PDA

View Full Version : ஆங்கில-தமிழ் மொழிமாற்றி



ka.dhanasekar
24-01-2008, 05:54 PM
ஆங்கில-தமிழ் மொழிமாற்றி

நாம் பயன் படுத்தும் தங்கிலிஷ் மொழிமாற்றி இல்லாமல் ஆங்கில-தமிழ் மொழிமாற்றி எந்த வலை பக்கத்தில் கிடைக்கும்

அவ்வாறு கிடைத்தால் அதனை எனக்கு தெரிவிக்கவும் நன்றி

அறிஞர்
24-01-2008, 06:03 PM
http://www.tamildict.com/

இந்த தளம் உபயோகமாக இருக்குமா.. முயன்று பாருங்கள்..

இன்னும் சில தளங்கள் நல்ல மொழிமாற்றத்திற்காக உருவாகி வருகிறது.

அன்புரசிகன்
24-01-2008, 06:08 PM
ஆங்கிலத்திலிருந்து தமிழ் சிங்களம் அறிய இங்க (http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp) செல்லுங்கள்.

மயூ
25-01-2008, 04:57 PM
இவர் கேட்பது அகராதியா? மொழி மாற்றியா?

அன்புரசிகன்
25-01-2008, 05:03 PM
அவ்வாறாயின் நம் மன்றத்திலேயே யுனிக்கோட் மாற்றி மற்றும் basic editor ல் அவ்வாறான வசதிகள் உண்டு. இவர் எதை கேட்கிறார் என்று இன்னும் சற்று விளங்க தந்தால் உதவமுடியும்.

மயூ
25-01-2008, 05:06 PM
மொழி மாற்றி இது வரை தமிழுக்கு இல்லை!!!

அன்புரசிகன்
25-01-2008, 05:10 PM
மொழி மாற்றி இது வரை தமிழுக்கு இல்லை!!!

அட. ஆங்கிலத்தில் கொடுக்க தமிழில் வருவதையா கேட்டார்? :eek: ஆளவுடுங்க சாமி.

ஜானகி
02-12-2010, 03:06 PM
தமிழ் - ஆங்கிலம் - அகராதி

ஆங்கிலம் - தமிழ் - அகராதி

இவை பற்றிய தளம் எது என்பதை,தெரிந்தவர்கள், தயவு செய்து சொல்லவும்,

நன்றி

ஆன்டனி ஜானி
03-12-2010, 03:37 PM
எனக்கு தமிழை நல்லா
கற்க்க வழிகாட்டுங்களேன் .....

நாஞ்சில் த.க.ஜெய்
12-12-2010, 05:09 PM
Pals E-dictionary என்ற ஒரு மொழிமாற்றி உள்ளது இது ஒரு இலவச மொழிமாற்றி அதனை வேண்டுமெனில் உபயோகபடுத்தி பாருங்கள் மிகவும் உதவும் உங்களுக்கு இதன் தொடர்புக்கு http://ildc.in/Tamil/GIST/Palaniappa/Pals-Tamil-e-Dictionary.zip
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

nambi
16-12-2010, 03:40 AM
Pals E-dictionary என்ற ஒரு மொழிமாற்றி உள்ளது இது ஒரு இலவச மொழிமாற்றி அதனை வேண்டுமெனில் உபயோகபடுத்தி பாருங்கள் மிகவும் உதவும் உங்களுக்கு இதன் தொடர்புக்கு http://ildc.in/Tamil/GIST/Palaniappa/Pals-Tamil-e-Dictionary.zip
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

இது அகராதி மொழிமாற்றி அல்ல....ஆங்கிலத்தில் அல்லது பிறமொழியில் இருக்கும் வாக்கியங்களை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துத் தருவதை பற்றிக் கேட்கிறார்கள் என நினைக்கிறேன். அது இன்னும் வரவில்லை ஒரு சில மொழிகளில் உள்ளது. தமிழில் வரவில்லை அதேபோன்று தமிழில் இருந்து பிறமொழிக்கு மாற்றுவதற்கும் வரவில்லை. இன்னும் ஆய்வில் தான் உள்ளது. இது பற்றி பல முறை திரிகள் துவங்கப்பட்டுள்ளது.

தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் வரும் இடத்திற்கு இடம், நபருக்கு நபர் வேறுபடும்...உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் He..She...என்பன...இவையெல்லாம் தமிழில் அவன், அவள், அவர்...என நபர்களின் வயதிற்கேற்ப மாறுபடும்...ஆகையால் எந்திரத்தால் இதை வேறுபடுத்தி அறியமுடியாது. அதை அறிவதற்கான வேறு ஏதாவது முயற்சிகள் இருக்கிறதா? என ஆராயப்பட்டு வருகிறது. சில இடைக்குறிப்புகளுடன் உருவாக்கமுடியுமா? என்றும் ஆராயப்படுகிறது. இதை உருவாக்க கூகுள் நிறுவனம் பயனாளர்களிடமே ஒப்படைத்து உள்ளது. (தமிங்கலமாக மாற்றுவதற்கு மாற்றி உள்ளது.)

கூடிய விரைவில் இந்த மொழிமாற்றி வரலாம். அப்போது எந்த மொழியாளரும் தமிழர்களுடன் தொடர்பு கொள்ள முடியும், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள முடியும்.

ஆன்டனி ஜானி
17-12-2010, 01:31 PM
தமிழ் டைப் செய்வதற்க்கு நான் கற்று கொண்டேன்

இது எனக்கு ரெம்ப உதவியாக இருந்தது நண்பரே

வாழ்த்துக்கள் ...

இனிதே எமது பணி தொடரும் ......