PDA

View Full Version : எதிர்பார்ர்புஆதி
24-01-2008, 05:04 PM
எவரெவரோ நடமாடும்
என் இதய தெருவில்
நடமாடுகின்றன
உன் நினைவுகளும்

கசியும்.. கண்ணீரின்
முற்றுப் புள்ளியில் இருந்து
முளைத்து கிளைக்கிறது
என் ஆற்றாமையின்
நெருப்பு செடிகள்..

நினைவின் ஆன்மா அழும்,
தனிமையை கொளுத்தி
எரிகிறது
நம் பிரிவு பிறைகள்

இல்லாத ஒரு நிறத்தை
இதழில் விளாவி
மலர்த்து விடுகின்றன
ஏக்கப் பூக்கள்..

வரவேற்பு வாசகங்களும்
ஒளிப்பந்தல்களும் இட்டு
அலங்கரித்த என் முற்றத்தில்
நீ வராமையால்
வழிந்தோடும் வெறுமையில்
கனத்து சாய்கிறது
வாடிய என் முகம்!

- ஆதி

சாலைஜெயராமன்
24-01-2008, 07:04 PM
காதலாகிக் கசிந்துருகி என்பது இதுதானோ. எதிர்பார்த்துக் காத்திருந்து வெறுமையான உள்ளத்தின் வேதனையான வரிகள். வலிக்கிறது ஆதி. இலக்கணங்கள் தேவையில்லாத உண்ர்வின் பிரதிபலிப்பு. உங்கள் இளமைக்கு எழில் சோ்க்கிறது ஆதி.

அனுராகவன்
24-01-2008, 11:23 PM
நல்ல காதல் கவிதை நண்பர் ஆதியே..
மிகவும் அனுபவித்து எழுதியுள்ளிர்கள்..
என் மனமும் சேர்ந்துதான் ஏதோ ஒரு எதிர்பார்ப்புக்கு ஏங்குகிறது...
உங்கள் கவிதை அதை புர்த்திசெய்துவிட்டது..
என் நன்றி ஆதி..
ம்ம் தொடர்ந்து எழுத பாராட்டுகிறேன்..

meera
24-01-2008, 11:55 PM
வரவேற்பு வாசகங்களும்
ஒளிப்பந்தல்களும் இட்டு
அலங்கரித்த என் முற்றத்தில்
நீ வராமையால்
வழிந்தோடும் வெறுமையில்
கனத்து சாய்கிறது
வாடிய என் முகம்!

- ஆதி

ஆதி, இத்தனை நாள் உங்க கவிதைகளை சரியாய் படிக்கலையோ என்ற ஒரு நெருடல் எனக்குள்.

இந்த கவிதையின் ஆழமான வரிகள் யோசிக்க வைத்தது.

அழகான வார்த்தைகளின் விளையாட்டு. வலியின் வலிமை இந்த கவிதை. :icon_b:

ஆதி
25-01-2008, 08:29 AM
காதலாகிக் கசிந்துருகி என்பது இதுதானோ. எதிர்பார்த்துக் காத்திருந்து வெறுமையான உள்ளத்தின் வேதனையான வரிகள். வலிக்கிறது ஆதி. இலக்கணங்கள் தேவையில்லாத உண்ர்வின் பிரதிபலிப்பு. உங்கள் இளமைக்கு எழில் சோ்க்கிறது ஆதி.

என்னை சுட்ட நினைவுகள் உங்களை தொட்டத்தில் எனக்கு மகிழ்ச்சி
ஜெய்ராம் ஐய்யா..

கவிதைக்கு பொழிலாய் வந்த தங்களின் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் ஆதி

பூமகள்
25-01-2008, 08:41 AM
ஏக்கவிளிப்பில்
பிரிவுத் துயரோடு
எரிந்திருக்கும் நாட்கள்..!

வலிக்கும் கூட வலிக்கும்..
உங்கள் வரிகள் கண்டால்
இன்னும் கூடவே வலிக்கும்..!

உங்கள் கவிதை என்றுமே
தனிச்சிறப்பு..!

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஆதி..! :icon_b:

சாலைஜெயராமன்
25-01-2008, 12:12 PM
ஆதி உங்களிடம் ஒரு கேள்வி.

இந்தக் காதல் என்பது உடல் மீதா ? உயிர் மீதா?

இளைய தலைமுறைகள் உருகி உருகி எழுதும் கவிதைகளைக் காணும்போது என் இளமை காலத்தில் இப்படி ஒரு அனுபவம் கிட்டவில்லையே என எண்ண வைக்கிறது.

1970 களில் எங்கள் இளமைகாலம் இருபாலரிடையே வெட்கத்தைத்தான் அதிகம் கொண்டிருந்தது. பெண்களோ ஆண்களோ அதிகம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாததும் ஒரு காரணமோ? அதனாலேயே இப்படிக் காதல் கவிதைகள் எழுத வாயப்பில்லை.

காதல் கவிதைகளை இளமைக் காலத்தில்தான் எழுத முடியுமா?

காதல் அனுபவங்களை திருமணத்திற்குப் பின் மனைவியிடம் பெறமுடியாதா என்ன ? ஏன் மனைவியைக் காதலிக்கக் கூடாது? முடியாதா? ஒரு Thrill இருக்காதோ?

ஆதி
25-01-2008, 12:32 PM
ஆதி உங்களிடம் ஒரு கேள்வி.

இந்தக் காதல் என்பது உடல் மீதா ? உயிர் மீதா?

காதல் அனுபவங்களை திருமணத்திற்குப் பின் மனைவியிடம் பெறமுடியாதா என்ன ? ஏன் மனைவியைக் காதலிக்கக் கூடாது? முடியாதா? ஒரு Thrill இருக்காதோ?

ஐய்யா, சத்தியமாய் எனது காதல் உயிர் மீதுதான் ஒருத்தி மீதுதான்..

உயிரும் மனமும் வேறில்லை என்பது என்நிலைப்பாடு..

வெறும் உடல் மீதான காதலுக்காய் இத்தனைக் கவிதைகள் பிறப்பத்தில்லை..

உடல்மீதானக் காதல் காதலித்துதான் பெறவேண்டும் என்றுமில்லை..

இன்னும் தெளிவாய் சொல்லப்போனால்.. காதலிக்கும் ஒவ்வொருவனும் (கல்யாணத்திற்கு முந்தியோ பிந்தியோ) பாதி விழிப்புணர்வின்(Manifest) படிகளை தாண்டிவிடுகிறான்..

ஞானம் என்பது நான் என்பதை இழத்தலே.. அந்த தன்மை காதலிலும் உண்டு.. ஆனால் காதல் ஒரு எதிர்பார்ப்புடன் இருவரை ஒருவராக்குவது..

ஆனால் விழிப்புணர்வு என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம்மைப் போல் நேசிப்பது..

இந்த தேடலே என் காதல்..

அன்புடன் ஆதி

வசீகரன்
25-01-2008, 12:32 PM
அருமை அருமை....கவியரசரே....! தமிழ் வார்ப்புகளுக்கு....!வியக்க வைக்கும் தமிழ் வீச்சுகளுக்கு...!ஆனால் என் கேள்வி
எதற்காக இப்படி காதலுக்காக உருகுதல் பா...! ஒருதலை
பட்சமான காதல் என்பது காதலா..? இரு மணங்கள்...இணைந்து
எழுதும் கவிதைதான் காதல்..!பிடிக்காத ஒருவரை கட்டாய படுத்தி
அவர்களை வற்புறுத்தி வரவைப்பது காதலா..! இப்படி உருகி அவர்களின்
கருணையில் காண்பது காதலா...! எனக்கு புரியவில்லை!!!

சாலைஜெயராமன்
25-01-2008, 12:39 PM
ஞானம் என்பது நான் என்பதை இழத்தலே.. அந்த தன்மை காதலிலும் உண்டு.. ஆனால் காதல் ஒரு எதிர்பார்ப்புடன் இருவரை ஒருவராக்குவது..

ஆனால் விழிப்புணர்வு என்பது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம்மைப் போல் நேசிப்பது..

இந்த தேடலே என் காதல்..அருமை அருமை ஆதி.

எதிர்பால் மீது மட்டும் இல்லாமல் "அனைத்துயிரும் அவனேயாகி" என்பதின் வெளிப்பாடு காதலைக் கனம் பண்ணும். எல்லா உயிரையும் பால் வேறுபாடின்றி, உடலைத் தவிர்த்து உயிரைக் காதலிக்கும் போது இது சாத்தியம்தான்.

இது தன்னை இழத்தலில்தான் வாய்க்கிறது.

திடமான தீர்க்கமான சிந்தனை. வாழ்த்துக்கள்

ஆதி
25-01-2008, 12:41 PM
ஆனால் என் கேள்வி
எதற்காக இப்படி காதலுக்காக உருகுதல் பா...! ஒருதலை
பட்சமான காதல் என்பது காதலா..? இரு மணங்கள்...இணைந்து
எழுதும் கவிதைதான் காதல்..!பிடிக்காத ஒருவரை கட்டாய படுத்தி
அவர்களை வற்புறுத்தி வரவைப்பது காதலா..! இப்படி உருகி அவர்களின்
கருணையில் காண்பது காதலா...! எனக்கு புரியவில்லை!!!

உங்களின் இந்த கேள்விக்கு நிச்சயம் பதில் தரக் கடமைப் பட்டுள்ளேன்..

என் காதல் ஒரு தலைப்பட்சமாக முடிந்ததல்ல..

இருவரும் காதலித்து, நிச்சயதார்த்தம் முடிந்து சில காரணங்களால்.. மனமாறி பிரிந்தக் காதல்..

மனசுக்கு பிடித்த பாட்டை கேட்டு முடித்தபின்னும் உதடுகள் முணுமுணுக்குமே.. அப்படி காதலை என் இதயமும் கவிதையும் முணுமுணுகின்றன..

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி..

அன்புடன் ஆதி

வசீகரன்
25-01-2008, 01:11 PM
மன்னியுங்கள் கவியரசரே என்னை மன்னியுங்கள்.... உண்மை நிலவரம்
தெரியாமல் உளறிவிட்டேன்... ஒருதலை காதல் செய்து தன்னையே மாய்த்துக்கொள்ளும் பசங்களை எனக்கு என்றுமே பிடிக்காது.... காரணம் இளைஞர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு தீப்பொறி.... சாதனை படைக்க வேண்டிய இதயங்கள் சடுதியில் வீண் ஆவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்ல.....! உங்கள் கதையும் அப்படித்தானோ என தப்பர்த்தம் செய்துவிட்டேன்..!சிறியவனை மன்னியுங்கள்...! மனதிநின் காயங்கள் அவை என்று எனக்கு
தெரியாது கவிஞரே...!
தொடர்ந்து படையுங்கள் கவிஞரே....காத்திருக்கிறோம் எங்களை மறந்து உங்கள் கவித்தாலாட்டில் ஆனந்த துயிலெழ...!

ஆதி
25-01-2008, 01:14 PM

மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை வேண்டாமே.. என்னை புரிந்து கொண்டமைக்கு மிக நன்றி வசீகரன்..

அன்புடன் ஆதி

ஆதி
01-02-2008, 06:12 AM
நல்ல காதல் கவிதை நண்பர் ஆதியே..
மிகவும் அனுபவித்து எழுதியுள்ளிர்கள்..
என் மனமும் சேர்ந்துதான் ஏதோ ஒரு எதிர்பார்ப்புக்கு ஏங்குகிறது...
உங்கள் கவிதை அதை புர்த்திசெய்துவிட்டது..
என் நன்றி ஆதி..
ம்ம் தொடர்ந்து எழுத பாராட்டுகிறேன்..

மிக மகிழ்ச்சியக்க ஒரு சுவஞனின் தாகத்திற்கு என் கவிதை தண்ணீர் ஆனது எனும் போது இக்கவிதை வீடுபேறு பெற்றுவிட்டது..

பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றியக்கா..

அன்புடன் ஆதி