PDA

View Full Version : அர்த்தநாரீஸ்வரர்...................meera
25-01-2008, 12:44 AM
சொந்தங்களின்
சொல்லம்புகள்
சாட்டையாய் சுழல..

பிறந்த மண்ணைவிட்டு
வேற்று மண்ணில்
முகமறியா முகங்களோடு
முகம் தொலைக்க...

பண்பட்ட மனம்
புண்பட்டு நின்றது
சக மனிதர்களின்
விலகல் கண்டு
கோபத்தின் உச்சத்தில்
குழந்தைகள் கூட
கொடியவர்களாய் தெரிய....

திடம் மனதிலும்
வலிமை உடலிலும் இருக்க
தன்மானம் விற்று
கடைகளில்
கையேந்திய பொழுது
கூனிகுறுகிய மனதை
நிமிர்த்த வழியின்றி..

வஞ்சித்த வாழ்வை
வலிகளோடு சுமந்து...

விடையறியா கேள்விகளை
விதியென்று ஏற்பதா??
விடைகாண முயற்சிப்பதா??

அறிந்தும் அறியாமல்
உலகிற்கு இந்த கேள்வி

கடவுளின் கலவை
அர்த்தநாரீஸ்வரராய்
கௌரவிக்கபடுமானால்..

அவன் படைத்த
எங்களின்
நிலை மட்டும்
காட்சி பொருளோ??????????

தாமரை
25-01-2008, 01:33 AM
நீயாய் நீயிருக்க
தீயாய் ஊரிருக்க
தாயாய் இருப்பதாரோ
தங்க மகளே!

தட்டிய கையொலி
காதில் விழும்பொழுதெல்லாம்
நெஞ்சில் இறங்குதடி
இடி

உன் நளினம் கண்டபோது
என் நளினமும் நாணமும்
தொலைத்து விட்டேன்
சுமந்த வயிறு
சுமந்த மனது
உன்னைப் பிரசவித்த பொழுது
லேசானது
நீ பரிதவித்த போது
கனத்தது

உணர்வையும் உடலையும்
இடம் மாற்றி வைத்துவிட்டு
என்ன விளையாட்டு இது
அந்த பிரம்மனும் தான்
குடித்திருந்தானோ
உன் அப்பனைப் போல்

பாவியடி நான் மகளே!
நள்ளிரவில் விட்டுச் சென்றாய்
நாடோடியாக
இங்கே தாயை விட்டு விட்டு
உலகெல்லாம் யாரையடி தேடுகிறாய்
வா மகளே
என்கட்டை மண்ணில் சாயும்வரை
உழைத்துத் தருகிறேன்
என் பாலருந்தி வளர்ந்தவளே
பால் மயக்கத்துடன்
பரிதவித்துச் சென்றவளே
உண்டு நமக்கும்
இருகைகள்
ஒரு வாழ்வு
வா.

meera
25-01-2008, 01:55 AM
அண்ணா, என்ன சொல்லன்னு தெரியலை.நான் இப்படி யோசிக்கலை.அழகான வ(லி)ரிகள்.

ஆத்மார்த்தமான புரிதல் + தவிப்பு

மதி
25-01-2008, 02:04 AM
மீராவின் கவிதையும் தாமரையின் பின்னூட்டமும் அருமை.. வலி நிறைந்த வரிகள்.. சில நேரங்களில் அங்கீகாரம் குடுக்காத இந்த சமுதாயக்கட்டமைப்பின் மேல் தான் கோவம் எழுகிறது. வேறொரு நாட்டினில் இத்தகையோர் நல்ல நிலைமையில் தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததைப் பார்க்கையில் இவர்கள் மேலிருந்த கண்ணோட்டம் மாறியது. இது அவர் பிழையல்லவே..!

தாமரை
25-01-2008, 02:08 AM

அங்கீகாரத்தை விடுங்கள்.. அருவெருப்பைத் தொலைக்கிறார்களா முதலில்?

மகளிர் சுயவேலை வாய்ப்புத் திட்டம் போல் இவர்களும் குழுக்களாகி சுயட்தொழில் செய்ய வேண்டும். சமூக நல அமைப்புகள் அதற்கு உதவி செய்ய வேண்டும்.

முதலடி வைக்கப்பட்டால் எல்லாம் நடக்கும்..

மதி
25-01-2008, 02:13 AM

இவர்களுக்குக் கொடுக்கப்படாத அங்கீகாரமே முதல் காரணம்.. ஆங்காங்கே சிக்னலில் இவர்களைப் பார்க்கையில் அருவருப்பு கலந்த பயம் ஏற்படும். இவர்களின் செய்கைகள் என பலவாறு கேள்விப்பட்டிருந்த விஷயங்கள் நினைவுக்கு வரும்.

இவர்களுக்கும் சுய தொழில் செய்ய உதவி கிடைக்கும் பட்சத்தில் நம் நாட்டிலும் இவர்கள் மேலுள்ள பார்வை மாறும். ஓட்டு போடும் மக்களுக்கே எதுவும் செய்யாத அரசியல்வாதி... ஓட்டே இல்லாமல் ஊர் ஊராய் சுற்றும் இவர்களுக்கு செய்ய முனைவார்களா..?

அந்த முதலடி தான் இங்கு முக்கியம்.

meera
25-01-2008, 02:14 AM
உண்மை தான் அண்ணா.ஆணால் முதலில் பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது தான் விளங்காத கேள்வி.

meera
25-01-2008, 02:18 AM
ஒரு முறை விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு தரப்பட்டிருந்தது. அதுவே நல்ல தொடக்கம் தான்.

முதலில் மீடியாக்களில் இவர்களை தவராக காட்டுவதை நிறுத்தினாலே எல்லா அங்கிகாரமும் இவர்களுக்கு கிடைத்துவிடும்

பூமகள்
25-01-2008, 08:27 AM
இயற்கையின் சோதனைக்கூடத்தின்
செய்முறைப் பிழை..!

தோற்றம் ஒன்றாக
மாற்றம் வேறானது..!

இயற்கையின் பிழை
இருப்பவர் மேல் பழி..!

எரித்துப் பார்க்கும்
எதார்த்த உலகம்..!

ஏங்கி உழைக்க துடிக்கும்
ஏந்திழைகள் ..!

கை பிடித்து
வழி நடத்த
வழியற்ற சாலையில்
மனிதம்..!

ஏற்றமுற வைப்பதன் முன்
ஏளனப்பார்வை மாறனும்..!

சிந்திக்க வைத்த கவிதை.. அன்புத் தோழி மீரா. வாழ்த்துகள்.:icon_b:

தாமரை அண்ணாவின் பின்னூட்ட கவியும் அற்புதம்.

பாராட்டுகள் இருவருக்கும். :)

ஓவியன்
27-01-2008, 06:42 AM
மதிக்காவிட்டாலும் பரவாயில்லை
அவர்களது உணர்வுகளை
மிதிக்காமல் இருந்தாலே போதுமே.. .

ஆதவா
27-01-2008, 09:33 AM
உண்மையைச் சொல்லவேண்டுமானால், இதில் முழுக்க சமுதாயத் தவறுகள் இல்லை. அவர்களின் தவறும் உண்டு. முதலாவது தைரியத்தை இழந்துவிடுகிறார்கள். தன்னம்பிக்கையும் அதோடு போய்விடுகிறது.. சமுதாயம் என்ன சொல்கிறது என்பதை விட்டுவிட்டு தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு பெண் அல்லது ஆண் எத்தனையோ குற்றங்களை சுமந்திருந்தாலும் பின்னாளின் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து நல்ல வாழ்வைப் பெறும் பட்சத்தில் அதே சமுதாயம் அவர்களைப் போற்றூம்.. இது ஏதோ விதிக்கப்படாத விதியாகத்தான் இருக்கிறது.

பிச்சைக்குப் பொருந்தா காரணங்கள் நீங்கள் பொருத்தியிருக்கிறீர்கள்... என்பதால் வலிமையான நாயகி என்பதை என்னால் உணரமுடியவில்லை....

மீராவிடமிருந்து எப்போதும் துளிப்பாக்களே வரும்... எப்போழ்தாவதுதான் நீளக்கவிதையும்.... எல்லாமே ஒளிரும் விண்மீன்களைப் போல என்பதுதான் ஆச்சரியம்..

வாழ்த்துகள் சகோதரி.
ஆதவன்

ஓவியன்
27-01-2008, 09:43 AM
உண்மையைச் சொல்லவேண்டுமானால், இதில் முழுக்க சமுதாயத் தவறுகள் இல்லை. அவர்களின் தவறும் உண்டு. முதலாவது தைரியத்தை இழந்துவிடுகிறார்கள். தன்னம்பிக்கையும் அதோடு போய்விடுகிறது.. சமுதாயம் என்ன சொல்கிறது என்பதை விட்டுவிட்டு தான் என்ன செய்யப் போகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு பெண் அல்லது ஆண் எத்தனையோ குற்றங்களை சுமந்திருந்தாலும் பின்னாளின் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து நல்ல வாழ்வைப் பெறும் பட்சத்தில் அதே சமுதாயம் அவர்களைப் போற்றூம்.. இது ஏதோ விதிக்கப்படாத விதியாகத்தான் இருக்கிறது.

பிச்சைக்குப் பொருந்தா காரணங்கள் நீங்கள் பொருத்தியிருக்கிறீர்கள்... என்பதால் வலிமையான நாயகி என்பதை என்னால் உணரமுடியவில்லை....

சமூதாயத் தவறும் இருக்கிறது ஆதவா...!
சமூதாயம் மீராவின் கவிப் பொருளாக வந்த
அர்த்தநாரீஸ்வரர்களை தூற்றினாலும் பரவாயில்லை
ஒரு சாதாரண மனிதர்களாக மதிக்கவே தயங்குகிறதே...

பல திரைப்படங்களில் இன்னும் அவர்கள்
காட்சிப் பொருட்கள் தானே...

தாமரை அண்ணா கூறியது போல்
தவறிழைத்தவன் பிரமனாக இருக்க
இவர்களை நாம் ஒதுக்குவதேன்.......???

அது சமூதாயத் தவறு இல்லையா....????

ஆதவா
27-01-2008, 10:06 AM
ஓவியரே! முழுக்க முழுக்க சமுதாயத்தின் தவறு இல்லை என்றுமட்டும் சொன்னேன்... மற்றபடி உங்கள் கருத்தோடு என் கருத்தும் ஒத்தது...

இளசு
03-02-2008, 08:08 PM
மீரா, தாமரை, பாமகள் - முக்கூடல் சங்கமத்தில் நனைந்து எழுந்தால்
விழியோரம் கரிக்கிறது...

தாமரை சொன்ன விடிவுகள் சாத்தியமே...

அடுத்த தலைமுறை அரவாணிகளுக்கு முன்னர் நிறைவேற்றக்கூடியவையே!

தீர்வுகள் விரைந்து காணப்படவேண்டிய கட்டம்..

இவ்வகைக்கவிதைகள் வினையூக்கியாகட்டும்!

அமரன்
22-02-2008, 09:04 AM
ஆனந்தவிகடனின் இவ்வகை பிறவிகளுக்கு திருநங்கை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.. திரு என்பது ஆணைக்குறிக்கிறது என்றாலும், மதிப்பு,செல்வம் என்னும் பொருள்படுகின்றது. இனி திருநங்கை என்றே அழைப்போம். அவர்களையும் மதிக்கும் இனிக்கும் தருணம் உருவாகட்டும்..

ஓவியன்
28-02-2008, 06:13 AM
ஆம் அமரன் ஒரு திருநங்கையின் பேட்டிய ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்தார்கள்...

ஊரார்தான் என்னை புரிந்து கொள்ளவில்லை, என்னைப் பெற்ற தாயுமா...??
என் தாயின் அரவணைப்பு மட்டும் எனக்கு கிடைத்திருந்தால் எத்துணையோ சாதித்திருப்பேன் என்று சொன்ன அவர் வார்த்தைகளெல்லாம் மனதில் வலிகளாக அறைந்தது...