PDA

View Full Version : என் அறிமுகம் - நான் நாகரா (ந.நாகராஜன்)



நாகரா
25-01-2008, 04:52 AM
நான் தமிழ் மன்றத்தில் நுழையும் இவ்வாய்ப்புக்காக உங்களனைவருக்கும் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் பெயர் ந. நாகராஜன். வயது 47. சென்னை தில்லைகங்கா நகரில் வசித்து வருகிறேன். திருமணமாகி எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். வீட்டிலிருந்தே இணைய தளம் மூலம் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறேன். எனக்கு ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈதுபாடு உண்டு. ஞான யோகப் பாதையில் கடந்த 8 வருடங்களாக நடை பயின்று வருகிறேன். நான் வழங்கும் மகாயோகம் என்று கடவுளும் ஞானியரும் எனக்கு வழங்கும் போதனைகளுக்குப் பெயரிட்டிருக்கிறேன். அப்போதனைகளைத் தமிழ் மன்றத்தில் உங்களனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கவிதைகளiலும் எனக்கு ஈடுபாடு உண்டு. உங்களனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
நான் நாகரா (ந.நாகராசன்)

ஆதி
25-01-2008, 04:56 AM
வாருங்கள் நாகராஜன் ஐய்யா, தங்கள் ஞானப்பாதையில் எங்களையும் இட்டு செல்லுங்கள்.. தங்களின் வரவால் தமிழ் மனம் மன்றத்தின் எத்திசையும் கமழட்டும்..

அன்புடன் ஆதி

அன்புரசிகன்
25-01-2008, 05:01 AM
வருக வருக நாகராஜன். உங்களை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

sarcharan
25-01-2008, 05:16 AM
வாங்க நாகராஜன். வருக.உங்களை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஆர்.ஈஸ்வரன்
25-01-2008, 05:24 AM
உங்களை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

lolluvathiyar
25-01-2008, 07:12 AM
வரவேன்டும் நாகராஜன் நல்ல விரிவான அருமையான அறிமுகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பங்களியுங்கள். ஞானம் மட்டுமல்ல இங்கு பல இடங்கள் இருகிறது அனைத்து இடங்களிலும் பங்கு கொள்ளுங்கள்

அமரன்
25-01-2008, 07:38 AM
வணக்கம் நாகராஜன் அய்யா!
விரிவான அறிமுகத்தால் கவர்கின்றீர்கள்.
உயர்ந்தவான விடயங்களைப் வரவேற்கும் நல்லுள்ளங்களால் நிறைந்துள்ளது நமது மன்றம்.
உங்களை சேவை செவ்வனே வெற்றிபெற வாழ்த்தி வரவேற்கின்றேன்.

க.கமலக்கண்ணன்
25-01-2008, 08:24 AM
வாருங்கள் நண்பரே வந்து உங்களின் பொன்னான நேரத்தை எங்களுடன் செலவிடுங்கள்...

மதி
25-01-2008, 08:33 AM
வரவேற்புகள் நாகராஜரே...
வருக..

சாலைஜெயராமன்
25-01-2008, 10:14 AM
வணக்கம் பல திரு நாகராஜன். ராஜ நடை போட நம் மன்றத்தில் நல்லதொரு வாய்ப்பு. தங்கள் அனைத்து ஆன்மீகப் படைப்புக்களையும் மக்கள் நன்மை பெறும் பொருட்டு பகிர்ந்தளித்து நல்ல தொண்டாற்ற வாழ்த்துக்கள்.

ஓவியன்
25-01-2008, 11:13 AM
வாருங்கள் ஐயா..!!

உங்கள் அனுபங்களால் இங்குள்ள இளையவர்களுக்கு வழி காட்டுங்கள்..!!

Narathar
25-01-2008, 11:32 AM
அன்பு நாகராவை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கின்றேன்

ஷீ-நிசி
25-01-2008, 01:10 PM
வரவேற்புகளும், வாழ்த்துக்களும் அன்பரே!

அறிஞர்
25-01-2008, 01:23 PM
வாருங்கள் அன்பரே..

இணையத்தில் பலருக்கு தங்கள் முகவரி தெரிந்தால், சிலர் தொல்லைக்கொடுக்க முயலுவர்.... தற்சமயம் தங்களின் முகவரியை நீக்கியுள்ளேன்.

எல்லாரிடம் பழகியவுடன்..... நல்லவர்களிடம் தங்கள் முகவரியை பரிமாறிக்கொள்ளுங்கள்.

மனோஜ்
25-01-2008, 01:52 PM
வருக வருக நாகராஜன் அவர்களே வாழ்த்துக்கள்
தெடர்ந்து மன்றம் வாருங்கள்

சுகந்தப்ரீதன்
25-01-2008, 05:11 PM
மன்றத்தின் சார்பக தங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா...!

என்றும் மன்றத்தில் இணைந்திருந்து தங்கள் படைப்புகளை தந்தருள வேண்டுகிறேன்..!

பூமகள்
25-01-2008, 05:15 PM
வாங்க வாங்க... நாகராஜன் அண்ணா.
உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

பூமகள் பூமாரி தூவி வரவேற்கிறாள்..!! :)

செல்வா
25-01-2008, 08:35 PM
வாருங்கள் நாகராஜன் ஐயா..... தங்கள் வரவு நல்வரவாகுக... மன்றத்திற்கு இத்தகைய பெரியோரின் வரவு கிடைப்பது... மிகுந்த ஆரோக்கியமான... காலம்...

அனுராகவன்
25-01-2008, 11:45 PM
நண்பரே நாகராசன் அவர்களே உங்களை வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்...
எல்லா பகுதிகளிலும் பங்குக்கொண்டு அனைத்து சுகங்களையும் பெற வாழ்த்திகிறேன்..
-அனு

சிவா.ஜி
26-01-2008, 03:27 AM
நாகராஜன் அவர்களை மனமார மன்றத்துக்குள் வரவேற்கிறேன்.தங்கள் அனுபவங்கள் இங்கு அனைவருக்கும் பயண்படும்.வாழ்த்துகள்.

நாகரா
26-01-2008, 07:06 AM
அன்பர்களே! மனமார என்னை வரவேற்ற உங்களனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி.

அன்புடன்
நான் நாகரா(ந,நாகராஜன்)

சூரியன்
27-01-2008, 12:49 PM
வாருங்கள் அய்யா.
தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அக்னி
31-01-2008, 01:12 AM
வருக நான் நாகரா என்கின்ற ந.நாகராஜன் அவர்களே...
ஆன்மீகத் திரியில் உங்கள் படைப்புக்களை இனி எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்.
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

இதயம்
31-01-2008, 04:05 AM
வித்தியாசமான சுருக்கப்பெயரோடு உள்நுழைந்திருக்கும் நாகரா என்கிற நாகராஜனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் (திரைப்பட படப்பிடிப்பின் போது ஒலியை பதிவு செய்ய பயன்படும் கருவியின் பெயர் நாகரா..!).

நேசம்
31-01-2008, 06:31 AM
தமிழ் மன்ற உறவுகளுக்கு இனிய ஆன்மிக படைப்புகளை தர நாகரா அண்ணனை அனபுடன் வரவேற்கிறென்

மலர்
31-01-2008, 07:26 PM
வாருங்கள் நாகராஜன் அண்ணா...
உங்கள் வரவு நல்வரவாகட்டும்... :D :D
மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களும் வரவேற்புகளும்...

thangasi
02-02-2008, 04:45 PM
அன்பர் நான் நாகராஜன் அவர்களுக்கு நல்வரவு...மிக அழகாகத் தெளிவாக அறிமுகம் தந்துள்ளீர்கள். தங்கள் ஆன்மீக அனுபவங்களை நாங்களும் அறியத் தாருங்கள்.

மயூ
02-02-2008, 04:47 PM
வாங்க நாகராஜன் அவர்களே!!! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

இளசு
05-02-2008, 07:00 AM
வரவேற்புகள் திரு. நாகரா அவர்களே..

ஆன்மீகம், இலக்கியம், சிறுவர் பகுதி, அறிவியல் என பல்சுவைக் களன்கள் விரவிய மன்றத்தில்..

உங்கள் இனிய பதிவுகள், கருத்துகளால் பொலிவு கூடும்...

சேர்ந்து கற்று, பகிர்ந்து வளர்வோம்..

வாழ்த்துகள்!

மன்மதன்
05-02-2008, 01:59 PM
வாருங்கள் நண்பரே..

பங்குச் சந்தை பற்றி பதிவுகள் தாருங்கள்..