PDA

View Full Version : கூகுள் அடுசென்ஸ்!அரசன்
25-01-2008, 06:42 AM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம். கூகுள் அடுசென்ஸ் பற்றிய தகவல்களை சொல்லுங்களேன். அப்புறம் எகலப்பையில் தமிழில் சரியக டைப் செய்யமுடியவில்லை

க.கமலக்கண்ணன்
25-01-2008, 07:02 AM
எனக்கும் சொல்லுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்

அன்புரசிகன்
25-01-2008, 09:15 AM
இது கூகிள் மூலம் பணம் சம்பாதிப்பது சம்பந்தமானது. உங்களது இணையத்தில் கூகிளின் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலம் சம்பாதிக்கலாம். அந்த விளம்பரங்களை உங்கள் இணையத்திலிருந்து சொடுக்கி வருபர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் நீங்கள் அவர்களிடம் இருந்து பணம் பெறலாம். அவர்கள் அந்த பணத்தை காசோலையாக அனுப்பி வைப்பர் என்று ஒருமுறை மயூ கூறியிருக்கிறார். இதுசம்பந்தமாக

https://www.google.com/adsense ல் பாருங்கள். அங்கு உதவியை சொடுக்கி மேலதிக விபரம் பெறலாம்.

இ-கலப்பையால் பதியமுடியவில்லை என்கிறீர்கள். அதில் உண்மையில் சில குளறுபடி உண்டு. விஸ்டாவில் சிலநேரங்களில் அது சரிவர வேலைசெய்யாது.

அதற்கு பாரதி அண்ணா தந்த புதிய NHM செயலியை முயன்றுபாருங்கள். இதுசம்பந்தமாக பாரதியண்ணாவின் புதிய தமிழ் ரைட்டர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13959) திரிக்கு செல்லுங்கள்.

செயற்படுத்தி உங்கள் அனுபவத்தை இங்கே கூறத்தவறாதீர்கள்.

இன்பா
25-01-2008, 09:31 AM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம். கூகுள் அடுசென்ஸ் பற்றிய தகவல்களை சொல்லுங்களேன். அப்புறம் எகலப்பையில் தமிழில் சரியக டைப் செய்யமுடியவில்லை

இப்போதெல்லாம் இண்ட்டர்நெட் என்றாலே நினைவுக்கு வருவது கூகுள் தான், அந்த அளவிற்க்கு பிரசித்தம். கூகுள் சர்ச் எஞ்சின்.

அதனால் தான் அனைவரும் கூகுளில் விளம்பரம் செய்தால் பலன் நிச்சயம் என்பதை உணர்ந்து அங்கு விளம்பரம் செய்கிறார்கள்.

நீங்கள் உங்கள் இணையத்தை கூகுளில் விளம்பரம் செய்ய விரும்பினால் கூகுல் adwords - செய்யலாம்.

அப்படி லட்சக்கணக்கில் விளம்பர தாரர்கள் தங்கள் விளம்பரங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இதை ஒட்டுமொத்தமாக விளம்பரம் செய்ய ஒரு யுக்த்திதான் adsense.

நீங்கள் ஒரு இணையம் வைத்திருக்கிறீர்களா...? ஆம் என்றால் கூகுள் தன் விளம்பரங்களை உங்கள் இணையத்தில் வெளியிட வாய்ப்புகொடுக்கிறது. அதற்க்கான தொகையையும் உங்களுக்கு கொடுக்கும்.

அதாவது உங்கள் இணியத்தில் யாராவது கூகுள் விளம்பரங்களை க்ளிக் செய்தால் அதற்க்கு கூகுள் உங்களுக்கு பணம் கொடுக்கும்.

ஒரு சப்பை இணையத்தை உருவாக்கி அதன்மூலம் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்...

இதன் மூலம் எவ்வளவு பணம் கறக்க முடியும்...

கூகுள் ஆட்சென்சின் நெழிவு சுழிவுகள் என்னென்ன...?

நாளை பார்க்கலாம்...

க.கமலக்கண்ணன்
25-01-2008, 09:48 AM
என்ன வரிபுலியாரே இப்படி தொலைகாட்சி போல நாளை பார்க்கலாம்
என்று புள்ளி வைத்துவிட்டீரே. சரி சீக்கிரம் சொல்லுங்கள்... அதை வைத்து சிரிதாவது சம்பாரித்தால்தான் நமது மன்றத்தில் சுதந்திரமாக இருக்க
எனது மனைவியிடம் முடியும்...

praveen
25-01-2008, 10:21 AM
கூகுள் ஆட்சென்ஸ் பற்றி இங்கே ஒரு திரி ஏற்கெனவே உள்ளது, பொறுமையாக தேடிப்பாருங்கள். அது ஒரு மாயை. வலுத்தவனுக்கு வாலை ஆட்டும், இளைத்தவருக்கு (புதியவருக்கு) சிறுது நாள் கழித்து வேலை காட்டும். அதில் பணம் ஈட்டலாம் என்ற எண்ணத்தில் நேரத்தை செலவழிப்பதற்கு பதில் வேறு விசயத்தில் செலவிட்டால் பிரயோசனம்.

நண்பர் மயூரேசன் சொன்னது வேறு ஒரு திரியில்.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=230704&postcount=13

கூகள் அட்சென்ஸ் உங்கள் தளத்தில் விளம்பரம் இட்டு பணம் சம்பாதிக்கலாம்.. ஆனாலும் அதில் அவ்வளவாக உழைக்க முடியாது... கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் என்னுடைய வலைப்பதிவால் 21 டாலரே எடுக்க முடிந்தது.

நண்பர் ஆதவன் பெ(க)ற்ற அனுபவம் வேறு ஒரு திரியில் பதிந்தது.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=165098&postcount=21


மயூரேசன் அவர்களே... கூகுளைப் பயன்படுத்தும் முன் எல்லா விதிமுறைகளையும் படித்துவிட்டுத்தான் பயணித்தேன்....
கூகுள் அட்சென்ஸ் பயன்படுத்தும் எல்லாருக்கும் நீங்கள் மேற்சொன்ன விபரம் தெரியும்... தெரிந்தும் யாராவது கிளிக் செய்வார்களா?

கீழ்காணும் தளத்திற்கு சென்று பாருங்கள் எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று..
http://groups.google.com/group/adsense-help
நான் இரு வேறு தளங்களை நிறுவி கூகுள் அட்சென்ஸ் உபயோகித்தேன்.. இரண்டும் வேறுவேறுகால கட்டங்கள்... IP அட்ரஸ் கூட வேறு...
அவர்கள் மிகப்பெரிய தளங்களை மட்டுமே விட்டுவைக்கிறார்கள்...

என் நண்பன் கூட ஆரம்பித்தான். (about steel business) அவனுக்கும் இதே கதிதான்.. தன் தளத்தின் விளம்பரங்களை அவன் தொட்டுகூட பார்த்திருக்கமாட்டான்.. ( இடைப்பட்ட காலத்தில் அவன் ஊரிலேயே இல்லை... வேலை விஷயமாக புவனேஸ்வர் போயிருந்தான் )

(என்னுடைய தளத்திற்கு தினமும் 100 லிருந்து 150 பேர் வரை வருவார்கள்..இவற்றிர்க்கு இன்றும் ஆதாரம் உள்ளது.. நான் 100 டாலரைத் தொடும்போது கிட்டத்தட்ட 3 மாதங்கள்..என் உழைப்பு வீண்.. )

கூகுள் அட்சென்ஸ் பயன்படுத்திப் பாருங்கள்.. உங்களுக்கே தெரியும்..

sarathecreator
13-02-2008, 06:37 AM
கூகிள் தேடுபொறியின் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டால் வெள்ளிப்பணம் கிடைக்காது என்று சொல்லுவதற்கில்லை.

நம்முடைய வலைப்பூ / வலைத்தளத்தில் கூகிள் வழி விளம்பரங்களை வெளியிட்டுவிட்டு நாம் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும்.

உதாரணமாக எவ்வாறு பரஸ்பரநிதியத்தில் பணத்தை முதலீடு செய்துவிட்டு அதைப்பற்றி 3 ஆண்டுகளுக்கு கண்டுகொள்ளாமல் - அதாவது அந்த முதலீட்டினை 3 ஆண்டுகளுக்குள்ளாக திரும்பப் பெறாமல் இருக்கிறோமோ - அதேபோல இருந்துவிட வேண்டும். சும்மா சும்மா எத்தனை சொடுக்குகள் / எத்தனை நாட்கள் - என்று தினம் தினம் அதைப் பார்த்துப் பார்த்து அடிமையாகி விடுதல் கூடாது.

என்றாவது ஒரு நாள் கூகிள் வழி 100$ கிடைத்தே தீரும். ஆதவா அவர்கள் கூறுவதைப் போல உழைப்பு வீண் என்பதெல்லாம் கற்பனை.

உங்களது வலைப்பூவில் கருத்துக்களை வெளியிடுகிறீர்கள் இதற்காக என்ன உழைப்பு உழைக்கிறீர்களோ அதை நீங்கள் தொடர்ந்து செய்து வருவது உறுதிதானே?
உங்களது வலைப்பூவை திரட்டிகளில் இணைத்து பிறரைப் பார்க்க வைப்பதில் உங்களுக்கு உழைப்பைவிடக் கிடைக்கும் ஆனந்தம் தானே பெரிது.

இந்த ஆனந்தத்துடன் ஒரு சிறிய துகை உங்களுக்குக் கிடைத்தால் அதுவும் ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கத்தானே செய்யும்.

வலைப்பூவை அழகுபடுத்தி பிறர்பார்க்கப் பதிவுகளைப் போடும் உழைப்பைத் தொடர்ந்து செய்யும் வலைஞர்கள் ஏராளம் இருக்கிறோம். இந்த உழைப்புக்கு யாரும் எதையும் எதிர்பார்க்கிறோமா என்ன? உழைப்புக்கேற்ற ஊதியமா இங்கே எதிர்பார்க்கப்படுகிறது. நம்முடைய எழுத்தைப் பிறர்படித்து பின்னூட்டம் இடும்போது ஒரு வித மகிழ்ச்சி வெளிப்பாடு மட்டுமே நமக்குப் போதுமானதாக இருக்கிறதே?

கூகிள் வழி விளம்பரத்துக்காக நாம் வேறு எந்தவிதமான உழைப்பும் உழைக்கிறோமா என்ன? வழக்கமாகச் செய்யும் அதே வேலை - அதாவது புதிய பதிவுகளை இடுவதை மட்டுமே செய்தால் போதும். வருவது வரட்டும் என ஒரு முறை கூகிள் வழி விளம்பரங்களை உங்களது வலைப்பூவிலோ / இணையத்தளத்திலோ வெளியிட்டுத்தான் பார்க்கலாமே?