PDA

View Full Version : தலைவர் பிரபாகரன் சிகிச்சைக்கு வரலாம் என்lebaster6528
25-01-2008, 09:11 AM
வீரகேசரி இணையம் - புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் சிகிச்சை பெறுவதற்காக கோவைக்கு வரலாம் என்று தகவல் வெளியானமையினால் இந்தியப்பொலிசார் உஷார்படுத்தப்பட்டனர். காயத்துடன் யாராவது சிகிச்சைக்காக வந்தால் அறிவிக்குமாறும் கியூ பிரிவு பொலிசார் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமலர் நாளேடு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற்ற இலங்கை அரசு புலிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாகவும், அவசரசிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் காட்டிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு தப்பி வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தமிழக கடலோர மாவட்டங்கள் போலிசாரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. கோவையையும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

சென்னைக்கு அடுத்ததாக அதி நவீன மருத்துவ வசதிகள் கோவையில் உள்ளன. இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள், கோவை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இதனால் புலிகளின் தலைவர் பிரபாகரன் கோவைக்கு இரகசியமாக அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வாய்ப்பு இருப்பதாக, கியூ பிரிவு பொலிசுக்கு தவகல் கிடைத்துள்ளது. புலி ஆதரவாளர்கள் கோவை, திருப்பூரில் அதிகம் இருப்பதால் உளவுத் தகவலை உதாசீனப்படுத்தாமல் பொலிசார் உஷார் அடைந்துள்ளனர்.

பொலிசார் கோவையில் அதி நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனைகள் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. டாக்டர்களை நேரில் சந்தித்த பொலிஸ் அதிகாரிகள், துப்பாக்கி குண்டு அல்லது வெடி குண்டு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்கு வருவோர் பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். சந்தேகத்துக்கு உரிய நபர் சிகிச்சை பெற வந்தால் முகவரி சான்றுக்கான ஆதாரம் பெற்று, அதை எங்களிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் மொபைல் போன் எண்களும் மருத்துவமனை நிர்வாகங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொலிசார் அதிகாரி ஒருவர் கூறியதாவது : புலித்தலைவர் பிரபகாரனோ அல்லது அவரை சார்ந்தவர்களோ சிகிச்சைக்காக கோவை வர வாய்ப்பே இல்லை என முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது . வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் செயல்படும் யு.என்.எல்.எப் என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் டாங்கோ இரு ஆண்டுகளுக்கு முன் கோவையில் தனியார் மருத்துவமனையில் இரகசிய சிசிச்சை பெற்ற போது கைது செய்யப்பட்டார். கைதாகும் வரை இவர் யார் என்றே பலருக்கும் தெரியாது மிலிட்டரி இன்டலிஜென்ஸ் அளித்த உளவுத்தகவல் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இவ்வாறான சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்துவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனைகளை உஷார்படுத்தியிருக்கின்றோம் என்றார்.

அமரன்
25-01-2008, 09:24 AM
அன்பரே!!!

நீங்கள் பகிர்ந்துகொண்ட புதினம் வேறு தளத்தில் இருந்து வாங்கப்பட்டதாயின் அத்தளத்தின் பெயரைக்குறிப்பிட்டு நன்றி செலுத்தவேண்டும்.. புதினத்தின் உள்ளடக்கத்தை உங்கள் எழுத்தில் தந்தால் வரவேற்பு அதிகமாக இருக்கும். இல்லாத பட்சத்தில் பதிவு நீக்கப்படும் நிகழ்தகவு அதிகம்..

புரிதலுடன் செயல்பட்டு தொடர்ந்து பங்களித்து ஒத்துழைப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்..

நன்றி.
-பொறுப்பாளர்

அன்புரசிகன்
25-01-2008, 09:26 AM
இந்த செய்தி வீரகேசரி இணையத்திலிருந்து வெளியாகியுள்ளது.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=550

ஓவியன்
25-01-2008, 10:44 AM
இலங்கை அரச படைகள் தாங்கள் நடாத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலமைத்துவமும் தலமையும் அழிக்கப்பட்டு விட்டதென்ற பரப்புரைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையனின் பதில் இதோ...!! (http://www.puthinam.com/full.php?2bUXnie0dXh4A0ecPA6I3a4E6Eo4d2gZg3cc2HoN2d42dPW2b020Tv3e)

praveen
25-01-2008, 11:00 AM
சும்மா, இப்படி அடிக்கடி அவரை கானோம், இவரைக்கானோம், இவர் எங்கள் குண்டுவீச்சில் காயமானார் என்று செய்தி பரப்புவதை வேலையாக வைத்திருக்கிறது இலங்கை ராணுவம். ஒரு நாள் அவர்கள் தலையிலே இடி விழுகும் போது தான் அடங்குவார்கள் போல. இவர்கள் இப்படி சொன்னவுடன் சம்பந்தபட்டவர்கள் ஊடகத்தின் பார்வையில் தோன்றி மறுப்பார்கள், அவர்களின் தற்போதைய இருப்பிடம் எது என்று அறிய செய்யும் தந்திரமாக கருதுகிறேன்.

ஓவியன்
25-01-2008, 11:06 AM
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் புலிகளிடம் இப்போதுள்ள வசதிகளுக்கு அவர்களிடம் சகல தரத்திலான மருத்துவ வசதியும் உண்டென்பதே...

ஒரு இருபது வருடங்கள் பின்னே இருந்த நிலமையை வைத்து, இப்போதும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது.

மயூ
25-01-2008, 04:54 PM
சின்னப்புள்ளத்தனமாகவே இருக்கிறாங்கையா!!!