PDA

View Full Version : தைத்திருநாள் தமிழரின் புத்தாண்டு



அன்புரசிகன்
23-01-2008, 01:06 PM
தைத்திருநாள் இனி தமிழர் புத்தாண்டு

தைத்திங்கள் முதல் நாளை தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு வழிவகைசெய்யப்படவிருக்கிறது என்று தமிழக ஆளுநர் சட்டபையில் தெரிவித்தார். இந்த காட்சியை கலைஞர் தொலைக்காட்சியின் செய்தியில் சற்றுமுன்னர் ஒளிபரப்பியிருந்தது.

இதன் படி இதுவரை தைப்பொங்கலை தமிழர் திருநாளாக கொண்டாடிய மக்கள் இனிவருங்காலங்களில் தமிழர் புத்தாண்டாக கொண்டாடுவர்.

அத்துடன் தமிழ் மொழிமூல கல்வி பயின்று 10ஆவது பரீட்சையில் அதிக மதிப்பெண்பெற்ற முதல் 1000 மாணவர்களுக்கு கணினி திறமைப்பரிசாக வழங்கப்படும் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவித்தார்கள்.

இன்னும் பல நல்லவிடையங்கள் கூறினார்கள். அவை நடைமுறைப்படுத்தப்படுமிடத்து மிக்க நடக்கும் கலைஞர் ஆட்சியை மக்கள் ஒரு பொற்காலமாக காண்பர்.

நன்றி: கலைஞர் தொலைக்காட்சி.

இலங்கையில் சித்திரைத்திங்கள் முதன்நாளை தமிழ்-சிங்கள புத்தாண்டாக கொண்டாடபப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதாவது பூமி மீன ராசியிலிருந்து மேஷராசிக்கு இடம் மாறும் தறுவாயை தமிழர் புத்தாண்டாக சித்தரிப்பது வழமையாக இருந்தது.

அறிஞர்
23-01-2008, 02:49 PM
இந்த ஆலோசனையை முன்பு கூறியிருந்தார்கள்.

இப்பொழுது சட்டசபை ஒப்புதல் அளித்தபின்... அமலுக்கு வரும் என நம்புகிறேன். நல்ல விசயம் தான்.

தைத்திருநாளுக்கு சிறப்பு இன்னும் கூடுகிறது.