PDA

View Full Version : விஸ்டாவிலிருந்து XP-க்கு



சிவா.ஜி
23-01-2008, 03:38 AM
என்னுடயை மடிக்கணிணியை வாங்கும்போது அதில் விஸ்டா பதியப்பட்டிருந்தது.விஸ்டாவில் பல மென்பொருள்கள் வேலை செய்யாததால்,அதை XP-க்கு மாற்றினேன்.அதற்கான மற்ற Drivers-ஐ எல்லாம் தேடிப்பிடித்து இன்ஸ்டால் செய்துவிட்டேன்.ஆனால் Infra Red Driver மட்டும் கிடைக்கவில்லை.மடிக்கணிணியுடன் வந்த வன்தட்டிலிருந்து எந்த டிரைவரையும் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை.அது Recovery CD மட்டும் தான்.

தயவுசெய்து யாராவது அந்த டிரைவெர் மென்பொருளைக் கொடுக்கமுடியுமா?

மடிக்கணிணி விவரம்
Toshiba Satellite
A-100-785

இதயம்
23-01-2008, 03:46 AM
என்ன சிவா.. கையில இணையத்தை வச்சிக்கிட்டு இப்படி ஒரு கேள்வி..?! உங்களுக்கு தான் இணையத்துல நல்லா உழத்தெரியும்னு சொல்லியிருக்கீங்களே.. அப்புறமென்ன..?!! இப்ப தெரியுதா..? கையில் காசிருந்தா மட்டும் பத்தாது.. பயணம் எப்படி போகணும்னும் தெரிஞ்சிருக்கணும்..!!:D:D

சரி..சரி.. அழாதீங்க..! நேரம் கிடைச்சா நானே தேடி எடுத்து தாரேன்..!! கண்ணை தொடச்சிக்கங்க..!!:icon_rollout::icon_rollout:

சிவா.ஜி
23-01-2008, 04:03 AM
அதெல்லாம் உழுது பாத்தாச்சி.சரியான மென்பொருள் கிடைக்கவில்லை.அதனால்தான் கணிணி வித்தகர்களின் உதவி கேட்டேன்.
உங்களுக்கு கிடைத்தாலும் நல்லதே.

praveen
23-01-2008, 04:11 AM
இதில் ஒன்று உதவும் என்று நினைக்கிறேன். அது ப்ளூடூத்துடன் கூடிய மாடல் என்றால், ப்ளூ டூத் சாப்ட்வேர் பதிந்து அதில் ஆப்சன் ஏதாவது உள்ளதா என்று பாருங்கள்.

http://cdgenp01.csd.toshiba.com/content/support/downloads/p2kfirxp.exe

http://cdgenp01.csd.toshiba.com/content/support/downloads/s195firx.exe

http://cdgenp01.csd.toshiba.com/content/support/downloads/sa60firx.exe

http://cdgenp01.csd.toshiba.com/content/support/downloads/ta4firx.exe

மேலே உள்ளவற்றை கீழே கண்ட லிங்கில் சென்று தான் எடுத்தேன்.
http://askiris.toshiba.com/ToshibaSupportSite/searchEntry.do (இதில் infrared என்று கொடுத்து தேடவும்)

செல்வா
23-01-2008, 05:11 AM
சிவா அண்ணா ஏன் கவலைபடுறீங்க toshiba தளத்திலேயே... எல்ல driverகளும் கிடைக்கும். கொஞ்சம் பொறுங்க சுட்டி தேடிக் கொடுக்கிறன்.

சிவா.ஜி
23-01-2008, 06:01 AM
மிக்க நன்றி பிரவீன்.பதிவிறக்கம் செய்துகொண்டேன்.மாலை வீட்டுக்குப் போய் இன்ஸ்டால் செய்து பார்க்கிறேன்.உங்களின் உடனடி உதவிக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
23-01-2008, 06:03 AM
ஆமா செல்வா தோஷிபா தளத்திலிருந்துதான் மற்ர டிரைவர்களை எடுத்தேன்.ஆனால் இது மட்டும் கிடைக்கவில்லை.தற்போது பிரவீன் கொடுத்திருக்கும் மென்பொருள்களில் ஏதாவது ஒன்று உபயோகப்படுமென்று நினைக்கிறேன்.பார்க்கலாம்.நன்றி செல்வா.

உதயா
23-01-2008, 12:25 PM
நான் கேட்ட சந்தேகத்திற்கு சரியான பதில் தறல.. பின்ன நான் எப்படி உங்களுக்கு பதில் கொடுப்பதாம்?

( உண்மையாளுமே எனக்கு இதுக்கு பதில் இல்லைகண்ணா )

அன்புரசிகன்
23-01-2008, 12:37 PM
நான் கேட்ட சந்தேகத்திற்கு சரியான பதில் தறல.. பின்ன நான் எப்படி உங்களுக்கு பதில் கொடுப்பதாம்?

( உண்மையாளுமே எனக்கு இதுக்கு பதில் இல்லைகண்ணா )

ஆமா... நீங்க என்ன கேட்டீங்க? எது சரிவரல?

உதயா
24-01-2008, 05:47 AM
ஆமா... நீங்க என்ன கேட்டீங்க? எது சரிவரல?
இங்கே தான்.. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13948&page=2

தாங்களும் விளக்கம் தந்திருக்கிறீர்கள், ஆனால் கதைக்கு ஆகாதே!