாருங்கள்..

இதயம்
03-02-2008, 05:27 AM
என் இனிய தமிழ்நெஞ்சங்களே-வாழ்த்துக்கள்
தமிழை உங்கள் மொழியாக்கி கொண்டதற்கு
எத்தனையோ மொழிகள் உலகில் இருக்கலாம்
தமிழுக்கு அவற்றுக் கிணைக் கிடையாது..!

-அனு
உங்களின் தமிழார்வம் மெய் சிலிர்க்க வைக்கிறது . தாய் மொழியாம் தமிழ் மொழியில் பேசுவதும், எழுதுவதும், அதை கேட்பதும் பெரும் இன்பம். உள்ளத்தின் உணர்வுகளை உள்ளது உள்ளபடி உயிர்ப்புடன் மற்றவர்க்கு வெளிப்படுத்த தாய் மொழியே உதவும். அதனால் தன் நம் மன்றத்தின் ஒவ்வொரு பதிவும் உயிர்ப்புடன் உண்மையாய் இருக்கிறது. என்னைக்கேட்டால் புலம் பெயர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் தான் மற்றவர்களை விட தமிழை போற்றுகிறார்கள், வளர்க்கிறார்கள் என்பது கருத்து. அதற்கு உதாரணமாக நம்மையே சொல்லலாம்..!! காரணம், அவற்றை பிரிந்ததால் ஏற்பட்ட இழப்பு கொடுக்கும் ஈர்ப்பு.! பொதுவாக நாம் தமிழில் பேசி எழுத வேண்டிய இடத்தில் ஆங்கிலத்தை அணுகுகிறோம். இங்கோ தமிழை பிரிந்ததால் ஆங்கிலம் புழங்கும் இடத்தில் தேடி, தேடி தமிழ் பேசி, எழுதுகிறோம். ஆனால், எப்போதும் தன்னுடன் தமிழை வைத்திருப்பவர்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை..! ஆக, பிரிதல் மட்டுமே புரிதலை ஏற்படுத்தும்..!!

உங்களின் தமிழ் தாகம் மென்மேலும் வளர வாழ்த்துக்களையும், உங்களின் தமிழ் மொழி தொடர்பான வாழ்த்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெகதீசன்
03-02-2008, 11:22 AM
ம்ம் நன்றி தம்பி..
நீங்க எந்த ஊர்..
எங்கு வசிக்கிரீகள்..
ம்ம் நன்றி மீண்டும் வாருங்கள்..


செந்தமிழ் சகோதரியே:lachen001:

நானொரு தஞசை மாவட்ட தமிழன்.
உலகம் சுற்றும் வாலிபன் பணத்திற்காக,:icon_rollout::icon_rollout::icon_rollout:
தற்போதிருப்பது மேற்குஆப்ரிக்காவில் ஸனேகல் தலைநகரமான டக்கார்

கேட்கத்தோன்றியமைக்கு நன்றிகள் பல:icon_b:

அனுராகவன்
05-02-2008, 02:05 PM
செந்தமிழ் சகோதரியே:lachen001:

நானொரு தஞசை மாவட்ட தமிழன்.
உலகம் சுற்றும் வாலிபன் பணத்திற்காக,:icon_rollout::icon_rollout::icon_rollout:
தற்போதிருப்பது மேற்குஆப்ரிக்காவில் ஸனேகல் தலைநகரமான டக்கார்

கேட்கத்தோன்றியமைக்கு நன்றிகள் பல:icon_b:

நன்றி ஜெகதீசன்...!
ம்ம் என் வாழ்த்துக்கள்..!!
ஓ நம்ம ஊரா..!!
ம்ம் கலக்க வாருங்கள்..!!
எனக்கு சந்தோசம்தான்.!!

ஆதவா
05-02-2008, 02:30 PM
இன்னும் என்ன சொல்ல.. தமிழ் என்ற ஒரு பழம்பெரும் மொழியை ஆளூமை செய்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

அதில் வார்த்தைகள் பலவற்றை விளையாடுகிறேன். கவிதைகள் கதைகள் என தமிழ் என் நாவிலும் கையிலும் ஆடுகிறது... அடேயப்பா.....

இந்த தமிழ்மகளைக் காதலிக்காத தமிழர்கள் இருக்கிறார்களே அவர்களை என்ன செய்யலாம்?

நாளை தமிழ்மன்றம் ஒரு பெரும் இணையமாகத் திகழும்.. அப்போது எனது எழுத்துக்கள் இங்கே இருக்கிறது என்பதை நினனத்துப் பெருமிதம் கொள்வேன்...

வாழ்த்துகள் அனு.

அனுராகவன்
07-02-2008, 04:26 PM
இன்னும் என்ன சொல்ல.. தமிழ் என்ற ஒரு பழம்பெரும் மொழியை ஆளூமை செய்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.

அதில் வார்த்தைகள் பலவற்றை விளையாடுகிறேன். கவிதைகள் கதைகள் என தமிழ் என் நாவிலும் கையிலும் ஆடுகிறது... அடேயப்பா.....

இந்த தமிழ்மகளைக் காதலிக்காத தமிழர்கள் இருக்கிறார்களே அவர்களை என்ன செய்யலாம்?

நாளை தமிழ்மன்றம் ஒரு பெரும் இணையமாகத் திகழும்.. அப்போது எனது எழுத்துக்கள் இங்கே இருக்கிறது என்பதை நினனத்துப் பெருமிதம் கொள்வேன்...

வாழ்த்துகள் அனு.

ம்ம் நன்றி ஆதவா..
ம்ம் தொடர்ந்து வாங்க..

ஜெகதீசன்
07-02-2008, 04:43 PM
ம்ம் நன்றி ஆதவா..
ம்ம் தொடர்ந்து வாங்க..
கையில ஐஸ்கட்டியோட வந்தா
வரவேற்பு பலமா இருக்குமோ:smilie_abcfra: ?:icon_rollout::icon_rollout::icon_rollout:

இளசு
07-02-2008, 06:54 PM
அனு அவர்களே

உங்கள் தமிழ்ப்பற்றும் , மன்றப்பாசமும் அருமை!

வாழ்த்துகள்!

அனுராகவன்
07-02-2008, 10:06 PM
அனு அவர்களே

உங்கள் தமிழ்ப்பற்றும் , மன்றப்பாசமும் அருமை!

வாழ்த்துகள்!

நன்றி இளசு..
ம்ம் தொடர்ந்து வாங்க..
ம்ம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

சாலைஜெயராமன்
12-02-2008, 04:04 PM
என்னைக்கேட்டால் புலம் பெயர்ந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் தான் மற்றவர்களை விட தமிழை போற்றுகிறார்கள், வளர்க்கிறார்கள் என்பது கருத்து. அதற்கு உதாரணமாக நம்மையே சொல்லலாம்..!! காரணம், அவற்றை பிரிந்ததால் ஏற்பட்ட இழப்பு கொடுக்கும் ஈர்ப்பு.! பொதுவாக நாம் தமிழில் பேசி எழுத வேண்டிய இடத்தில் ஆங்கிலத்தை அணுகுகிறோம். இங்கோ தமிழை பிரிந்ததால் ஆங்கிலம் புழங்கும் இடத்தில் தேடி, தேடி தமிழ் பேசி, எழுதுகிறோம். ஆனால், எப்போதும் தன்னுடன் தமிழை வைத்திருப்பவர்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை..! ஆக, பிரிதல் மட்டுமே புரிதலை ஏற்படுத்தும்..!!
.

பிரிதல் மட்டுமே புரிதலை ஏற்படுத்தும். அருமையாகச் சொன்னீர்கள் திரு இமயம். தமிழைக் கொலைசெய்ததில் சென்னைக்கு பெரும் பங்கு உண்டு. அதற்கு வட்டாரத் தமிழ்மட்டுமல்ல காரணம். நுனி நாக்கு ஆங்கில அறிமுகம் சென்னையிலிருந்துதான் வந்திருக்கவேண்டும். மாநிலத் தலைநகரில் தாய்மொழியாம் தமிழுக்கு மரியாதை இல்லாத இடம். ஆட்டோக் காரர் முதல் கடற்கரை சுண்டல் விற்பவர்வரை ஆங்கிலம் பேசும் தாகம் கொண்டவர்கள் மிக அதிகமாக ஆக்கிரமிப்பு செய்ததில் சென்னைக்கு தாழ்வுதான். பிற ஊர்களிலிலாவது கொஞ்சம் பரவாயில்லை. சென்னை சென்றால் வேற்று நாட்டுக்குச் சென்ற உணர்வுதான் ஏற்படும்.

aren
12-02-2008, 04:08 PM
வாழ்த்துக்கள் அனு. கவிதை நன்றாக இருக்கிறது. தமிழை டமில் என்று பலர் சொல்கிறார்கள். அதில் நானும் ஒருவன். ஆங்கிலத்தில் பேசும்பொழுது தமிழ் என்பதை டமில் என்று உச்சரித்தாலே தமிழ் தெரியாதவர்களுக்கு புரிகிறது. அதே போல் தமிழ் என்பதை டமில் என்றே ஆங்கிலத்தில் நாம் எழுதுகிறோம். என்ன செய்வது.

தொடருங்கள்.

நாகரா
14-02-2008, 05:17 AM
என் இனிய தமிழ்நெஞ்சங்களே-வாழ்த்துக்கள்
தமிழை உங்கள் மொழியாக்கி கொண்டதற்கு
எத்தனையோ மொழிகள் உலகில் இருக்கலாம்
தமிழுக்கு அவற்றுக் கிணைக் கிடையாது..!

பழந்தமிழர் தமிழை உயிரேனும் போற்றி காலமும் உண்டு
இன்றைய தமிழரும் அவ்வாறே இருக்க வேண்டும்.
அப்படி நீங்கள் இருந்தால் முதலில் உங்களுக்குதான்
என் முதல் வாழ்த்துக்கள்!!

வெளிநாட்டில் சிலந்தமிழர் தமிழை(டமில்) என்று
செல்வது அந்த நொடியே என் உயிர் மரித்துவிடுகிறது!

எத்தையோ தமிழ் இணையம் இருந்தாலும் தமிழ் மன்றம்
அவற்றுள் சிறப்பு!

நாமெல்லாம் ஒரு குடும்பம்
அதனால் நாம் காண்போம் இன்பம்
பிறகு நமக்கேது துன்பம்
வாருங்கள் தமிழ வளர்க்க எழுதுவோம் புது கதம்பம்!

தமிழா!!
என்ன தவம் செய்தோம் நமக்கு தமிழ் கிடைக்க
மறுப்பிறவி கிடைக்குமோ இதையடையா
இப்பிறவியே பயன்படுத்திக் கொள் தமிழா!!!!
வாழ்த்துக்கள் ஏராளம் அதனை சொல்ல
எழுத்துக்கள் தாராளம்...!!

ம்ம் வாழ்க தமிழ் ,,,!!
வாழ்க தமிழ் மன்றம்..!!
வாழ்க தமிழ்நெஞ்சங்கள்...!!
வாழ்த்த வேறு வார்த்தையுமில்லை...!!
வாழ்க வாழ்க...!!
வாழ்த்துக்கள்!!!

-அனு

தமிழைப் போற்றும் நல்லதோர் கவிதைக்கு நன்றியும் பாராட்டும் அனு.

"நாமெல்லாம் ஒரு குடும்பம்
அதனால் நாம் காண்போம் இன்பம்
பிறகு நமக்கேது துன்பம்
வாருங்கள் தமிழ வளர்க்க எழுதுவோம் புது கதம்பம்!"

இவ்வரிகள் "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனின் அமர வரிகளை நினைவூட்டுகின்றன.

பிழைகளைத் தவிர்த்து உமது கவிப் பயணத்தை இனிதே தொடருங்கள். பதிக்கு முன் திருத்திவிட்டுப் பதியுங்கள். பதித்த பின்னும் பிழையிருந்தால் "எடிட்" செய்யுங்கள். உமது பார்வைக்குப் பிழைகளையும், அவற்றின் திருத்தத்தையும் வைக்கிறேன். தவறாகக் கொள்ள வேண்டாம். தமிழைப் பிழையின்றி எழுத முயலாத போது, தமிழ்ப் பற்று அர்த்தமற்றதாகி விடும். இது உமக்கு மட்டுமல்ல, தமிழ் மன்ற அன்பர் ஒவ்வொருவருக்கும் (என்னையுஞ் சேர்த்து) என் பணிவான வேண்டுகோள்.

மொழியாக்கி கொண்டதற்கு - மொழியாக்கிக் கொண்டதற்கு
உயிரேனும் போற்றி - உயிரேயெனப் போற்றிய
சிலந்தமிழர் - சில தமிழர்
எத்தையோ - எத்தனையோ
தமிழ - தமிழ்
இதையடையா - இதையடைய

இளசு
14-02-2008, 07:42 AM
பிழைகளைத் தவிர்த்து உமது கவிப் பயணத்தை இனிதே தொடருங்கள். பதிக்கு முன் திருத்திவிட்டுப் பதியுங்கள். பதித்த பின்னும் பிழையிருந்தால் "எடிட்" செய்யுங்கள். உமது பார்வைக்குப் பிழைகளையும், அவற்றின் திருத்தத்தையும் வைக்கிறேன். தவறாகக் கொள்ள வேண்டாம். தமிழைப் பிழையின்றி எழுத முயலாத போது, தமிழ்ப் பற்று அர்த்தமற்றதாகி விடும். இது உமக்கு மட்டுமல்ல, தமிழ் மன்ற அன்பர் ஒவ்வொருவருக்கும் (என்னையுஞ் சேர்த்து) என் பணிவான வேண்டுகோள்.திரு. நாகரா அவர்களே!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8313
பாரதியின் இந்தத் திரியிலும் இதையொட்டிய கருத்துகள் உள்ளன..

மனோஜ்
06-05-2008, 05:58 PM
தமிழின் சிறப்பு அதை அறிந்தவறுக்கு சிறப்பு
அதை கவிதைவரிகலாய் தந்தமைக்கு நன்றி அனுஅக்கா