PDA

View Full Version : போதி மரம்

நாகரா
25-01-2008, 08:27 AM
வெட்ட வெட்ட
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
மண்ணில் ஆழ வேரூன்றி நிற்கும்
மரம்
மௌன குருவாய்
மனிதனுக்கு போதிக்கும்
சாவை வெல்லும் உபாயம்
"கடவுட் பூமியில்
ஆழ வேரூன்றி நில்"

அனுராகவன்
26-01-2008, 11:27 PM
நண்பரே உங்கள் கவிதைகள் ஆன்மீகம் தழுவியே வருவதில்
எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி
புத்தன் ஞானம் அடைந்தது இடம் போதிமரம்
உலகத்தில் மனிதர்கள் பல
பிறவிகள் எடுத்தும் என்ன பயன்,...
வந்ததுக்கூட ஏன் எதற்காக பிறவி எடுத்தோம் என்றுக் கூட தெரியாமல் இருப்பது ஏன்.
மானிடா!!
இப்போது வாழாமல் எப்போது வாழ போகிறாய்..
ம்ம் என் நன்றி நண்பரே
இதைபோல் பல கவி தாருங்கள்

நாகரா
27-01-2008, 03:56 AM
அனு அவர்களே! மர குருவின் ஞான நிழலில் ஆன்ம நேய ஒருமையில் நீவிர் நீடூழி வாழ்வீராக! உங்கள் உற்சாகச் சொற்களுக்கு மிக்க நன்றி!

அன்புடன்

நான் நாகரா(ந.நாகராஜன்)

சுகந்தப்ரீதன்
02-02-2008, 11:01 AM
இயற்க்கை எப்போதும் ஏதோ ஒன்றை நமக்கு கூறிக்கொண்டு தானிருக்கிறது.. அதன் ஒலியை உள்வாங்கி உணர்பவன் புத்தனாகிறான்.. மற்றவர்களெல்லாம் இவ்வுலகில் பித்தனாகிறான்..!!

கடவுள் பூமியில் ஆழ வேறூன்றி நில்..!! இயற்க்கையோடு இயைந்திரு என்பதை அழகாக சொன்னவிதம் அருமை நண்பரே.. வாழ்த்துக்கள்..!!

நாகரா
02-02-2008, 11:40 AM

அழகிய விளக்கத்துக்கு நன்றி நண்பரே!
இயற்கையோடு இயைந்திருப்போம்!
இயற்கை கூறுவதை உள்வாங்கிக் கொள்வோம்!

அன்புடன்

நான் நாகரா(ந.நாகராஜன்)