PDA

View Full Version : thumbs.db என்ற பைல் வைரசா என்ன?



praveen
24-01-2008, 03:46 AM
கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா?

இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை தம்ப்நெயிலாக கேச் செய்து வைத்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. இதன் மூலம் விண்டோஸ் அந்த போல்டரில் உள்ள பைலின் தம்ப்நெயில் வியூவை எக்ஸ்புளோரரில் ஒவ்வொருமுறையும் அந்த பைலை படித்து பின் காட்டுவதற்கு பதிலாக இந்த பைல் முலம் உடனே காட்டுகிறது. விஸ்டாவில் இப்படி தனித்தனியாக அந்தந்த போல்டரில் இல்லாமல் மொத்தமாக ஒரே பைலாக சிஸ்டம் போல்டரில் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த பைலின் ஒரே பிரச்சினை வன்தட்டில் சிறிது இடத்தை எடுத்து கொள்வதே. இது மிகச்சிறிய அளவே ஆனாலும், நிறைய போல்டர்களில் இருப்பதை கணக்கிட்டால் ஒரளவு இடம் எடுத்திருப்பது தெரியவரும். இதனை குறைந்த வன்தட்டு இடம் கொண்டிருப்பவர்கள் நீக்க நினைத்தால் கீழே உள்ளதை செய்து பாருங்கள்.

முதலில் இம்மாதிரி செய்வதை தடுக்க
1) மை கம்ப்யூட்டடை கிளிக் செய்து அதில்
2) டூல்ஸ் என்பதை மெனுவில் தேர்ந்தெடுத்து
3) அதில் போல்டர் ஆப்சன் என்பதை சொடுக்கி
4) அதில் வியூ டேப் என்பதில்
5) "Do not cache thumbnails" என்பதை செக் செய்ய வேண்டும்.
6) பின்னர் ஒ.கே கொடுத்து
7) மை கம்ப்யூட்டரை கிளிக் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே உருவாக்கப்ப்ட்ட அனைத்தையும் நீக்க
1) ஸ்டார்ட் மெனு சென்று
2) அங்கு உள்ள சேர்ச் என்பதை கிளிக் செய்து
3) பின்வருவதில் All Files and Folders என்பதை தெரிவு செய்து
4) "all or part of the file name" என்பதில் thumbs.db என்று டைப் செய்து
5) Look in box, ல் Local Hard Drives என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
6) தேடலை ஆரம்பித்த பின் ஒரு பெரிய லிஸ்ட் வரும்
7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து
8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.
9) பின்னர் சேர்ச் விண்டோவை மூடி விடலாம்.

சொந்தமாக தட்டச்சு செய்தது.

அன்புரசிகன்
24-01-2008, 04:03 AM
இதனால் ரொம்ப வேதனைப்பட்டிருக்கிறேன். சிலவேளை கண்ணுக்கு தெரியாது. ஆனால் நீரோ வில் பதியும் போது வந்துவிடும். அதற்காக தேடி தேடி அழிப்பேன்.

பகிர்வுக்கு நன்றிகள் பிரவீன்.

இதயம்
24-01-2008, 04:17 AM
இதனால் ரொம்ப வேதனைப்பட்டிருக்கிறேன். சிலவேளை கண்ணுக்கு தெரியாது. ஆனால் நீரோ வில் பதியும் போது வந்துவிடும். அதற்காக தேடி தேடி அழிப்பேன்.

பகிர்வுக்கு நன்றிகள் பிரவீன்.

பிரவீன் கொடுத்தது அனைத்தும் சரியான தகவல்கள் மற்றும் பயனுள்ளதும் கூட..! அன்பு.. அவை கண்ணுக்கு தெரியாததற்கு காரணம், அவை பெரும்பாலும் மறைந்த நிலையில் (Hidden) இருப்பது தான். Folder options போய் Show Hidden files and Folders-ல் செக் செய்தால் அவை தெரியும்..!!

sarcharan
24-01-2008, 04:44 AM
உண்மையில் நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி அன்பரே.

மலர்
24-01-2008, 04:45 AM
7) எடிட் மெனுவில் உள்ள செலக்ட் ஆல் பைல் என்பதை கிளிக் செய்து
8) பின்னர் பைல் என்பதில் டெலிட் கமண்ட்டை அழுத்தி, எல்லாவற்றையும் நீக்க வேண்டும்.
praveen அண்ணா இதுவரை ஓக்கே...
இதுக்கு பிறகு டெலிட் கமெண்ட் குடுத்தால் Cannot delete file: Cannot read from the source file or disk
இப்பிடி error வருதே....ஏன்..:confused: :confused:

praveen
24-01-2008, 04:56 AM
அஷோ அண்ணா இதுவரை ஓக்கே...
இதுக்கு பிறகு டெலிட் கமெண்ட் குடுத்தால் Cannot delete file: Cannot read from the source file or disk
இப்பிடி error வருதே....ஏன்..:confused: :confused:

நீங்கள் CD\DVD அல்லது நெட்வொர்கில் இப்படி ரீடு ஒன்லி வசதி மட்டும் உள்ள டிரைவ்களிலும் கூடுதலாக (லோக்கல் ஹார்ட் டிஸ்க் என்பதற்கு பதிலாக, மை கம்ப்யூட்டர் என்று போட்டு) தேடி இருக்கலாம். அப்படி படிக்க மட்டும் அனுமதி உள்ளதில் அழிக்க இயலாது.

அல்லது, முன்னர் நீங்கள் ஏதாவது சிஸ்டம் பைலை உங்கள் கம்ப்யூட்டரில் அழித்திருப்பீர்கள், ஆதாலால் சிஸ்டம் பைலை அழிக்கும் உரிமையை உங்கள் அட்மினிஸ்டிரேட்டர் உங்களுக்கக தராமாலிருக்கலாம். (இந்த தகவல் நீங்கள் என்னிடம் முன்னர் தனிமடலில் தெரிவித்தது என்று நினைவு படுத்துகிறேன் தங்கையே)

மலர்
24-01-2008, 05:12 AM
முன்னர் நீங்கள் ஏதாவது சிஸ்டம் பைலை உங்கள் கம்ப்யூட்டரில் அழித்திருப்பீர்கள், ஆதாலால் சிஸ்டம் பைலை அழிக்கும் உரிமையை உங்கள் அட்மினிஸ்டிரேட்டர் உங்களுக்கக தராமாலிருக்கலாம். (இந்த தகவல் நீங்கள் என்னிடம் முன்னர் தனிமடலில் தெரிவித்தது என்று நினைவு படுத்துகிறேன் தங்கையே) அட ஆமா ...
முன்னாடி ஒரு முறை சிஸ்டல் பைலை தொடக்கூடாதுன்னு அட்மின் கிட்ட திட்டு வாங்கினேன்...
அப்பவே எங்க அட்மின் நேக்கு இருந்த அட்மின் பவரையும் சேத்து எடுத்துட்டார்...
தொந்தரவுக்கு சாரி அண்ணா...

ஓவியன்
24-01-2008, 05:34 AM
அன்பு கூறியது போன்று இந்த பைல் எதாவது பைலை சிடி,டிவிடியாக மாற்றும் போது அதற்குள் தானும் புகுந்து இருந்து கொண்டு வம்பு பண்ணும்...

நல்ல பதிவு பிரவின்...
இனி இந்த பிரச்சினையை முற்றாக நீக்கி விடலாம்...

ஜெயாஸ்தா
26-01-2008, 06:14 AM
நான் கூட இது வைரஸ்தானோ என் நினைத்துக்கொண்டிருந்தேன். தெளிவுபடுத்திவிட்டீர்கள். நன்றி பிரவீண். அப்புறம் இதே மாதிரி இன்னொன்னு folder.htp என்று தெரியுதே அது வைரஸ்தானே....?

praveen
26-01-2008, 08:25 AM
folder.htp இல்லை folder.htt

ஆமாம், அது கம்ப்யூட்டரில் உள்ள எல்லா போல்டர்களிலும் இருந்தால். உண்மையிலே அதுவும் desktop.ini என்பதும், விண்டோஸ் எக்ஸ்புளோரர்களில் ஒரு பக்கத்தை பார்வையிடும் போது ஸ்பெசலாக செட்டிங்க்ஸ் செய்து கொள்ள. அதாவது விண்டோஸே அது பதிந்திருக்கும் டிரைவ், அல்லது வின்பூட் டைரக்டரி என்னும் winnt or windows இந்த மாதிரி டைரக்டரிகளை விண்டோசில் திறந்தால் அதில் உள்ளவற்றை காட்ட மறுக்கும். பின் ஷோ ஆல் பைல்ஸ் என்பதை கிளிக் செய்தால் காட்டும். இதன் மூலம் ஒரு போல்டரை நாம் எப்படி காட்டவேண்டும் என்று செட் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதியை வைரஸ் பரப்புபவர்கள் தவறுதலாக பயன்படுத்தி அனைத்து போல்டர்களிலும் அந்தந்த போல்டர்களை திறக்கும் போது வைரஸ் ஓடும்படி செய்து வைத்திருப்பார்கள். விண்டோஸ் சிஸ்டம் பைல் தவிர்த்து மற்றவைகளில் உள்ளவற்றை தாரளமாக அழிக்கலாம் (அழிந்தால் தானே). இவைகளை சேப் மோடில் சென்று ஆண்டிவைரஸ் சாப்ட்வேர் மூலம் முழு கம்ப்யூட்டர் சோதனை செய்து அழிக்க வேண்டும். அதற்கு முன் அந்த வைரஸ் மென்பொருள் நீக்கியை அப்டேட் செய்திருக்க வேண்டியது அவசியம்.

ஷீ-நிசி
26-01-2008, 08:58 AM
ஸ்பைவேர் என்ன மென்பொருள் உபயோகிக்கலாம்.

நான் இப்பொழுது இலவச AVG ஆண்ட்டிவைரஸ் உபயோகிக்கிறேன்.
இதுவே போதுமா. அல்லது ஏதாகிலும் ஸ்பைவேர் நிறுவவேண்டுமா?

இலவச மென்பொருட்கள் ஏதும் கிடைக்குமா?

praveen
26-01-2008, 09:01 AM
ஸ்பைவேர் என்ன மென்பொருள் உபயோகிக்கலாம்.

நான் இப்பொழுது இலவச AVG ஆண்ட்டிவைரஸ் உபயோகிக்கிறேன்.
இதுவே போதுமா. அல்லது ஏதாகிலும் ஸ்பைவேர் நிறுவவேண்டுமா?

இலவச மென்பொருட்கள் ஏதும் கிடைக்குமா?

இது பற்றி ஏற்கெனவே விவாதித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் உபயோகிப்பது ஸ்பைபோட் சேர்ச் அண்ட் டெஸ்ட்ராய் தான் இலவச மென்பொருள். (அதனுடன் உள்ள டீ டைமருடன் உபயோகிக்கிறேன்.)

ஷீ-நிசி
26-01-2008, 09:08 AM
இது பற்றி ஏற்கெனவே விவாதித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் உபயோகிப்பது ஸ்பைபோட் சேர்ச் அண்ட் டெஸ்ட்ராய் தான் இலவச மென்பொருள். (அதனுடன் உள்ள டீ டைமருடன் உபயோகிக்கிறேன்.)

லிங்க் கொடுங்க... டீடைமர்னா???

பூமகள்
26-01-2008, 09:34 AM
ரொம்ப நாளா மண்டையில் அரிச்சிட்டு இருந்த பிரச்சனை.
அன்புரசிகன் அண்ணா சொன்னது போல், சீடியில் எழுதுகையில் வந்து படுத்தும்..!
எதற்கும் முயற்சித்துவிட்டு சந்தேகத்தைக் கேட்கிறேன்.

சரியான விளக்கமும் வழிகாட்டுதலும்..!

மிகுந்த நன்றிகள் ப்ரவீன் அண்ணா. :)

reader
08-04-2008, 01:13 PM
யப்ப்பா ஒரு தெளிவு வந்திருச்சப்பா.