PDA

View Full Version : பங்குச் சந்தையில் `இரத்தக் களரி`



இராசகுமாரன்
22-01-2008, 03:57 AM
அமேரிக்க பொருளாதார மந்த நிலையை எதிர் பார்த்து ஆசிய, ஐரோப்பிய பங்கு சந்தைகள் கடும் சரிவை எதிர் கொண்டு வருகின்றன.

நேற்றைய (21/01/08) மும்பை பங்கு சந்தையில் ஒரே "இரத்தக் களரி" மயம் தான். எங்கு பார்த்தால் சரிவு மயம். இதுவரை சரித்திரம் காணாத அளவாக ஒரே நாளில் 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டு, பின்னர் சமாளித்து எழுந்து கடைசியில் 1408 புள்ளிகள் சரிவில் முடிந்தது.

இன்று (22/01/08) மீண்டும் பங்குச் சரிவு முகத்தில் துவங்கி 15,576 புள்ளிகள் வந்தவுடன் 10% கீழே "சர்கிட்" தட்டி இன்று காலை ஒரு மணி நேரத்திற்கு மும்பை பங்கு சந்தை வர்த்தகத்தையே நிறுத்தி வைத்துள்ளார்கள்.

ஒரு வாரத்திற்கு முன் அதிக பட்ச புள்ளியான 21,000 புள்ளிகளை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த "காளைச் சந்தை" (bull market), இப்போது "கரடிச் சந்தை" (bear market) மட்டுமல்ல, "இரத்தக் களரி" (bloodbath) சந்தையாகியுள்ளது.

பலருடைய கோடிக் கணக்கான சொத்துக்கள் ஒரே நாளில் கரைந்துள்ள இந்த நேரத்தில், பலருக்கு புதிதாக நுழையவும் வாய்ப்பு கொடுத்துள்ளது. பல நல்ல பங்குகள் 25%-50% வரை குறைந்துள்ளன. நீண்ட நாள்கள் முதலீடு செய்து பங்கு வர்த்தகத்தில் இருக்க விரும்புபவர்கள், இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்து கொண்டு அடுத்த 3-4 நாட்களில் நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்ய தயாராக இருங்கள்.

ஏனென்றால், இந்திய பங்குச் சந்தையின் அடிப்படை வலுவானது, அதனால் எந்த ஆபத்தும் வராது என நமது பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

praveen
22-01-2008, 04:56 AM
பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட எனது நண்பர்கள் பலர், கடந்த ஒருவாரத்தில் ஸ்திரத்தண்மையில்லாமல் போனதால், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நேற்று முடிவடைகையில் சற்று ஏற்றம் போல் தெரிந்ததை எண்ணி இன்று ஆவலுடன் இருந்தனர். ஆனால்..

நான் பல வருடம் முன்பே இதில் இருந்து வெளிவந்ததால் இதை கண்கானிக்க மட்டுமே செய்கிறேன். எனினும் இம்மாதிரி (1 மணி நேரம்) நிறுத்தி வைக்கும் அளவிற்கு செல்வது வருத்தமாகத்தான் இருக்கிறது. அண்மையில் பொதுவில் வந்த ரிலயன்ஸ் பவர் மற்றும் அமெரிக்க முதலீடுகள் திரும்ப பெறப்பட்டதை சில ஏடுகள் காரணமாக கூறுகின்றன. பார்ப்போம் இனி நடப்பதை.

aren
22-01-2008, 04:58 AM
நான் என்னுடைய அண்ணனிடம் இருக்கும் அனைத்தையும் உடனே விற்றுவிடு என்று இரண்டு வாரங்களுக்கு முன்னால் சொன்னேன், ஆனால் அவர் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். இப்பொழுது லபோ திபா தான்.

praveen
22-01-2008, 05:08 AM
நான் என்னுடைய அண்ணனிடம் இருக்கும் அனைத்தையும் உடனே விற்றுவிடு என்று இரண்டு வாரங்களுக்கு முன்னால் சொன்னேன், ஆனால் அவர் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். இப்பொழுது லபோ திபா தான்.

ஏன், உங்களுக்கு முன்னரே இப்படி ஆகும் என்று தெரியுமா?. இல்லை பொதுவாக தானா?. நிச்சயம் இன்னும் ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போ அவசரப்பட்டால் இன்னும் சிரமம் தான்.

நுரையீரல்
22-01-2008, 05:34 AM
நான் இதற்கு முன்னரே பலரிடம் தெரிவித்திருந்தேன். பங்குச் சந்தையின் boost-up தற்காலிகமானதே, இதற்குக் காரணம் பல வெளிநாட்டு முதலீடுகள் தான் காரணம். எந்த நேரத்திலும் அந்நிய முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்படலாம். அவ்வாறு நடப்பின் நமது பங்குச் சந்தை மிகப் பெரிய சரிவை எதிர்கொள்ளும் என்றேன்.

எது எப்படியாகினும், சாதாரண மக்கள் நஷ்டப்படாமல் இருந்தால் அதுவே போதுமானது. இலாபம் இல்லையாகினும், நஷ்டம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.

மாதவர்
26-01-2008, 12:28 PM
நீண்ட கால முதலீட்டாளர்கள் என்றுமே வருத்தப்படவேண்டியதில்லை!!
நிச்சயம் ஜெயிக்கலாம்
ஆனால் உடேனே பணம் அள்ள நிலைத்தால் கொஞ்சம் சிரமம்தான்!!!

இளஞ்சூரியன்
26-01-2008, 06:55 PM
பிப்ரவரி 01 முதல், அந்நிய முதலீட்டாளர்களுக்கும், மற்ற ம்யூச்சுவல் பண்ட்டுகளுக்கும், Short Selling என்றொரு வசதியை ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன் பொருள் கைவசம் எந்த பங்கும் இல்லாமலேயே பங்குகளை விற்கலாம் என்பதுதான்.

இது விளைவித்த தீங்கினை உணர்ந்து 2001ல் இது விலக்கிக் கொள்ளப் பட்டது. இப்போது திரும்பவும் கொணரப் படுகிறது.

பங்குச் சந்தையில் அனுபவம் மிக்கவர்கள், பங்கில் போட்டு விளையாடும் பணம் போனால் பரவாயில்லை என்ற நிலையில் உள்ள சிறு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்த விளையாட்டில், சூதாட்டத்தில் இருக்கலாம். மற்றவர்கள், குறிப்பாக புரோக்கர்கள் சொல்வதைக் கேட்டு முதலீடு செய்து, காசு பார்க்கும் விருப்பம் உள்ளவர்கள் விலகி விடுவது உத்தமம்.

குமுதமும், ஆனந்த விகடனும் போட்டி போட்டுக் கொண்டு, பங்குச் சந்தையை என்னவோ பணம் அள்ளும் இடம் என உருவகப் படுத்தி, ஒன்றும் தெரியாத சிறு முதலீட்டாளர்களை, குறிப்பாகப் பெண்களை, இதில் களம் இறக்கி விட்டு விட்டன.

ராசகுமாரன் குறிப்பிடும் ரத்தக் களறி தினங்களில், இது போன்ற, சூதாட்டம் தெரியாத, அப்பாவிகள் விழித்ததைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.

மேலும் பட்ஜட்டில் சிதம்பரம் ஏதோ கடினமான ஒன்றினை ஒளித்து வைத்திருப்பதாக ஹிண்டு ஒரு கார்ட்டூனில் கோடிட்டுக் காத்திருந்தது.

அமெரிக்கப் பொருளாதார மந்த நிலையைத் தவிர, நம்மூர் அம்பானிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். பங்குச் சந்தை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் பட்ஜட் வரை காத்திருந்து, அதனுடைய தாக்கம் என்ந்த அளவில் பங்குச் சந்தையில் இருக்கும் என்பதையும் உணர்ந்து, இந்தக் கடலில் இறங்குவது உத்தமம்.

குமுதம் சொல்லிச்சி! விகடன் சொல்லிச்சி!! என்று இறங்கி விட்டு வரும் இழப்பினுக்கு, இது போன்ற பத்திரிகைகள் பொறுப்பேற்காது. நமது மன்ற உறவுகள் யோசித்து செயல் படவும்.

வெற்றி
31-01-2008, 10:46 AM
17 ம் தேதியே ஒரு நன்பர் (பட்டாம்பூச்சி) சொன்னதால் (எச்சரித்தால்) அன்றே அனைத்து பங்கு மற்றும் பொசிசன்ளை காலி செய்தேன்..அதனால் பிழைத்தேன்....

sarcharan
31-01-2008, 11:12 AM
225 ஷேர்களுக்கு குறைவாய் கோட் பண்ணினவர்கள் நிராகரிப்பு..

15 ஷேர் பெர் பெர்சன் : அறிவிப்பு..

இராசகுமாரன்
03-02-2008, 08:42 AM
225 ஷேர்களுக்கு குறைவாய் கோட் பண்ணினவர்கள் நிராகரிப்பு..

15 ஷேர் பெர் பெர்சன் : அறிவிப்பு..


நண்பரே,

இந்த பதிப்பு இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14160) ரிலையன்ஸ் பவர் திரியில் பதிக்க வேண்டியது. திரி மாற்றி பதித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். பரவாயில்லை நம் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

aren
03-02-2008, 10:09 AM
ஏன், உங்களுக்கு முன்னரே இப்படி ஆகும் என்று தெரியுமா?. இல்லை பொதுவாக தானா?. நிச்சயம் இன்னும் ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போ அவசரப்பட்டால் இன்னும் சிரமம் தான்.

நிச்சயம் தெரியும் ஆனால் அது என்று நடக்கும் என்று தெரியாது. நான் அக்டோபரில் என்னுடைய அண்ணனை சந்தித்தபொழுதே சொன்னேன், எல்லாவற்றையும் விற்றுவிட்டு பணத்தை கொஞ்சம் நாட்கள் வங்கியில் வைத்துக்கொண்டிருங்கள். ஒரு கரெக்ட்ஷன் வரும் அது வந்தவுடன் மறுபடியும் பணத்தை பங்குகளில் முதலீடு செய்யுங்கள் என்று சொன்னேன். ஆனால் நான் சொன்ன மறு வாரமே பங்கு அதிகமாக விலை ஏறியது. ஏதோ நான் சொன்னதில் தவறு என்று அவர் நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். இப்பொழுது அதிக நஷ்டம் வந்துவிட்டது என்று வருந்துகிறார். இருந்தாலும் முதலுக்கு பங்கமில்லை என்றே நான் நினைக்கிறேன்.

இனிமேல் மறுபடியும் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்யலாம். பங்குகள் கொஞ்சம் ஏறும் என்றே தோன்றுகிறது.

அமெரிக்காவில் வட்டியை இரண்டு முறை குறைத்தது தவறே என்று தோன்றுகிறது. இந்த குறைப்பை ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஆரம்பித்திருக்கவேண்டும். 0.25 சதவிகிதம் அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குறைத்திருந்தால் அமெரிக்க டாலரும், அமெரிக்க பொருளாதாரமும் சிறப்பாக அமைந்திருக்கும். Sub-Prime பிரச்சனையையும் அவர்கள் எளிதாக சமாளித்திருக்கமுடியும்.

இப்பொழுது இருக்கும் நிலையில் அமெரிக்க பொருளாதாரத்தை நிலை நிறுத்த இன்னும் பல பிரயத்தங்களை அமெரிக்க பெஃடரல் ரிசர்வ் செய்யவேண்டும். மக்கள் மனதில் இன்னும் ஒரு நம்பிக்கையைக் கொண்டுவரவேண்டும். அப்படி செய்தால் மறுபடியும் அமெரிக்க பொருளாதாரம் வளரும் என்பதே என்னுடைய கணிப்பு.

நம்முடைய சாஃப்ட்வேர் கம்பெனிகள் கொஞ்சம் கஷ்டப்படும் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவிலிருந்து வரும் வரும்படி குறைந்தால் இதே மாதிரியான லாபத்தை அவர்களால் தொடர்ந்து காண்பிக்கமுடியாது. பலருக்கு வேலையோ அல்லது சம்பளக் குறைப்போ நடைபெற வாய்ப்புள்ளது இந்த வருடம்.