PDA

View Full Version : விவசாயி



ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 06:10 AM
நாட்டின் முதுகெலும்பாம் விவசாயம்
அதனால் தானோ இவர்களின்
உடம்பெல்லாம் எலும்பாய் தெரிகிறதோ

காசு இருந்தால் செய்யலாம் விவசாயம்
கடன் வாங்கி செய்ய முடியுமா? விவசாயம்

இவர்களின் கைகளில் ரேகையில்லை
கால்களிலோ எண்ணற்ற ரேகைகள்

நல்ல மரம் செடிகளை வைத்துக் காப்பாற்ற
பூச்சிகளோடும் களைகளோடும் எந்நாளும் போராட்டமே

இவர்களின் படுக்கை குடை வீடு
எல்லாமே வரப்பில் நிற்கும் மரம் தான்

சொத்தைக் காய்கறிகள் தன் வீட்டிற்கு
நல்ல காய்கறிகள் விற்பனைக்கு
அப்படியிருந்தும் கிடைத்துவிட்டா வாழ்க்கை?

இவர்களின் ஒரு வருட உழைப்பில்
கிடைக்கின்ற வருமானம்
ஒரு நாளில் கிடைக்கிறது
அதை வாங்கி விற்பவர்களுக்கு

விளை நிலங்கள் விலை நிலங்களாகின்றன
விலை நிலங்கள் விளை நிலங்களாகுமா?

எல்லோருடைய கனவும் வெளிநாட்டில்
இவர்களின் கனவு மட்டும் தோட்டத்திலே

இவர்களின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்
இவர்களின் வாரிசாவது இனி விவசாயம் செய்வார்களா?

ஓவியன்
23-01-2008, 11:14 AM
நம் குடும்ப அக்கத்தவர்கள் எல்லோரும் காலத்துக்கு காலம், வெவ்வேறு தொழில் பார்த்து வந்திருந்தாலும் அடிப்படையில் விவசாயக் குடும்பத்திலிருந்தே வந்தவர்கள். பின்னர் என் தாத்தா, என் அப்பா எல்லோரும் விவசாயத்தையும் தங்கள் வேறுபட்ட தொழிலுடன் சேர்த்தே செய்து வந்தனர். அந்தக் காலத்தில் விவசாயம் மிகுந்த இலாபகரமாக இருந்தமையால் என் தந்தையும் அப்படியே விவசாயத்தையும் தன் தொழிலுடன் இணைத்தே கவனித்து வந்தார். அந்தக் காலங்களெல்லாம் இன்றும் நம் மனதில் பொற்காலங்கள் தான், பின்னர் ஒரு காலம் வந்தது அந்த பொற்காலத்தை காலமாக்கவென....

நாட்டு நிலமை, அதிகரித்த விலைவாசிகள், போன்றவற்றாலும் விளைந்த விவசாயப் பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்ய முடியாத நிலையாலும் நம்மால் தொடர்ந்து கவனிக்க முடியவில்லை, ஆனாலும் உடனடியாக நாம் விவசாயத்தை விட்டு ஒதுங்கவில்லை. ஒரு முறை நட்டமடைந்தாலும் மறு முறை இலாபம் கிட்டு என்ற நம்பிக்கைகளுடன் மீள, மீள விவசாயத்தில் இறங்கி, எல்லா நம்பிக்கைகளும் பொய்த்து, இதுவரை விவசாயத்தால் சம்பாதித்ததை விவசாயத்திலேயே செலவு செய்து, அடிமேல் அடி வாங்கி, விரும்பியோ விரும்பாமலோ விவசாயத்திலிருந்தே ஒதுங்கி விட்டோம்...

இன்று பொருள் சுகம் எல்லாம் இருந்தாலும், அந்தக் கால சந்தோசத்தை இழந்து அவற்றை நினைவுகளாகவும் கனவுகளாகவும் மட்டுமே வாழ்க்கையில் கொண்டிருக்கும் நிலை இப்போது......

நல்லதொரு கவிதை தந்து, என் நினைவுகளையும் ஆழமாக கீறி விட்ட ஈஸ்வரனுக்கு நன்றிகள்.....

ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 11:21 AM
ஓவியன் அவர்களுக்கு மிக்க நன்றி

வசீகரன்
23-01-2008, 11:33 AM
அருமை அருமை நண்பர் ஈஸ்வரன்.... நானெல்லாம் காதல் காதல் என்று கவிதை வடித்து அழுதுகொண்டிருக்கும் போது... உழைக்கும் வர்கத்தினருக்காய் கவி வடித்திருக்கும்
உங்களை பாராட்டுகிறேன்..!


இவர்களின் ஒரு வருட உழைப்பில்
கிடைக்கின்ற வருமானம்
ஒரு நாளில் கிடைக்கிறது
அதை வாங்கி விற்பவர்களுக்கு

விளை நிலங்கள் விலை நிலங்களாகின்றன
விலை நிலங்கள் விளை நிலங்களாகுமா?

எல்லோருடைய கனவும் வெளிநாட்டில்
இவர்களின் கனவு மட்டும் தோட்டத்திலே

இவர்களின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்
இவர்களின் வாரிசாவது இனி விவசாயம் செய்வார்களா?

அவர்களின் வாரிசான நாம் இன்று காலத்தின் வேகத்திற்கேற்ப்ப மாறிவிட்டோமே
என் செய்வது...!
நல்ல ஒரு படைப்பை தந்துள்ளீர்கள் ஈஸ்வரன் வாழ்த்துக்கள்..!

ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 12:12 PM
வசீகரன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஷீ-நிசி
24-01-2008, 01:20 AM
விளை நிலங்கள் விலை நிலங்களாகின்றன
விலை நிலங்கள் விளை நிலங்களாகுமா?

மிகப்பிரமாதமான வரிகள் ஈஸ்வரன்...

இந்த இரண்டு வரிகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் வார்த்தை அலங்காரம் மற்ற பகுதிகளில் கொஞ்சம் குறைவு..

கருத்துக்கள் மிக அழகு..

ஒரு விவசாயின் வேதனை கணங்களே இக்கவிதையார்...

கணங்கள் ஒவ்வொன்றும் கணங்கள்தான்.

வாழ்த்துக்கள் ஈஸ்வரன்...

ஆர்.ஈஸ்வரன்
24-01-2008, 09:50 AM
ஷீநிசி அவர்களே நன்றி