PDA

View Full Version : புத்தி - சிறுகதை



ஆர்.ஈஸ்வரன்
24-01-2008, 10:21 AM
இரவு மணி பத்திருக்கும். நல்ல மழை. பயங்கரமான இடிச் சத்தம். இடியிலிருந்து போனின் உயிரைக் காப்பற்ற அதன் வயரைக் கழட்டி வைத்திருந்தேன். மறு நாள் காலை போனுக்கு உயிர் கொடுக்க அது இறந்த நிலையில் எவ்வித சத்தமும் இல்லாமல் கோமாவில் இருந்தது.

உடனே எக்சேஞ்சுக்கு தகவல் கொடுத்தேன். லைன் மேன் வந்து பார்த்துவிட்டு வயரில் எந்தவித தவறும் இல்லை. போன்தான் ரிப்பேர். நாளை காலை போனை எடுத்துக் கொண்டு வாங்க எக்சேஞ்சுக்கு என்றார்.

போனை எடுத்துக் கொண்டு செல்ல அங்கே லைன் மேன் இல்லை. வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகும் என்றார் ஒருவர். நான் அலுவலத்திற்கு செல்ல நேரமாகிவிடும் என்பதால் உடனே திரும்பி வந்துவிட்டேன். அலுவலத்திலிருந்து து.நு. யைக் போனில் கூப்பிட அவர் இன்று விடுமுறை. அவர் இருந்தால் தான் இந்தப் போனை வாங்கி வைத்துக் கொண்டு அதை சரிசெய்து தரும்வரை வேறு போன் ஒன்று கொடுப்பார்கள் என்று சொன்னார்கள்.

நானோ ஒரு நாள் வரை பொறுத்துக்கொண்டிருப்பதா இல்லை. வேறு எங்காவது சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று வேறு ஒருவரிடம் விசாரிக்க அவரோ ஒரு சர்வீஸ் சென்டர் இருக்கிறது. அங்கு போன் மட்டுமே சர்வீஸ் செய்து நல்ல முறையில் உடனே கொடுப்பார்கள் என்று சொல்லவே நான் அங்கே கொண்டு சென்றேன்.

அங்கும் முதலாளி இல்லை அவர் மாலையில் தான் வருவார். நீங்கள் ஏழு மணிக்கு வாருங்கள் அதற்குள் ரெடியாகிவிடும் என்று அங்குள்ள ஒரு பையன் சொல்லவே போனைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

மாலை ஏழு மணிக்கு போனில் கூப்பிட சார் நான் இப்பத்தே வந்தேன். உங்க போனைப் பார்த்தேன். நாளைக்கு வாங்கிக் கொள்ளலலாம். இப்போது அவசரமாக செய்தால் சரியாக இருக்காது என்றார்.

ஒன்பது மணிக்குள் சரி செய்து விடுங்கள் எனக்கு போன் மிகவும் அவசரம் என்று சொல்ல சரி ஒன்பது மணிக்கு வாருங்கள் சரி செய்து விடுகிறேன் என்றார்.

சார் போன் சர்வீசுக்கு எவ்வளவு ஆகும்.
என்னங்க ஒரு 100 ரூபாய்க்குள் ஆகும். அதற்குமேல் வராது .

ஒன்பது மணிக்குச் சென்றேன்.

சார் உட்காருங்க இதோ ஒரு நிமிஷம் உங்க போனைச் சரி செய்து தர்றே. போன்ல என்ன ரிப்பேர்னு சொன்னீங்க.

போன்லே எந்தவித சத்தமும் இல்லே.

இந்தாங்க போன் சரியாயிட்டது. சாதா டயல் ஸ்பீட டயல் வேளை செய்யாமல் இருந்தது. இப்போ இரண்டும் வேலை செய்யும் என்றார். கட்டணம் 90 ரூபாய் என்றார். என்னடா 100 ரூபாய்னு சொன்னாரு. அதற்குத் தகுந்தால்போல் ரூயாய் 100ன்னு சொன்னா நல்லாயிருக்காது என்று 90ன்னு சொல்றாங்களே. எந்தவிதச் சாமானும் போட்ட மாதிரி தெரியலே. எதாவது சாமானம் போட்டிருந்தால் போட்டிருக்கிறேன் என்றாவது சொல்லலாம். இப்படித்தான் இவங்களெல்லாம் எப்படியோ வர்வங்கிட்டே பிடுங்கி பிடுங்கி சாம்பாதிக்கொள்கிறான். நம்மதே இப்படி செலவு செய்கிறோம் என்று மனதிற்குள் நினைத்ததேன்.

வீட்டுக் சென்றதும் முதல் வேலையாக வயிரில் போனைச் செருகினேன். எந்தவித சத்தமும் இல்லாமல் முன்பு போலவே இருந்தது. ஒரு சர்வீஸ் சென்டருக்கு கூப்பிடலாம் என்றாலோ போன் இல்லையே என்ன கோபமாக வந்தது. விடியட்டும் என்று காத்திருந்தேன். காலையில் அலுவலத்திற்குச் சென்றதும். போனில் கூப்பிட்டேன். சார் போன் வேலை செய்யலே. உடனே பணத்தை திருப்பி வாங்கிக்கிறேன் என்று சொன்னதும் அவர் கோபத்தின் உச்சிக்கு சென்று பணத்தை ஒருபோதும் திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்றார். போனை நேரில் கொண்டு வாருங்கள் சரி செய்து தருகிறோம் என்று சொல்ல பணத்தைக் கொடுங்கள். நான் நேரில் வரவில்லை என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

வேறொரு கடைக்குச் சென்று போனின் வயர் மற்றும் பாக்ஸ் இரண்டையும் வாங்கிக் கொண்டுபோய் சரிசெய்ய போன் வேலை செய்தது.

இந்தப் போனைக் கொண்டுபோய் வேறொரு போன் இருக்குமிடத்தில் செக்கப் செய்து பார்த்திருந்தால் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து நாலுபேரிடம் விசாரித்திருந்தால் இந்தப் பணம் வீணாயியிருக்காதே இல்லை என்றால் எக்சேஞ்சுக்கு கொண்டுபோய் கொடுத்திருந்தாலும் பணம் வீணாகியிருக்காதே என்று இப்பொதுதான் தெரிகிறது. இதுதான் அனுபவமோ? இல்லை இது புத்திக் கொள்முதல் என்று நினைத்தேன்.

அன்புரசிகன்
24-01-2008, 11:24 AM
அவசரத்தில் ஏற்படும் விபரீதங்கள்... மனம் அதிகமாக பளு அடைந்தால் என்னசெய்கிறோம் என்று எமக்கே தெரியாமல் செய்துவிடுவோம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஆர்.ஈஸ்வரன்
24-01-2008, 01:58 PM
அவசரத்தில் ஏற்படும் விபரீதங்கள்... மனம் அதிகமாக பளு அடைந்தால் என்னசெய்கிறோம் என்று எமக்கே தெரியாமல் செய்துவிடுவோம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

தாங்கள் சொல்வது சரிதான். நன்றி

ஓவியா
24-01-2008, 03:32 PM
வணக்கம்.
இன்று உள்ளே வந்ததும் ஒரு பதிவு படிக்கலாம் என்று தோன்ற அதிஸ்டம் உங்க பதிவின் பக்கம்.

முதலில் உங்களின் எழுத்து ஆர்வத்தை பாரட்டுகிறேன். சிக்கனமாக எழுதுகின்றீர்கள். 'இடியிலிருந்து போனின் உயிரைக் காப்பற்ற அதன் வயரைக் கழட்டி வைத்திருந்தேன். மறு நாள் காலை போனுக்கு உயிர் கொடுக்க அது இறந்த நிலையில் எவ்வித சத்தமும் இல்லாமல் கோமாவில் இருந்தது.' இந்த வரிகள் பிரமாதம். நல்ல கற்ப்பனை.

என்னதான் நின்னு நிதானமாக யோசித்தாலும் அவசரதிற்க்கு சில நேரம் வட்டி கட்டிதான் ஆக வேண்டும். அது காலத்தின் வேலை. :lachen001:

தொடர்ந்து எழுதுங்கள். தமிழ் மன்றம் உங்களுக்கு எழுத்துலகில் வெற்றிக்கனிகளை கொடுக்கட்டும்.

நன்றி வணக்கம்

க.கமலக்கண்ணன்
25-01-2008, 09:11 AM
அருமையாக இருந்தது
அவசரத்தில் பல முடிவுகள் நம்மை
அதிகமாக நஷ்டத்திலே
அல்லது கஷ்டத்திலோதான் கொண்டு விடுகின்றன
அதை நாம் ஆராய்ந்து பார்த்தால் தான் புரிகிறது.

வாருங்கள் ஓவியா. எப்படி இருக்கீங்க...

ஆர்.ஈஸ்வரன்
25-01-2008, 10:39 AM
.
தொடர்ந்து எழுதுங்கள். தமிழ் மன்றம் உங்களுக்கு எழுத்துலகில் வெற்றிக்கனிகளை கொடுக்கட்டும்.

நன்றி வணக்கம்

பாராட்டுதலுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

யவனிகா
25-01-2008, 06:05 PM
சொந்த அனுபவத்தையே கதையாகக் கொடுத்து விட்டீர்கள். சரியான புத்திக் கொள்முதல் தான். வாழ்த்துக்கள்.

ஆர்.ஈஸ்வரன்
28-01-2008, 09:50 AM
சொந்த அனுபவத்தையே கதையாகக் கொடுத்து விட்டீர்கள். சரியான புத்திக் கொள்முதல் தான். வாழ்த்துக்கள்.

நன்றி யவானிகா அவர்களே