PDA

View Full Version : கடற்கரை கட்டாயம் சோபிக்கும்...யவனிகா
23-01-2008, 12:28 PM
தினசரி கடலோரப் பயணத்தில்
கண்களும், மனதும் ரசிக்கும்
ஏதோ ஒன்று,
கட்டாயம் இருக்கும்....

இன்றைய அரிய மழைநாளில்
ஏனோ ஒன்றுமேயில்லை ரசிக்கும் படியாய்...

மழை விரும்பா மனிதர்கள்
கட்டிலில் கம்பளியுடன்
முடங்கி விட்டனர் போலும்...

கடலோர படகுகளையும்
காணவில்லை...

கனத்த மவுனத்துடன் இருக்கின்றன்
குழந்தைகள் இல்லாத ஊஞ்சல்கள்...

ஓலை நுனி வழி மழை சிந்தும்
குடிசைக்குள்ளும் ஒதுங்க ஆளில்லை...

எப்போதும் கத்தும் பெயர் தெரியா
அந்தப் பறவையும் இல்லையே...
இடம் பெயர்ந்து விட்டதா?

பொலிவே இல்லாத கடற்கரை...

வருகிறாயா...
நீயும், நானும்
கைகோர்த்து நடக்கலாம்...

கடற்கரை கட்டாயம் சோபிக்கும்....

வசீகரன்
23-01-2008, 12:56 PM
இரண்டு இளம் இதயங்கள் இருக்கையில்... இரவு என்ன பகல் என்ன....! வெயில் என்ன மழை என்ன...! அழகு அங்கே அள்ளிக்கொள்ளும்.... ஆர்வம் அருங்கே ஆர்ப்பரிக்கும்..!

அழகான கவிதை யவனிகா மேடம்.... தொடருங்கள்

ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 01:23 PM
கடற்கரையே இல்லாத ஊரில் என்ன செய்வது?

ஷீ-நிசி
23-01-2008, 03:01 PM
வருகிறாயா...
நீயும், நானும்
கைகோர்த்து நடக்கலாம்...
கடற்கரை கட்டாயம் சோபிக்கும்....

அந்த கடைசி வரிகள் பிரமாதம்...

வாழ்த்துக்கள் யவனிகா!

இதயம்
23-01-2008, 03:07 PM
கடலும், மழையும் காலம் முழுதும் அலுக்கா கவிதைகள்..! இவற்றில் ஒன்றே நமக்குள் ஓராயிரம் கற்பனைகளை தோற்றுவிக்கும். இவை இரண்டும் இணைந்தால் சொல்லத்தான் வேண்டுமா..? கடல் அலையில் கால் நனைத்து விளையாடுவதும், கடற்கரை மணலில் காற்று வாங்கியபடி பேசிச்சிரிப்பதும் பேரின்பம்.!!

மழை மட்டும் குறைந்ததா என்ன..? மழை என்பது மனதை பறிகொடுக்க வைக்கும் இனிய நிகழ்வு.! சோவென்று பெய்யும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து பார்த்தால் அதன் சுகம் தெரியும். இந்த மனம் மயக்கும் மழையும், கடலும் இணைந்து கொடுக்கும் இன்பத்தை யாராவது அனுபவித்ததுண்டா..? ஒரு காட்சி சொல்கிறேன். அதை உங்கள் கற்பனையில் ஓட்டிப்பாருங்கள். நிஜத்தின் எல்லைக்குள் நுழைந்த மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்.!!

அது ஒரு கடற்கரை..!
சோவென்று பெய்யும் மழை..
அருகில் ஆர்ப்பரிக்கும் அலைகள்...
மனமெங்கும் பொங்கி வழியும் காதலுணர்வு..!
ஒரு குடைக்குள் நீங்களும், உங்களுக்கு பிடித்த ஜீவனும்..!!
இனி உங்கள் பாடு, உங்கள் கற்பனை பாடு..!!!

எவன் சொன்னான்... சொர்க்கம் இவ்வுலகில் இல்லையென்று..??!!

உங்கள் கவிதை கற்பனையில் வாழவைக்கிறது யவனி(யக்)கா..! கவிதைக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளும், பாராட்டுக்களும்..!! :icon_b::icon_b:

IDEALEYE
23-01-2008, 03:39 PM
கவிதையில்
எது இல்லையோ
ஈரம் இருக்கின்றது....

வாழ்த்துக்கள்
யவனி அக்கா

நுரையீரல்
23-01-2008, 08:37 PM
வருகிறாயா...
நீயும், நானும்
கைகோர்த்து நடக்கலாம்...

கடற்கரை கட்டாயம் சோபிக்கும்....
கடற்கரை வேண்டாம் கண்ணே..

வரும்போது அப்படியே பெத்த முத்துக்கள் ரெண்டையும் கூட்டிட்டு வரணும். பீச்சில் அடிக்கும் குளிர்காத்துல பசங்களுக்கு இருமல் வந்திடும், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகணும். அதனால பேசாம வீட்டுக்கே வந்திடு, ஒன்பதுருபாய் நோட்டு திருட்டு விசிடி வாங்கி வச்சிருக்கேன்.. கிளைமேக்ஸ் பார்த்து ஓவென அழுவலாம்..

நுரையீரல்
23-01-2008, 08:46 PM
இந்த மனம் மயக்கும் மழையும், கடலும் இணைந்து கொடுக்கும் இன்பத்தை யாராவது அனுபவித்ததுண்டா..? ஒரு காட்சி சொல்கிறேன். அதை உங்கள் கற்பனையில் ஓட்டிப்பாருங்கள். நிஜத்தின் எல்லைக்குள் நுழைந்த மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்.!!

அது ஒரு கடற்கரை..!
சோவென்று பெய்யும் மழை..
அருகில் ஆர்ப்பரிக்கும் அலைகள்...
மனமெங்கும் பொங்கி வழியும் காதலுணர்வு..!
ஒரு குடைக்குள் நீங்களும், உங்களுக்கு பிடித்த ஜீவனும்..!!
இனி உங்கள் பாடு, உங்கள் கற்பனை பாடு..!!!
அருமையான வரிகள் இதயம்..
எனக்கென்னவோ சுனாமி வந்து தூக்கிட்டு போயிருமோனு தோணுது...

அதுமட்டுமில்லை, சோ(துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர்)வென்று பெய்யும் மழையில் எவனாவது கடற்கரைக்கு போவானா? நட்டு, கிட்டு கழண்டு போனவன் தான் போவான்...

மேலும், சோவென்று பெய்யும் மழையில் எப்பவாவது கடற்கரைக்கு போயிருக்கிங்களா?
ஒரு ஈ, காக்கா கூட இருக்காது... சாதாரண டைம்ல போனாலே, போலீஸ் சந்தேகக்கேசுல பிடிச்சிட்டு போகுது, கணவன், மனைவியா இருந்தாலும் ஆயிரத்தெட்டு கொஸ்டீன்கள்..

அதையும் மீறி சோவென்று பெய்யும் மழையில் போனா,
மனிதன் உணர்ந்து கொல்ல
மனிதக் காதல் அல்ல, அல்ல, அல்ல.. (2வதும், 3வது எக்கோ..) அதையும் தாண்டி புனிதமானது...

அப்படியே அழுக்கு பேண்ட், கிழிஞ்ச சட்டையைப் போட்டுக்கிணு, ஒரு வாரத்துக்கு பல் விளக்காம அபிராமி, அபிராமினு அவள தூக்கிட்டு கடல் பக்கம் போனீங்கனா..
தற்கொலை பண்ணத்தான் போறீங்கனு, கடலோரக் காவல்படை வந்து கைது செய்திட்டு போயிடும்...

அப்புறம் உள்ள போயி ரெண்டுபேரும்,
கைவீசம்மா கைவீசு
கடைக்கு போலாம் கைவீசுனு
லெஃப்ட் ரைட் போட்டுட்டு இருக்கணும்...


எவன் சொன்னான்... சொர்க்கம் இவ்வுலகில் இல்லையென்று..??!!
சுனாமி தூக்கிட்டுப் போனதுக்கப்புறம் டைரக்டா சொர்க்கம் தான். அதைத்தானே சொல்றீங்க...

என்ன பண்றது எதையும் நடைமுறை வாழ்க்கையை ஒட்டி யோசிக்க வேண்டியிருக்குது...

செல்வா
23-01-2008, 09:46 PM
ஓய் மாமா.. ஒமக்கு மொக்க போடுறதுக்கு தானே அங்க விவாதங்கள்னு ஒரு பகுதி வச்சு.... அதுல காந்தியையும் புடிச்சு கொண்டாந்து வச்சுருக்கோம். உமக்கு சம்பந்தமில்லாத விசயத்துல... உம்மள யாருவோய் தலையவுடச் சொன்னது.... கேட்டாக்கா நடைமுறை வாழ்க்கைய ஒட்டி யோசிக்கிறாராம்.
அடிக்குற மழக்கும் குளிருக்கும் இதமாருக்கட்டும்ணு தொடப்போனாலே.. யோவ். மழ பெஞ்சா போதுமே... மனுசன நிம்மதியா இருக்கவுடமாட்டண்ணு தொணதொணக்குறவங்க மத்தில எங்க அக்கா எவ்ளோ ஆசையா பாசமா கூப்புடுறாங்க உம்ம ரவுசு ராஜாங்கம் ... எதார்த்தம் பதார்த்தம் எல்லா கருமாந்தரத்தயும் மூட்ட கட்டி வச்சுட்டு துணையா சாலியா போய்ட்டு வராம இங்க வந்து சோ க்கு டயலாக்கு... அதுலயும் பதில் சொல்றதுக்கு நல்ல ஆளப் புடிச்சீரு.... அவரெல்லாம் sms லேயே டூயட் பாடற ஆளு அவருகிட்டப் போயி...........

கவிதை வழக்கம் போலவே... அக்மார்க் யவனியக்கா கவிதை.. கலக்கல். கொஞ்சம் சொல்லிகுடுங்களேன் எனக்கும்.

இதயம்
24-01-2008, 04:49 AM
கடற்கரை வேண்டாம் கண்ணே..

வரும்போது அப்படியே பெத்த முத்துக்கள் ரெண்டையும் கூட்டிட்டு வரணும். பீச்சில் அடிக்கும் குளிர்காத்துல பசங்களுக்கு இருமல் வந்திடும், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போகணும். அதனால பேசாம வீட்டுக்கே வந்திடு, ஒன்பதுருபாய் நோட்டு திருட்டு விசிடி வாங்கி வச்சிருக்கேன்.. கிளைமேக்ஸ் பார்த்து ஓவென அழுவலாம்..

தியேட்டர்ல கூட அந்த படம் இத்தனை தடவை ஓடியிருக்காது...! உங்க வீட்டு தியேட்டர்ல வெள்ளிவிழா கடந்து ஓடியிருக்கும்னு நினைக்கிறேன். காரணம், இந்த படத்தை ஏற்கனவே பல தடவை பார்த்தாச்சுன்னு நீங்களே சொன்ன நினைவு..! என்னவோ புதுசா பார்க்க போற மாதிரி பார்க்க கூப்பிடறீங்க..? ஒரு வேளை அழ வச்சிப்பார்க்க புதுத்திட்டமோ..?? :D:D

இதயம்
24-01-2008, 05:07 AM
அருமையான வரிகள் இதயம்..
எனக்கென்னவோ சுனாமி வந்து தூக்கிட்டு போயிருமோனு தோணுது...

அதுமட்டுமில்லை, சோ(துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர்)வென்று பெய்யும் மழையில் எவனாவது கடற்கரைக்கு போவானா? நட்டு, கிட்டு கழண்டு போனவன் தான் போவான்...

மேலும், சோவென்று பெய்யும் மழையில் எப்பவாவது கடற்கரைக்கு போயிருக்கிங்களா?
ஒரு ஈ, காக்கா கூட இருக்காது... சாதாரண டைம்ல போனாலே, போலீஸ் சந்தேகக்கேசுல பிடிச்சிட்டு போகுது, கணவன், மனைவியா இருந்தாலும் ஆயிரத்தெட்டு கொஸ்டீன்கள்..

என்ன பண்றது எதையும் நடைமுறை வாழ்க்கையை ஒட்டி யோசிக்க வேண்டியிருக்குது...

உங்களுக்கு நுரைங்கிற பேரு பொருத்தமானது தான். ஏன்னா, பார்க்கிறதுக்கு தான் அது நிறைய இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, உள்ளே ஒண்ணும் இருக்காது. அப்படித்தான் இருக்கு உங்க பதிலை படிச்சா..!! வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கணும்னா முதல்ல தேவையில்லாத பயத்தை விடணும். அதனால சுனாமி தூக்கிட்டு போயிரும்கிற பயம் உங்களுக்கு வேணாம்.!

ஒரு முறை மழை ஏன் சோவென்று பெய்கிறது..?-ன்னு துக்ளக் ஆசிரியர் சோவிடம் கேள்வி பதில் பகுதியில எங்கள் ஊரைச்சேர்ந்த அதிரை சையது புகாரி-ங்கிறவர் கேட்டார் (இவர் ஒரு நகைச்சுவை எழுத்தாளர்). அதுக்கு சோ மழை சோ-ன்னு பெய்யாம சை-ன்னா பெய்யும்..?-னார்(காரணம் கேட்டவரின் பெயரின் முதல் எழுத்து சை..!). எங்க ஊர்க்காரர் பிட்டை எங்கிட்டயே போட்ட உங்களை எங்க தூக்கி போடுறது..?!!!

கொஞ்சம் கூட இரசனையில்லாதவரா இருக்கீங்களே..? காதலிக்க யாராவது கூட துணைக்கு ஆள் வச்சிப்பாங்களா..? ஈ.. காக்கா கூட இல்லாத கடற்கரை தானே அந்த சூழ்நிலைக்கும், மழைக்கும் ரொம்ப சூப்பரா இருக்கும்..?!! பின்ன.. நீங்க போனா போலீஸ் சந்தேகக்கேஸுல தான் பிடிக்கும். ஏன்னா உங்க ஸ்பெஷல் முழி அப்படி..!!! எங்க ஊர்ல போலீஸும் இருக்காது, சந்தேக கேஸும் கிடையாது. அதனால காதலுக்கு பாதுகாப்பு அங்க அதிகம்..!

காதலியை கூட வச்சிக்கிட்டு காதலை அனுபவிக்காம, அழுக்கு பேண்ட், அழுக்கு சட்டை போட்டுக்கிட்டு திரிஞ்சா காவல் படை கைது பண்ணாம, கூட்டிப்போய் கவர்னர் பதவியா உங்களுக்கு கொடுப்பாங்க..? என்னைப்பொருத்தவரை காணாத மேலோக சொர்க்கத்தை விட கண்ணுக்கு முன்னாடி தெரியற பூலோக சொர்க்கத்தை தான் விரும்புறேன். எனக்கென்னவோ நீங்களெல்லாம் காதல் பண்ண ஆரம்பிச்சா உண்மையிலேயே சுனாமி வந்துடுமோன்னு பயமா இருக்குங்க..!!

வெறும் நடைமுறையை மட்டும் யோசிச்சி வாழ்ந்தா, நமக்கு சந்தோஷத்துக்கு பதிலா சாவு தான் சீக்கிரம் வரும்..!! கனவுகளும், கற்பனைகளும், காதலும், கைப்பிடிச்சவள் நம்ம மனசுக்கும் பிடிச்சவளா இருக்கிறதும் தான் வாழ்க்கையை கலர்ஃபுல் ஆக்கும். அவை இல்லாட்டி நம்ம வாழ்க்கை நல்லதங்காள் கதையாகிடும்..!!

இதயம்
24-01-2008, 05:12 AM
அதுலயும் பதில் சொல்றதுக்கு நல்ல ஆளப் புடிச்சீரு.... அவரெல்லாம் sms லேயே டூயட் பாடற ஆளு அவருகிட்டப் போயஅி...........

நானும் ரொம்ப நாளா நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். என் இரகசியங்களை எல்லாம் யாரோ ஒரு கறுப்பாடு துப்பறிஞ்சி ஊருக்கு உளவு சொல்லிட்டிருக்கு. நான் மட்டும் அதை பிடிச்சேன்... அடுத்த பக்ரீத் பிரியாணி அது தான்..!!

சிவா.ஜி
24-01-2008, 05:50 AM
மறுபடியும் ஒரு யவனிகா முத்திரையோடு அழகியலை ஆடையாக உடுத்திக்கொண்டு கவிதை கடற்கரை உலா வந்திருக்கிறது.
கடற்கரையை காதலோடு பார்க்கும்போது அது கண்டிப்பாக சோபிக்கத்தான் செய்யும்.நிகழ்வுகளை பட்டியலிட்ட விதம் அழகு.
கடைசி வரிகளில் ஒரு வசீகரம்.

அருமை தங்கையே....வாழ்த்துகள்.

நம்பிகோபாலன்
24-01-2008, 07:08 AM
நீயும் நானும்
தனிமையில் கடற்கரையில்
இருந்தால் போதுமே
கடல் மீன்கள் கூட நம்மிடம் காதல் கற்றுகொள்ளும்...
இருவரின் காதல் கடல் கண்டிப்பாக சோபிக்கதான் செய்யும்...
அழகான கவிதை

சுகந்தப்ரீதன்
26-01-2008, 07:03 AM
வருசத்துல ஒருமுறை இருமுறை பெய்ய மழை பாத்த உடனே கவிதை வந்துட்டுது அக்காவுக்கு கூடவே ஆசையும் மாமா கைய புடிச்சு நடந்து கடற்கரையை சோபிக்க வைக்க..!

கவிதை ரொம்ப அழகு அக்கா..! வாழ்த்துக்கள்..!

அனுராகவன்
26-01-2008, 08:59 AM
நல்ல கவிதை தோழியே..
கடல் மணலில் உட்கார்ந்து கதை பேசினால் நேரம் போவதே தெரியாது..
நல்ல மழைகாலத்தில் அதுவும் சொல்லவே வேண்டாம்...
ம்ம் பிரமாதம்,...
என் நன்றி!!!!

மனோஜ்
26-01-2008, 09:37 AM
தனிமையில் கடல அருகில் இருந்தால் சுகம்
அதைவிட மனதுக்கு பிடித்தவர் அருகில் இருந்தால் அதைவிட வேறு என்ன சுகம் இது மாம்ஸ்சுக்கு தெரியல அதான் ஜெக்கடிக்கிறார் பராவயில்லை
கவிதை அருமை யவனி(ய)க்கா

நுரையீரல்
26-01-2008, 10:14 AM
தனிமையில் கடல அருகில் இருந்தால் சுகம்
அதைவிட மனதுக்கு பிடித்தவர் அருகில் இருந்தால் அதைவிட வேறு என்ன சுகம் இது மாம்ஸ்சுக்கு தெரியல அதான் ஜெக்கடிக்கிறார் பராவயில்லை
கவிதை அருமை யவனி(ய)க்கா
மவனே மனோஜ் ரியாத்தில் கடற்கரையில்லை.

இருந்தால் தெரியும் பயன்களும், பயங்களும்.. இந்தியாவிலே சுனாமி வந்த ஒரு வாரம் கழித்து, பிலிப்பினோக்களுடன் நானும் சேர்ந்து தூண்டில் போட்டு மீன்பிடிச்சிகிட்டு இருந்தேன். எவனோ களவானிப்பயன் உங்கக்கா கிட்ட போட்டுக் கொடுத்திட்டான்..

கடற்கரைக்கு வந்த கண்ணகி என்னைய உருட்டியும், புரட்டியும் எடுக்காதது தான் குறை, அவ்வளவு திட்டு, திட்டி வூட்டுக்கு அழைச்சிட்டுப் போனா... சரி அத்தான் மேல அன்பால தான் வூட்டுக்கு கூட்டிட்டுப் போனா நு பார்த்தா, அழுக்குத் துணிய குடுத்து துவைக்க வச்சிட்டா...

இங்கபாரு அக்காளும், தம்பியும் என்னை அன்பால கூப்பிட்டா என்ன பண்ணுவீங்கனு தெரியும்.. நேத்து தொவைச்சதுக்கே கையத் தூக்க முடியல..

நுரையீரல்
26-01-2008, 10:36 AM
வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கணும்னா முதல்ல தேவையில்லாத பயத்தை விடணும். அதனால சுனாமி தூக்கிட்டு போயிரும்கிற பயம் உங்களுக்கு வேணாம்.!

கொஞ்சம் கூட இரசனையில்லாதவரா இருக்கீங்களே..? காதலிக்க யாராவது கூட துணைக்கு ஆள் வச்சிப்பாங்களா..? ஈ.. காக்கா கூட இல்லாத கடற்கரை தானே அந்த சூழ்நிலைக்கும், மழைக்கும் ரொம்ப சூப்பரா இருக்கும்..?!!
கவிஞரின் மனதில் கவிதை உருவான சமயம் என்னைத்தான் அலைபேசியில் அழைத்தார். இந்தக் கவிதை எப்படியிருக்குங்கனு கேட்டாங்க.. அப்போது நான் பணியில் இருந்தேன், அதுவும் பிளாண்ட் டிரிப் ஆகி, ஏகத்துக்கும் பிரச்சினை.. அந்தப் பணிச்சுமையிலும், கவிஞரின் கவிதை முழுதும் கேட்டு, இதற்கான என்னுடைய பதில் நான் இப்ப ரொம்ப பிஸினு சொன்னேன்..

என்னது எங்களுக்கு ரசனை இல்லையா? உங்களுக்கு ஒன்னு தெரியுமா? கவிதர்கள் அனைவரும் பொய் சொல்பவர்கள்.. உனக்காக நிலவில் குச்சிமுட்டாய் வாங்கித் தருகிறேன், செவ்வாயில் கம்மர்கட்டு விற்கிறேன் என்பார்கள். நடைமுறையில் சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது அவர்களுக்கு..

நாங்கள் எதையும் சொல்லமாட்டோம், செய்து காண்பிப்போம்.. வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமே என்பதை உணர்த்திக்காட்டுவோம்.

அப்புறம் என்ன காதல் செய்வதற்கு, ஈ, காக்கா இல்லாத இடத்திற்கு தான் போவீங்களோ? கவிதை உருவான சமயம் ஜீரோ டிகிரி தட்பவெப்பம், கடுங்குளிர் காற்றுடன் சோ இல்லை, அடச்சீ எப்ப இந்த சனியன் புடிச்ச மழை நிக்கும் என்று சளித்துக் கொள்ளும் அளவுக்கும் பெய்து கொண்டிருக்கும் மழையில், எவனாவது கடற்கரைக்குப் போவானா?

சிவாண்ணான் சொன்ன அதே பதிலைத் தான் இங்கும் வைக்கிறேன்.
இப்படி நீங்களே காமேடி பண்ணி நீங்களே சிரிச்சிக்கிட்டிருக்காதீங்க.
ஆங்கிலத்துல ஒரு வாக்கியம் சொல்வாங்க
you may be intelligent,but don't think others are foolபுரிந்தால் சரி.


என்னைப்பொருத்தவரை காணாத மேலோக சொர்க்கத்தை விட கண்ணுக்கு முன்னாடி தெரியற பூலோக சொர்க்கத்தை தான் விரும்புறேன்.
இப்படி செய்தீங்கனு வைங்க, கண்ணுக்கு முன்னாடி தெரியற பூலோகத்துடன் சேர்த்து பரலோகமும் தெரியும்...


எனக்கென்னவோ நீங்களெல்லாம் காதல் பண்ண ஆரம்பிச்சா உண்மையிலேயே சுனாமி வந்துடுமோன்னு பயமா இருக்குங்க..!!
சுனாமி வந்துச்சுன்னா கூப்பிடுறோம், கடப்பாறை நீச்சலடிச்சு எல்லாரையும் காப்பாத்த வாங்க...
இதுக்கும் சிவாண்ணாவின் பதில் தான் (கட் & பேஸ்ட் பண்ணவில்லை)


வெறும் நடைமுறையை மட்டும் யோசிச்சி வாழ்ந்தா, நமக்கு சந்தோஷத்துக்கு பதிலா சாவு தான் சீக்கிரம் வரும்..!! கனவுகளும், கற்பனைகளும், காதலும், கைப்பிடிச்சவள் நம்ம மனசுக்கும் பிடிச்சவளா இருக்கிறதும் தான் வாழ்க்கையை கலர்ஃபுல் ஆக்கும். அவை இல்லாட்டி நம்ம வாழ்க்கை நல்லதங்காள் கதையாகிடும்..!!
எங்கவீட்டுக் கதை நல்லதங்காள் கதை ஆனா ஆகிட்டுப் போகட்டும்.. உங்க வீட்டுக்கதை அஞ்சரைக்குள்ள வண்டியாகாம பார்த்துக்கோங்க...

இதயம்
26-01-2008, 10:45 AM
சுனாமி வந்துச்சுன்னா கூப்பிடுறோம், கடப்பாறை நீச்சலடிச்சு எல்லாரையும் காப்பாத்த வாங்க...
இதுக்கும் சிவாண்ணாவின் பதில் தான் (கட் & பேஸ்ட் பண்ணவில்லை)

நீங்க மனசு சரியில்லாத மாதிரி இருக்கிறதா தோணுது. அதான் நான் பொதுவா சொன்ன நல்லதாங்காள் கருத்தையெல்லாம் உங்களுக்கு சொன்னதா எடுத்துக்கிட்டீங்க..!! இப்படித்தான் காந்தி திரியிலேயும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கீங்க..!! ஆமா.. கம்பெனியில் வேலை ரொம்ப மண்டையை உடைக்குதோ..?!!

உங்களுக்கு சொந்தமா எதுவும் சொல்லத்தெரியாதா..? ஏன் சிவா சொன்னது, கட் அண்ட் பேஸ்ட் எல்லாம்..?!! சிவாவும், நீங்களும் ஒருத்தொருக்கொருத்தர் கொள்கைப்பரப்பு செயலாளர் மாதிரியே நடந்துக்குறீங்களே..! இலவச விளம்பரமா..?!! அதென்ன அஞ்சரைக்குள்ள வண்டி..?!!

இப்ப எது சொன்னாலும் தப்பா தான் தெரியும்... அதனால நாம் அப்புறம் வர்றேன்..!!

அமரன்
26-01-2008, 11:02 AM
கவிதை நல்லா இருக்கு.. தொடர்ந்த பரிமாற்றங்களும் ரசிக்க வைக்கிறது. புள்ளியைத் தொடாமல் கோலங்கள் போடப்படுகிறனவோ என்ற உணர்வு நச்சுப்பாம்பாகப் படர்கிறது என்னுள்.

பட்டாம்பூச்சிக் கண்களுடனும் சில்வண்டு ரீங்காரத்துடனும் அங்கும் இங்கும் ஓடித்திரியும் வாண்டுகள். குசும்புடன் கூவும் குயில்கள்.. குறுகுறுப்புடன் ஆடும் மயில்கள்.. தாவணிகளின் லாவணி.. சுடிதார் சொர்க்கங்களில் சிணுங்கல். பிரிந்தவர் கூடிய மகிழ்வு.. பெரிசுகளின் உள்ளப்பகிர்வு.. மண்டம் மகிழ்ந்திருக்கும்.. சோடனைகளை மீறி சோபித்திருக்கும்..என்ன ஒரு கொள்ளை கொள்ளும் ரம்மியமான தருணம்.. அழகியலின் இலக்கணம்.

திருவிழா நிறைவில் காலிசெய்த காலியான மண்டபம், சோடனைகளின்றி வெறிச்சோடி இருக்கும்.. அப்போது தோன்றும் பாருங்கள் உணர்வு உயிரை உலுக்கும்.. திருவிழா வீடாக கடல்கரை.. நிறவு நேரமாக மழை..

கடல் அழகு.. மழை அழகு.. அழகு+அழகு=பேரழகு.. பேரழகை ரசிக்காது முடங்கி இருப்பதைப் பார்த்து எழும் அங்கலாய்ப்பு.. கோபம்.. வெறுப்பு... உணர்ச்சிக்குவியல்.. அந்தக் குவியலிலிருந்து பீறிட்டு எழும் ஒரு ஜீவன், உலாப்போக இன்னொரு ஜீவனை அழைக்கும்.

யவனிகாவின் ஒரு வீடும் சில மனிதர்களும் கதைக்கு சற்றும் சளைக்காத கவிதை. உணர்வுகளைப் படம்பிடித்து பத்திரப்படுத்த கவிதைகளால் இயலும் என்பதை நிரூபித்த கவிதை.

ஜீவனான கவிதைக்கு பாராட்டுகள் யவனிகா

பூமகள்
26-01-2008, 11:15 AM
கடல் பார்த்து
கிடக்கும் நண்டும்
காத்திருப்பு தொலைத்து
கடல் சேரும்..!

வளியின் ரீங்காரம்
வலி சொல்லும்
வான்மழையிடம்..!

ஒவ்வொரு தூறலும்
ஒருவர் தேடி
ஏமாற்றமாய் திரும்பும்..!

கடலின் நீலமும்
கார்முகிலின் கருமையும்
ஒன்றித் தொடும்
புள்ளி மட்டும் எஞ்சும்..!

கரை நனைத்த கடல்த்தாய்..
ஈரமணல்வெளி கண்டு
வியந்து வான்மழைக்கு
உச்சிமுகர்ந்து முத்தமிடும்..!

நீயும் நானும் சேர்ந்து நடக்க
ஓடி வந்து சிலிர்த்து நிற்கும்..!

------------------------------------------------

ஆஹா...! யவனி அக்கா..!! எனக்கு கூட இப்படி எழுதும் படி செய்தது உங்கள் கவிதை..!!

அருமையோ அருமை..!!

மழை நாளில் கடலாட செல்வோர் இல்லையென்றாலும், மழையும் கடலும் பிடித்தமானவை ரசிக்க என்றுமே..!!

கடலும் மழையும் ஒன்றான தருணங்கள் இரண்டையும் ரசிக்கும்படி கண்முன் விரிகிறது காட்சி..!!

பாராட்ட வார்த்தைகள் இல்லை யவனி அக்கா..!! :icon_b:

வாழ்த்துகள்..!! :)

aren
26-01-2008, 11:24 AM
நல்ல கவிதை அக்கா. அருமையான வரிகள்.

அமரன்
26-01-2008, 12:22 PM
ஒத்திசைத்த பூமகளின் நாதஸ்வரம் இனிமை.. பாராட்டுகள்.

யவனிகா
26-01-2008, 02:23 PM
பின்னூட்டக் கவிதை அருமை பூமகள்.
பின்னூட்டமிட்டவர்களுக்கும்...பின்னூட்டம் இடுதலை சாக்காய் வைத்து ஒருவரை ஒருவர் வாறி விட்டவர்களுக்கும் நன்றி.

தாமரை
26-01-2008, 03:44 PM
தினசரி கடலோரப் பயணத்தில்
கண்களும், மனதும் ரசிக்கும்
ஏதோ ஒன்று,
கட்டாயம் இருக்கும்....

இன்றைய அரிய மழைநாளில்
ஏனோ ஒன்றுமேயில்லை ரசிக்கும் படியாய்...

மழை விரும்பா மனிதர்கள்
கட்டிலில் கம்பளியுடன்
முடங்கி விட்டனர் போலும்...

கடலோர படகுகளையும்
காணவில்லை...

கனத்த மவுனத்துடன் இருக்கின்றன்
குழந்தைகள் இல்லாத ஊஞ்சல்கள்...

ஓலை நுனி வழி மழை சிந்தும்
குடிசைக்குள்ளும் ஒதுங்க ஆளில்லை...

எப்போதும் கத்தும் பெயர் தெரியா
அந்தப் பறவையும் இல்லையே...
இடம் பெயர்ந்து விட்டதா?

பொலிவே இல்லாத கடற்கரை...

வருகிறாயா...
நீயும், நானும்
கைகோர்த்து நடக்கலாம்...

கடற்கரை கட்டாயம் சோபிக்கும்....

முகிலும் அலையும்
முத்தங்களைப் பரிமாறிக் கொள்கையில்
நாமெதற்கு இடைஞ்சலாய்

...

யவனிகா
26-01-2008, 04:08 PM
முகிலும் அலையும்
முத்தங்களைப் பரிமாறிக் கொள்கையில்
நாமெதற்கு இடைஞ்சலாய்

...

இவ்வளவு வரிகளில் கவிதை எழுதி என்ன புண்ணியம்...
மூன்று வரிகள் எல்லா கிரடிட்சையும் தட்டிட்டுப் போயிட்டீங்க...
அருமை தாமரை...

தாமரை
26-01-2008, 04:52 PM
இவ்வளவு வரிகளில் கவிதை எழுதி என்ன புண்ணியம்...
மூன்று வரிகள் எல்லா கிரடிட்சையும் தட்டிட்டுப் போயிட்டீங்க...
அருமை தாமரை...அப்படியே ஆகட்டும்...


கிரடிட்ஸா? என்னம்மிணி.. இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே வீட்ல சமாளிச்சுகிட்டு இருக்கோம்.. இது தினப்படி வாழ்க்கை அம்மணி..

ரசத்தில் நவரசம் படிச்சேளோ அதுவும் உண்மைச் சம்பவம்தான்..

அக்னி
30-01-2008, 06:15 PM
எனக்கு இந்தக் கவிதையை வாசிக்கும் போது இறுதியாக வந்த இந்த வரிகள்,


வருகிறாயா...
நீயும், நானும்
கைகோர்த்து நடக்கலாம்...

கடற்கரை கட்டாயம் சோபிக்கும்....

வருகிறாயா
நீயும் நானும்
கைகோரித்து உறவுகளைத் தேடலாம்...

சுனாமி மீண்டும் வராது...

என்று வருமோ என்று எதிர்பார்த்தேன்.

அப்படியான ஒரு எதிர்பார்ப்பைத்தான் கவிதை எனக்குள் தோற்றுவித்தது.

உயிர்கள் என்ன
கண்ணில் பூத்த பீளையா?
தன் முகம் கழுவி
அனைத்தையும்
துடைத்து விட்டதே,
கடற்கரை...

வெறித்த கடற்கரையில்
காலடித் தடம்பார்த்தும் ரசித்த விழிகள்,
அழத் திராணியற்று, எண்ணிக்கை தவறித் தவறி,
பிணங்களை எண்ணிய காட்சிகள்,
நேரடியாக பார்க்காவிட்டாலும்,
மனதில் பேரிடியாக என்றும் எதிரொலிக்கின்றது...

அழகான ஒரு ரசிப்புக்கவிதையின் போக்கை மாற்ற நான் நினைக்கவில்லை.
உங்கள் வரிகள் எனக்குள் எழுப்பிய தோற்றமே என் வரிகள்...

இளசு
01-02-2008, 07:43 AM
யாருமில்லா ஏகாந்தத்தில் காதல் செய்வது
எல்லாப் பெண்களின் யுகாந்திரக் கனவு போல..

''அக்கம்பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்..''

'' யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறுவீடு கட்டிக்கொள்ள வேண்டும்''

இங்கே மழை வந்து அந்த யுக ஆசையை தற்காலிகமாக(வாவது) நனவாக்கிக்கொள்ள வாய்ப்பு அளிக்கும்போது -

நல்ல சொப்பனம் பலித்தால் நிச்சயம் சோபிக்காமல் என்ன?

வாழ்த்துகள் யவனிகா!