PDA

View Full Version : என் முதல் கவி-அனுஅனுராகவன்
24-01-2008, 10:37 PM
உள்ளத்தை கேட்டேன் -கிடைத்தது
ஒரு சுகமான வழி
அந்த வழி வரும் ,போகும் ஆனால்
வருவது தெரியாது-போவது தெரியாது
உள்ளத்திலுள்ள வார்த்தைகளை சொல்ல- என்
மனம் கல்லாய் போனது ஏன்.!!!
உருகும் என் நினைவுகள் கண்- விழித்தபடி
பகலும், இரவும் பாராமல் நான்
இணைந்திருப்பேன் நாம் மன்றத்தோடு...!!

நண்பர்கள் என் முதல் கவியே கண்டு மகிழுங்கள்.
கருத்து தாருங்கள்..!!

-அனு
என்றும் அன்புடன் உங்கள் தோழி......

meera
24-01-2008, 11:04 PM
தங்களின் கவி நன்று.

ஆனால் தோழி கோபிக்க வேண்டாம் சில எழுத்து பிழைகள்

சாலைஜெயராமன்
25-01-2008, 01:57 AM
வருவதில்லை வழிகள்
வந்ததும் செல்வதும் வழி வழியே அது
விதியின் வசத்தால் விளைந்ததுதானே
வழியின் வாசலில் விதியும் நுழைவதை
மதியின் வழியே மடக்கிப் பிடித்தால்
மயக்கும் விதியை மாய்க்கவும் கூடுமே

அன்புச் சகோதரி வழிகள் வருவதில்லை. வகுக்கும் வழியும் நாம் அறிவதில்லை. வகுத்த பாதை வெற்றியைத் தந்தால் வந்த வழி நல்ல வழி. நன்மையும் தீமையும் தானே நம் வழியில் நாம் சந்தித்தது. வாழ்க்கை நமக்குக் காட்டியது வழியில் வெளிச்சத்தை.

சிறிய கருத்தைப் பிழை இருந்தது. கருத்துக்களின் கனம் கவிதையாய் வந்ததில் வெற்றிதான்.

மேலும் எழுதுங்கள். ஆக்கபூர்வமான கருத்துக்களை அன்பர்களுக்கு அளியுங்கள்.

தாமரை
25-01-2008, 02:25 AM
மழலையாய் என் மகள் குரல் கேட்டது போல் இருக்கிறது அனு,

எழுதிக் கொண்டே இருங்கள்

ஆதி
25-01-2008, 06:21 AM
அந்த வழி வரும் ,போகும்
ஆனால் வருவது தெரியாது-போவது தெரியாது
உள்ளத்திலுள்ள வார்த்தைகளை சொல்ல- என்
மனம் கல்லாய் போனது ஏன்.!!!
உருகும் என் நினைவுகள் கண்- விளித்தபடி


அக்கா, மிக ரசித்தேன் இந்த வரிகளை..


உள்ளத்தில் உள்ள வார்த்தைகளை
உதடுகள் உச்சரிக்க இயலாத பொழுதில்
விழிகள் விளித்தன கண்ணீராய்...

அடடா.. ரொம்ப நல்லா இருக்குங்க அக்கா..

ஆயிரம் வாசல் இதயம் - அதில்
ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ போவார்
வருவதும் போவதும் தெரியாது.. - கவியசரசர் - நெஞ்சில் ஓர் ஆலையம்


இந்த கவியரசரின் வரிகளையும் நினைவு படுத்துவதாய் தங்களின் வரிகள்..

நிறைய எழுதங்கள் அக்கா எங்கள் இதயம் நிரம்ப எழுதுங்கள்..

நிச்சயம் வார்த்தைகள் உங்களுக்கு நெருக்கமாகும்

நினைத்த கருத்துக்கள் சுருக்கமாகும்..

முதல் முயற்சிக்கும் கவிதைக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.


அன்புடன் ஆதி

பூமகள்
25-01-2008, 07:12 AM
அன்புச் சகோதரி அனு..!
உங்க முதல் கவிதையே மன்றத்துக்காக..!
மிக்க மகிழ்ச்சி..! வாழ்த்துகள்.
வாருங்கள்... மன்றத்தின் வீட்டில்..ஒன்றாக தவழுவோம்..! :)

வாசகி
25-01-2008, 12:43 PM
உள்ளத்திலுள்ள வார்த்தைகளை சொல்ல- என்
மனம் கல்லாய் போனது ஏன்.!!!......

சிக்கி முக்கிக் கல்லு மட்டுமல்ல
கல்லான மனதின்
உரசலிலும் பொறி பிறக்கும்..
வார்த்தைகளில் பொறி பறக்கட்டும்..

நல்லதை தீந்தீயால் சுடுங்கள்.
அல்லதை தீத்தீயால் சுடுங்கள்..
ஏற்படுத்தும் வடுக்கள் தான்
நமது பயணத்தின் சுவடுகள்..:icon_b:

அனுராகவன்
25-01-2008, 11:55 PM
நன்றி நண்பர்களே
என் கவியே படித்து கருத்துதந்தமைக்கு
அனைவருக்கும் என் நன்றிகள்..

சிவா.ஜி
26-01-2008, 04:19 AM
அனுவின் முதல் கவிதை மன்றத்தின் பெயர்தாங்கி பூத்திருக்கிறது.வாழ்த்துகள்.இன்னும் எழுதுங்கள்.....நல்ல பல கருக்களை கையாண்டு.

யவனிகா
26-01-2008, 04:47 AM
கவிதையுடன் ஆரம்பித்து உள்ளீர்கள் அனு. இன்னும் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.

mayakrishnan
26-01-2008, 07:48 AM
கவிதையுடன் தொடங்கிய அனுவிற்கு பாராட்டுக்கள்!

மனோஜ்
26-01-2008, 07:53 AM
வாழ்த்துக்கள் அனுஅக்கா முதல் கவிதைக்கு
இனி தொடர்ந்து பல கவிதைகள் தாருங்கள்

ஆதவா
26-01-2008, 09:31 AM
முதல் கவிதையே முத்தாய் ஜொலிக்கிறது... உங்களிடம் மேலும் பல விஷயங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையும் பிறக்கிரது..
சகோதரி உங்கள் உள்ளத்திடம் கேட்டது கிடைக்குமானால் அதற்கான வழி என்ன என்று சொல்லுங்கள்... நாங்களும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறோம்..
பகலில் முழுவதுமாக இரவில் கொஞ்சமாக வாருங்கள்.... உடல் நலம் எம் சகோதரிகளுக்கு மிகவும் முக்கியம்...
அன்புடன்
ஆதவன்

aren
26-01-2008, 10:27 AM
முதல் கவிதை அனுபவம் அருமை. உள்ளத்தில் இருக்கும் கருத்துக்களை மன்றத்தில் அள்ளிவிடுங்கள், நாங்கள் படித்து பரவசமடைகிறோம்.

பாராட்டுக்கள். தொடருங்கள்.

அனுராகவன்
26-01-2008, 11:04 PM
முதல் கவிதையே முத்தாய் ஜொலிக்கிறது... உங்களிடம் மேலும் பல விஷயங்கள் வெளிவரும் என்ற நம்பிக்கையும் பிறக்கிரது..
சகோதரி உங்கள் உள்ளத்திடம் கேட்டது கிடைக்குமானால் அதற்கான வழி என்ன என்று சொல்லுங்கள்... நாங்களும் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறோம்..
பகலில் முழுவதுமாக இரவில் கொஞ்சமாக வாருங்கள்.... உடல் நலம் எம் சகோதரிகளுக்கு மிகவும் முக்கியம்...
அன்புடன்
ஆதவன்
ஓ அப்படியா ஆதவா....
மிக்க நன்றி மற்ற மனிதர்கள் பற்றி நலத்தில் பங்குயெடுப்பது..
ம்ம் என் நன்றி..
மேலும் எனக்கு நன்றிக்கூறிய நண்பர்களுக்கும் இதன் மூலம் நன்றியே தெரிவித்துக்கொள்கிறேன்

சுகந்தப்ரீதன்
02-02-2008, 11:11 AM
உங்கள் முதல் கவிக்கு முதலில் வாழ்த்துக்கள் அக்கா..!!

தொடர்ந்து எழுதி வாருங்கள்... இன்னும் பொலிவடையும் உங்கள் எழுத்துக்கள்...! அதற்கு எனது வாழ்த்துக்கள்.!!


அந்த வழி வரும் ,போகும் ஆனால்
வருவது தெரியாது-போவது தெரியாது
......
செல்லும் போது சிந்தைக்கு
எட்டாது - வென்ற பின்பு
விழிக்கு கிட்டும் நான்வந்த
வழி என்வாழ்வின் கால்தடமாய்.!!

அனுராகவன்
02-02-2008, 11:21 AM
செல்லும் போது சிந்தைக்கு
எட்டாது - வென்ற பின்பு
விழிக்கு கிட்டும் நான்வந்த
வழி என்வாழ்வின் கால்தடமாய்.!!

நன்றி நண்பரே..
ம்ம் என் வாழ்த்துக்கள்..
தொடர்ந்து வாருங்கள்...

சுகந்தப்ரீதன்
02-02-2008, 11:34 AM
நன்றி நண்பரே..
ம்ம் என் வாழ்த்துக்கள்..
தொடர்ந்து வாருங்கள்...
அக்கா என்பது அனு அக்காவுக்கு பிடிக்கவில்லை போலிருக்கு..!!:icon_ush:

சரி தோழியே உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்..!!:icon_b:

அனுராகவன்
03-02-2008, 03:43 AM
அக்கா என்பது அனு அக்காவுக்கு பிடிக்கவில்லை போலிருக்கு..!!:icon_ush:

சரி தோழியே உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்..!!:icon_b:
இல்லை அக்காவினே கூப்பிடு அதுதான் எனக்கு பிடித்திருக்குது...
தோழி வேண்டாம்..
அக்கா, தம்பி போல இருப்போம்..
ம்ம் என் நன்றி