PDA

View Full Version : குறைபாடு

சுகந்தப்ரீதன்
22-01-2008, 12:06 PM
ஒரு பொருள்
இரு தோற்றம்
குறைபாடு....
பார்ப்பவனிடமா...?
படைத்தவனிடமா..?!

இதயம்
22-01-2008, 12:09 PM
அட... அதுக்குள்ளே ஒரு கவிதையா..? இந்த கவிதைக்கான கரு எங்கிருந்து கிடைச்சதுன்னு எனக்குத்தானே தெரியும்..??:D:D

ஒண்ணும் சொல்ல முடியலைப்பா.. உடனே அது வேற இடத்துல கவிதையாகிடுது..! என்ன கொடுமை சுகந்தா..?!:icon_rollout:

ஆனா, இந்த கேள்வி என் மனதிலும் உண்டு..!! தொடரட்டும் தொண்டு..!!:icon_rollout::icon_rollout:

aren
22-01-2008, 12:14 PM
அழகான பெண் நடந்துவருகிறாள்
பார்க்கும் சிலர் கையெடுத்து கும்பிடுகிறார்கள்
பார்க்கும் சிலர் கையால் தொட நினைக்கிறார்கள்
இது பார்ப்பவர்களின் தவறா அல்லது படைத்தவரின் தவறா!!!

கவிதை சிறிதாக இருந்தாலும் நெச் என்றிருந்தது. பாராட்டுக்கள்.

சுகந்தப்ரீதன்
22-01-2008, 12:16 PM
விடாகொண்டன் ஐயா இதயம் அண்ணா அவர்களே..! இது இன்ஸ்டண்ட் கவிதையல்ல.. இதுபோல் நான் நிறைய கிறுக்கி இங்கே பதியாமல் விட்டிருக்கிறேன் இதுவரை..!

இப்போது அவசியம் ஏற்பட்டதால் இதை இங்கே பதிந்தேன்..! ஆனாலும் சூழ்நிலையை தனக்கு சதகமாக பயன்படுத்துவதில் நீங்கள் சரியான ஆளுப்பா..! இனி எச்சரிக்கையா இருக்கனும் போலிருக்கே..அண்ணனுங்களிடம்..?!

சுகந்தப்ரீதன்
22-01-2008, 12:17 PM
கவிதை சிறிதாக இருந்தாலும் நெச் என்றிருந்தது. பாராட்டுக்கள்.
மிக்க நன்றி அரேன் அண்ணா..!

aren
22-01-2008, 12:20 PM
இப்போது அவசியம் ஏற்பட்டதால் இதை இங்கே பதிந்தேன்..! ஆனாலும் சூழ்நிலையை தனக்கு சதகமாக பயன்படுத்துவதில் நீங்கள் சரியான ஆளுப்பா..! இனி எச்சரிக்கையா இருக்கனும் போலிருக்கே..அண்ணனுங்களிடம்..?!

நீங்க என்ன சொல்றீங்க சுகந்தன்.

இதயம் அவர்கள் இடத்தைக் கொடுத்தால் மடத்தையே எடுத்துக்கொள்ளும் பேர்வழி என்கிறீர்களா?

சிண்டுமுடிந்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும்
ஆரென்

சிவா.ஜி
22-01-2008, 12:20 PM
பொருளுக்கு என்றுமே ஒரே தோற்றம்தான்.பொருளின் பொருள் சொல்லலில்தான் பார்த்தவனின்,படைத்தவனின் பார்வை வேறுபாடு இருக்கிறது.

நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்.

இதயம்
22-01-2008, 12:30 PM
பொருளுக்கு என்றுமே ஒரே தோற்றம்தான்.பொருளின் பொருள் சொல்லலில்தான் பார்த்தவனின்,படைத்தவனின் பார்வை வேறுபாடு இருக்கிறது.

நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்.

பார்வை இருவகையிலும் வேறுபடும் சிவா...!

உதாரணத்திற்கு.. ஆஞ்சநேயர் சிலையை காட்டி என்னிடம் கேட்டால் ஆஞ்சநேயர் என்பேன். என் குழந்தையிடம் காட்டி கேட்டால் குரங்கு எனச்சொல்லும். இது பார்ப்பவனின் பிழை..!

அதே ஆஞ்சநேயர் சிலை அதற்கான இலக்கணங்களை இழந்து இருந்தால் (படைப்பாளி அப்படி வடித்திருந்தால்) நானும் அதை குரங்கு என்று தான் சொல்வேன். இது படைப்பாளியின் பிழை..!!

ஷீ-நிசி
22-01-2008, 12:48 PM
ஒரு பொருள்
இரு தோற்றம்
குறைபாடு....
பார்ப்பவனிடமா...?
படைத்தவனிடமா..?!

இது ஏன் குறைபாடு என்று எண்ணியது
உங்கள் மனம்....?

கவிதை சிந்தனையை தூண்டுகிறது ப்ரீதன்...

இதயம்
22-01-2008, 12:57 PM
இது ஏன் குறைபாடு என்று எண்ணியது
உங்கள் மனம்....?
.

ஒரு படைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே..! 1. படைப்பாளி. 2. பார்ப்பவன்.

படைப்பாளி நினைத்தபடி படைப்பானது பார்ப்பவனின் பார்வையில் தெரியாததும், பார்ப்பவனின் பார்வைக்கு சரியாய் தெரியும் படி படைப்பாளி சரியாய் படைக்காததும் குறை தானே ஷீ-நிசி...??!!

சுகந்தப்ரீதன்
22-01-2008, 01:00 PM
சிண்டுமுடிந்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும்
ஆரென்

ஏற்கனவே நாங்க முடியை புடிச்சி முட்டிக்கிட்டுதான் இருக்கோம்.. அப்படியே நீங்க முடிஞ்சுட்டு போனா புண்ணியமா போகும் உங்களுக்கு..?!:sprachlos020:

நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்.
மிக்க நன்றி சிவா அண்ணா...!

இது ஏன் குறைபாடு என்று எண்ணியது
உங்கள் மனம்....?
கவிதை சிந்தனையை தூண்டுகிறது ப்ரீதன்...
மிக்க நன்றி நண்பரே...!

அன்றாடம் கண்ணில படும் காட்சிகளும் வாழ்க்கை அனுபவங்களும்தான் கவிஞரே இதுபோன்ற எண்ணங்கள் மனதில் தோன்ற காரணமாகிறது...!

ஷீ-நிசி
22-01-2008, 01:13 PM
ஒரு படைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே..! 1. படைப்பாளி. 2. பார்ப்பவன்.

படைப்பாளி நினைத்தபடி படைப்பானது பார்ப்பவனின் பார்வையில் தெரியாததும், பார்ப்பவனின் பார்வைக்கு சரியாய் தெரியும் படி படைப்பாளி சரியாய் படைக்காததும் குறை தானே ஷீ-நிசி...??!!

ஒரு படைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் இருவர் மட்டுமே..! 1. படைப்பாளி. 2. பார்ப்பவன்.

சின்ன திருத்தம்

1. படைப்பாளி. 2. பார்ப்பவர்கள்.

ஒரு படைப்பு எல்லோருக்குமே சரியாய் இருப்பதாய் தெரிந்தால்,
அந்த படைப்பில் குறையில்லை

ஒரு படைப்பு எல்லோருக்குமே தவறாய் இருப்பதாய் தெரிந்தால்,
அந்த படைப்பில் நிறையில்லை...

ஒரு படைப்பு ஒருவனுக்கு சரியாயும், மற்றவனுக்கு தவறாயும் தெரிந்தால் அந்த படைப்பு எந்த வகை?

அதனால்தான் கேட்டேன், இது ஏன் குறைபாடு என்று எண்ணியது உங்கள் மனமென்று?

சுகந்தப்ரீதன்
23-01-2008, 03:44 AM
ஒரு படைப்பு ஒருவனுக்கு சரியாயும், மற்றவனுக்கு தவறாயும் தெரிந்தால் அந்த படைப்பு எந்த வகை?
?
நண்பரே... இதே கேள்வியைதான் நானும் கேட்கிறேன்...!

நான் ஒரு படைப்பு..! சிலர் என்னை நல்லவன் என்கின்றனர் சிலர் கெட்டவன் என்கின்றனர்.. ஆனால் நான் ஒரு பொருள்தான் நான் நான்தான் அதில் எந்த மாற்றமுமில்லை..! ஆனால் இருவேறு தோற்றம்..!

அப்படியானால் குறைபாடு என்னை பார்ப்பவனிடமா என்னை படைத்தவனிடமா..? இந்த குழப்பத்தில் உதித்ததுதான் இந்த கவிதை..! இது கவிதை படைப்புக்கும் பொருந்தும் என்று தோன்றவே இதை இங்கே தந்தேன்..!

சிவா.ஜி
23-01-2008, 03:54 AM
அருமையான சிந்தனை சுபி.ஷீ-நிசியின் பதிவில் அவர் சொல்லியிருப்பதைப் போல படைப்பு ஒன்றுதான் பார்வையாளர்கள்தான் வேறு வேறு.
பார்வையாளர்களின் குனாதிசயம் அவர்களையறியாமல் பார்வையில் வந்துவிடுவதை அவர்களாலேயே தடுக்க முடியாது.அதுதான் பிரச்சனையே தவிர இதில் படைப்பின் குற்றம் ஒன்றுமில்லை.

உதாரணத்துக்கு மது அருந்துபவரை,அந்த பழக்கத்துக்கு முற்றிலும் விரோத போக்கு கொண்டிருப்பவர்கள் கெட்டவனாக பார்ப்பார்கள்.ஆனால் அதே பழக்கமுடையவர்களும்,அப்படி பழக்கமில்லையென்றாலும் மது குடித்தலைத் தாண்டியும் அந்த மனிதனின் குணத்தைப் பார்ப்பவர்களுக்கு அவன் நல்லவனாகத்தெரிவான்.
இது எல்ல படைப்புகளுக்கும்,பார்ப்பவர்களுக்கும் பொருந்தும்.

இதயம்
23-01-2008, 03:55 AM
சின்ன திருத்தம்

1. படைப்பாளி. 2. பார்ப்பவர்கள்

ஒரு படைப்பு எல்லோருக்குமே சரியாய் இருப்பதாய் தெரிந்தால்,
அந்த படைப்பில் குறையில்லை - அங்கு பிரச்சினை வருவதில்லை..!

ஆனால், சரியாய் இருப்பதாய் எல்லோருக்கும் தோன்றுவதில்லை என்பது தான் சுகந்தனின் கேள்வி..!

ஒரு படைப்பு எல்லோருக்குமே தவறாய் இருப்பதாய் தெரிந்தால்,
அந்த படைப்பில் நிறையில்லை- அங்கு பிரச்சினை இருக்கிறது. நிறைவில்லாத படைப்பை தந்தது படைப்பாளியின் தவறு...!

ஆனால், ஒரே படைப்பு இரு வேறு பார்வைகளால் (நிறைவு, குறைவு என்று) தோற்றம் தருவது ஏன் என்பது தான் சுகந்தனின் கவிதையின் உட்கரு..!!

அமரன்
24-01-2008, 08:33 AM
பார்வையில், எண்ணத்தில் குறைபாடு என்பேன் நான்...

பாதிக்கு பாதியாக இருந்தால் தீர்ப்புச் சொல்லமுடியாது சுகந்தா!!

ஆரோக்கியமான கருத்துகளை இழையில் கோர்த்த அனைவருக்கும் பாராட்டும் நன்றியும்.

நீதிப்புத்தகத்திலிருந்து கொடுக்கப்படும் நீதிகள் மன்றுக்கு மன்றுக்கு மாறுபடுகின்றதே...

அச்சுக்கோர்த்ததில் பிழையா?? சட்டத்தில் பிழையா??

(ஆரென் அண்ணா இதே சாயலில் ஒரு கவிதை எழுதியதாக ஞாபகம்)

ஆர்.ஈஸ்வரன்
24-01-2008, 10:26 AM
நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்

சுகந்தப்ரீதன்
25-01-2008, 05:46 PM
பாதிக்கு பாதியாக இருந்தால் தீர்ப்புச் சொல்லமுடியாது சுகந்தா!!
)
சரிங்க...! நாட்டாமை...!

நல்ல கவிதை சுபி.வாழ்த்துகள்

நன்றி... ஈஸ்வரா...!