PDA

View Full Version : பூக்காதோ புது யுகம்



ஆர்.ஈஸ்வரன்
26-01-2008, 10:27 AM
பூக்காதோ புது யுகம்
வாழ்வோமோ நலமுடன்
வருமோ அதிர்ஷ்டம்
கிடைக்குமோ வேலை
இருப்போமோ உயிருடன்
முடியுமா நம்மால்
என்றெடுத்ததெற்கெல்லாம்
சந்தேகத்தை
நாமே யெழுப்பி
நம்பிக்கையை
நாமே மறந்துவிட்டால்
பூக்காதோ புது யுகம்
என்றே தான்
ஏக்கத்தோடு
என்றென்றும் இருக்க வேண்டும்
பூக்காதோ புது யுகம் அல்ல
பூக்கும் புது யுகம்
என்கிற தன்னம்பிக்கையில்
எண்ண விதைகளை
எண்ணிக்கையின்றி
இதமெனும் தோட்டத்தில்
ஆழ ஊன்றினால்
பூக்குமே புது யுகம்

அனுராகவன்
26-01-2008, 11:39 AM
நண்பர் எஸ்.ஈஸ்வரன் அவர்களே உங்கள் கவி மிக நன்று..
புதூகம் தானாக பிறக்காது
நம் தன்நம்பிக்கைதான் அதன் ஊற்று..
மிக அருமையான வரிகள்..
ம்ம் என் வாழ்த்துக்கள்..
தொடரட்டும் உங்கள் பணி

சுகந்தப்ரீதன்
26-01-2008, 12:42 PM
நம்பிக்கை ஊட்டும் வரிகளுக்கு.. எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நண்பரே..!

அமரன்
26-01-2008, 04:55 PM
நோயும் நோய்க்கு மருந்தும் சொல்லி உள்ளீர்கள். மிகவும் நுட்பமாக கவனித்து அறியவேண்டி இருக்கிறது. வரிகளை பிரித்து எழுதி இருக்கலாம்.

எந்தசெயலை செய்ய முன்னரும் ஆற அமர் ஆஅழமாக சாதக பாதங்களை அலசவேண்டும். அந்த அலசல் நம்பிக்கையை சிதைக்கும் முகமாக இல்லாதபோது எல்லாம் சாத்தியமே.

நான் கண்ட அனுபவம்.. தவழும் குழந்தை ஒன்று நடப்பதற்காக எழும்போதேல்லாம் விழுந்து விடுமோ எனப்பயந்து தூக்கினார்கள்.. இத்தொடர்ச்சியின் பெறுதியாக தாமதாகவே நடக்கத்துவங்கியது குழந்தை..

தன்னம்பிக்கையை இழக்கவும் கூடாது.. நம்பிக்கை ஊட்ட பின்நிற்கவும் கூடாது..
விதைக் கவிதைக்கு பாராட்டுகள்..

ஆதி
26-01-2008, 06:17 PM
இயலுமா ? இயலாதா ? என்று எடுத்ததற்கெல்லாம் சந்தகமுற்று..

இயலாமல் போகிற தருணங்களில் எனக்கு முன்பே தெரியுமென.. தன்னை தானே தூற்றி..

இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இழந்து தன்னிலை தொலைப்போர்க்கு இது ஒரு நற்கவி..

வாழ்த்துக்கள் ஈஸ்வரன்.. தொடர்ந்து எழுதுங்கள்..

அன்புடன் ஆதி

ஆர்.ஈஸ்வரன்
27-01-2008, 09:40 AM
அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்