PDA

View Full Version : காதல் - அன்பு.அனுராகவன்
26-01-2008, 10:31 PM
காதல் எனபது அழியா மொழி
சாதல் அதற்கு இல்லை மொழி
எம்மொழிக்கும் காதல் வரலாம்
வந்தபின் எவரையும் ஆட்க்கொள்ளலாம்
அதற்கு ஏது தனி மொழி

அன்பு என்பது இதயத்திலிருந்து வரவேண்டும்
அப்போது பண்பு தானாக வரும்
பாசம் வைத்தால் நேசம் அடையலாம்
நேசம் இருந்தால் உலகே வெல்லலாம்

இதயம் ஒரு அற்புதம்
இதையே காப்பதோ என்றும் தவம்
இதயம் செய்யும் வேலையே பல
கணினிகள் கொண்டாலும் அடையா..

காதல் அழியாதது, மாறாதது
காலங்கள் மாறலாம், தேசங்கள் அழியலாம்
காதல் செய்ய விரும்பு பின்பு
காதல் விரும்பும் உன்னை
நாளைய மக்கள் உன் காதலை போற்றுவார்கள்

கண்ணாடிக்கு காதல் வரலாம்- நாம்
அதனை நம் முன்னாடியே பெறலாம்
இந்த வினடியே அன்பு செய்
அதற்காக ஏங்கும் பல உள்ளங்கள்

காதல் கனிய அன்பு செய்க- அதனை
உங்கள் துணையினை இன்றே செய்க
என்றும் கிடைக்கும் பாசம்
அதனை கொள்ள தேடு ஒரு நேசம்

அன்பு ஒரு புனிதமான பண்பு
பாசம் ஈடுயிணையற்ற வாசம்
தானாக வாராதது அன்பு
அதனை தேடு முதலில் முன்பு

காதல் செய்ய கற்றுக் கொள்க- முதலில்
உன் தாய் தந்தையரை காதலிக்க கற்றுக்கொள்
மற்றவை தான வருவன
அதனால் நீ முதலில் அன்பு செய்.

காதலை போற்றாத கலைங்கர்கள் இலர்
அதனால் மூழ்காத இதயங்களும் இலர்
வாழ்க காதல் உள்ளங்கள்
என்றும் அன்பு செய்யுங்கள்
அதுவே உங்கள் முதல் பண்பு...


- அனு
என்றும் அன்புடன்

.

நாகரா
27-01-2008, 07:22 AM
"காதல் எனபது அழியா மொழி
சாதல் அதற்கு இல்லை மொழி

என்றும் அன்பு செய்யுங்கள்
அதுவே உங்கள் முதல் பண்பு..."

அனு அவர்களே! முதலிலும் முடிவிலும் உம் கவியின் இவ்வரிகளை நான் மிகவும் ரசித்தேன். முடிவான வரிகள் முடிவான பேருண்மையே! இம்முடிவு வள்ளலாரின் இவ்வாக்குறுதிகளை நினைவூட்டுகின்றன

நானே பேரன்பராய்ப் பேரருளாளராய் அனாகதமாகிய உன் இருதயத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284)

பாராட்டுகிறேன். இத்தமிழ் மன்றத்தில் பரவட்டும் உம் அன்பொளி! தொடரட்டும் உம் அன்பார்ந்த அறிவார்ந்த படைப்புகள்!

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)

அனுராகவன்
27-01-2008, 01:28 PM
naagaraa
நானே பேரன்பராய்ப் பேரருளாளராய் அனாகதமாகிய உன் இருதயத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறேன்.
என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது.
ம்ம் நன்றி நண்பர் நாகரா..
என் கவிக்கு ஏற்ற உங்கள் கருத்து..
ம்ம் தொடர்ந்து வாருங்கள்

ஆர்.ஈஸ்வரன்
28-01-2008, 10:04 AM
நல்ல கவிதை. வாழ்த்துக்கள் அனு.

இன்பா
29-01-2008, 05:55 AM
முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

அனுராகவன்
03-02-2008, 09:22 AM
ம்ம் வரிப்புலி,ஆர்.ஸ். ஈஸ்வரன் அவர்களுக்கு நன்றிகள்..
ம்ம் தொடர்ந்து வாருங்கள்!!!

சுகந்தப்ரீதன்
05-02-2008, 06:35 AM
அக்கா..கவிதை நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...!

கவிதை சற்று உரைநடை வடிவில் இருப்பதாக தோன்றுகிறது...இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்..! அது உங்களால் முடியும்.. ஆர்வத்தின் காரணமாக அவசரமாக பதித்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.. தொடர்ந்து முயலுங்கள்.. அப்படியே கவிசமர் களத்திலும் பங்கு கொள்ளுங்கள்..அது உங்கள் திறமையை மேலும் வளர்க்க உதவும்.. அன்புடன் தம்பி..!

அனுராகவன்
12-02-2008, 04:59 AM
அக்கா..கவிதை நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...!

கவிதை சற்று உரைநடை வடிவில் இருப்பதாக தோன்றுகிறது...இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்..! அது உங்களால் முடியும்.. ஆர்வத்தின் காரணமாக அவசரமாக பதித்துவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.. தொடர்ந்து முயலுங்கள்.. அப்படியே கவிசமர் களத்திலும் பங்கு கொள்ளுங்கள்..அது உங்கள் திறமையை மேலும் வளர்க்க உதவும்.. அன்புடன் தம்பி..!

அப்படியே ஆகட்டும் தம்பியே..!
ம்ம் என் நன்றி உங்களுக்கு.!!

இளசு
14-02-2008, 07:27 PM
தேவைகள் தீர்ந்தபின்னர்
உறவுகள் உடனடியாய் முறியாதிருக்க
அன்பே இணைப்புப் பசை!

அன்பு - போற்ற வேண்டிய பெருங்குணம்.. வாழ்த்துகள் அனு!

(அன்பை விட நான் மதிக்கும் ஒரு குணம் - மரியாதை!)

அனுராகவன்
14-02-2008, 10:37 PM
தேவைகள் தீர்ந்தபின்னர்
உறவுகள் உடனடியாய் முறியாதிருக்க
அன்பே இணைப்புப் பசை!

அன்பு - போற்ற வேண்டிய பெருங்குணம்.. வாழ்த்துகள் அனு!

(அன்பை விட நான் மதிக்கும் ஒரு குணம் - மரியாதை!)

நன்றி இளசு அவர்களே..!
ம்ம் நன்றி உங்கள் கருத்துக்கு..!!

க.கமலக்கண்ணன்
18-03-2008, 10:19 AM
வந்த புதிதில் எழுதியதற்கும் தற்போது எழுவதற்கு நிறைய வித்தியாசம் காண்கிறேன். நன்று தொடரட்டும் உங்களின் ஏற்றமிகு வளர்ச்சி...