PDA

View Full Version : சின்ன வயதில் கேட்ட நீதி கதைகள்lavanya
30-06-2003, 10:54 AM
பரங்கிப்பழமும் ஆலம் பழமும்


காடு வழியே பயணம் மேற்கொண்டிருந்த சீனுவுக்கு நெடுந்தூரம் பயணித்த களைப்பில்
ஓய்வு தேவைப்பட்டது. உடனே ஒரு பரந்த விரிந்த ஆலமரத்தின் கீழ் துண்டை விரித்துப்
போட்டு படுத்தான்.அந்த மரத்துக்கு பக்கத்திலேயே ஒரு பரங்கி செடி படர்ந்து விரிந்து
பசுமையாக காட்சியளித்தது. மிகப்பெரிய பரங்கி பழம் ஒன்றும் அதில் காய்த்து தரையைத்
தொட்டபடி கிடந்தது. சீனுவுக்கு மனதுக்குள் ஒரு பிளாஷ் அடிக்க "இவ்ளோ பெரிய
ஆலமரம் வளர்ந்து கிடக்கு. ஆனா இதோட பழம் எவ்ளோ சின்னது. தக்கணூண்டு பரங்கி
செடியில் எவ்ளோ பெரிய பழம் பழுத்து கிடக்கு.. இன்னா கடவுளோட வஞ்சம் பாருயா....
பெரிய மரம்னா சின்ன பழம். சின்ன செடின்னா பெரிய பழம்..." என்று யோசித்த படியே
தூங்கிப் போனான். சற்று நேரத்தில் வீசிய காற்றில் ஆல மரத்திலிருந்து உதிர்ந்த ஒரு சின்ன
பழம் சீனுவின் மீது "சொத்'தென்று விழுந்தது. பதறி எழுந்த சீனுவுக்கு திடீரென தன் அறியாமை
பற்றி ஞானம் வந்தது. " அடடா கடவுளை பழிச்சுட்டேனே.... இந்த சின்ன பழம் விழுந்ததுக்கே
முகம் வலித்ததே இவ்ளோ பெரிய பரங்கிப் பழம் விழுந்தா செத்தேப் போயிருப்பேனே...கடவுளே
மன்னிச்சுக்கப்பா...." என்றபடியே கடவுளுக்கு நன்றி சொல்லி பயணத்தை தொடர்ந்தான்

நீதி 1 : கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள்
படைப்பதில்லை

நீதி 2 : புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதே. அதற்கு இறக்கை கொடுக்க வில்லையே
என சந்தோசப்படு.

poo
30-06-2003, 11:59 AM
அட.. என்ன ஒரு அருமையான கதை.. அருமையான தத்துவத்தை எளிமையாய் விளக்குகிறது..

லாவண்யா... வரையறை இதயத்தை நெருடுகிறது!!!

gankrish
01-07-2003, 09:45 AM
நல்ல நீதிக்கதை லாவண்யா அவர்களே..

இக்பால்
16-07-2003, 12:14 PM
கடவுளுக்கே ஒரு வக்காலத்தா? நல்லா இருக்கு.

இறை நம்பிக்கை இல்லை என நினைத்து விட வேண்டாம்.

-அன்புடன் அண்ணா.

karikaalan
16-07-2003, 12:24 PM
அதனாலதான், தென்னைமரம் நிழல்தருவதாக அமையவில்லை! லாவண்யாஜி, பழைய கதைதான், நன்றிகள்.

===கரிகாலன்

இக்பால்
16-07-2003, 12:39 PM
தென்னை மரம் அத்தனையும் பயனுள்ள மரம் எனப் பெயர் பெற்றது,

அதற்கும் ஒரு குறை உண்டு என உணர வைத்து விட்டீர்கள்.

-அன்புடன் அண்ணா.

anbu
16-07-2003, 05:32 PM
இது பழைய நீதிக்கதையானாலும் லாவண்யா என்ற வைரத்தால்
பட்டை தீட்டப்பட்டிருக்கிறதே ! அருமை !

எந்த ஒரு உயிரினத்திற்கும் அதன் எதிர்ப்புத் தன்மையை இறைவன்
காரணம் இல்லாமல் கொடுக்கவில்லை.

உதாரணத்திற்கு பாம்புக்கு (முக்கியமாக நல்ல பாம்புக்கு) பல்லில் விசம்
இல்லாமல் இறைவன் படைத்திருந்தால் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு
வீட்டிலும் குழந்தைகள் விளையாடுவதற்கு பாம்புதான் விளையாட்டுப்
பொருளாக இருக்கும். ஏன் என்றால் அது படமெடுக்கும் விதமும்
மகுடி சத்தத்தில் மயங்கும் தன்மையும் அதன் மினுமினுப்பான தோற்றமும்
பார்க்க அழகாகத்தான் இருக்கும் அதற்கு விசத்தன்மை உண்டு என்ற
காரணத்தால்தான் இன்றும் பாம்பைக்கண்டால் படையும் நடுங்குகிறது.

Dr. Agaththiyan
16-07-2003, 09:09 PM
இது பழைய நீதிக்கதையானாலும் லாவண்யா என்ற வைரத்தால்
பட்டை தீட்டப்பட்டிருக்கிறதே ! அருமை !


அழகாச் சொன்னீங்க அன்பு அவர்களே..

முத்து
16-07-2003, 09:25 PM
நல்ல கதை சொன்ன
நம்ம லாவண்யாவுக்கு
நன்றிகள்...

lavanya
17-07-2003, 05:09 AM
கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

சகுனி
17-07-2003, 07:19 AM
ஐந்து வயதில் ஆசிரியர் கூறக்கேட்ட இந்த கதையை மீண்டும் நினைவு கூறிய நண்பருக்கு நன்றி

இளசு
21-11-2003, 11:40 PM
பரங்கிப்பழமும் ஆலம் பழமும்நீதி 1 : கடவுள் படைப்பில் எதுவுமே குறையில்லை. காரணமின்றி எதையும் கடவுள்
படைப்பதில்லை

நீதி 2 : புலியை படைத்ததற்காக கடவுளை திட்டாதே. அதற்கு இறக்கை கொடுக்கவில்லையே
என சந்தோசப்படு.

பல வலிமையான வாழ்க்கைத் தத்துவங்களை
எவ்வளவு எளிமையாக இத்தகைய கதைகள் விளக்கிவிடுகின்றன...

நன்றியும், பாராட்டும் லாவண்யா.

pgk53
23-11-2003, 01:27 PM
பழைய நீதிக்கதைகளின் சுவாரஸ்யம் எப்போதுமே குறையாது.

poornima
17-01-2009, 08:46 AM
பழைய நீதிக்கதைகளின் சுவாரஸ்யம் எப்போதுமே குறையாது.

உண்மைதான் நண்பரே

arun
21-01-2009, 06:06 PM
ஏற்கனவே கேட்ட நீதிக்கதை தான் என்றாலும் மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி