PDA

View Full Version : என்னுள் சில கேள்விகள்ஆதி
23-01-2008, 11:18 AM
கண்ணீராய்..
கானல்நீரில் விடமுயன்ற
கப்பலாய்..
மாறிப்போன் என்
வாழ்க்கைக்கு
மாற்றுயிர் உள்ளதோ ?

வழி தவறி இருந்தாலும்
வந்து சேர்ந்தது
சரியாக உன்னிடம்தானென
நம்பிப் போனவளும்
நம்ப மறுத்துவிட்டாள்..

காற்றுப் பையென்றும்
யாக்கைப் பொய்யென்றும்
கன்னி மங்கையர்
கண்ணில் விழுந்தவனும்
கணிகை மலர்களின்
கட்டிலில் தவழ்ந்தவனும்
சொல்லிப் போனதை
எள்ளி நகைத்த
என் எண்ணம் தவறென
எண்ணும் தறுவாயில்
எதுவும் செய்திட
எனக்கொரு வழியில்லை..

உதிர்ந்த மலர்
உயிர்க்கொண்டது போல்
மாண்டக் காதல்
மற்றொன்று பூத்தாலும்
ஆர்ந்த நினைவுகள்
அழிந்து போகுமா ?
அற நெஞ்சில் நிறைந்த
அவள் முகம்தான்
மற என்றால்
மறந்து போகுமா ?

இல்லை வாழ்க்கை
இல்லை நமக்கென
கல்லை மனமாய்
கற்பனை செய்தாலும்
வில்லை திருடிய
விழிகளின் புருவமும்
முள்ளை சுமந்த
மூடிய இதழ்களும்


வந்து போகும்
வருத்தமும் ஞாபகமும்
தந்துப் போகும்
தாளாத துயரும்
எந்த மொழியில்
எடுத்து இயம்புவது
அந்த மொழி
அவளுக்கு என்று விளங்குவது ?


விளங்கி அவள்
விழிப் பார்வை
என்மேல் என்று
திரும்ப்புமோ எந்தன்
திருநாள் அது
என்று என்று
எண்ணி சலித்து
கண்ணீரில் கரைத்து

துறவி என்றே
துறந்து அனைத்தையும்
தேடல் தேடலென
தேடப் போனவரை
தேடி நானும்
தொடர்ந்து போவதா ?

மாற்றம் வாழ்வென
மாற்றி என்னை
மற்றொருத்தியை
ஏற்று கொள்ள
இதயம் திறப்பதா ?


இல்லை
இல்லாமல் போன வாழ்க்கையில்
இல்லாமல் போவதா ?

-ஆதி

sarcharan
23-01-2008, 11:47 AM
மாற்றம் வாழ்வென
மாற்றி என்னை
மற்றொருத்தியை
ஏற்று கொள்ள
இதயம் திறப்பதா ?


நிச்சயமாக!!!

போதும் ஆதி காதலில் தோற்றவன் கல்நெஞ்சக்காரிக்காய் தாடி வளர்த்தது...

ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 12:25 PM
மாற்றம் வாழ்வென
மாற்றி என்னை
மற்றொருத்தியை
ஏற்று கொள்ள
இதயம் திறப்பதா ?

-ஆதி

இதயம் திறப்பதுதான் சரி.

ஆதி
23-01-2008, 02:44 PM
நிச்சயமாக!!!

போதும் ஆதி காதலில் தோற்றவன் கல்நெஞ்சக்காரிக்காய் தாடி வளர்த்தது...

பின்னூட்டத்திற்கு நன்றி சரன்..

ஷீ-நிசி
23-01-2008, 03:27 PM
பதில்கள் அற்ற கேள்விகளோ இவைகள்?

(கவிதையின் நீளம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்)

வாழ்த்துக்கள் ஆதி!

யவனிகா
23-01-2008, 04:04 PM
இல்லாமல் போவதெல்லாம் கொஞ்சம் அதிகமோ ஆதி...வெறும் கவிதையெனில் ஒத்துக்கொள்ளலாம்.

அழகான வரிகள் ஆதி. காதல் சுடுகிறது...கீழே போடவும் முடியவில்லை...கவிதை கொதிக்கிறது...மனம் வேகாமல் மிஞ்ச ஆறுதல்கள் ஆதி.

மீண்டுமொரு அழகான காதல் கவிதைக்கு பாராட்டுக்கள்...ஆதி. கவிதை தந்து சென்ற காதலிக்கு கண்டனங்களும்..

மனோஜ்
23-01-2008, 04:12 PM
காதலில் கரைந்தவருக்கு கேள்விகள் கவிதையானது அருமை
நன்றி ஆதி கவிதைக்கு

அறிஞர்
23-01-2008, 04:26 PM
வாழ்க்கைக்கு
மாற்றுயிர் உள்ளதோ ?

ஆர்ந்த நினைவுகள்
அழிந்து போகுமா ?
அற நெஞ்சில் நிறைந்த
அவள் முகம்தான்
மற என்றால்
மறந்து போகுமா ?

அந்த மொழி
அவளுக்கு என்று விளங்குவது ?
தேடி நானும்
தொடர்ந்து போவதா ?

மற்றொருத்தியை
ஏற்று கொள்ள
இதயம் திறப்பதா ?


இல்லை
இல்லாமல் போன வாழ்க்கையில்
இல்லாமல் போவதா ?

-ஆதி
காதல் விட்டு சென்ற கேள்விகள் பல...
இது தொடர்ந்தால்..
வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்...

வசீகரன்
24-01-2008, 07:47 AM
மேற்க்கோளிட்டு எதை காட்டுவது...!! கவிஞரின் வரிகளில் உயிர் தெறித்து
எழுகிறது..!
காதலுக்காக தண்ணி அடித்து தாடி வளர்த்து புலம்புவதிலெல்லாம்
எனக்கு என்றுமே உடன்பாடு கிடையாது...! இரு மணங்கள் சேர்ந்து இணக்கமுறுவதுதான் காதல்..! ஒருதலை யாக காதலித்து உருகுவதில் என்ன பயன்....!

வரிகள் உயிரில் நுழைத்து திரும்புகிறான....!

பாராட்டுக்கள்கவிஞரே..!

சிவா.ஜி
24-01-2008, 08:05 AM
ஆதியின் கேள்விகள் சரமாய் வெடித்திருக்கின்றன....சந்தமாய் அடுக்கப்பட்ட சத்தமான கேள்விகளுக்கு மொத்தமாய் பதில் சொல்ல யாராலும் முடியாது.
ஒருத்தியால் மூடிய இதயக்கதவுகள் வேறொருத்தியால் திறக்கப்படும்போது...அதுவரை உள்ளே அடைந்து கிடந்த அத்தனை கேள்விகளும் சொல்லாமல் வெளியேறும்.
நெடிய கவிதையாக இருந்தாலும் ஆங்காங்கே பல ஆச்சர்ய சங்கதிகளை வைத்து தைத்த ஆடையாக இருப்பதால்...அழகாக இருக்கிறது.

வாழ்த்துகள் ஆதி.