PDA

View Full Version : ஏமாற மாட்டோமில்ல!!!!



சிவா.ஜி
24-01-2008, 11:57 AM
காக்கி கால்சட்டையில் சிறுவன்
நீட்டிய நோட்டுப்புத்தகத்தில்
ஒற்றைரூபாய் தானத்துக்கு
கர்ண பிரபுக்கள் சிலரின்
கையெழுத்துகள்...........

நான் படித்தவனானதால்.......
நாலும் தெரிந்தவனானதால்....
நயா பைசா கிடையாது
நடையைக் கட்டு என
சிறுவனை விரட்டிவிட்டு
வீட்டுக்குள் வந்து
வீரத்தோடு சொன்னேன்.....
ஏமாற மாட்டோமில்ல....

சொன்ன அடுத்த நொடி
மூத்த மகன் முன்னால் வந்து
நேற்று வாங்கிய மோட்டார்
கருகிப்போனதை சொன்னான்!

நல்ல நிறுவனமென்று
நம்பி வாங்கி வந்தேனே..
ஓடிச் சென்று உற்றுப் பார்த்தால்
ஒற்றை எழுத்து வித்தியாசம்
பொட்டிலடித்தது..........

நோட்டில் ஐந்து ரூபாய்
நாமும் எழுதியிருக்கலாமோ......

மதி
24-01-2008, 12:06 PM
நச்சுன்னு ஒரு கவிதை சிவாண்ணா...
ஏமாறுதலைப் பற்றி... ஏகத்துக்கும் ஏமாந்ததால்.. இனியும் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என்ற பய உள்ளுணர்வு இப்படி விரட்டத் தூண்டுகிறதோ.. அதே மனது கோட்டு சூட்டு ஒருத்தன் வந்தால் ஆயிரம் ஐயாயிரம் என நன்கொடை வழங்குகிறது...!

பூமகள்
24-01-2008, 12:08 PM
நிஜம்..
நிதர்சனம் சிவா அண்ணா. பாராட்டுகள்..!

பல சமயங்களில் நாம் பெரிய பெரிய ஏமாற்றங்களில் சிக்கி பல ஆயிரங்களைத் தொலைப்பதும், பிறகு ஒரு ரூபாய், இரு ரூபாய்க்கு எல்லாம் கணக்கு பார்ப்போம்..!

நெத்தியடியாய் ஒரு கவிதை..! சூப்பர் சிவா அண்ணா.

உங்க கவிதைக் கருக்கள் அசர வைக்கும் எப்பவுமே என்னை..!
இப்பவும்..!! :)

யவனிகா
24-01-2008, 12:19 PM
நல்லாருக்குண்ணா...நச் ரகக் கவிதை. வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
24-01-2008, 12:51 PM
நல்ல கவிதை சிவா.. வாழ்த்துக்கள்!

செல்வா
24-01-2008, 01:26 PM
எப்படியண்ணா... கலக்கல்.. போங்க... சின்ன சின்ன சம்பவங்களிலிருந்த ரொம்ப யோசிக்க வைக்கிறமாதிரியான கவிதைகள்..... திருக்குறள் படிச்சு ... எழுதுங்கால் கோல்காணாக் கண்ணே உவமை பாத்து அடைந்த அதே ஆச்சரிய உணர்வு இந்தக் கவிதையை படிக்கும் பொதும்...

சீக்கிரமா வாங்க ரொம்ப பேசணும்......கறத விட ரொம்ப கத்துக்கணும்.

சாலைஜெயராமன்
25-01-2008, 02:11 AM
தன்னை ரொம்ப ஸ்மார்ட்டா நினைக்கும் ஒவ்வொருக்கும் சொன்ன செய்தி. மிக அழகாக எடுத்துவைத்திருக்கிறீர்கள் சிவா.ஜி. வாழ்த்துக்கள்.

நம்பிகோபாலன்
25-01-2008, 06:04 AM
பாட்டா கடையில் 399.99 ரூபாயை கொடுத்து விட்டு
அதே தெருவில் காய்கறி விற்பவனிடம் பேரம் பேசி இலவசமாக இரண்டு ரூபாயைக்கு கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கும் என்னை போன்றவர்களுக்கு நச் கவிதை.....

aren
25-01-2008, 06:55 AM
உங்களையும் ஏமாற்றிவிட்டார்களா?

aren
25-01-2008, 06:57 AM
நான் சில சமயங்களில் என் நண்பர்களிடம் சொல்வதுண்டு அவர்கள் சிறு விஷயத்திற்கு பேரம் பொழுது, எவ்வளவோ ஆயிரக்கணக்கில் செலவாகிறது, அங்கெல்லாம் கணக்கே பார்பதில்லை, இந்த சின்ன விஷயத்தில் என்ன பேரம் வேண்டியிருக்கு என்பேன்.

உங்கள் கவிதையைப் படித்தவுடன் அதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

ஆதி
25-01-2008, 06:59 AM
:D
உங்களையும் ஏமாற்றிவிட்டார்களா?

அப்ப உங்களையுமா ? :D:D

சேம் ப்ளட்... போல தெரியுதே... :lachen001::lachen001:

அன்புடன் ஆதி

aren
25-01-2008, 08:18 AM
:D

அப்ப உங்களையுமா ? :D:D

சேம் ப்ளட்... போல தெரியுதே... :lachen001::lachen001:

அன்புடன் ஆதி

நான் அப்படி சொன்னேனா?

ஆதி
25-01-2008, 08:21 AM
உங்களையும் ஏமாற்றிவிட்டார்களா?

இப்படி ஒரு வார்த்தையைப் பயண் படுத்தி இருந்ததால் தான்.. கேட்டேன் அண்ணா..

சும்மா சும்மா ளூளூவாய்க்கி.. :)


நான் அப்படி சொன்னேனா?

நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டனோ.. :confused:

அன்புடன் ஆதி

வாசகி
25-01-2008, 09:44 AM
சாலை ஓரத்தில் நான்..கல்விச்
சாலை நோட்டுக்குப் பதிலாக
பொலித்தீன் போர்வையில்
பழுப்புக் காகிதம் கையில்...

கடந்து செல்பவர்களில்

மேதாவிலாசிகள் சிலர்
ஏளன நகை சிந்தியபடி
அனலைலைக் கொட்டியபடி.

மனிதத்தின் பிரதிநிதிகள்
ஏக்கப்பார்வைக்குப் பதிலாக
சில்லறைகளை சிதறவிட்டு..

இரக்கத்தின் குத்தகைக்காரர்கள்
நோட்டுக்கு சலவைநோட்டு நீட்டி
தலை கோதும் விழிகளுடன்..

எழுதப்பட்ட என் விதியின்
எழுத்துப்பிழைகளை திருத்தாத
அவர்கள் தந்த ஏமாற்றத்தால்
ஈனஸ்வரத்தில் முனகுகின்றேன்..

யாசிப்பதாய் நினைந்து
யோசிக்காது
வழிப்போக்கர்கள் தொடர்கிறனர்..

வசீகரன்
25-01-2008, 11:49 AM
கோவில்களிலும்...கோபுரங்களிலும் கோடி கோடியாக கொட்டுவார்கள்...
ஏமாற்றும் சாமியார்களின் அருகில் பய பக்தியுடன் அமர்ந்து கதை கேட்பார்கள்
ரயில்வே டிக்கெட் ஒரு ரூபாய் ஏற்றியதை அளந்து பேசுவார்கள்..
வாட் ய கண்ட்ரி வாட் ய கவர்ன்மென்ட்.... நாலு பேர் முன்னால்..!

நல்ல சாடல் கவி அண்ணா....!

சிவா.ஜி
26-01-2008, 03:44 AM
இரண்டு நாள் மன்றம் வரமுடியாததால் உடனடியாக நன்றி சொல்ல இயலவில்லை.பின்னுட்டமிட்ட அனைத்து உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
உதய நிலாவின் பின்னூட்டக் கவிதை அசத்தல்.வாழ்த்துகள் உதயநிலா.
நம்பிகோபாலனின் உண்மை விளம்பல் ஆச்சர்யப்படவும்,பெருமிதப்படவும் வைக்கிறது.
மதி,பூமகள்,யவனிகா,ஷீ-நிசி,செல்வா,ஜெயராமன்,ஆரென்,ஆதி,வசீகரன்
அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

அமரன்
26-01-2008, 08:48 AM
பல சமயங்களில் அனுபவித்த சம்பவம். யாசகனிடம் வெறுப்பைக் காட்டுவோம். சேவை வழங்கிகளிடம் கெஞ்சலையும் கொஞ்சலையும் காட்டுவோம். அப்பப்போ எகிறுவதாக அரிதாரம் பூசிக்கொள்வோம். பச்சோந்திகள் போன்று தேவைக்கு ஏற்ப நிறம்மாறுகிறோம். நாணயத்தின் இருப்பக்கம்போல நா(ண)நயத்தால் ஏமாற்றுவோரும், அடிபடுவோரும் எங்கும் உள்ளனர்..

எங்களூரில் ஒருபழமொழி "தூணை விட்டுத் துரும்பைப் பிடிக்கும் முயற்சி" என்று சொல்கிறது. இங்கேயும் வேறுபட்ட பார்வைக்கோணம். போனதூணுக்கு பதிலீடாக துரும்பிலிருந்து புதுதூண் உருவாக்கம். வரவேற்கத்தக்கது. அறியாமல் பூசிய சேற்றை உதறிவிடும் எத்தனிப்பு. மெல்லிய கண்டனத்தின் குரல் அவசியமாகிறது. நாம ஏமாறமாட்டோம்ல என்ற மார்தட்டலுக்கான உதாசீனம்.. கடுமையான கண்டனத்துக்குரியது.. இக்கோணங்களுக்கான அடிப்படைக்காரணம் சுயநலமே..

கவிதையில் சொல்லப்படுவது மூன்றாவது இரகம். சிறுவனை தெருப்பிச்சைக்காரனாக நினைக்கவைக்கிறது நான் வாழ்ந்த சூழல். டொனேசன் (தமிழில் அன்பளிப்பு????) கேட்போரையும் இதே போலக் கண்டிருக்கிறேன். தானம் செய்திருந்தால் தன்னைக் காத்திருக்குமோ என்னும் நப்பாசையே பிரதான பாத்திரத்தில் இழையோடுவதாக படுகிறது.. தன்மீதான கழிவிரக்கம் தூண்டுதல் ஆகிறது. இம்புட்டுப் போச்சே.. அவனுக்கு கொஞ்சம் கொடுத்திருக்கலாமோ என்ற தாமத ஞானமாக ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. சிறுவனுக்கு வழிகாட்டி இருக்கலாமோ என்ற எண்ணம் துளிர்தது போல இயல்பு மீறி அமைத்திருந்தால் கவிதை இன்னும் சுவைத்திருக்குமோ?!

நடைமுறை நிகழ்வை சுவைபடச் சமைத்து பரிமாறி, சுவையை சிலாகிக்கவைத்த கவிநளபாகச்சக்கரவர்த்திக்கு பாராட்டுகள்.

சிவா.ஜி
26-01-2008, 11:24 AM
ஆஹா அமரனின் விரிவான பின்னூட்டம்....விளங்க வைக்கும் அலசல்....அருமை.

அமரன்.....அந்த கடைசி வரியைப்பற்றிதான் நீங்கள் தாமத ஞானம் என்று சொல்கிறீர்கள் இல்லையா?அது ஞானமில்லை அமரன்.அதே போல அவனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருந்தால் இத்தனை பெரிய நட்டம் ஏற்பட்டிருக்காது,அந்த தர்மம் காத்திருக்கும் என்று நினைக்கவில்லை.அவனுடைய இறுமாப்புக்கு கிடைத்த அடியாகத்தான் உடனடியாக அவன் மனம் அதை உணர்ந்தது.படித்தவன்,நாலும் தெரிந்தவன் ஏமாற மாட்டம்ல என்ற இறுமாப்பு ....மோட்டார் விஷயத்தில் ஏமாந்தது தெரிந்ததும்....வீராப்பு பேசாம...பாவம் அந்த பையனுக்கு ஒர் அஞ்சு ரூபா குடுத்திருக்கலாமோ என்று அப்போது எண்ண வைத்தது.இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்ததாலேயே கூட அந்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.அது இல்லாமல் இரண்டு நாள் கழித்து மோட்டார் எரிந்திருந்தால் அந்த பையன் நினைவிலேயே இருந்திருக்க மாட்டான்.
இப்படித்தான் சில நிகழ்வுகள் அவரவரை உணர வைக்கிறது.

மிக்க நன்றி அமரன்.

அமரன்
26-01-2008, 11:28 AM
மிக்க நன்றி சிவா.. நீங்கள் சொன்னதுதான் வலுவாக என்னுள் விழுந்தது சிவா. மூன்றாவது இரகம்.. நாம ஏமாறமாட்டோம்ல என்ற இறுமாப்பின் தோல்வியின் வெளிப்பாடு அது. இயல்பானது.. எதார்த்தத்தை சொல்லி உள்ளீர்கள்..:icon_b:

ஓவியன்
03-02-2008, 04:25 PM
இப்படித்தான் சிவா நம் வாழ்க்கையில் எங்கே எப்போது என்ன ஏமாற்றம் காத்திருக்கின்றட்தென்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏமாறவில்லை எனும் இடத்தில் ஏமாற்றமும், ஏமாறாத இடமென நினைக்குமிடத்தில் ஏமாற்றமும் ஒளிந்து கிடக்கும்...

கொஞ்சம் அவதானமாக உணர்ச்சிகளை தள்ளி வைத்து யோசிப்போமேயானால் அசல் எட்து நகல் ஏதுவேன நூல் பிடித்து விடலாம்....

இளசு
03-02-2008, 05:16 PM
ஆஹா சிவா!

அகந்தை அடிவாங்கும்போதெல்லாம் கொஞ்சம் உயருகிறோம்..

வேதம் புதிது படத்தில் '' நீங்கள் வாங்கிய பட்டமா?'' என தாசரதி பாலு-வைப்பார்த்து கேட்கும்போது சப்பென அறையும் உத்தியைக் காட்டுவார் இயக்குநர்..

இங்கேயும் என்னை சட்டென நிஜம் அறைந்த வலி!

இதைவிட வெற்றிக்கவிதைக்கு இலட்சணம் உண்டா என்ன?

சிவா.ஜி
04-02-2008, 03:50 AM
இப்படித்தான் சிவா நம் வாழ்க்கையில் எங்கே எப்போது என்ன ஏமாற்றம் காத்திருக்கின்றட்தென்பது யாருக்கும் தெரிவதில்லை. ஏமாறவில்லை எனும் இடத்தில் ஏமாற்றமும், ஏமாறாத இடமென நினைக்குமிடத்தில் ஏமாற்றமும் ஒளிந்து கிடக்கும்...

கொஞ்சம் அவதானமாக உணர்ச்சிகளை தள்ளி வைத்து யோசிப்போமேயானால் அசல் எட்து நகல் ஏதுவேன நூல் பிடித்து விடலாம்....
மிக உண்மையான வார்த்தைகள்.உணர்ச்சிகளை தள்ளி வைத்துவிட்டு அவதானிப்பதால் கண்டிப்பாக நல்லதே நிகழும்.நன்றி ஓவியன்.

சிவா.ஜி
04-02-2008, 03:54 AM
அகந்தை அடிவாங்கும்போதெல்லாம் கொஞ்சம் உயருகிறோம்..
இங்கேயும் என்னை சட்டென நிஜம் அறைந்த வலி!
இதைவிட வெற்றிக்கவிதைக்கு இலட்சணம் உண்டா என்ன?

கவிதையின் வரிகளூடே விரவியிருக்கும் செய்தியின் நாடி பிடித்து.....எழுதும் இதைப் போன்ற பின்னூட்டம்,கவிதை எழுதியவருக்கு கொடுக்கும் திருப்தியை விளக்க எனக்கு வார்த்தைகளில்லை.
மீண்டும்,மீண்டும் பரவசத்துடன் நன்றி கூறுகிறேன் இளசு.