PDA

View Full Version : தூரிப்போன சாவின் விளிம்பு



அமரன்
25-01-2008, 08:14 PM
காழுடைந்த குறிப்புடன்
முடமான கவிதை பயணத்தில்
விழிநீர்க்கோடுகளும் சுழிகளும்
அடுத்த பயணிக்கான
சமிக்கை யெனும் நினைவில்
தூரிப்போகிறது சாவின் விளிம்பு..

இளசு
25-01-2008, 09:01 PM
வினா: அவள் என்னை விரும்புகிறாளா வெறுக்கிறாளா?

விடை : விருப்பும் வெறுப்பும் ஒரு ஆட்டின் இரு கொம்புகள்..

-------------------------------------------------------

வினா : இது முடிவா?
விடை : இன்னொன்றின் தொடக்கம்!

------------------------------------------------------------

வினா : இது இழப்பா? வெறுமையா?

விடை : விடுப்பு, சுமைக்குறைப்பு..


------------------------------------------

வினா : இது வெப்பமா? தட்பமா?

விடை : இரண்டிலும் தோல் வேகும்.


--------------------------------------------

அமரனின் பார்வை கண்டு எனக்குள் எழுந்த வினாக்களும் விடைகளும்..

நிகழ்வுகள் ஒன்றானாலும் பார்வைகளால் மாறுபட்ட பக்கங்கள் ...

அப்போது காணும் பக்கம் பொருத்து அவரவர் எண்ணங்கள்..ஏக்கங்கள்..

அமரன்
26-01-2008, 11:33 AM
உண்மைதான் அண்ணா!
கவிதை எழுதினேன். நீளமாக இருந்தது.. சுருக்கினேன்.. திருப்தி இல்லை.. சுருக்கல் தொடர்ந்தது. இறுதியில் பார்த்தால் படிப்பவர் மன நிலைக்கு ஏற்ப பொருந்தக்கூடியதாக இருந்தது.. அதை நீங்களும் வழி மொழிந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக உணர்கின்றேன்..

சுகந்தப்ரீதன்
26-01-2008, 12:36 PM
அய்யோ அண்ணா..! சத்தியமா ஒன்னுமே புரியல..!
ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது நீங்களும் கவிஞராயிட்டீங்கன்னு..! அதுக்கு எனது வாழ்த்துக்கள்..!

ஆதவா
28-01-2008, 02:10 AM
காழுடைந்த குறிப்புடன்
முடமான கவிதை பயணத்தில்
விழிநீர்க்கோடுகளும் சுழிகளும்
அடுத்த பயணிக்கான
சமிக்கை யெனும் நினைவில்
தூரிப்போகிறது சாவின் விளிம்பு..


அய்யோ அண்ணா..! சத்தியமா ஒன்னுமே புரியல..!
ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது நீங்களும் கவிஞராயிட்டீங்கன்னு..! அதுக்கு எனது வாழ்த்துக்கள்..!

ப்ரீதன்... சற்றே நிதானித்துப் படித்தால் விளங்கும்....

இளசு அண்ணா வெகு சிம்பிலாகப் போட்டிருக்கிறார் பாருங்கள்...

வினா : இது முடிவா?
விடை : இன்னொன்றின் தொடக்கம்!

இதுதான் கவிதையே....

சுகந்தப்ரீதன்
02-02-2008, 10:49 AM
ப்ரீதன்... சற்றே நிதானித்துப் படித்தால் விளங்கும்....

இளசு அண்ணா வெகு சிம்பிலாகப் போட்டிருக்கிறார் பாருங்கள்...

வினா : இது முடிவா?
விடை : இன்னொன்றின் தொடக்கம்!

இதுதான் கவிதையே....
நன்றி ஆதவா..!!!

எனக்கு இன்னும் காழுடைந்த-என்பது புரியவில்லை.. அதன் பொருள் என்னவென்று யாராவது கூறுங்களேன்....??