PDA

View Full Version : நீ!

ஷீ-நிசி
22-01-2008, 01:48 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Nee2.jpg

நீ!
எதிலும் தோல்வியடைவதில்
துளியும் விருப்பமில்லை எனக்கு!

நீ!
என்னை மறக்க முயற்சிக்கும்
எல்லா வழிகளிலும்
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

நீ!
மறந்தபின்,
மறக்காமல் சொல்லிக்கொடு!

எப்படியெல்லாம் முயற்சித்தாய்?

நீ!
என்னை மறந்திட......

பூமகள்
22-01-2008, 01:51 PM
மறக்கும் உத்திகள்
கைவசமானால்
மகிழ்ச்சிக்கு ஏது
பஞ்சம் இங்கு....???

அழகான கவிதை... படத்தில் எழுத்துகள் ஏற்ற முகம் காண்பது அழகு கூட்டுகிறது...!!

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஷீ..!

ஷீ-நிசி
22-01-2008, 01:52 PM
நன்றி பூமகள்!

அறிஞர்
22-01-2008, 02:39 PM
மறந்ததை சொல்லிக்கொடுக்க சொல்லியுள்ளீர்...

அதைப் போல் நீரும் மறக்க முயற்சிக்கவா...

அருமை ஷீ-நிசி..

ஷீ-நிசி
22-01-2008, 03:15 PM
நன்றி அறிஞரே!

பாயின்ட்ட புடிச்சிட்டீங்க...

யவனிகா
22-01-2008, 03:38 PM
சில நேரங்களில் மனம் சொல்ல வந்ததை, எப்படி வார்த்தையில் வடிக்க வேண்டும் என்று தெரியாமல் திணறும். பத்தி பத்தியாய் எழுதினாலும் கிடைக்காத பொருள்..பத்தே வரியில் பசுமரத்தாணியாய் பதியும்.
எல்லாருக்குமான கவிதை இது.மறுக்க முடியாத வார்த்தைகளும்,வலியும்.
வெறும் வாழ்த்துக்கள் மட்டும் போதாது இந்தக் கவிதைக்கு....நன்றியும்.

ஷீ-நிசி
22-01-2008, 03:42 PM
நன்றிகள் பல யவனிகா....

நீங்கள் சொல்வது போல, திணறிய பின்னரே பிறந்தது இக்கவிதையின் வரிகள்...

செல்வா
22-01-2008, 03:52 PM
உங்களுக்குச் சொன்னதும் சொன்னத மறக்காம எனக்கும் ஒரு தனிமடல் அனுப்பிடுங்க ஷீ... அருமையான எளிமையான கவிதை. வாழ்த்துக்கள் மறந்து தொலைப்பதற்கு.

அக்னி
22-01-2008, 10:40 PM
என்னை மறந்தபின்
என்னை மறந்ததை
எப்படி என்னுடன்
பகிர்ந்து கொள்வாய்?

மறுஜென்மத்திலா..?

இறந்துவிடுவேன் என்று நினைக்கின்றாயா..?
இல்லையில்லை. கொன்றுவிடுவேன்...

சில வரிகளுக்குள், ஒரு வேதனையான மனதின் கதறல் அழுத்தமாக...
பாராட்டுக்கள் ஷீ-நிசி அவர்களே...

சாம்பவி
22-01-2008, 11:19 PM
இறந்துவிடுவேன் என்று நினைக்கின்றாயா..?
இல்லையில்லை. கொன்றுவிடுவேன்...

ஆ இதென்ன.... !!!!!!

கொலையும்
செய்வான் காதலன்... ??

அக்னி
22-01-2008, 11:27 PM
ஆ இதென்ன.... !!!!!!

கொலையும்
செய்வான் காதலன்... ??
செய்ய வேண்டும். காதலன் மட்டுமல்ல, காதலுயும் கூடத்தான்.
வேறொருவர் வாழ்விலும் தொடரப்படக்கூடாது அல்லவா..?
ஏமாற்றங்கள் பலர் வாழ்வை முடிப்பதைவிட, ஏமாற்றப்படுபவர் வாழ்வு முடிக்கப்படுவது மற்றோரைக் காக்குமல்லவா?

ஷீ-நிசி
23-01-2008, 12:44 AM
உங்களுக்குச் சொன்னதும் சொன்னத மறக்காம எனக்கும் ஒரு தனிமடல் அனுப்பிடுங்க ஷீ... அருமையான எளிமையான கவிதை. வாழ்த்துக்கள் மறந்து தொலைப்பதற்கு.

நன்றி செல்வா.. சத்தியமாக எனக்கு அப்படி ஒன்று நடந்தால் நிச்சயம் உங்களுக்கு தனிமடலிடுகிறேன்.. :)

(இணையத்தில் தற்செயலாக இந்தப் புகைப்படம் கிடைத்தது. பார்த்தவுடவே கவிதை எழுத தூண்டியது.)

ஷீ-நிசி
23-01-2008, 12:45 AM
நன்றி அக்னி, நன்றி சாம்பவி

சிவா.ஜி
23-01-2008, 03:26 AM
எனக்கு படம் தெரியவில்லை ஷீ. அதன் கீழேயே கவிதையை தனியே கொடுக்கமுடியுமா....?

இதயம்
23-01-2008, 03:38 AM
எனக்கு படம் தெரியவில்லை ஷீ. அதன் கீழேயே கவிதையை தனியே கொடுக்கமுடியுமா....?
கீழே உள்ள சுட்டியை சுட்டுங்க. படம் தெரியும். தெரியாட்டி பணம் வாபஸெல்லாம் கிடையாது..!! :D:D ஷீயோட பதிவை கோட் பண்ணினா அதோட லிங்க் கிடைக்கும். அதை எடுத்து பாருங்க..!!
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/Nee1.jpg

திவ்யா
23-01-2008, 03:42 AM
மிக அருமையான கவிதை ஷீ.

சுகந்தப்ரீதன்
23-01-2008, 03:58 AM
மறந்த பின் எப்படி சொல்லி கொடுப்பது..மறக்காமல்..? சரியான பின்னல் கவிதை கவிஞரே...! அசத்துது போங்க.. வாழ்த்துக்கள்..!

சிவா.ஜி
23-01-2008, 03:59 AM
நன்றி இதயம் கோட் செய்தால் ரிப்ளை பாக்ஸில் படம் தெரிகிறது.பார்த்தேன்...படித்தேன்.

வித்தியாசமான காதல்.காதலி தன்னை மறக்க விரும்புவதையும் ஏற்றுக்கொண்டு வாழ்த்து சொல்லும் காதலன்.காதல் அதிகமாகிவிட்டால் இப்படியெல்லாம் செய்வாங்களோ?
வாழ்த்துகள் ஷீ-நிசி.

இதயம்
23-01-2008, 05:42 AM
நீ
எதிலும் தோல்வியடைவதில்
துளியும் விருப்பமில்லை எனக்கு..!

நீ
என்னை மறக்க முயற்சிக்கும்
எல்லா வழிகளிலும்
வெற்றிபெற வாழ்த்துக்கள்..!

நீ
மறந்த பின்
மறக்காமல் சொல்லிக்கொடு

எப்படியெல்லாம் முயற்சித்தாய்..?

நீ
என்னை மறந்திட....

ஷீ-நிசி
நட்போ, காதலோ எதுவாக இருந்தாலும் மறத்தல் என்ற நிகழ்வை வைத்தே அதன் ஆழத்தை, தன்மையை கணித்துவிடமுடியும்..! உண்மையான, ஆழ்ந்த நேசத்தில் மறத்தல் என்பது அத்தனை சாத்தியப்படுவதில்லை. நட்பு அல்லது காதலுக்குரியவர்களின் நலனை மனதில் கொண்டே பல நேரங்களில் மறத்தலென்பது சம்பந்தப்பட்டவர்களின் விருப்பமில்லாமலேயே அவசியப்பட்டுவிடுகிறது. ஆனாலும், அது பெரும்பாலும் எப்போதும், எல்லோருக்கும் கைவரப்பெறுவதில்லை. காரணம், இந்த நட்பு, காதல் என்ற இரு உணர்வுகளுமே எதை செய்யக்கூடாது என்று எண்ணுகிறோமோ அதை செய்யத்தூண்டுவதில் வல்லவை..! எனவே, உண்மையான உறவுகளில் மறத்தல் என்ற வார்த்தை வெறும் அந்த தோற்றத்தை மட்டுமே வெளியே காண்பிக்க பயன்படுத்தப்படுகிறதே தவிர உண்மையில் அச்செயல் நிகழ்வதே இல்லை. அதுமட்டுமல்லாமல், அது தொடர்பான உணர்வுகள் உள்ளத்துள் உறங்கும் எரிமலையாய் கனன்று கொண்டிருக்கும்..! அப்படிப்பட்ட ஒரு உன்னத உறவு கொண்டவரின் கருத்தாகத்தான் இந்த கவிதை எனக்கு தோன்றுகிறது. யார் கண்டார்கள், இதே கேள்வியை அவரின் எதிர்த்தரப்பிலும் இருக்கக்கூடும்..!! இல்லாவிடில் மறக்கும் வழியை இவருக்கு மறைக்காமல் சொல்வதே இருவருக்கும் நல்லது..!!

உள்ளார்ந்த உணர்வை வெளிக்கொணரச்செய்யும் கருத்தை உள்ளடக்கிய உணர்ச்சிகுவியலான கவிதைக்கு என் பாராட்டுக்கள் ஷீ-நிசி..!!

ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 05:48 AM
உண்மையான காதல் (கவிதை)

ஓவியன்
23-01-2008, 11:21 AM
மறக்க நினைப்பதை மறக்கவும்
நினைக்க நினைப்பவற்றை
மறக்காதிருக்கவும் ஒரு வரம் தா
ஆண்டவா
எனக்கும் ஷீக்கும்......!! :)

அன்பு ஷீ..!!

உங்கள் கவிதைகளில் பலவற்றை அண்மைக் காலத்தில் வாசிக்க என்னால் முடியவில்லை ஷீ..!!

அதற்கு என் மன்னிப்புக்களும் இந்த அழகுக் கவிதைக்கு என் வாழ்த்துகளும்...!!!

ஷீ-நிசி
23-01-2008, 01:25 PM
எனக்கு படம் தெரியவில்லை ஷீ. அதன் கீழேயே கவிதையை தனியே கொடுக்கமுடியுமா....?

கவிதை தனியே கொடுத்துள்ளேன்.

நன்றி இதயம் கோட் செய்தால் ரிப்ளை பாக்ஸில் படம் தெரிகிறது.பார்த்தேன்...படித்தேன்.

வித்தியாசமான காதல்.காதலி தன்னை மறக்க விரும்புவதையும் ஏற்றுக்கொண்டு வாழ்த்து சொல்லும் காதலன்.காதல் அதிகமாகிவிட்டால் இப்படியெல்லாம் செய்வாங்களோ?
வாழ்த்துகள் ஷீ-நிசி.

எவ்வளவோ செய்றாங்க... இத செய்யமாட்டாங்களா..

நாங்களும் அழகிய தமிழ் மகன் மாதிரி பேசுவோம்ல...:lachen001:

ஷீ-நிசி
23-01-2008, 01:26 PM
மிக அருமையான கவிதை ஷீ.

நன்றி திவ்யா

ஷீ-நிசி
23-01-2008, 01:28 PM
மறந்த பின் எப்படி சொல்லி கொடுப்பது..மறக்காமல்..? சரியான பின்னல் கவிதை கவிஞரே...! அசத்துது போங்க.. வாழ்த்துக்கள்..!

நன்றி ப்ரீதன்...

"பின்னல் கவிதை" சற்றே வித்தியாசமான வார்த்தை.. ;)

ஷீ-நிசி
23-01-2008, 01:29 PM
நட்போ, காதலோ எதுவாக இருந்தாலும் மறத்தல் என்ற நிகழ்வை வைத்தே அதன் ஆழத்தை, தன்மையை கணித்துவிடமுடியும்..! உண்மையான, ஆழ்ந்த நேசத்தில் மறத்தல் என்பது அத்தனை சாத்தியப்படுவதில்லை. நட்பு அல்லது காதலுக்குரியவர்களின் நலனை மனதில் கொண்டே பல நேரங்களில் மறத்தலென்பது சம்பந்தப்பட்டவர்களின் விருப்பமில்லாமலேயே அவசியப்பட்டுவிடுகிறது. ஆனாலும், அது பெரும்பாலும் எப்போதும், எல்லோருக்கும் கைவரப்பெறுவதில்லை. காரணம், இந்த நட்பு, காதல் என்ற இரு உணர்வுகளுமே எதை செய்யக்கூடாது என்று எண்ணுகிறோமோ அதை செய்யத்தூண்டுவதில் வல்லவை..! எனவே, உண்மையான உறவுகளில் மறத்தல் என்ற வார்த்தை வெறும் அந்த தோற்றத்தை மட்டுமே வெளியே காண்பிக்க பயன்படுத்தப்படுகிறதே தவிர உண்மையில் அச்செயல் நிகழ்வதே இல்லை. அதுமட்டுமல்லாமல், அது தொடர்பான உணர்வுகள் உள்ளத்துள் உறங்கும் எரிமலையாய் கனன்று கொண்டிருக்கும்..! அப்படிப்பட்ட ஒரு உன்னத உறவு கொண்டவரின் கருத்தாகத்தான் இந்த கவிதை எனக்கு தோன்றுகிறது. யார் கண்டார்கள், இதே கேள்வியை அவரின் எதிர்த்தரப்பிலும் இருக்கக்கூடும்..!! இல்லாவிடில் மறக்கும் வழியை இவருக்கு மறைக்காமல் சொல்வதே இருவருக்கும் நல்லது..!!

உள்ளார்ந்த உணர்வை வெளிக்கொணரச்செய்யும் கருத்தை உள்ளடக்கிய உணர்ச்சிகுவியலான கவிதைக்கு என் பாராட்டுக்கள் ஷீ-நிசி..!!

மிக சிறப்பான அலசல்... நன்றி இதயம்!

ஷீ-நிசி
23-01-2008, 01:30 PM
உண்மையான காதல் (கவிதை)

நன்றி ஈஸ்வரன்...

ஷீ-நிசி
23-01-2008, 01:36 PM
மறக்க நினைப்பதை மறக்கவும்
நினைக்க நினைப்பவற்றை
மறக்காதிருக்கவும் ஒரு வரம் தா
ஆண்டவா
எனக்கும் ஷீக்கும்......!! :)

அன்பு ஷீ..!!

உங்கள் கவிதைகளில் பலவற்றை அண்மைக் காலத்தில் வாசிக்க என்னால் முடியவில்லை ஷீ..!!

அதற்கு என் மன்னிப்புக்களும் இந்த அழகுக் கவிதைக்கு என் வாழ்த்துகளும்...!!!

நன்றி ஓவியன்!

நினைத்ததுண்டு. என்ன ஓவியனின் பின்னூட்டங்கள் காண இயலுவதில்லையே என்று.

வாழ்த்தினை மட்டும் ஏற்றுக்கொள்ளுகிறேன் :)

அக்னி
24-01-2008, 12:52 AM
அதற்கு என் மன்னிப்புக்களும் இந்த அழகுக் கவிதைக்கு என் வாழ்த்துகளும்...!!!வாழ்த்தினை மட்டும் ஏற்றுக்கொள்ளுகிறேன் :)
ஓவியரே, உங்களது மன்னிப்புக் கோரல் எல்லாம் சரிப்பட்டு வராது என்று ஷீ-நிசி சொல்லாமற் சொல்கின்றார்.

ஷீ-நிசி
24-01-2008, 01:08 AM
ஓவியரே, உங்களது மன்னிப்புக் கோரல் எல்லாம் சரிப்பட்டு வராது என்று ஷீ-நிசி சொல்லாமற் சொல்கின்றார்.

ஆஹா! எப்போலருந்து நீர் நாரதர் ஆனீர்.... :)

வசீகரன்
24-01-2008, 06:57 AM
மெல்ல உள் நுழைந்து கண்களை வரிகளில் நிலை நிறுத்த வைக்கிற கவிதை
அளவு சின்னதாக இருக்கிறது என்று பார்த்தால்.... வியக்க வைக்கிற ஆழம்...!

கவிஞர் நிஷி அங்கே நிற்கிறார்..!

ஆற்றல்..!

ஷீ-நிசி
24-01-2008, 12:37 PM
நன்றி வசீகரன்!

பிச்சி
24-01-2008, 02:05 PM
என்ன அண்ணா? ஒரே தத்துவ மழையா பொழியறீங்க?
கவிதை சிம்பிலா இருந்தாலும் சூப்பரா இருக்குது
(சுகமா?)

அன்பு
பிச்சி

ஷீ-நிசி
24-01-2008, 02:33 PM
நன்றி பிச்சி...

(அப்பப்ப வந்து எட்டிப்பார்த்துட்டு ஓடிடறியே பிச்சி!?)

பிச்சி
24-01-2008, 02:43 PM
நன்றி பிச்சி...

(அப்பப்ப வந்து எட்டிப்பார்த்துட்டு ஓடிடறியே பிச்சி!?)

இன்னும் ஒரு மாதத்தில் ப்ளேஸ்மென்ட் அப்பறம் டெய்லியும் மன்றத்தில தான் :) :)

ஷீ-நிசி
25-01-2008, 12:44 PM
இன்னும் ஒரு மாதத்தில் ப்ளேஸ்மென்ட் அப்பறம் டெய்லியும் மன்றத்தில தான் :) :)

வாழ்த்துக்கள் பிச்சி!

வாசகி
25-01-2008, 12:48 PM
ஓ..
ஜெயிக்கவைத்து ஜெயிக்கும்
வித்தகம் இதுதானோ?

வழுக்கி செல்ல உனக்கு
நாந்தான் "கிடை"த்தேனோ?..
பாதகா.!(எனில் மன்னிக்க)

ஷீ-நிசி
25-01-2008, 12:52 PM
கருத்திற்கு நன்றி உதயநிலா..

இளசு
26-01-2008, 08:44 PM
ஷீ முத்திரை நச்சென..
நெஞ்சில் ஒட்டியது பச்சென..

மறக்க முயல்வதிலும் அவள் வெற்றி காண விரும்பும் அவன்..
அப்படி வென்றால் அதைத் தனக்கும் சொல்லிக் கரையேற்ற விண்ணப்பிக்கும் விநோதன்...

அன்பெனும் பள்ளத்துக்குள்ளிருந்து
அவள் வெளியேறுவாளா?
இந்த விண்ணப்பம் கண்டு
அவன் பண்பட்ட உள்ளத்துக்குள்ளேயே
மூழ்கிக் கலந்துவிடுவாளா?

விடை தேடவைக்கும் சுகவேதனை விடுகதைக் கவிதை!

வாழ்த்துகள் ஷீ!

ஷீ-நிசி
29-01-2008, 03:54 PM
கரும்பினை சக்கையாய் பிழிந்தால் கரும்புச்சாறு!
கவிதையை சக்கையாய் பிழிந்தால் இளசுவின் விமர்சனம்..

ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கிறீர்கள்..

நன்றி இளசு அவர்களே!

பென்ஸ்
29-01-2008, 03:57 PM
ஆ இதென்ன.... !!!!!!

கொலையும்
செய்வான் காதலன்... ??

எங்கோ வாசித்தது...:rolleyes:
"கத்திகள் தூங்குவதால்தான்
தாடிகள் அதிகமாகிவிட்டது..."

கத்தி எடுக்க வேண்டியதுதான் தாடியை வளிக்கவேண்டுமென்றால்...;);):icon_b:

பென்ஸ்
29-01-2008, 04:01 PM
ஷீ...

வித்தியாசமான கவிதை
வித்தியாசமான சிந்தனை
வித்தியாசமான கட்டமைப்பு..

நன்றாக வந்திருக்கிறது...

செருப்பால் அடித்திருந்தால் கூட வலித்திருக்காது,
ஆனால் இந்த வகை வார்த்தை அடிகள்...
எதிராளி சாய்ஞ்சிருக்கனுமே...

ஷீ-நிசி
29-01-2008, 04:06 PM
நீண்............ட நாளுக்குப்பின் பென்ஸ் விமர்சனம்...

எதிராளி சாய்ஞ்சிருக்கனுமே.....

காதலன் மார்பில் தானே... :)

நன்றி பென்ஸ்

பென்ஸ்
29-01-2008, 04:15 PM
நீண்............ட நாளுக்குப்பின் பென்ஸ் விமர்சனம்...

காதலன் மார்பில் தானே... :)

நன்றி பென்ஸ்

உங்களை போன்ற நல்ல கவிஞர்களின் கவிதைகளை வாசித்து மட்டும் ஒளித்து சென்று விடுவதற்க்கு மன்னிக்க...

பணி, தனிபட்ட வாழ்வில் வரும் அவசர வேலைகள் சில நேரம் ரசனையை கூட கொன்று விடுகிறது.

இன்னும் சில காலம் நீ.......ண்ட இடைவேளி உண்டு நண்பா...

ஷீ-நிசி
30-01-2008, 12:32 AM
உங்களை போன்ற நல்ல கவிஞர்களின் கவிதைகளை வாசித்து மட்டும் ஒளித்து சென்று விடுவதற்க்கு மன்னிக்க...

பணி, தனிபட்ட வாழ்வில் வரும் அவசர வேலைகள் சில நேரம் ரசனையை கூட கொன்று விடுகிறது.

இன்னும் சில காலம் நீ.......ண்ட இடைவேளி உண்டு நண்பா...

உங்களின் பணிப்பளுக்கள் விரைவில் குறைந்து முன்பு போல் மன்றத்தை வலம் வரும் நாளை எதிர்பார்க்கிறேன். நன்றி பென்ஸ்!:icon_b: