PDA

View Full Version : டெண்டுல்கருக்கு இங்கிலாந்தின் பாரம்பரிய விருது!

IDEALEYE
24-01-2008, 04:08 AM
இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு இங்கிலாந்தின் பாரம்பரிய விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;

`கொமன்வெல்த்' நாடுகளை இணைக்கும் பாலங்களில் ஒன்றாக கிரிக்கெட்டும் பங்கு வகிக்கிறது. கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த வீரர்களை இங்கிலாந்தின் பாரம்பரிய விருதான `நைற்கூட்' விருது வழங்கி கௌரவிக்க சரியான தருணம் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். - நன்றி தினக்குரல்

மேற்படி விருதுக்கு உண்மையில் டெண்டுல்கார் பொருத்தமானவரே கிரிக்கட் உலகில் அவரது பங்களிப்பும் சாதனைகளும் பாராட்டப்படத்தக்கனவே, மன்ற உறவுகளும் அவருக்கு வாழ்த்துத்தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன் ஐஐ

அறிஞர்
24-01-2008, 02:13 PM
கிரிக்கெட்டில் தனக்கென ஒரு இடம் வைத்திருக்கும் டெண்டுல்கருக்கு இந்த விருது மிகவும் பொறுத்தமானது.. வாழ்த்துக்கள்.

sarcharan
25-01-2008, 04:43 AM
நல்லது. டெண்டுல்கரின் சாதனைக்கு உகந்த பரிசுதான் இது.:)

தங்கவேல்
27-01-2008, 02:23 AM
இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு இங்கிலாந்தின் பாரம்பரிய விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;

`கொமன்வெல்த்' நாடுகளை இணைக்கும் பாலங்களில் ஒன்றாக கிரிக்கெட்டும் பங்கு வகிக்கிறது. கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த வீரர்களை இங்கிலாந்தின் பாரம்பரிய விருதான `நைற்கூட்' விருது வழங்கி கௌரவிக்க சரியான தருணம் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். - நன்றி தினக்குரல்
மேற்படி விருதுக்கு உண்மையில் டெண்டுல்கார் பொருத்தமானவரே கிரிக்கட் உலகில் அவரது பங்களிப்பும் சாதனைகளும் பாராட்டப்படத்தக்கனவே, மன்ற உறவுகளும் அவருக்கு வாழ்த்துத்தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்
அன்புடன் ஐஐ

டென்டுல்கரின் கிரிக்கட் அரசியல் தெரியாமல் அவர் இதுக்கு லாயக்கானவர் என்று சொல்லுவதில் அர்த்தமே இல்லை. 35 வயது வரை வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் தான் சாதிப்பார்கள். என்னத்தை சாதித்து கிழித்தார் இவர் என்று தான் எனக்கு புரியவில்லை. ஒன்றும் தெரியாமல் ஜால்ரா அடிப்பதில் நம்மவருக்கு அலாதி பிரியம் எப்போதும். கொஞ்சம் அவரை பற்றி உண்மைகளை தெரிந்து கொண்டு அடிப்பது நல்லது.

அன்புரசிகன்
27-01-2008, 02:33 AM
35 வயது வரை வாய்ப்புக்கொடுத்தவர் எல்லாம் ஜொலிக்கவில்லை. அத்துடன் அவர் 35வயதில் தான் ஜொலித்தார் என்றும் இல்லை. தவிர சச்சின் ஒன்றும் கடவுளல்ல. அனைத்தும் வெற்றிகரமாக நிகழ்த்த. தவறு எல்லாம் மக்கள் மீது தான் என்பேன்.. வெற்றிகள் வரும் போது தலைக்குமேல் வைத்து கூத்தாடும் மக்கள் தோல்விகள் வரும் போது தூற்றுவதிலும் எவ்வாறு ஒருவரை மானபங்கப்படுத்தலாமோ அதற்கு மேலாக செய்வது... அவுஸ்திரேலிய வீரர் பிரட்மனிடம் இருந்து வாழ்த்துப்பெற்ற நபர் சச்சின். இலகுவில் சாடிவிட்டீரே....

ஒரு செவ்வியில் இலங்கை துடுப்பாட்டவீரர் குமார்சங்கஹார கூறியது... மற்றய நாடுகளில் ஒரு பொழுதுபோக்காகத்தான் துடுப்பாட்டத்தை வைத்திருக்கிறறார்கள். ஆனால் இந்தியாவில் அதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அப்படியான நீகழ்வுகள். இந்தியமக்கள் துடுப்பாட்டத்தை முழுமையாக நேசிப்பவர்கள் என்று கூறினார். இதில் எந்தளவு உண்மை பொய் தெரியாது. அதனை இந்தியாவில் துடுப்பாட்ட வெற்றி தோல்விகள் வரும் போது கிடைக்கும் எதிரொலிகளே சான்று பயக்கும்.

தங்கவேல்
27-01-2008, 12:57 PM
இனிய நண்பரே, சரி...கிரிக்கட் எதுக்கு விளையாடுகின்றார்கள் என்று தங்களுக்கு தெரிந்து இருந்தால், எனது பதிவுக்கு பதில் எழுதி இருக்க மாட்டீர்கள். கிரிக்கட் ஒரு வியாபாரம். அது விளையாட்டு அல்ல. புரிந்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

அன்புரசிகன்
27-01-2008, 01:51 PM

மீதியை நீங்களே ஊகியுங்கள்

"பொத்தனூர்"பிரபு
06-07-2008, 05:29 PM
சச்சின் சிறந்த வீரர் கிரிக்கெட்டை பலவருடங்கள் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியும் சும்மா கிரிக்கெட் எப்படி விளையாடுவது என்றேதெரியாத சிலர் சச்சினை வமர்சிப்பது பார்த்தால் சிரிப்புதான் வருது.புரியலைனா புரிந்ததி பாருங்கள் அய்யொ அய்யோ/////////////

"பொத்தனூர்"பிரபு
06-07-2008, 05:32 PM
டென்டுல்கரின் கிரிக்கட் அரசியல் தெரியாமல் அவர் இதுக்கு லாயக்கானவர் என்று சொல்லுவதில் அர்த்தமே இல்லை. 35 வயது வரை வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் தான் சாதிப்பார்கள். என்னத்தை சாதித்து கிழித்தார் இவர் என்று தான் எனக்கு புரியவில்லை. ஒன்றும் தெரியாமல் ஜால்ரா அடிப்பதில் நம்மவருக்கு அலாதி பிரியம் எப்போதும். கொஞ்சம் அவரை பற்றி உண்மைகளை தெரிந்து கொண்டு அடிப்பது நல்லது.////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஒன்றுமே தெரியாமல் விமர்சிப்பதில் சிலருக்கு அபார பிரியம்
17 வருடங்கல் கிரிக்கெட் விளையாடியதே சாதனை.ஒரு பந்துவீச்சாலர் எல்லா போட்டியிலு விட்ட்கெட் வீழ்த்துவதுசுலபம் .மெட்டையாலர் எல்ல போட்டியிலு சதம் அடிப்பது முடியாத காரியம்

arun
06-07-2008, 05:36 PM
இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டதே சச்சினின் சாதனை தான்

சச்சினுக்கு வாழ்த்துக்கள்

ராஜா
06-07-2008, 05:42 PM
எண்பதுகளின் பிற்பகுதியில் இந்தியக் கிரிக்கெட் விளையாட்டில் டென்டுல்கரின் தாக்கம் மிக வலிமையானது. சந்தேகமே இல்லை.

டென்டுல்கர் தன்னுடைய அந்நாளைய சாதனைகளால் இதுபோன்ற விருதுகளுக்கும், பெருமைகளுக்கும் பொருத்தமானவராகத்தான் திகழ்கிறார். மாற்றுக்கருத்து இல்லை.

வாழ்த்துகள்..!

அன்புரசிகன்
07-07-2008, 02:18 AM
சச்சின் சிறந்த வீரர் கிரிக்கெட்டை பலவருடங்கள் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியும் சும்மா கிரிக்கெட் எப்படி விளையாடுவது என்றேதெரியாத சிலர் சச்சினை வமர்சிப்பது பார்த்தால் சிரிப்புதான் வருது.புரியலைனா புரிந்ததி பாருங்கள் அய்யொ அய்யோ/////////////

எப்படி விளையாடுவது...? கொஞ்சம் சொல்லித்தாருங்கள். புரிந்து பார்க்கிறோம்...

ஐயோ ஐயோ என்று கத்துவது தானோ????

மன்மதன்
07-07-2008, 02:37 PM
எண்பதுகளின் பிற்பகுதியில் இந்தியக் கிரிக்கெட் விளையாட்டில் டென்டுல்கரின் தாக்கம் மிக வலிமையானது. சந்தேகமே இல்லை.
டென்டுல்கர் தன்னுடைய அந்நாளைய சாதனைகளால் இதுபோன்ற விருதுகளுக்கும், பெருமைகளுக்கும் பொருத்தமானவராகத்தான் திகழ்கிறார். மாற்றுக்கருத்து இல்லை.
வாழ்த்துகள்..!

ஆமோதிக்கிறேன்...

எனது வாழ்த்துகளும்..!!!

xavier_raja
09-07-2008, 07:07 AM
இந்திய கிரிக்கெட்டை ஒரு புதிய பாதையில் திருப்பிய பெருமை சச்சினையே சாரும். உலகத்தில் எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் கிடைக்காத ஒரு பெருமை அவருக்கு கிடைத்தது அது அமெரிக்காவில் வெளிவரும் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையின் அட்டைபடத்தில் அவருடைய படம் வந்தது, அமெரிக்காவில் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இது ஒரு சாதனையாகும்.

Narathar
09-07-2008, 07:20 AM
அமெரிக்காவில் வெளிவரும் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையின் அட்டைபடத்தில் அவருடைய படம் வந்தது, அமெரிக்காவில் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இது ஒரு சாதனையாகும்.

ஓ விளையாட்டுப்பையன் ( அமெரிக்காவென்றால் அது ஆங்கிலப்பத்திரிகையாக இருக்கும்!!!!???? :D )
என்ற பத்திரிகையிலா????

அறிஞர்
09-07-2008, 05:10 PM
இந்திய கிரிக்கெட்டை ஒரு புதிய பாதையில் திருப்பிய பெருமை சச்சினையே சாரும். உலகத்தில் எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் கிடைக்காத ஒரு பெருமை அவருக்கு கிடைத்தது அது அமெரிக்காவில் வெளிவரும் ஒரு புகழ்பெற்ற பத்திரிக்கையின் அட்டைபடத்தில் அவருடைய படம் வந்தது, அமெரிக்காவில் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இது ஒரு சாதனையாகும்.
எந்த பத்திரிக்கை என சொல்ல இயலுமா

"பொத்தனூர்"பிரபு
26-09-2008, 01:56 AM
////////////////////

எந்த பத்திரிக்கை என சொல்ல இயலுமா

////////////////////

"அமெரிக்கா டைம்ஸ்"

shibly591
26-09-2008, 05:26 AM
டெண்டுல்கர் தலை சேர இந்த கிரீடமே கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

ஓவியா
27-09-2008, 02:01 PM
டெண்டுல்கர் தலை சேர இந்த கிரீடமே கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

சரியாகச் சொன்னீர்கள் ஷிப்லி.

அவரின் சாதனையை உலகமே பாராட்டிய் காலமெல்லாம் உண்டு.

நானும் வீரர் டெண்டுல்கரருக்கு வாழ்த்தினை கூறுகிறேன். :)

****************************************************************************************************
கொசுரு:
ஒரு சில மக்களுக்கு சாதனையாளர்களை கண்டு போறாமை படுவதே உச்சகட்ட சாதனையாகயிருக்கு. :lachen001::lachen001:
தனக்கு பிடிக்காத் சாதனனயாளர்களை பாராட்டினால் திரியை தேடி சென்று வாயெல்லாம் பல்லாக சிரிப்பதே முழுநேர தொழில்போல்.

Keelai Naadaan
27-09-2008, 02:30 PM
டென்டுல்கர் பெயரில் ஒரு விருது உருவாக்கி, சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினாலும் தவறில்லை.