PDA

View Full Version : ஏழ்மைஅனுராகவன்
26-01-2008, 08:52 AM
ஏழ்மை

வீட்டிலோ நான்கு பிள்ளைகள் -எங்களை காக்கும்
பெற்றோரோ இரண்டு கண்கள்

காட்டிலே என் அம்மா சேற்றிலே கை வைத்தால் -
வீட்டிலே நாங்கள் சோற்றிலே எங்கள் கை..

விதியின் தாண்டவபிடியில் சிக்கினார் எந்தந்தை
வறுமையின் கோரப்பிடியில் வீழ்ந்தாள் எந்தாய்

வீட்டில் நானோ முதல்பிள்ளை அதனால்
முழுப்பொறுப்புக்களையும் ஏற்பதில் தப்பில்லை

வேறுவழியுமின்றி என்னை நம்பி இருக்கின்ற
மூன்று தங்கைகள்
நான் என்ன செய்ய... ஐயகோ

நான் படிப்பதோ பத்தாவது - எந்தாய்
ஒருவேளை சமைப்பதோ பத்தாது.

எனக்கோ மூன்று தங்கைகள் - அவர்கள்
நம்பியிருப்பதோ என் இரு கைகளை

விதியின் விளையாட்டை தன்பிடியில் கொண்டான் இறைவன்
அதை வெல்ல நம்மால் முடியுமோ

படிக்க கற்றுக்கொண்டால் படிக்கலாம்- ஆனால்
ஏழ்மையின் பிடியில் தப்பிக்க என்ன வழி

ஏழ்மை ஒரு நோயல்ல - அது தீர்க்க மருந்துமில்லை
பிறக்கும்போதே நாம் ஒன்றும் லச்சாதிபதியுமில்லை

இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்வதுமில்லை
பிறகு ஏன் வாழும்போது ஏழ்மை வாட்டுகிறது..

மக்களை காக்கும் இறைவா எங்கிருக்கிறாய்
எழுந்து வா..
ஏழ்மையினை போக்க வா...
ஒன்றே நிலையின்பதை நிலை நாட்டிட வா..
வாழ்க சமுதாயம்..வளர்க மக்கள்..

நன்றி வணக்கம்
உங்கள் அனு.....
என்றும் அன்புடன்...

பூமகள்
26-01-2008, 09:11 AM
படிப்பு குறைவில்லை
படித்ததன் பயன்
வேலை தேடினால்
கிட்டும்...!

ஏழ்மை பிணி
ஏந்திழையை பாதித்தாலும்
ஏனைய பிற கைகள்
ஏற்றமுற உதவலாமே..!

இரு கை உழைத்து
இருவர் படித்தால்
இமயம் தொடவும்
இயலுமே..!!

அழகான கவிதை..!

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அன்புச் சகோதரி அனு. :)

mayakrishnan
26-01-2008, 09:42 AM
ஏழ்மை ஒரு நோயல்ல - அது தீர்க்க மருந்துமில்லை
பிறக்கும்போதே நாம் ஒன்றும் லச்சாதிபதியுமில்லை

இறக்கும் போதும் எதையும் கொண்டு செல்வதுமில்லை
பிறகு ஏன் வாழும்போது ஏழ்மை வாட்டுகிறது..

மக்களை காக்கும் இறைவா எங்கிருக்கிறாய்
எழுந்து வா..
ஏழ்மையினை போக்க வா...
ஒன்றே நிலையின்பதை நிலை நாட்டிட வா..

ஏழ்மை இருப்பதாலே கடவுள் இல்லையென்பது நிதர்சனமாகிறது!
குக்கர் போல மக்கள் அழுத்தபட்டு வெந்து இறுதியாக செய்வதறியாது வெடிக்கும் வரை இதற்கு செவி சாய்ப்பவர்கள் யாரும் இருக்க போவதில்லை.

படிப்பு குறைவில்லை
படித்ததன் பயன்
வேலை தேடினால்
கிட்டும்...!

ஏழ்மை பிணி
ஏந்திழையை பாதித்தாலும்
ஏனைய பிற கைகள்
ஏற்றமுற உதவலாமே..!

இரு கை உழைத்து
இருவர் படித்தால்
இமயம் தொடவும்
இயலுமே..!!

சோத்துக்கே லாட்டரி! இதுல எங்க படிக்கிறது? அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கம். அதான் நம்ம தலைவரு சத்துணவு திட்டத்தை கொண்டாந்தாரு!

அமரன்
26-01-2008, 10:30 AM
எளிய நடையில் வலிய கருவை பிரசவிக்கும் இன்னொரு கவிதை
ஆதியில் சொக்க வைக்கும் எதுகை மோனை.
அந்தத்தில் ஒத்த அசையொலி சந்தங்கள்.
இரண்டும் கவிதையுடன் கட்டிப் போடுகின்றன.

தந்தையின் பின் சுமைகள் மூத்தவன் தலையில்..
அதனாலேயே அவன் தலைபிள்ளை.
தாய்க்கும் அவனுக்கும் இடையான பந்தம் அபரிதமானது.

வெளிச்சத்தில் இருப்பவனுக்கு இருட்டுத் தெரிவதில்லை-அவன்
இருட்டுக்குள் புகும்போது உடனடி உடன்பாடு சாத்தியமில்லை

இருட்டில் இருப்பவனுக்கு வெளிச்சம் துல்லியாமக் தெரியும்
அவன் வெளிச்சத்துக்குள் நுழையும்போது கண்கள் கூசிவிடும்..

ஆண்டவன் படைப்பின் அங்கம் இது. நிரந்தரக் குருடு இதில் ஏது.

எல்லாவழியும் நடந்த ஆண்டவன் ஆங்காங்கே விதைகளை தூவிச்சென்றிருக்கிறான்..
தொடர்பவங்களுக்கு வழிகாட்டியாகவும், நிழலாகவும் அவை முளைத்திருக்கிறன..
எறும்புக்கே வாழ்க்கை இருக்கும்போது எமக்கு இருக்காதா??
எமது வாழ்க்கைமீது பனிப்புகார்கள் படிந்திருக்கிறன.. அகலும். அகலும் வரை போராடுவோம்..

ஏழ்மையில் உழன்று மடிபவர்கள் முயலவில்லையா என்ற குதர்க்கம் தலைதூக்குகிறது.
அவர்கள் முயற்சியில் எங்கேனும் ஒரு சிறு துளை இருந்திருக்கும். நுணுக்கமாக ஆராய்ந்தால் அது புலப்படும். அதை அடைத்து வெளிச்சத்தை உள்கொணர்வோம்.. வாழ்த்துகள்.

ஆதவா
26-01-2008, 10:38 AM
அமரரே அருமையான விமர்சனம்....
-------------------
மிகக் கொடிது வறுமை.. அதிலும் கொடிது இளமையில் வறுமை.
இறைவன் எப்போதும் வரமாட்டான். ஏனெனில் நாம்தான் இறைவர்களே! நமக்கு நாமே உழைத்து பூசிப்போம்... வறுமை போக்க அதுதான் வழி........

வாழ்த்துகள் அனு... ஒரு நல்ல பயணத்தை நோக்கி உங்கள் கவிதைகள் செல்லுகின்றன.

ஆர்.ஈஸ்வரன்
26-01-2008, 11:03 AM
காட்டிலே என் அம்மா சேற்றிலே கை வைத்தால் -
வீட்டிலே நாங்கள் சோற்றிலே எங்கள் கை..

அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

அனுராகவன்
26-01-2008, 12:12 PM
படிப்பு குறைவில்லை
படித்ததன் பயன்
வேலை தேடினால்
கிட்டும்...!

ஏழ்மை பிணி
ஏந்திழையை பாதித்தாலும்
ஏனைய பிற கைகள்
ஏற்றமுற உதவலாமே..!

இரு கை உழைத்து
இருவர் படித்தால்
இமயம் தொடவும்
இயலுமே..!!

அழகான கவிதை..!

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அன்புச் சகோதரி அனு. :)

நன்றி தோழி பூமகள் அவர்களே..
வறுமையினை வெல்ல தங்கள் ஊக்கம் போதும்,,..
ம்ம் என் நன்றி உங்களுக்கு..

அனுராகவன்
26-01-2008, 12:15 PM
ஏழ்மை இருப்பதாலே கடவுள் இல்லையென்பது நிதர்சனமாகிறது!
குக்கர் போல மக்கள் அழுத்தபட்டு வெந்து இறுதியாக செய்வதறியாது வெடிக்கும் வரை இதற்கு செவி சாய்ப்பவர்கள் யாரும் இருக்க போவதில்லை.சோத்துக்கே லாட்டரி! இதுல எங்க படிக்கிறது? அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கம். அதான் நம்ம தலைவரு சத்துணவு திட்டத்தை கொண்டாந்தாரு!

நன்றி நண்பர் மாயகிஷ்ணன் அவர்களே..
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு...
என் நன்றி

அனுராகவன்
26-01-2008, 12:18 PM
எல்லாவழியும் நடந்த ஆண்டவன் ஆங்காங்கே விதைகளை தூவிச்சென்றிருக்கிறான்..
தொடர்பவங்களுக்கு வழிகாட்டியாகவும், நிழலாகவும் அவை முளைத்திருக்கிறன..
எறும்புக்கே வாழ்க்கை இருக்கும்போது எமக்கு இருக்காதா??
எமது வாழ்க்கைமீது பனிப்புகார்கள் படிந்திருக்கிறன.. அகலும். அகலும் வரை போராடுவோம்..
நண்பர் அமரன் அவர்களே.
நீங்கள் சொல்வது உண்மைதான்..
ம்ம் மிக நன்றி

அனுராகவன்
26-01-2008, 12:21 PM
நன்றி மற்ற நண்பர்கள் ஆதவா, எஸ். ஈஸ்வரன்...
கருத்துக்கு என் நன்றி

meera
27-01-2008, 04:41 AM
எளிய தமிழில் ஆழமான கரு ஏழ்மை பற்றி. அசத்துங்கள் தோழி.

பூ,அமரன் விமர்சனம் அசத்தல்.

சாலைஜெயராமன்
27-01-2008, 04:51 AM
இல்லாத ஒன்றுதான் ஏழ்மையைக் காட்டும்
இருப்பவை யாவும் இறுமாப்பின் வெளிச்சம்
எல்லாம் இருந்தும் இல்லாததற்கு ஏங்கும்
இயல்பிலே ஏழையான எத்தனையோ போ்கள் உண்டு
உணவு இல்லையென்று அழுவாரும்
உணவு செரிக்கவில்லை என்று அழுவாரும்
உணவுக்காகவே உழைப்பாரும்
உணர்வில் ஏழைகளே
ஈதல் என்பதன் இலக்கணம் அறிந்தால்
இறைவனின் நிலையை அறியலாம்
ஏழையாக யாரையும் இறைவன் படைக்கவில்லை
அறிவின் நிலையறியா யாவரும்
எண்ணத்தில் ஏழைதானே

வசீகரன்
27-01-2008, 05:36 AM
கொடிது கொடிது வறுமை கொடிது...! அதனினும் கொடிது இளமையில் வறுமை...!
கனவுகளில் பூரிக்கவேண்டிய காலங்கள்.... கனவுகளாகவே போய்விடுகின்றன....
இளம் வயதில் இதுபோன்று சுமைகளை ஏற்று நடை போதும் சீரியல் கதாநாயகிகள் அல்லா
நிஜத்திலேயே நான் என் அக்கா வாயிலாக அனுபவித்திருக்கிறேன் அனு....! வறுமையை உணர்ந்திருக்கிறேன்...!
அவள் நியாபகம் வந்துவிட்டது...! மனதை கனக்க செய்துவிட்டீர்கள்...!
நல்ல படைப்பு அனு தொடர்ந்து படையுங்கள்..!

அனுராகவன்
27-01-2008, 02:33 PM
எளிய தமிழில் ஆழமான கரு ஏழ்மை பற்றி. அசத்துங்கள் தோழி.

பூ,அமரன் விமர்சனம் அசத்தல்.

ம்ம் தோழி மீரா உங்கள் கருத்துக்கு
என் நன்றி

அனுராகவன்
27-01-2008, 02:41 PM
கொடிது கொடிது வறுமை கொடிது...! அதனினும் கொடிது இளமையில் வறுமை...!
கனவுகளில் பூரிக்கவேண்டிய காலங்கள்.... கனவுகளாகவே போய்விடுகின்றன....
இளம் வயதில் இதுபோன்று சுமைகளை ஏற்று நடை போதும் சீரியல் கதாநாயகிகள் அல்லா
நிஜத்திலேயே நான் என் அக்கா வாயிலாக அனுபவித்திருக்கிறேன் அனு....! வறுமையை உணர்ந்திருக்கிறேன்...!
அவள் நியாபகம் வந்துவிட்டது...! மனதை கனக்க செய்துவிட்டீர்கள்...!
நல்ல படைப்பு அனு தொடர்ந்து படையுங்கள்..!

ஓ.. அப்படியா நண்பா..
நல்ல அனுபவம் தான்..
ம்ம் எங்களுடன் உங்கள் அனுபவத்தை
பகிர்ந்துக்கொண்டமைக்கு என் வாழ்த்துக்கள்

அனுராகவன்
31-01-2008, 12:05 AM
அமரன்
ஆண்டவன் படைப்பின் அங்கம் இது. நிரந்தரக் குருடு இதில் ஏது.
ஓ நல்ல கருத்து நண்பரே