PDA

View Full Version : கல்லறை வெள்ளிகள்



அமரன்
26-01-2008, 08:43 PM
ஏ நிலவே!

கூதல் காற்றை உள்ளெடுக்கும்
மனிதர்கள்
அனல் காற்றை வீசும்போது
அனலை மூச்சாக்கும்
நீ மட்டும் எப்படி
குளிர்ச்சியைப் பொழிகிறாய்..!

ஏ ஆதவா!

இருட்டை உறிஞ்சும் நீ
வெளிச்சத்தை உமிழ்கிறாய்.
ஆனாலும்
குன்றாத பிராகாசத்துடன்
எப்படி நீ சுடர்கிறாய்...!

ஏ காற்றே!

நீ இல்லாத இடமில்லை
இருந்தும்
நிறுத்திய அசைவுமில்லை
எங்கே நீ செல்கிறாய்..!!

ஏ மண்ணே!!

கருவறையில் தங்கியவன்
உயிரை விட்டுப் பிரிந்ததும்
தாய் எருவாக்க
நீ ஏன் கருவாக்குகிறாய்..!!

இரவுக்குள் நுழைந்து
கேட்டு வந்த வரிசைக்கு
சங்கமித்த
அணையாக நதியும் கடலும்!!

ஏ நதியே!!

உக்கல்கள் கலந்தாலும்
கசக்காத நீ ஏன்
கடலில் கலக்கிறாய்..!

ஏ கடலே..!!

நதியை குடித்தும்
எப்படி நீ கரிக்கிறாய்..!!

கேட்க நினைத்து
கேட்காது விட்ட கேள்விக்கு
கருவறையே கல்லறையாக
கருச்சிதைந்த தாய்க்கு எதிர்ப்பதமாக
இருட்டிலிருந்து ஒளிக்கு..

வசீகரன்
27-01-2008, 04:58 AM
கேள்விகள்..... சுடச்சுட அமரரின் எண்ணங்களில் உதித்த கேள்விகள் ஆச்சரியங்கள் பல
அமர்த்தி இருக்கும் இயற்கையையும்.... மெய்ஞ்ஞானங்களையும்.... பார்த்து விளக்கங்கள் கிடக்கவெண்ணிய
அமரரின் தமிழ் பிரயாகைகள்....! கேள்விகளுக்கு பதில் உண்டோ இல்லையோ....!அமரரின் தமிழ் வீச்சுகளுக்கு
இணையாக பதில் வீச்சுக்களை வீசிடத்தான் முடிவதர்க்கில்லை.....!

அபரிமிதம்..!

ஆதவா
27-01-2008, 07:58 AM
தேடல்..

தேடிக்கொண்டிரு. ஏதாவது கிடைக்கும். இது மனிதனுக்குக் கடவுள் இட்ட ஆணை... நம் தேடல் இறைவனை நோக்கி - இது தாமரை அண்ணா சொன்னது. நமது அனைத்து தேடலின் முடிவும் அங்கேதான் இருக்கும். ஒவ்வொரு தேடலுக்கும் அர்த்தம் இருக்கும்.

கேட்காது விட்ட கேள்விகள், அதற்கு கருவறை கல்லறையாக்கப்படுகிறது. அறிவு முடக்கப்படுகிறது..

கருச்சிதைந்த தாய் - அதன் எதிர்ப்பதம் கருவுரும் தாய் அல்லது நல்ல கருவைக் கொண்டுள்ள தாய். ஆரோக்கியமான வளர்ப்பு.. (ரெண்டும் ஒட்டலையோ?) தேடலின் முடிவு இருட்டிலிருந்து ஒளிக்கு... (ஓரளவுக்குப் பிடிச்சுட்டேனா?)

அனலை மூச்சாக்கத் தெரிந்த நிலவுக்குப் பாவம் குளிர்ச்சியைப் பொழியத் தெரியாது. இருட்டை ஆதவன் உறிஞ்சுகிறானா என்ற விஞ்ஞானம் ஆதவனுக்குத் தெரியவில்லை. கடல் நதியைக் குடிப்பதில்லை. மாறாக, நதிதான் விருப்பப்பட்டு கடலோடு கள்ளம் புரிகிறது. :D

உக்கல்கள் ? அர்த்தம் என்ன? (வரிசையில் சை ஒன்று அதிகமாகிவிட்டது..)

தேடும் கவிதைகளில் சற்றே வித்தியாசம்... நம் தேடல் அவசியம்..

ஓவியன்
27-01-2008, 03:10 PM
உக்கல்கள் ? அர்த்தம் என்ன?..
ஆதவா,

பாதியாகவோ அல்லது முழுமையாகவோ உக்கிய (மக்கியவை) அசேதனப் பொருட்கள் உக்கல்கள் எனப்படும்.

(அமரா, என் விமர்சனம் பின்னர்......!!)

அமரன்
27-01-2008, 06:17 PM
நன்றி.. வசீகரா ஓவியன்...

அமரன்
27-01-2008, 06:33 PM
மிக்க நன்றி ஆதவா

தேடல் அவசியம்.. இயல்பான தேடல் மிக அவசியம்..

கூற்று: ஆஞ்சநேயர் மலையை தூக்கினார்.
கேள்வி: எப்படி? சொன்னால் நானும் தூக்குவேன்ல.

கூற்று:மாருதி சாகா வரம் பெற்றவர்.
கேள்வி: இப்போ அவர் எங்கே இருக்கிறார்.. எப்படி இருக்கிறார்? சிரஞ்சீவியாக இருக்க என்ன செய்தார்?

இவ்வகைத் தேடல்கள் அவசியமா? அநாவசியமா?

கூற்று: ஆதவனையே கைக்குள் அடக்க முயன்றவர்..
பதில்: அட ஃபீனிக்ஸ் பறவை.

இப்படியான தேடலின் போது அறிவு முடக்கடுவது தேடலின் வெற்றி, ஞானம் என்பது எனது கருத்து.. கவிதையின் கருவில் இதுவும் ஒன்று..

(சொன்னவிதத்தில் தப்போ)

கருச்சிதைந்த தாய் இருளுக்குள்.. இங்கே எதிர்பதமாக கருச்சிதைந்தாலும் வெள்ளிச்சத்துக்குள்..

இயல்புமீறிய தேடலின் போது இயல்மீறிவிட்டதாகவே உணர்ந்தேன். கற்பனைக்கு ஏது எல்லை என்ற சப்பைக் கட்டுடன் சமாதானமானேன்..:D

ஆதவா
28-01-2008, 01:30 AM
மிக்க நன்றி ஆதவா

தேடல் அவசியம்.. இயல்பான தேடல் மிக அவசியம்..

கூற்று: ஆஞ்சநேயர் மலையை தூக்கினார்.
கேள்வி: எப்படி? சொன்னால் நானும் தூக்குவேன்ல.

கூற்று:மாருதி சாகா வரம் பெற்றவர்.
கேள்வி: இப்போ அவர் எங்கே இருக்கிறார்.. எப்படி இருக்கிறார்? சிரஞ்சீவியாக இருக்க என்ன செய்தார்?

இவ்வகைத் தேடல்கள் அவசியமா? அநாவசியமா?

கூற்று: ஆதவனையே கைக்குள் அடக்க முயன்றவர்..
பதில்: அட ஃபீனிக்ஸ் பறவை.

இப்படியான தேடலின் போது அறிவு முடக்கடுவது தேடலின் வெற்றி, ஞானம் என்பது எனது கருத்து.. கவிதையின் கருவில் இதுவும் ஒன்று..

(சொன்னவிதத்தில் தப்போ)

கருச்சிதைந்த தாய் இருளுக்குள்.. இங்கே எதிர்பதமாக கருச்சிதைந்தாலும் வெள்ளிச்சத்துக்குள்..

இயல்புமீறிய தேடலின் போது இயல்மீறிவிட்டதாகவே உணர்ந்தேன். கற்பனைக்கு ஏது எல்லை என்ற சப்பைக் கட்டுடன் சமாதானமானேன்..:D
இயற்கையை நாம் தேடவேண்டியதில்லை. ஏனெனில் அது நம் முன்னேயே இருக்கிறது..
இயற்கைக்கு ஈடாக நாம் இல்லை. ஏனெனில் மனிதர்கள் நாம்..

இயற்கை என்ன செய்கிறதோ அதை வேறுவிதத்தில் செய்வது நமது சிறப்பு... இயற்கையால்
ஒரு கவிதை சோபிக்க இயலும்.. வாசிக்க இயலுமா?அல்லது எழுத முடியுமா? இப்படி ஒரு
கேள்விதான் கேட்கமுடியுமா?

அறிஞர் ஒருமுறை சொன்னார்... எல்லாருக்கும் ஒவ்வொருவிதத் திறமை உண்டு என...
இங்கே யாவரும் இணையில்லை.. உனக்கு (உங்களுக்கு) நான் எனக்கு நீ, நமக்கு அவன்,
நம் எல்லாருக்கும் இயற்கை... இவ்வெல்லாருக்கும் நீங்கள் சொன்ன ஆஞ்சினேயர்...
யாருக்கும் ஒரே அளவில் ஈடு இணையில்லை.. நாம் எல்லாவிதத்திலும் வித்தியாசப்படுகிறோம்.

ஆஞ்சிநேயர் மலையைத் தூக்கினார்... அவரின் திறமை.

நீங்கள் உயர்வைத் தூக்குங்கள்.. உங்களின் திறமை.

எப்படித் தூக்கினார்?.... அவரின் வரம். புஜபல பராக்கிரமம்.

உங்களுக்கும் வரம் வாய்த்திருக்கிறது.. அது நம்முள்ளேயே இருக்கிறது... வரம் பெற்றவர்கள் யாரும் தவமின்றி பெற்றதில்லை. நமக்கோ தவம் தேவையில்லை. ஏனெனில் நாம் நம் தவத்தை வெளிப்படுத்தாமலே கேட்கவோ தேடவோ நினைக்கிறோம்...............

பாரதி எப்படி அப்படி வசீகரக் கவிதை எழுதினார்?

புதுமைப்பித்தன் கதைகள் எப்படி புதுமையாகவே இருந்தன?

கல்கியின் படைப்புகளில் ஏன் மனதைத் தொலைக்கிறோம்?

இப்பொழுதெல்லாம் ஏன் அப்படி ஒரு மனிதர்கள் இல்லை?

அவர்களின் ஆற்றலை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதை வெளியே கொண்டுவந்தார்கள். அவர்களின் தவம்.. அது வெளிப்பட்டது. அவர்களின் திறமை.... உபயோகப்பட்டது.

சரிவிடுங்க... இதை இன்னும் பலவாறு எழுதலாம்... உங்கள் கவிதை இப்படி எழுதத் தூண்டுகிறது...... :)

கருச்சிதைந்த தாய்க்கு எதிர்ப்பதமாக ... இது உங்கள் வரி... இதன் விளக்கமே கருச்சிதையாத தாய் என்பது அர்த்தம்.... (பெற்றால்தான் தாயாமே? கரு இருந்தாலே தாய் என்று சொல்லிவிடலாமோ?)

இயல்பு மீறிய தேடலை இயல்புக்குள் பொருத்துங்கள்.... தேடலின் வெற்றிப்பழம் தானாக விழும்.............

நன்றி.

meera
28-01-2008, 10:58 PM
ஏ மண்ணே!!

கருவறையில் தங்கியவன்
உயிரை விட்டுப் பிரிந்ததும்
தாய் எருவாக்க
நீ ஏன் கருவாக்குகிறாய்..!!


கேட்க நினைத்து
கேட்காது விட்ட கேள்விக்கு
கருவறையே கல்லறையாக
கருச்சிதைந்த தாய்க்கு எதிர்ப்பதமாக
இருட்டிலிருந்து ஒளிக்கு..

அமரன் உங்க கவிதைக்கு ஒரு சலாம்.தேடல் அற்புதமானது. தெரிந்து கொள்ள இயலாத விஷயம் பற்றி தேடி திரிவது மனித குணம்.

ஆதவா உன் விமர்சனம் கவிதைக்கு பலமாய் இருக்கிறது.

ஷீ-நிசி
30-01-2008, 12:51 AM
ஒரு தனிமை நேரத்தில் அவன் இயற்கையை கவனிக்கின்றான். எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் புலப்படாத கேள்விகள் இன்று அவனுக்குள் உருவாகின்றன. கேள்விகளின் பிறப்பு தனிமையிலிருந்து தான் ஆரம்பிக்கின்றனவோ!

நிலவையும், சூரியனையும், கடலையும் காற்றையும் நோக்கி அவன் வீசின கேள்விகளின் தேடல்களுக்கு என்ன விடையென்று தெரியவில்லை.

ஆனால் இந்த பிரபஞ்சம் இப்படி பல கவிஞர்களின் தேடல்களுக்கான வினாக்களை தன்னுள் அடக்கிவைத்துக்கொண்டு,

ஒரு காதலிக்கே உரிய பதிலளிக்காத புன்னைகயோடு, தூரத்தில் ஒளி விட்டுக்கொண்டும், தென்றலாய் வருடிச்சென்றபடியும், போய்க்கொண்டுதானிருக்கிறது.

நல்ல கவிதை அமரன்.. வாழ்த்துக்கள்!