PDA

View Full Version : அதிகம் நீரருந்தினால் ஆபத்தா...??

பூமகள்
26-01-2008, 05:32 AM
எனக்கு சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு பத்திரிக்கை கட்டுரை. அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உங்களோடு பகிர விரும்பி இங்கு பதிக்கிறேன்.

அதிகமான நீர் தினசரி அருந்தினால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், 2 அல்லது 3 லிட்டர் நீருக்கு மேல் தண்ணீர் குடித்தால் ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டென்று கண்டறிந்துள்ளனர். :sprachlos020::eek:

அதற்கான செய்தி இதோ உங்கள் முன்.

http://img02.picoodle.com/img/img02/4/1/26/poomagal/f_drinkingwatm_bca1530.jpg

உங்கள் கருத்துகளைக் கூறுங்கள் அன்பர்களே..! :icon_ush::icon_ush:

இளசு
26-01-2008, 07:55 AM
அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல - நீர் உட்பட எதுவே ஆபத்தே!

உடலில் உள்ள உப்பு(சோடியம்) மற்றும் பல தனிமங்கள், கூட்டுகள் ( யூரியா, குளுகோஸ்) - போன்றவை குருதியின் அடர்த்தியைத் ( ப்ளாஸ்மா ஆஸ்மோலாரிட்டி) தீர்மானிக்கின்றன.

அடர்த்தி அதிகமானால், தாகம் வரும். நீர் அருந்தச்சொல்லும்.
(உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்)
சர்க்கரை நோய் அதிகரித்தால் தாகம் அதிகரிப்பது இப்படித்தான்.

எனவே தேவையின்றி அதிகம் நீர் அருந்த உடல், மூளை அனுமதிக்காது.

அப்படி அருந்துவதன் காரணங்கள்:

1) தவறான மருத்துவ அறிவுரை - நீரகக் கல் கரைய, அதிகம் நீர் அருந்தச் சொல்வதை.. மிக அதீதமாய் கடைபிடிப்பது.

2) தவறான நம்பிக்கை: இச்செய்தியில் உள்ளவர் போல் உடல் நலம் இன்னும் ''சுத்தமாக''
3) மனநோய் ( கம்ப்பல்சிவ் வாட்டர் ட்ரிங்கிங் சிண்ட்ரோம்)

இப்படி சில நாள் குடித்தால், நீரகம் அதை வெளியேற்றி உதவும்.
அதிகநாள் குடித்தால் நீரகமும் சோர்ந்துவிடும்.

பின் மூளை செல்கள் உப்புக்குறைவால் பாதிக்கப்பட்டு நினைவிழப்பு, வலிப்பு வரலாம்.

அபூர்வ நோய்தான். தவிர்த்து, தீர்க்கக்கூடியதே!

ஒரு நாளைக்கு 1-1.5 லிட்டர் நீர் பிரிவது உத்தமம்.
அதற்கு 2 -3 லிட்டர் நீர் அருந்தலாம்.
கோடை, உடற்பயிற்சி, வேர்வை - நீர் அளவு கூட்டவேண்டும்.
தாகம் தீரும் அளவுக்குக் குடித்தால் தீதொன்றுமில்லை!

(நீரில்லா காலங்களில் நீரகம் நீரைச் சேமிக்கவும் செய்யும்.
பாலைவன எலிகளின் சிறுநீர் கோல்கேட் பற்பசையை விடவும் அடர்த்தி..)

தகவலுக்கு நன்றி பூ!

பூமகள்
26-01-2008, 07:58 AM
இதை இதை இதைத்தான் அண்ணா எதிர்பார்த்தேன்.
இப்படி ஒரு தெளிவான வழிகாட்டுதல் வேண்டியே இங்கே பதித்தேன்.
நான் பதித்ததன் பிறவிப்பயனை திரி அடைந்துவிட்டது.

எண்ணற்ற தேவையான தகவல்கள்.

சிரத்தை எடுத்து பயனுள்ள தகவல் கொடுத்தமைக்கு மிக மிக நன்றிகள் என் அன்பு பெரியண்ணா. :)

praveen
26-01-2008, 08:31 AM
நல்ல செய்தி, அளவுக்கு மிஞ்சினால் அமுதும் விடம் ஆகும். அதே போல தண்ணீர் போதுமான அளவு அருந்தாமல் இருப்பதும் பல சிக்கல்களை கொண்டுவந்து விடும். எனவே அளவோடு குடித்து (நீரை தான்) வளமோடு வாழ்வோமாக.

எச்சரிக்கை :
பியர் குடிக்கும் நண்பர்களுக்கு, இப்படி கண்ணாபின்னாவென்று குடித்து விட்டு பின் உறங்கிய பின்னும் சிறுநீரகம் இரவு முழுதும் இயங்கி, காலப்போக்கில், சிறிநீரக கோளாறு ஏற்பட்டு ஒன்றைத் தொடர்ந்து மற்றொரு சிறுநீரகமும் பழுது நேரலாம். எனவே எதையும் அளவோடு அருந்த வேண்டும்.

அன்புரசிகன்
26-01-2008, 08:42 AM
ஒரு சந்தேகம். மரக்கறி சாப்பிடும் காலங்களில் தாகம் அதிகமாக காணப்படும். (மாமிசம் மச்சம் சாப்பிடும் காலங்களை விட) காரணம் என்னவோ? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

மனோஜ்
26-01-2008, 08:44 AM
சிறப்பான தகவல்கள் வித்திட்ட பூவுக்கும்
இளசு அண்ணாவிற்கும் பிரவினுக்கும் நன்றி

praveen
26-01-2008, 08:51 AM
ஒரு சந்தேகம். மரக்கறி சாப்பிடும் காலங்களில் தாகம் அதிகமாக காணப்படும். (மாமிசம் மச்சம் சாப்பிடும் காலங்களை விட) காரணம் என்னவோ? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் மரக்கறி உணவில் நார்சத்து அதிகம் இருப்பதால், அதை ஜீரனிக்க தண்ணீர் அதிகம் தேவைப்படலாம்.

அமரன்
26-01-2008, 09:00 AM
பயன்மிக்க, அவசியமான தகவல். பகிர்ந்துகொண்ட பூவுக்கும் விளக்கிய அண்ணலுக்கும் நன்ரி.

சிவா.ஜி
26-01-2008, 11:28 AM
அற்புதமான மருத்துவ விளக்கத்தை இளசுவிடமிருந்து வாங்கிய பூவின் பதிவுக்கு ஒரு ஓ போடனும்.இருவருக்குமே நன்றி.

அனுராகவன்
26-01-2008, 12:02 PM
நண்பருக்கு என் முதல் நன்றிகள்
தண்ணிர் ஒரு லிட்டர் வரை ஒரு நாளுன்றுக்கு சராசரி மனிதன் குடிக்கலாம். காரணம் மனிதன் உணவு அருந்திய பிறகு நீர் அருந்துவதே இல்லை..
அளவிற்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சுதான்...
அளவோட அருந்துக்கள்..
வளமாய் வாழுங்கள்...
என் வாழ்த்துகள் நண்பர்களே..

தங்கவேல்
27-01-2008, 02:19 AM
பூமகள், அருமையான சங்கதியை சொல்லி இருக்கின்றீர்கள். இருந்தாலும் இது ரொம்பத்தான் ஓவர். தண்ணியை குடித்து உயிர் வாழ்கின்றவர்கள் அதிகம் நம் நாட்டில்...

Tamilmagal
18-04-2009, 01:10 PM
நல்ல தகவல்களை பதித்த பூமகளுக்கும் இளசுக்கும் நன்றி.

இருந்தாலும், "water intoxication" இக்கு பயந்த நீர் குடிப்பதை நிறுத்தி வீடாதீர்கள் நன்பர்களே.
இளசு அவர்கள் கூறிய அளவை வைத்துக்கொள்ளுங்கள்.

Tamilmagal
18-04-2009, 01:24 PM
ஒரு சந்தேகம். மரக்கறி சாப்பிடும் காலங்களில் தாகம் அதிகமாக காணப்படும். (மாமிசம் மச்சம் சாப்பிடும் காலங்களை விட) காரணம் என்னவோ? தெரிந்தவர்கள் கூறுங்கள்.

பிரவீன் கூறுவது சரி என்று நினைக்கிறேன்.

அதாவது, மரக்கறி உணவில் இருக்கும் நார்ச்சத்து ஜீரனிப்பதர்க்கு தண்ணீர் தேவை. அதனால் மரக்கறி சாப்பிடும் போது உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் அக்காலங்களில் அதிக தாகம் எடுக்கும்.
மாமிச சாப்பாட்டில் நார்ச்சத்து இல்லாததால் மாமிசம் சாப்பிடும் போது அதிக தாகம் எடுக்காது.

ஆனால் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை நாம் தினமும் அருந்ந்தவேண்டும்.

nandabalan
18-04-2009, 05:14 PM
இந்த செய்தி இதுவரையில் கேள்விப் படாத ஒன்று. முதன் முறையாய் கேள்விப்படுகிறேன் அதிகம் தண்ணீ ர் அருந்த கூடாது என.

பால்ராஜ்
20-04-2009, 01:26 AM
எனது சொந்த அனுபவம்.... ஒரு நாளைக்கு பத்து லிட்டர் நீர் அருந்துபவன் நான்.. குவளை அல்ல லிட்டர்... என்னைப் பொறுத்தவரை .. நீர் நமது உடலைச் சுத்தப் படுத்துகிறது என்று ஒரு மனக் கண்ணோட்டமோ என்னவோ.. ஒரு கம்பல்ஸிவ் ட்ரிங்கர் என்று ஒரு மணி நேரத்துக்கு இரண்டு குவளையாவது ப்ளக் ப்ளக் என்று தொண்டையில் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் சமீபத்தில் ஒரு நண்பனுடன் உரையாடும் நேரத்தில் அவனுக்கு அதிகம் தண்ணீர் குடித்தால் பிரச்சினை என்று கூறினான்.

எனவே ஓரளவுக்கு இது body constitution சம்பந்தப் பட்டது என்று கூறலாம்.. பொதுவாக அதிகம் தண்ணீர் அருந்துவது நல்லதே... என்பது எனது தனிப்பட்ட கருத்து.

Ranjitham
21-04-2009, 12:55 AM
இந்த செய்தி இதுவரையில் கேள்விப் படாத ஒன்று. முதன் முறையாய் கேள்விப்படுகிறேன் அதிகம் தண்ணீர் அருந்த கூடாது என.
நானும் கூட, சீன வைத்திய வழி காட்டுதலின் படி தினமும் காலை ஒன்றரை முதல் 2 லிட்டர் தண்ணீர் அருந்துகின்றேன் நல்லபலன் உள்ளது. இந்த கதை புதிதக உள்ளதே. மேலும் விளக்கம் தேவைபடுகிறது நண்பர்கள் உதவுவார்களா?

xavier_raja
21-04-2009, 01:09 PM
மிகவும் பயனுள்ள ஒரு செய்தி.. பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.. அதற்கு விளக்கமும் சுபெர்ப்..

மன்மதன்
22-04-2009, 01:59 AM
எதையுமே அளவோடு அருந்தினால்தான் நல்லது...:rolleyes:

அமரன்
22-04-2009, 08:05 AM
எதையுமே அளவோடு அருந்தினால்தான் நல்லது...:rolleyes:

ஆமாஞ்சாமி.. விருந்தும் மருந்தும் மூன்று வேளைக்குத்தான்னு நம்ம மக்களும் சொல்லி இருக்காங்க.

Tamilmagal
22-04-2009, 10:13 AM
இந்த கதை புதிதக உள்ளதே. மேலும் விளக்கம் தேவைபடுகிறது நண்பர்கள் உதவுவார்களா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்திற்கும் பொருந்தும் (தண்ணீரும் அளவுக்கு அதிகமாக இருந்தால் நஞ்சாகும்).

மிகவும் அதிகமாக தண்ணீர் குடித்ததால் தண்ணீரின் அளவு இரத்த்தில் கூடும் இவ்வாறு உடலில் தண்ணீரின் அளவு கூடும்பொழுது உடலில் உள்ள உப்பு, தனிமங்கள் போன்றவையின் அளவு குறையும், இதனால் ரத்தத்தின் அடர்த்தி குறையும்.இந்த நிலையை சமன்படுத்துவதற்க்காக சிறுநீரகம் அதிகமாக வேலைசெய்யும். இப்படி தேவைக்கு அதிகமாக வேலைசெய்து வெகுவிரைவில் சிறுநீரகம் (சிறுநீரகத்தில் உள்ள குலொமேறுலி) பழுதடைந்து பொவதற்க்கு சாத்தியகூறுகள் உள்ளன.
மேலும் அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்யும். அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுக்கும்.

உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர மிகவும் அதிகமாய் தண்ணீர் குட்த்தால் தண்ணீர் கூட உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கும் என்பதற்கு ஒரு உதரணம்தான் மேலே உள்ள செய்தி.

மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் நீர் தேவை. ஆதனால் நீர் நமக்கு இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு நாளும் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். ஆரோக்கியமான மனிதன் ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்வோர் மற்றும் கோடைகாலத்தில் அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும்.

நேசம்
22-04-2009, 10:19 AM
உடல் எடையை பொறுத்து அதற்கேற்பே நீர் குடிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ஒரு எக்ஸெல் மெயில் எனக்கு வந்து இருக்கிறது

Ranjitham
22-04-2009, 11:55 PM
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அது தண்ணீர் குடிக்கும் விஷயத்திற்கும் பொருந்தும் (தண்ணீரும் அளவுக்கு அதிகமாக இருந்தால் நஞ்சாகும்).

மிகவும் அதிகமாக தண்ணீர் குடித்ததால் தண்ணீரின் அளவு இரத்த்தில் கூடும் இவ்வாறு உடலில் தண்ணீரின் அளவு கூடும்பொழுது உடலில் உள்ள உப்பு, தனிமங்கள் போன்றவையின் அளவு குறையும், இதனால் ரத்தத்தின் அடர்த்தி குறையும்.இந்த நிலையை சமன்படுத்துவதற்க்காக சிறுநீரகம் அதிகமாக வேலைசெய்யும். இப்படி தேவைக்கு அதிகமாக வேலைசெய்து வெகுவிரைவில் சிறுநீரகம் (சிறுநீரகத்தில் உள்ள குலொமேறுலி) பழுதடைந்து பொவதற்க்கு சாத்தியகூறுகள் உள்ளன.
மேலும் அதிகப்படியான தண்ணீர் உடலின் அனைத்து செல்களையும், உறுப்புகளையும் வீக்கமடையச் செய்யும். அது மூளைக்கு அதிகப்படியான அழுத்தத்தையும், வீக்கத்தையும் கொடுக்கும்.

உடலுக்கு எவ்வளவு தேவையோ அதைத் தவிர மிகவும் அதிகமாய் தண்ணீர் குட்த்தால் தண்ணீர் கூட உயிருக்கு ஆபத்தைவிளைவிக்கும் என்பதற்கு ஒரு உதரணம்தான் மேலே உள்ள செய்தி.

மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் நீர் தேவை. ஆதனால் நீர் நமக்கு இன்றியமையாததாகும்.
ஒவ்வொரு நாளும் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். ஆரோக்கியமான மனிதன் ஒருநாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
அதிக வியர்வை சிந்தும் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்வோர் மற்றும் கோடைகாலத்தில் அதிக தண்ணீரைக் குடிக்கவேண்டும்.

நன்றி,சீன குடி நீர் வைதியத்தினை பற்றி கேள்வி பட்டது உண்டா அது உண்மையா?

Tamilmagal
24-04-2009, 02:19 PM
சீன வைதியத்தினை பற்றி கேள்வி பட்டது உண்டு, ஆனால் விவரமாக தெரியாது.
சீன வைதியத்தினை பற்றி தெரிந்தவர்கள் மன்றத்தில் இருந்தால் உங்களுக்கு உதவுவார்கள் என நினைகிறேன்.

அறிஞர்
24-04-2009, 03:07 PM
தகவலுக்கு நன்றி... மற்றவர்கள் கொடுத்த கூடுதல் தகவல்களும் பயனுள்ளதே..
-----
பா.ரா.. தண்ணீர் தான் தங்களுக்கு உணவா..

jk12
03-05-2009, 03:19 PM
இது என்ன புதுசாக உள்ளது...
இப்படியெல்லாமா ஆபத்து வரும்.. நம்பமுடியவில்லை..
தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

3 லிட்டருக்குமேல் குடிப்பது எல்லாம் மிகவும் கடினமே...

பரஞ்சோதி
04-05-2009, 08:50 AM
மிகவும் பயனுள்ள பதிவு.

பூமகள் அவருக்கும், இளசு அண்ணாவுக்கும் நன்றி.

இங்கே என் தோழர்கள் சிறுநீரக கற்களால் பாதிக்கப்படவே தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் அளவுக்கு நீர் குடிக்கிறேன் என்று நினைக்கிறேன்.

கோடை காலங்களில் நீர், மோர், பழரசங்கள் அருந்துவதுண்டு. விளையாடுவதாலும் நீர் அதிகம் அருந்த வேண்டியிருக்குது.

பரஞ்சோதி
04-05-2009, 08:51 AM
எதையுமே அளவோடு அருந்தினால்தான் நல்லது...:rolleyes:

தம்பி, இது பேசுவது பச்ச தண்ணி பற்றி, நீங்க குடிக்கும் வண்ணத்தண்ணி பற்றியது அல்ல :) :icon_rollout::icon_rollout:

மதி
04-05-2009, 09:18 AM
தம்பி, இது பேசுவது பச்ச தண்ணி பற்றி, நீங்க குடிக்கும் வண்ணத்தண்ணி பற்றியது அல்ல :) :icon_rollout::icon_rollout:
பச்சையும் வண்ணம் தானே... :rolleyes::rolleyes::eek::eek::eek::D:D

அன்புரசிகன்
04-05-2009, 09:25 AM
பச்சையும் வண்ணம் தானே... :rolleyes::rolleyes::eek::eek::eek::D:D

இதோ.............. வண்ணத்தினால் பாதிக்கப்பட்ட இன்னொருவர்.................. :lachen001:

பரஞ்சோதி
05-05-2009, 08:23 AM
பச்சையும் வண்ணம் தானே... :rolleyes::rolleyes::eek::eek::eek::D:D

தம்பி, நீங்க ரொம்பத் தான் தெளிவாக இருக்கீங்க, நம்புறேன். :icon_ush::icon_b:

Tamilmagal
08-05-2009, 02:59 PM
தம்பி, இது பேசுவது பச்ச தண்ணி பற்றி, நீங்க குடிக்கும் வண்ணத்தண்ணி பற்றியது அல்ல :) :icon_rollout::icon_rollout:

பச்சையும் வண்ணம் தானே... :rolleyes::rolleyes::eek::eek::eek::D:D

இதோ.............. வண்ணத்தினால் பாதிக்கப்பட்ட இன்னொருவர்.................. :lachen001:

வணக்கம் அண்ணன்மார்களே,
திரியையே திசை திருப்பி விட்டீர்களே, இது நிர்வாகிக்கு தெரிந்தால்....?

Tamilmagal
08-05-2009, 03:14 PM
3 லிட்டருக்குமேல் குடிப்பது எல்லாம் மிகவும் கடினமே...

சிலருக்கு 1 லிட்டர் தண்ணீர் குடிப்பதே கடினம்.

பரஞ்சோதி
09-05-2009, 08:37 AM
நன்றி தமிழ்மகள் திரியை சரியான திசைக்கு திருப்பிட்டீங்க :)

பால்ராஜ்
31-08-2009, 11:10 AM
-----
பா.ரா.. தண்ணீர் தான் தங்களுக்கு உணவா..

:lachen001: என்றும் கூறலாம்...
தண்ணீரிலும் காற்றிலும் வாழுபவர்கள் என்ற் ஒரு கூட்டம் இருந்தால் அதில் முக்கிய பங்காற்ற முன்வருவேன்.

சுவாசம், தண்ணீர் இரண்டும் உடலையும் மனத்தையும் ஒரு சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன என்பது எனது அனுபவம்.. (ஆல்ஸோ தண்ணி..!! நல்ல கிருமி நாசினியாக உதவும்)

தமிழநம்பி
31-08-2009, 05:55 PM
அதிர்ச்சி குழப்பத்திற்குப்பின் தெளிவுக்கு வந்து சேர முடிந்தது.
தெளிந்த முடிவு:
நாம் எப்போதும் போல் தண்ணீர் குடித்து இயல்பாய் இருக்க வேண்டும் என்பதே!
___________________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

மஞ்சுபாஷிணி
01-09-2009, 07:01 AM
அருமையான பயனுள்ள தகவலை பதித்த பூமகளுக்கும், அதை தமிழாக்கம் செய்து கொடுத்த இளசுவுக்கும் நன்றிகள்பா..

Ranjitham
03-09-2009, 12:29 AM
எதையுமே அளவோடு அருந்தினால்தான் நல்லது...:rolleyes:

Quote:
Originally Posted by மன்மதன் View Post
எதையுமே அளவோடு அருந்தினால்தான் நல்லது...
தம்பி, இது பேசுவது பச்ச தண்ணி பற்றி, நீங்க குடிக்கும் வண்ணத்தண்ணி பற்றியது அல்ல
__________________
பரஞ்சோதி

Quote:
Originally Posted by பரஞ்சோதி View Post
தம்பி, இது பேசுவது பச்ச தண்ணி பற்றி, நீங்க குடிக்கும் வண்ணத்தண்ணி பற்றியது அல்ல
பச்சையும் வண்ணம் தானே...

Quote:
Originally Posted by மதி View Post
பச்சையும் வண்ணம் தானே...
இதோ.............. வண்ணத்தினால் பாதிக்கப்பட்ட இன்னொருவர்..................

Quote:
Originally Posted by மதி View Post
பச்சையும் வண்ணம் தானே...
தம்பி, நீங்க ரொம்பத் தான் தெளிவாக இருக்கீங்க, நம்புறேன்.
Originally Posted by பரஞ்சோதி View Post
தம்பி, இது பேசுவது பச்ச தண்ணி பற்றி, நீங்க குடிக்கும் வண்ணத்தண்ணி பற்றியது அல்ல
Quote:
Originally Posted by மதி View Post
பச்சையும் வண்ணம் தானே...
Quote:
Originally Posted by அன்புரசிகன் View Post
இதோ.............. வண்ணத்தினால் பாதிக்கப்பட்ட இன்னொருவர்..................
வணக்கம் அண்ணன்மார்களே,
திரியையே திசை திருப்பி விட்டீர்களே, இது நிர்வாகிக்கு தெரிந்தால்....?
நன்றி தமிழ்மகள் திரியை சரியான திசைக்கு திருப்பிட்டீங்க
__________________
பரஞ்சோதி
ரசித்து சிரித்து வயிரு வழித்ததுதான் மிச்சம்.

பால்ராஜ்
03-09-2009, 08:19 AM
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற கூற்று எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை.. "ஒருவருக்கு அமிர்தமாக இருப்பது இன்னொருவருக்கு நஞ்சாக இருக்கக் கூடும் என்பதும்..! (One man's meat can be another man's poison).

எனவேதான் அன்று கவிஞர் அற்புதமாகப் புனைந்த வரிகள் பசுமையாக மனதில் பதிந்த வரிகள்..

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்... என்பது.

ஒவ்வொருவரும் அவரவர் தேவைகளை "அறிந்து" செயல்பட்டால் நிச்சயம் தெளிவு பிறக்கும்..

ந்யூ பேப்பரில் வந்திருக்கும் செய்தி ஒரு விதி விலக்கு.. exception.. ! யாரோ ஒருவருக்கு அதிகம் தண்ணீர் குடித்தத்தால் எதிர்மறைத் தாக்குதல் ஏற்பட்டது என்பதற்காக எல்லோரும் தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விட்டால், உலகத்தில் ஜனத்தொகை வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு..

அளவுடன் ... அவரவர் தேவைக்கேற்ப என்ற அடைமொழி மிகவும் இன்றிமையாதது.. தண்ணீர் பருகுவோம் .. நிறைவுடன் வாழுவோம்..

விவேக் பாணியில் சொன்னால்... வயிற்றில் இருக்கும் வரை தான் பிராந்தியாக் இருக்கும்.. அளவுக்கு அதிகமானால் வெளியில் ஏற்றப் படும் வாந்தி ஆகும்.. இது இயற்கையின் நியதி..

எனவே ஒருவர் ஒரு லிட்டர் என்பதை கூறுவதையும் வேறு ஒருவர் (ஹி.. ஹி..) பத்து லிட்டர் என்று கூறுவத்தையும் படு சீரியஸ்-ஆக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் தேவைகளை அவரவர் நிறைவேற்றுவதே சாலச் சிறந்தது.

....."அப்பாடா.." த்ரீ மோர் க்ளாஸஸ் ரிக்யுர்ட் இம்மீடியட்லி.........!!

aravinthan21st
18-09-2009, 10:57 PM
அதிகம் நீரருந்தினால் ஆபத்தா...?? கேள்விக்கு இளசு கொடுத்த விளக்கம் நன்று.

அன்புரசிகனின் ''ஒரு சந்தேகம். மரக்கறி சாப்பிடும் காலங்களில் தாகம் அதிகமாக காணப்படும். (மாமிசம் மச்சம் சாப்பிடும் காலங்களை விட) காரணம் என்னவோ? தெரிந்தவர்கள் கூறுங்கள். ''
சந்தேகத்திற்கு யாரும் சரியாக விளக்கமழிக்கவில்லையே! ஏன்?
நான் அவ்வாறு மரக்கறிக்கும் மாமிசத்துக்கும் வித்தியாசம் இருப்பதாக கேள்விப்படவில்லை.ஆனால்,பிரவீன் சொன்ன கூற்று ''சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் மரக்கறி உணவில் நார்சத்து அதிகம் இருப்பதால், அதை ஜீரனிக்க தண்ணீர் அதிகம் தேவைப்படலாம்.'' சரியாக படவில்லை.ஏனென்றால் நார்ச்சத்து மனிதனால் ஜீரணிக்கமுடியாது.

சரண்யா
22-11-2009, 11:29 AM
நன்றிகள்...பூமகள் அவர்களுக்கு இத்திரியில் கேட்டதற்கு...விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றிகள்...

தண்ணீர் அருந்துவதும் அளவு இருப்பதை இங்கு கண்டேன்...
காலையில வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது நல்லது என்பது உண்மைதானா....

குணமதி
22-11-2009, 02:11 PM
அளவுக்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல - நீர் உட்பட எதுவே ஆபத்தே!

உடலில் உள்ள உப்பு(சோடியம்) மற்றும் பல தனிமங்கள், கூட்டுகள் ( யூரியா, குளுகோஸ்) - போன்றவை குருதியின் அடர்த்தியைத் ( ப்ளாஸ்மா ஆஸ்மோலாரிட்டி) தீர்மானிக்கின்றன.

அடர்த்தி அதிகமானால், தாகம் வரும். நீர் அருந்தச்சொல்லும்.
(உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்)
சர்க்கரை நோய் அதிகரித்தால் தாகம் அதிகரிப்பது இப்படித்தான்.

எனவே தேவையின்றி அதிகம் நீர் அருந்த உடல், மூளை அனுமதிக்காது.

அப்படி அருந்துவதன் காரணங்கள்:

1) தவறான மருத்துவ அறிவுரை - நீரகக் கல் கரைய, அதிகம் நீர் அருந்தச் சொல்வதை.. மிக அதீதமாய் கடைபிடிப்பது.

2) தவறான நம்பிக்கை: இச்செய்தியில் உள்ளவர் போல் உடல் நலம் இன்னும் ''சுத்தமாக''
3) மனநோய் ( கம்ப்பல்சிவ் வாட்டர் ட்ரிங்கிங் சிண்ட்ரோம்)

இப்படி சில நாள் குடித்தால், நீரகம் அதை வெளியேற்றி உதவும்.
அதிகநாள் குடித்தால் நீரகமும் சோர்ந்துவிடும்.

பின் மூளை செல்கள் உப்புக்குறைவால் பாதிக்கப்பட்டு நினைவிழப்பு, வலிப்பு வரலாம்.

அபூர்வ நோய்தான். தவிர்த்து, தீர்க்கக்கூடியதே!

ஒரு நாளைக்கு 1-1.5 லிட்டர் நீர் பிரிவது உத்தமம்.
அதற்கு 2 -3 லிட்டர் நீர் அருந்தலாம்.
கோடை, உடற்பயிற்சி, வேர்வை - நீர் அளவு கூட்டவேண்டும்.
தாகம் தீரும் அளவுக்குக் குடித்தால் தீதொன்றுமில்லை!

(நீரில்லா காலங்களில் நீரகம் நீரைச் சேமிக்கவும் செய்யும்.
பாலைவன எலிகளின் சிறுநீர் கோல்கேட் பற்பசையை விடவும் அடர்த்தி..)

தகவலுக்கு நன்றி பூ!

நன்றி மருத்துவர் ஐயா.

richard
25-11-2009, 02:27 PM
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும், மேலும் கோடையில் இரவில் தண்ணீரைக் குடித்தால், நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலையும் மாலையில் மனச்சிக்கலையும் தீர்க்கும். பெரிய 'கலந்தாய்வு கூட்டம்' நடக்கும் போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம், அது மனப்பதற்றத்தைக் குறைக்கும் என்பதனால். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன.

பால்ராஜ்
25-11-2009, 03:48 PM
"தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டாம்" என்று தடுப்பவர்களை..
தண்ணி இல்லாத இடங்களுக்கு அனுப்புவதே நல்லது என்று தோன்றுகிறது:aetsch013::aetsch013::aetsch013:

aren
28-11-2009, 07:44 AM
"தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டாம்" என்று தடுப்பவர்களை..
தண்ணி இல்லாத இடங்களுக்கு அனுப்புவதே நல்லது என்று தோன்றுகிறது:aetsch013::aetsch013::aetsch013:

நான் நினைச்சேன் நீங்கள் இப்படி ஏதாவது சொல்வீர்கள் என்று. அப்படியே ஆகிவிட்டது!!!!!