PDA

View Full Version : பயம் கொள்ளாதே



அனுராகவன்
26-01-2008, 10:56 PM
பயம் கொள்ளாதே

மானிடா!! பயம் கொள்ளாதே- பயம் கொள்ள
இப்போது நேரமல்ல மானிடா!!!

தீங்கிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள
தானாக எழுவது பயம்

நம் உணவில் உப்பு கூடினாலும், குறைந்தாலும்
சுவையெப்படியோ அதேப்போல் பயமும்
தன் நிலையே தனக்குள் கொள்ளும்

பயம் கொண்டால் அடைய விரும்புவது கூட
கைநழுவி போகும் பின்பு தயக்கம்
தலைத்தூக்கி ஆடும் எதற்காக
பயம் யோசி மானிடா!!

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
ஆனால் மனிதனுக்கு தன் பயம் தீய நஞ்சு
தீமைசெய்ய பயம் கொள்க; நன்மைக்கு
பயம் கொண்டால் என்ன செய்வது யோசி

காற்றடிக்கும் திசையெல்லாம் தீப்பற்றும்
பயமுள்ள மனிதனை அவனிடம் தெரியாமல்
செய்து விடும்- ஆக பயத்தினை நல்வினைக்கு
பயன்படுத்தி பெறுவாழ வாருங்கள்....

-அனு
என்றும் அன்புடன்

ஓவியன்
27-01-2008, 07:11 AM
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்திலோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..."
என்ற மகாகவியின் பாடலை ஞாபக அலைக்குள் சிக்க வைத்த கவிதை..

அச்சம் நமைக் கண்டு
அச்சப்பட
புதியதோர் விதி எழுத
கவி படைத்த அனுவிற்கு
வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...!!

அனுராகவன்
27-01-2008, 01:20 PM
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்திலோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..."
என்ற மகாகவியின் பாடலை ஞாபக அலைக்குள் சிக்க வைத்த கவிதை..

அச்சம் நமைக் கண்டு
அச்சப்பட
புதியதோர் விதி எழுத
கவி படைத்த அனுவிற்கு
வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...!!

நன்றி ஓவியன் அவர்களே..!!
நல்ல மகாகவியின் கவியே ஞாபகப்படுத்தியதற்கு..!!
என் வாழ்த்துக்கள்
அச்சம் தேவை இல்லை நண்பரே!!

சாலைஜெயராமன்
28-01-2008, 12:52 AM
மாறாக ஓடும் மனதின் மயக்கம்
மானுடவ வாழ்வின் பயப் பரிணாமம்
மரண பயச் சவுக்குதான்
மாற்றுகின்ற மாமருந்து
பயம் என்பது வரமாகும்
பயத்துடன் பக்தி வேண்டும்
பயபக்திதான் பதியைக் காட்டும்
பயமில்லா வாழ்வு மிருகத்தை ஒக்கும்
பயத்துடன் பொறுமை காத்தால்
பத்தியம் தேவைதானோ
பாசத்தால் விளையும் பயம்
பாதையைக் காட்டாது
பயத்தின் முடிவிடம்
பரமபத வீடு

அனுராகவன்
30-01-2008, 12:34 PM
மாறாக ஓடும் மனதின் மயக்கம்
மானுடவ வாழ்வின் பயப் பரிணாமம்
மரண பயச் சவுக்குதான்
மாற்றுகின்ற மாமருந்து
பயம் என்பது வரமாகும்
பயத்துடன் பக்தி வேண்டும்
பயபக்திதான் பதியைக் காட்டும்
பயமில்லா வாழ்வு மிருகத்தை ஒக்கும்
பயத்துடன் பொறுமை காத்தால்
பத்தியம் தேவைதானோ
பாசத்தால் விளையும் பயம்
பாதையைக் காட்டாது
பயத்தின் முடிவிடம்
பரமபத வீடு
நன்றி சாலைஜெயராமன்..
என் வாழ்த்துக்கள்..
ம்ம் தொடர்ந்து வருக..

aren
30-01-2008, 12:36 PM
பயப்படவேண்டாம் என்கிறீர்கள். அப்படியே இருக்கிறோம்.

கவிதை நன்றாக உள்ளது. தொடருங்கள்.

ஆதி
30-01-2008, 01:17 PM
பயந்து பயந்தது போதும்..
பயத்தை பயமுடையதாக்கு
பயம் பயந்து ஓடட்டும்
உன்னைக் கண்டு எனச்
சொன்னக் கவிதைக்கு பாராட்டுக்கள்..


வாழ்த்துக்கள் அக்கா..

அன்புடன் ஆதி

அனுராகவன்
30-01-2008, 01:22 PM
பயப்படவேண்டாம் என்கிறீர்கள். அப்படியே இருக்கிறோம்.

கவிதை நன்றாக உள்ளது. தொடருங்கள்.

எல்லாத்துக்கும் பயம் கொள்ளக்கூடாது என்று சொல்ல நண்பா..
பயமும் அவசியம்தான்..
தீங்கு செய்ய பயம் கொள்
ம்ம் என் நன்றி

அனுராகவன்
30-01-2008, 01:25 PM
ஆதி
பயந்து பயந்தது போதும்..
பயத்தை பயமுடையதாக்கு
பயம் பயந்து ஓடட்டும்
நன்றி ஆதி வந்து படித்தற்கு..
என் வாழ்த்துக்கள்
தொடர்ந்து வாருங்கள்

யவனிகா
30-01-2008, 03:00 PM
வாழ்த்துக்கள் அனு அக்கா...தொடருங்கள் கவிதைகளை...

ஷீ-நிசி
30-01-2008, 03:31 PM
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
ஆனால் மனிதனுக்கு தன் பயம் தீய நஞ்சு

நல்ல எழுப்புதல் கவிதை!

இந்த மேற்கோள் காட்டியிருக்கும் வரிகள் போல, இனி வரும் உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் செதுக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கவிதை இன்னும் இன்னும் சிறப்பாக வடிவம்பெறும்..

வாழ்த்துக்கள் அனு!

ஆதி
30-01-2008, 07:40 PM
நல்ல எழுப்புதல் கவிதை!

இந்த மேற்கோள் காட்டியிருக்கும் வரிகள் போல, இனி வரும் உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் செதுக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கவிதை இன்னும் இன்னும் சிறப்பாக வடிவம்பெறும்..

வாழ்த்துக்கள் அனு!


நானும் ரசித்த வரிகள் ஷீ அவை.. ஷீ சொல்வது போல் இப்படி ஒவ்வொரு வரியிலும் முயன்று பாருங்கள் அக்கா..

அன்புடன் ஆதி

அனுராகவன்
30-01-2008, 10:18 PM
இந்த மேற்கோள் காட்டியிருக்கும் வரிகள் போல, இனி வரும் உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் செதுக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கவிதை இன்னும் இன்னும் சிறப்பாக வடிவம்பெறும்..


ஓ அப்படியா..
மிக்க மகிழ்ச்சி உங்கள் தயவு படியே ஆகட்டும்..
என் நன்றி