PDA

View Full Version : மீடியாபிளேயரில் டிவிடி ப்ளே ஆக

praveen
23-01-2008, 03:02 AM
விண்டோஸ் மீடியா பிளேயரில் டிவிடி ஏன் ப்ளே ஆக மாட்டேங்கிறது?.

உண்மையில் இந்த எம்பெக்2 டிகோடர் காப்பிரைட் பிரச்சினையால், விண்டோஸ் எக்ஸ்பியுடன் வரும் மீடியாபிளேயரில் இந்த வசதி கிடையாது. பின்னர் வெளியிட்ட மீடியா சென்டர் பதிப்பில் இந்த வசதி அவசியம் என்பதால் இதனை மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. இது தேவைப்படுவோர் தனியே தான் பதிவிறக்கி கொள்ள வேண்டும். உங்கள் மீடியா பிளேயர் 9 ஆக இருந்தால் 10க்கு மாற்றி கொள்வது நலம்.

மீடியாபிளேயர் 10 பதிவிறக்கி கொள்ள
நேரடி பதிவிறக்க சுட்டி

http://download.microsoft.com/download/1/2/A/12A31F29-2FA9-4F50-B95D-E45EF7013F87/MP10Setup.exe

பின்னர் இந்த டிவிடி கோடக் பதிவிறக்க
நேரடி பதிவிறக்க சுட்டி

http://download.microsoft.com/download/9/b/2/9b276571-80d5-43ca-806f-d68fca4b4e89/DECCHECKSetup.EXE

அன்புரசிகன்
23-01-2008, 03:10 AM
ஒரு சந்தேகம். கணினியில் சேமித்துள்ள DVD ஒளிப்படங்களை தகுந்த முறையில் powerdvd ல் பார்க்க வைப்பதுபோல் முடியுமா? நேரடியாக டீவீடீ தட்டில் இருந்து மீடியாப்ளேயரில் பார்க்க கூடியதாக உள்ளது. ஆனால் நம் வன்தட்டில் உள்ளவற்றை ஒவ்வொரு கோப்பாகத்தானே பார்க்க முடிகிறது. அதனால் அந்த chapter பிரச்சனையால் சரியாக பார்க்க முடிவதில்லை..... முடியுமா?

praveen
23-01-2008, 03:27 AM

நீங்கள் வண்தட்டில் சேமித்த VIDEO_TS என்ற போல்டரில் உள்ள VIDEO_TS.IFO என்ற பைலை திறந்து பாருங்கள். சரியாக வரும்.

sujan1234
17-12-2008, 03:58 PM
என்னால் இதை செய்ய முடியவில்லை

"பொத்தனூர்"பிரபு
28-12-2008, 05:06 PM
நன்றி