PDA

View Full Version : நடுக வழி நெடுக மரம்



நாகரா
25-01-2008, 07:31 AM
மரம் உயிர்
மனிதம் மெய்
மரமில்லா மனிதம் வெறும் பிணம்
மனிதம் மெய்யுணர மரவுயிர் அவசியம்
நடுகல்லாய் மனிதம் தொலைந்து போகாதிருக்க
நடுக வழி நெடுக மரம்

சுகந்தப்ரீதன்
02-02-2008, 11:04 AM
தாங்கள் ஆன்மிகத்துடன் இயற்க்கையையும் இணைந்து நேசிப்பது உங்கள் கவிகளில் புரிகிறது நண்பரே...!!

வழி நெடுக நடுக மரம்..!!

மரம் வளர்ப்பின் அவசியத்தை அழகாய் சொன்னதற்கு நன்றிகள் பல..!!

அனுராகவன்
03-02-2008, 03:54 AM
நண்பர் நாகரா..
ம்ம் என் நன்றி முதலில்
மரம் உயிர் வாழ தேவையான உயிர் ஆற்றலை தருகிறது..
அதேபோல் மனிதன் மரத்தினை வளர்த்தால் அது தானாக கிடைக்குமே..
அப்ப மரம் வளர்ப்போம்..
மனித இனத்தை காப்போம்..