PDA

View Full Version : அற்புதப் பரிமாற்றம்



நாகரா
25-01-2008, 06:29 AM
கம்பளிப் புழு.
கூட்டுப் புழு?
பட்டாம் பூச்சி!

விளக்கம்:
கம்பளிப் புழு ஊர்தலின் முடிவில்
கூட்டுப் புழு முடக்கம் கேள்வியாய் உருவாகப்
பறக்கும் ஆச்சரிய பதிலாகப் பட்டாம்பூச்சி

IDEALEYE
25-01-2008, 06:35 AM
இது ஒருவித ஹைகூ விதம்
என்று நினைக்கின்றேன்

கம்பளிப்பூச்சி கூட்டுப்புழு
பறக்கும் வினாக்குறிகள்
வண்ணத்துப்பூச்சி

இன்னுமொரு கவிதை

உதிரும் பூக்கள்
மண்சேரமுன்னமே
வண்ணத்துப்பூச்சிகளாய்.....

ஐஐ

நாகரா
27-01-2008, 05:55 AM
ஐஐ அவர்களே! ஹைகூ விதம் என்று நானும் நினைக்கிறேன். அற்புதப் பரிமாற்றத்தில் இன்னொன்று, உமது உதிரும் பூக்களின் உத்வேகத்தால்

உதிர்ந்த பூக்கள்.
மண் சேர்ந்த பின்னும்?
மீண்டும் பூக்கும்!

உம் உத்வேகத்துக்கு நன்றி.

அன்புடன்

நான் நாகரா(ந.நாகராஜன்)

ஆதவா
27-01-2008, 08:42 AM
இம்மாதிரி தாமரை எழுதிய சொல்லிலக்கணம், மற்றும் கீரையாமணம் ஆகியவை சொற்சிலம்பத்திலும் நமது முதல் மின்னிதழிலும் இருக்கிறது) படித்துப் பாருங்கள்.. அசந்துவிடுவீர்கள்.. இதே போல தாம்ரை எழுதிய இன்னொரு கவி...
?
நிமிர்ந்தால்
!
---------------
அவ்வகையில் எடுத்த புதுமுயற்சி... வாழ்த்துகள்...

நாகரா
27-01-2008, 12:48 PM
?
நிமிர்ந்தால்
!

மேலுள்ள தாமரையின் அருங்கவிதையை இத்திரியில் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஆதவரே! மின்னிதழை நேரங் கிடைக்கும் போது நிச்சயம் படிப்பேன்.

அன்புடன்

நான் நாகரா(ந.நாகராஜன்)