PDA

View Full Version : வெட்டுண்ட ஒற்றைப் பிறை நிலவு.....



யவனிகா
21-01-2008, 10:08 AM
நுனிச் சதையோடு சேர்த்து
நகத்தையும் ஒட்டக் கடிக்கும்
பழக்கம் உண்டு எனக்கு...
அப்பாவின் பழக்கம் இது, என்பாள் அம்மா....

கெட்ட பழக்கம் இது
விட்டு விட வேண்டும்
என்று தோன்றியதால்
அறிவுரை கேட்டேன் தோழியிடம்...

அழகான விரல்கள் உனக்கு,
நகம் வளர்த்தி, சாயமிட்டுப் பாரேன்
உனக்கே பிடித்துப் போய்விடும்...
கடிக்க மனம் வராது என்றாள்...

அதன் படியே
ஆலிவ் எண்ணைய் போட்டு
பத்து நாள் பக்குவமாய் வளர்த்து
பார்த்துப் பார்த்து முனை திருத்தி
பன்னீர் ரோஜா நிறமிட்டு...
சந்தோசித்தேன்...

வெண்டைக்காய்க்கு சிவப்புத் தொப்பி...
நித்ய மல்லியின் காம்பின் அழகு...
முனை சிவந்த வெள்ளை ரோஜா...
ஏதேதோ உவமைகள் என்னுள்ளே....

அடுத்த நாள் வெங்காயம் வெட்டுகையில்
கவனக் குறைவாய் கத்தி பட்டதில்
மோதிர விரல் நகம் மட்டும் துண்டாகி விட்டது...
வெங்காயச் சருகுக்கு ஒத்த நிறத்தில்
வெட்டுண்ட ஒற்றைப் பிறை நிலவு...

எதோ ஒன்று ஒட்டாமல் போன உணர்வு...
விரல்களைப் பார்க்கப் பிடிக்காமல் போனது...
ஆற அமர அத்துனை நகங்களையும்
கடித்துத் துப்பினேன்...
பல்லில் ஒட்டிக் கொண்டது இளம்சிவப்பு வண்ணம்...

ஏனோ தெரியவில்லை...
ஈன்ற உடனே குட்டியைச் தின்று
வாயில் இரத்ததுடன் நின்ற,
அந்த பெண்பூனை நினைவு வந்தது எனக்கு.....

அமரன்
21-01-2008, 10:34 AM
புதிய கவிதைகள் பாடல்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டது

அக்னி
21-01-2008, 11:13 AM
சின்னச் சின்ன நிகழ்வுகளும் கூட, அழகான எழுத்துக்களாகின்றன.
அதற்காக யவனிகா அவர்களுக்கு ஒரு பெரிய "ஓ"

மீண்டும் வளர்வதால்,
கடித்துக் குதறப்படும் நகம்...
மீண்டும் வளர முடியாத
விரலின் கவசமல்லவா...

அதனாற்தான் போலும்,
வெட்ட வெட்டத் தளைக்குது நகம்...



வெட்டுண்ட ஒற்றைப் பிறை நிலவு...

மிகவும் ரசித்தேன். அழகிய உவமானம்...

ஒரு காலத்தில்
பாதிவரை துகிலுரிந்திருந்த
என் நகச்சதை...
இன்று மீண்டும் முழுதாய் (நகத்) துகிலுடுத்தி,
சந்தோசமாய் தடதடக்குது,
தட்டச்சிடுகையில்...

மருதாணி இட்டு அழகு பார்க்கத் துடிக்காதோ
யவனிகா மனம்...
மருதாணி இட்டு அழகு கூடிப் போகாதோ
யவனிகா நகம்...

யவனிகா
21-01-2008, 11:46 AM
மருதாணி இட்டு அழகு பார்க்கத் துடிக்காதோ
யவனிகா மனம்...
மருதாணி இட்டு அழகு கூடிப் போகாதோ
யவனிகா நகம்...

மருதாணி இட்ட நாட்கள்
மறுபடியும் மனதில்...
அம்மியில் அரைத்தால் தான்
அரைபடும் மருதாணி...
அரைப்பதற்குப் போட்டி
எனக்கும் என் தங்கைக்கும்...
அரைத்தல் பரவசமான வேலை...
குட்டி அம்மி...குட்டிக் குழவி
பாட்டி காலத்தையது
மருதாணிக்கென்றே பத்திரப்படுத்தியது
புளி வைத்து அரைத்தால் தான்
கருஞ்சிவப்பு நிறம் கிட்டும்...
ஓரிரு சொட்டு யூகலிப்டஸ்
சேர்ப்போம் அதிக குளுமை தவிர்க்க...

அரைத்த மருதாணியை
அம்மா வைத்தால்
தொப்பி மட்டும் தான் வைப்பாள்...
பூவும்,கொடியும் வரையத் தெரியாது அவளுக்கு...

பக்கத்து வீட்டில் முதிர் கன்னி ஒருத்தி
எங்களுக்கு மருதாணி வைத்து விடவே பிறப்பெடுத்தவள் போலும்..
நான் முந்தி நீ முந்தி சண்டை நடக்கும் எப்போதும்....
விடிய விடிய படுக்கைத் துணியில்
படாமல் பார்க்க வேண்டும் போட்டுக் கொண்ட மருதாணியை...

விடிந்தால் விரல்களில்
தீப்பிடித்திருக்கும்.....
கன்னங்களும் கூட சிவந்திருக்கும்...
தூக்கத்தில் தெரியாமல் ஈஷிக்கொண்டது...


இப்போதும் ஊருக்குப் போனால்
முதல் வேலை மருதாணி வைப்பது தான்...
எனக்காக எப்போதும் இலைகளுடன் தயாராய் இருக்கும்
மருதாணி மரம்...
சிவந்த விரல்களை அதனிடம் காட்டினால்
என் சந்தோசம் அதற்கும் தொற்றிக் கொள்ளும்...


என்ன... இரவு முழுவதும் வைத்தல் இயலாது...
இரண்டு மணி நேர ஆரஞ்சு நிறத்தை மட்டும்
அழகு பார்த்துக் கொள்ள வேண்டியது தான்....

எங்கோ மருதாணி மணக்கிறது அக்னி...
என் நாசி மட்டும் அதை உணர்கிறது
காத்திருக்கட்டும் கரங்கள்
இன்னும் சில மாதங்கள்....

அக்னி
21-01-2008, 12:16 PM
மருதாணி இட்டுச் சிவந்த கரங்கள்
பட்டுத் தெறித்த சிவப்பு,
கன்னக்கதுப்புக்களில்...
மருதாணி சிவக்கக் காத்திருக்கும் பெண்..,
கணநேரத்தில் சிவக்க வைக்கின்றாள் ஆணை...

நிகழ்வுகளின் நினைவு பசுமையாக உள்ளது...
பாராட்டுக்கள் யவனிகா...

மதி
21-01-2008, 12:58 PM
அட எனக்குக்கூட இதே பழக்கம் தான்.. நகம் கடிக்கும் பழக்கம். ஏனோ இது மட்டும் இன்னும் தொடர்கிறது.
ஆனாலும் உங்கள் அளவு சுவாரஸ்யமாய் விரலையும் விரலோடு ஒட்டியிருக்கும் நகத்தையும் கவனித்ததில்லை..

இனி கவனிக்கிறேன்... கலக்கல் கவிதை அக்கா.

பூமகள்
21-01-2008, 03:40 PM
நகம் கடித்து
கண்டிருக்கிறேன்..
சுத்தம் அதிகம்
என் சித்தியில்
சுத்தியதால்
சுட்டுவிரலின் நகமெனக்கு
அழகுக்கு மட்டும்...!!!

என்றுமே கடிச்சதில்லை.. பூ
சொல்லிச் சொல்லி பெருமைப்படும்..
என் பத்து விரல்களும் என்
பால்யநட்பின் குறைபிரசவ
குழந்தைகளாம் அவள்தம்
நகப்பிஞ்சுகளிடம்..!


ஆஹா.. அற்புதக் கவிதை அக்கா..அதிலும் அந்த கடைசி வரிகள் டச்......!! பாராட்டுகள் யவனி அக்கா. :)

மருதாணி பத்தி சொல்லி எனக்கு மருதாணி ஆசையை உண்டாக்கிட்டீங்க.. நாளைக்கே எங்காவது பொறிச்சி வந்து வைக்கனும்...!! என் வீட்டு மருதாணிச் செடி வளரவே மாட்டீது என் ஆர்வத்துக்கும்.. அவசரத்துக்கும்...!! :(

சாம்பவி
21-01-2008, 08:11 PM
ஏனோ தெரியவில்லை...
ஈன்ற உடனே குட்டியைச் தின்று
வாயில் இரத்ததுடன் நின்ற,
அந்த பெண்பூனை நினைவு வந்தது எனக்கு.....

என்ன கொடுமை தாயே இது.... !!!!!

உங்களவரின்
கற்பனைக்கு
எள்ளளவும்
குறையாது..... :(

தாமரை
22-01-2008, 03:18 AM
நகம் கடித்து
விரல்கடித்து
துப்பியபோது
தூங்கிய பூனைக்குட்டி

அரிதாரம் பூசியபோது
விழித்துக் கொண்டதோ?
யவனிகா இதை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை

மருதாணித் தொப்பிக்குள்
யூகலிப்டஸா?
இது என்ன அராஜகம்?
மருதாணியின் ம(ன)ணம்
என்ன பாடுபடும்?

சிவா.ஜி
22-01-2008, 04:12 AM
அன்பு தங்கை யவனிகா....பதிவை இட்டவுடன் முதல் ஆளாய் படித்தேன்....எப்போதும் போல ஒரு அசத்தலான கவிதை தங்கையிடமிருந்து வந்திருக்குமென்ற என் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டது.மன்னிக்கவும் தலைப்பிலிருக்கும் அழகும் ஆழமும் கவிதையில் இல்லை.

இதயம்
22-01-2008, 06:14 AM
சிவாவைப்போலவே யவனி(யக்)காவின் கவிதைகளை படிப்பதில் நானும் ஆர்வம் உள்ளவன்.! காரணம், அவர் கவிதைகளில் காணப்படும் கருத்துச்செறிவு, வார்த்தை அழகு, ஆழமான அர்த்தங்கள், அவை கொடுக்கும் விரிந்த கற்பனைகள் மிக அற்புதம் என்பதால்..! ஆனால், இந்த கவிதை என்னை ஏனோ கவரவில்லை. அதற்கு காரணம், அவர் எடுத்துக்கொண்ட நகம் என்ற கருவாக இருக்கலாம். நகம் என்பது உயிர் விட்ட உடல் திசுக்களின் பரிணாம மாற்றம். அது பெரும்பாலும் நாம் எல்லோரும் வெட்டியெறியும் ஒரு வீணான பகுதி..! அதை சில பெண்கள் தங்கள் அழகுக்காக வளர்த்து அதில் என்னென்னவோ செய்கிறார்கள். விரலின் வீணான பகுதியான நகம் பற்றிய கவிதையில் ஒரு விரலின் நக இழப்பை தன் குட்டியை விழுங்கிய தாய் பூனையின் கொடூரத்துடன் ஒப்பிட்டதை ஏற்க மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. நகத்திற்கு இத்தனை முக்கியம் வேண்டுமா என்ற கேள்வி தான் இங்கே இந்த கவிதையின் கருத்துடன் முரண்பட வைத்துவிட்டது.

ஒரு கவிதையின் கருவானது மனதை ஆழ்ந்து ஊடுருவி உள்ளுணர்வுகளை உசுப்பிவிடும் விதத்தில் அமைந்து மனதில் பாதிப்பை ஏற்படுத்தினால் அந்த கவிதையை மறக்க முடியாது. அது தான் அங்கே கவிதையின் வெற்றி..! இங்கே நம்மில் பலர் கவிதை என்ற பெயரில் மன உணர்வுகளை கொட்டி, வரிகளை வெட்டி, கவிதை வடிவில் தருவார்கள் (அதில் நானும் ஒருவன்). அத்தகைய கவிதைகளின் வரிசையில் இவரின் கவிதைகள் சேராது. அவரின் சிந்தனைகளும், கற்பனைகளும் கரை மீறிய அலைகளின் ஆர்ப்பரிப்புக்கு ஈடானது. கமல் படத்தை நாம் வெறும் பொழுது போக்கு என்ற நோக்கத்துக்காக மட்டும் பார்க்க போவதில்லை. அவரின் படங்கள் என்றாலே இரசிகர்களுக்கு எல்லை தாண்டிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படித்தான் யவனி(யக்)காவின் கவிதைகளுக்கும்.! எனவே அதை உணர்ந்து அவர் இனி வரும் கவிதைகளை அளிக்க வேண்டும் என்பது அவருக்கு நான் விடுக்கும் அன்பு வேண்டுகோள்..!!

மருதாணி தொடர்பாக அவர் அளித்த தகவல்கள் என்னை மலரும் நினைவுகளுக்குள் மூழ்கச்செய்துவிட்டது. எனக்கு மருதாணியின் வாடை அலர்ஜி.!! ஆண்கள் மருதாணி இட்டு அலங்கரித்துக்கொள்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. அதனால் நான் மருதாணி இட விரும்புவதில்லை. ஆனால், என் மனைவி, குழந்தைகளுக்கு மிக விருப்பம். அதென்னவோ மருதாணி மேல் பெண்களுக்கு அப்படி ஒரு காதல்..! எங்கள் வீட்டு மருதாணி மரம் ஊரில் கல்யாணங்கள் நடக்கும் காலங்களிலும், பெருநாட்கள் வரும் நாட்களிலும் மொட்டையாகி பொலிவிழக்கும். அவர் சொன்ன யூக்லிப்டஸ் தைலச்சேர்க்கை, புளி ஆகியவை என் தங்கைகளும், மனைவியும் அரைக்கும் போது நான் கண்ணால் கண்டவை..!அவரின் கவிதையை விட அழகு உவமைகளோடு 4-பதிவில் எழுதிய கவிதையை வர்ணனைக்காகவே இரசித்தேன். குறிப்பாய்.. தீப்பிடித்த விரல்கள்..!! வர்ணனை கொள்ளை அழகு..!!

பழைய நினைவுகளை மீளக்கொண்டு வந்த பதிவிற்காக என் நன்றிகளும், பாராட்டுக்களும்..!!

ஆதி
22-01-2008, 06:54 AM
அக்கா பின்னவீனதுவக் கவிதைகள் உங்களுக்கு இயல்பாகவே வருகிறது..

அதை நான் பலக் கவிதைகளின் கண்டு ரசித்திருக்கிறேன்..

பலக் கவிதைகளை படிக்கும் பொழுது இப்படிதான் நான் எழுத நினைக்கிறேன்.. எழுத முயல்கிறேன்.. அக்கா ஆனா அதை செய்கிறார்கள்.. என மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்..

பின்னவீனதுவ இலக்கியங்களில் எனக்கு அப்படி ஒரு மையல்.. ஆனால் இலக்கியம் விளிம்புநிலை மனிதனையும் போய்ச் சேறவேண்டும் என்பதில் எனக்கு ஒரு தனி ஆசைவுண்டு.. அதனால்தான் இந்த பானிகளை நான் கையாள்வது இல்லை..

அக்கா இந்த கவிதை மிக ரசிக்கும் படி இருந்தது, பெற்றப்பிள்ளைக்கு இணையாக நீங்க வளர்த்த நகத்தை பாவித்ததின் வெளிப்பாடே.. பிள்ளையைத் தின்ற பூனை உவமை.. நகத்துக்கு வேறு உவமைக் கொடுத்திருக்கலாம்.. பலக் கவிஞர்களால் ஆளப்பட்ட அதே பிறையைத்தான் அக்காவும் பயண்படுத்தி இருக்கிறார் என்றே எனக்குப் பட்டது..

நகம் என்றால் பெண்களுக்கு மிக இஷ்டம், அந்தக் காதல் உங்களுக்கு இருந்ததில் பெரும் அட்சர்யமில்லை..

வைரமுத்துச் சொல்லுவார்..

நீ வெட்டி வீசிய
அழுக்கு நகதுண்டுகளை
நிலப்பிறைகள் என்றேன்..

காதலின் மையலில் தையலின் நகமும் பிறைநிலவாகிறது..

பட்டினத்தார் சொல்லுவார்..

அழுக்கும் கிருமியும் சேர்ந்த நகவிரல்களோடுக் கைக்கோர்த்து

என ஞானம் பேசவரார்..

அதே நகம் வெட்டப் போது கண்ணீராய் வழிந்திருக்கிறது இந்தக் கவிதை.. சின்ன சின்ன விடயங்களையும் கவிதையாக இயலும் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

அன்புடன் ஆதி

வசீகரன்
22-01-2008, 07:06 AM
அன்பு யவனிகா... இப்படி ஒரு அதிர்ச்சியான பதிவை
நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை....! பூனையின் கொடூர குணத்தை.... இதர்க்கு உவமானமாக சொல்கிறீர்கள்.... ஒரு சின்ன விஷயத்திர்க்கு யாரேனும் இப்படி கொடுரமாக யோசிப்பார்களா...?

வன்மமான இந்த கவி எனக்கு பிடிக்கவில்லை....!
நன்றி..!

ஆர்.ஈஸ்வரன்
22-01-2008, 09:51 AM
ஏனோ தெரியவில்லை...
ஈன்ற உடனே குட்டியைச் தின்று
வாயில் இரத்ததுடன் நின்ற,
அந்த பெண்பூனை நினைவு வந்தது எனக்கு.....

இதை மட்டும் உவமையாக சொல்லாமல் விட்டிருக்கலாம்

சுகந்தப்ரீதன்
22-01-2008, 11:26 AM
எதார்த்தமான செயல்களை உவமையுடன் ஒப்பிட்டு கவிதை வடிவில் படைப்பதென்பது யவனி அக்காவுக்கு கைவந்த கலை..! இக்கவிதையிலும் அது தொடர செய்கிறது..! வாழ்த்துக்கள் அக்கா..!

உயிரினங்களில் சில ஈன்ற குட்டியை கொல்வதும் உண்பதும் காணக்கூடியதே...! அப்படி நாம் கண்ட ஒரு காட்சி சில நேரம் நினைவுக்கு வருவதும் இயற்க்கையே..! இங்கே யவனி அக்கா பல்லில் பட்ட இளஞ்சிவப்பு நிறத்துடன் கண்ணாடியை பார்த்திருப்பார் போலும்.. உடனே தான் கண்ட காட்சி நினைவுக்கு வரவே அதையே உவமையாக்கி கவிதையாக்கி விட்டார்..!

இக்கவிதையை நானோ மற்ற யாரோ எழுதி இருந்தால் யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்..! தன் எழுத்தின் மூலம் தன்னை பற்றி ஒரு தோற்றத்தை எல்லோர் மனதிலும் யவனி அக்கா தோற்றுவித்திருப்பதால் அவரின் இந்த எதார்த்தமான கற்பனையை ஏற்க முடியவில்லை போலும் பலரால்..! எனக்கு கவிதையில் உடன்பாடு உண்டு.. அதற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அக்காவுக்கு..!

இதயம்
22-01-2008, 11:44 AM
எதார்த்தமான செயல்களை உவமையுடன் ஒப்பிட்டு கவிதை வடிவில் படைப்பதென்பது யவனி அக்காவுக்கு கைவந்த கலை..! இக்கவிதையிலும் அது தொடர செய்கிறது..! வாழ்த்துக்கள் அக்கா..!



சுகந்தன் தான் தந்திருக்கும்
சூழ்நிலை பதிவு உண்மைக்கு
உகந்ததாய் இல்லை என்பதை
உள்ளத்தில் புரிய வேண்டும்..!:D:D

அக்கா படைப்பை அன்பால்
பக்கா பதிவு என்றால்
மக்கா(ஸ்) எல்லாரும் உங்களை
மாக்கா(ன்) என்பர்...உஷார்..!!:icon_rollout::icon_rollout:

யவனிகா
22-01-2008, 11:50 AM
அன்பு தங்கை யவனிகா....பதிவை இட்டவுடன் முதல் ஆளாய் படித்தேன்....எப்போதும் போல ஒரு அசத்தலான கவிதை தங்கையிடமிருந்து வந்திருக்குமென்ற என் எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டது.மன்னிக்கவும் தலைப்பிலிருக்கும் அழகும் ஆழமும் கவிதையில் இல்லை.

சிவா அண்ணா...கூறியபடி...கவிதையில் அழகு இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆழம் நம் பார்வையைப் பொறுத்தது. பகல் முழுதும் பட்டு சாரி, பளிச் மேக்கப் கசகசப்பில்...இருக்கும் பெண் வீட்டிற்குத் திரும்பியது பழைய காட்டன் நைட்டிக்கு மாறி,
ஆசுவாசப் படுத்திக் கொண்டால்....அது அழகில்லையா சிவா அண்ணா...பட்டு சாரி பளபளப்புத்தான் கவிதைக்கு வேண்டுமா...சாதாரண வரிகளில் நல்ல கருத்தை சொல்ல இயலாதா?

சுகந்தப்ரீதன்
22-01-2008, 12:04 PM
சுகந்தன் தான் தந்திருக்கும்
சூழ்நிலை பதிவு உண்மைக்கு
உகந்ததாய் இல்லை என்பதை
உள்ளத்தில் புரிய வேண்டும்..!:D:D
:icon_rollout::icon_rollout:
இதயம் அண்ணா நீங்கள் எப்படி எப்போதும் உங்கள் கருத்தை போலவே மற்றவர் கருத்தும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அது போலத்தான் எல்லோரும் யவனி அக்கா எழுத்து என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்..! அதனால்தான் இந்த முரண்பாடு..!

என்னை பொறுத்தவரை என்னால் ஏற்க முடியாவிட்டால் அது அண்ணன் கவிதையானாலும் அக்கா கவிதையானாலும் பிடிக்கவில்லை என்று கூறிவிடுவேன்..! இக்கவிதையிலும் அப்படிதான்.. எனக்கு தோன்றியதை கூறினேன்..அது உங்கள் எண்ண ஓட்டத்துக்கு ஒத்துவரவில்லை என்றால் நான் பொறுப்பாக முடியாது..!

இதைத்தான் நான் என்னுடைய 'குறைபாடு' (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=318646#post318646) என்ற குறுங்கவிதையிலும் கேட்டிருப்பேன்..!

aren
22-01-2008, 12:18 PM
அக்கா போன நகம் மீண்டும் வளரும்
ஆனால் தாய்ப்பூனையின் வயிற்றுக்குள்
போன பூனைக்குட்டி திரும்பவும்
உலகை காண்பதென்பது நடக்குமா.

பரவாயில்லை மறுபடியும் வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கல்.

கவிதை நன்றாக இருந்தது. தொடருங்கள்.

இதயம்
22-01-2008, 12:23 PM
இதயம் அண்ணா நீங்கள் எப்படி எப்போதும் உங்கள் கருத்தை போலவே மற்றவர் கருத்தும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அது போலத்தான் எல்லோரும் யவனி அக்கா எழுத்து என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்..! அதனால்தான் இந்த முரண்பாடு..!

பாசமலர்களை கொஞ்சம் பல்லைக்கடிக்க வைக்கலாமென்று ஒரு மொக்கை கவிதையை போட்டு வைத்தால் :D காட்டுவீர்கள் என்று நினைத்தால் வீணாய் கலவரத்தை தூண்டுகிறீர்களே..!! நியாயமா சுகந்தா..?:sauer028::sauer028:

படைப்பின் மீதான பார்வை என்பவை எப்போதும் பல கோணங்களில் வேறுபடும். அப்படித்தான் எங்களின் பின்னூட்டமும், உங்களின் பின்னூட்டமும்..! படைப்புகளை விமர்சிப்பதில் நான் எப்போதும் என்னை அனுசரித்துக்கொள்வதே இல்லை. அதே போல் என் எழுத்தையும் பிறர் ஏதோ ஒரு காரணத்திற்காக அனுசரிப்பதையும் நான் விரும்புவதில்லை. மனம் திறந்த விமர்சனம் என்பது படைப்பாளியை நிச்சயம் பட்டை தீட்டும் என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை.! அப்படி ஒரு பின்னூட்டமாகத்தான் இங்கே அளித்தேனே தவிர, அவர் கவிதையை குறை சொல்வதற்காக அல்ல..!!

நீங்க என்ன பண்ணினாலும் உங்கள் வேலை இங்கே நடக்காது..! ஏன்னா.. நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்..!! :D:D

யவனிகா
22-01-2008, 12:49 PM
பின்னூட்டங்கள் காரசாரமாய் அமைந்து விட்டன. கவிதையில் அழகில்லை, ஆழமில்லை, கொடூர சிந்தனை என்றெல்லாம் விமர்சனங்கள். இருக்கட்டும்...முதலில் கவிதைக்கான கரு பற்றி கூறி விடுகிறேன்.

ஆழ்மன விகாரங்களையும், வக்கிரங்களையும் ஆராயும், மனநிலை எனக்குண்டு. சாதாரண ஒரு செயலில் எத்தனை சதவீதம் வக்கிரம் கலந்திருக்கக் கூடும் என்ற யோசிப்பே இந்த கவிதைக்கு வித்திட்டது. பூனையின் இந்த செயல், சிறுவயதில் என் மனதில் பதிந்து விட்டிருந்தது. பூனை, அதன் குட்டியைத் தின்று கொண்டிருந்த போது பார்க்காமல் நாங்கள் போயிருக்கலாம்...ஆனால் சிறார்கள் எங்களுக்கு பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருந்தது.இதற்கு காரணம் என்ன?

சாதாரணமாக, பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கிறோம்.பஸ் வெகு நேரமாக நடு ரோட்டில் நிறுத்தி வைக்கப்படுகிறது.ஏதோ ஆக்ஸிடெண்ட் என்று காதில் விழுகிறது. மூவர் ஸ்பாட் அவுட் போலும்...நால்வர்க்கு பலத்த அடி ...இது போலெல்லாம் செய்தி கிளம்புகிறது. கடைசியில் விசயம் பெரிதில்லை, வெறுமே ட்ராபிக் ஜாம் தான் என்ற உண்மை செய்தி வந்து பஸ் கிளம்பும் போது...ஒன்றுமில்லாத விசயத்துக்காகவா பஸ் இத்தனை நேரம் நின்றிருந்தது என்ற கேள்வி எழுகிறது...மனதில் ஏதோ ஏமாற்றம்...அப்படி என்றால் மூவர் இறந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்று மனது விரும்பியதா....மெயிலில் வெடிகுண்டு சம்பவங்கள் படமாக கிடைக்கின்றன. இதைப் பார்த்தால் சாப்பிட முடியாது என்று தெரிந்தும் அதை பார்க்கத் தூண்டுகிறது எதோ ஒன்று....ஆழ்மன விகாரம் இல்லாத மனிதன்...மனிதனேயில்லை. எனக்கு அது இல்லை என்று யாரும் சொல்லிக் கொண்டு வரமுடியாது. சதவீதங்கள் வேண்டுமானல் மாறுபடும்.

பூனை, குட்டியைத் தின்பது அதற்கான புரோட்டீன் தேவைக்குத்தான். மற்ற குட்டிகளுக்கு பால் குடுக்க வேண்டி. நமது புத்தி அதை கொடூரம் என்கிறது. இதே போலத் தான் நகத்தை கடித்து எறிதல்..."மனதின் விகாரத்திற்கு வடிகால் என்றும் அதனால் அதனுடைய ஸ்ட்ரெஸ் குறைக்கப்படலாம்". இதைத்தான் கவிதையில் கையாண்டிருந்தேன். தெளிவாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அது என் தவறு.

பொதுவாக நான் கவிதைகளுக்கு அதிகம் வர்ணம் தீட்டுவதில்லை, வந்து விழும் வார்த்தைகளை அப்படியே தருகிறேன், அதனால் தான் என்னுடைய கவிதைக்கான களம் "கவிச்சமர்". நகாசு செய்யப்பட்ட வார்த்தைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிவா அண்ணா...கூறியபடி...கவிதையில் அழகு இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆழம் நம் பார்வையைப் பொறுத்தது. பகல் முழுதும் பட்டு சாரி, பளிச் மேக்கப் கசகசப்பில்...இருக்கும் பெண் வீட்டிற்குத் திரும்பியது பழைய காட்டன் நைட்டிக்கு மாறி,

ஆசுவாசப் படுத்திக் கொண்டால்....அது அழகில்லையா சிவா அண்ணா...பட்டு சாரி பளபளப்புத்தான் கவிதைக்கு வேண்டுமா...சாதாரண வரிகளில் நல்ல கருத்தை சொல்ல இயலாதா?

தாமரை...ஓரளவு என் வரிகளை யூகித்திருந்தீர்கள்...இருந்தாலும் என்னிடம் இருந்து இதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்று பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள்.பெண்ணை பெண்ணாய் மட்டும் ஆண்கள் பார்க்க வேண்டும், பூவாய், நிலவாய்,நதியாய்த் தான் பலர் பார்க்கின்றார்கள். கவிஞர்கள் உட்பட. பெண்ணும் மென்மையாய், பூஞ்சாரலாய் எழுதும் போது ரசிப்பவர்கள், அதே அவர்கள்...பிரச்சனைக்குரிய விசயங்களை எடுத்து எழுதும் போது முகம் சுளிப்பது ஏன்...நிலவே, மலரே...என்று எழுதுபவர்கள்..பெண்ணின் மாதவிடாய் நாட்களைப் பற்றியும், எடுத்தெறியும் நாப்கினின் முடை நாற்றம் பற்றியும் எழுதத் துணிவார்களா...எழுதுவார்களாய் இருக்கும், அதற்கும் அழகு என்னும் ஸ்பிரே அடித்து. அதையே பெண்கள் எழுதினால்...இந்தப் பொண்ணு சரியில்ல...அப்படி இப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க.....என்ன கொடுமை இது தாமரை...யூ டூ...?

மருதாணியும் ,யூகலிப்டஸ் ஆயிலும் கலந்த சேர்மானத்தில் மணம் நன்றாகவே இருக்கும் தாமரை....சாம்பிராணியும் ஏர்பிரஸ்னர் மணமும் கலந்தது போல....சரி அடுத்த முறை வரும் போது அண்ணிக்கு மருதாணி போட்டு விட்டாப் போகுது...நாங்கூட நல்லா மருதாணி போடுவேனாக்கும்...பூவு, மலரு எல்லாம் இப்பவே அப்பாயின்மெண்ட் வாங்கி வெச்சிருக்காங்க...அக்கா கையால அராபிக் மெகந்தி போட....

சிவா.ஜி
22-01-2008, 12:51 PM
சிவா அண்ணா...கூறியபடி...கவிதையில் அழகு இல்லாமல் இருந்திருக்கலாம்.ஆழம் நம் பார்வையைப் பொறுத்தது. பகல் முழுதும் பட்டு சாரி, பளிச் மேக்கப் கசகசப்பில்...இருக்கும் பெண் வீட்டிற்குத் திரும்பியது பழைய காட்டன் நைட்டிக்கு மாறி,
ஆசுவாசப் படுத்திக் கொண்டால்....அது அழகில்லையா சிவா அண்ணா...பட்டு சாரி பளபளப்புத்தான் கவிதைக்கு வேண்டுமா...சாதாரண வரிகளில் நல்ல கருத்தை சொல்ல இயலாதா?

அன்புத் தங்கையே...உங்கள் கவிதைகளின் அழகே அந்த பழைய நைட்டியைப் போட்டிருக்கும் இயல்புத்தன்மைதான்.பட்டுக்கும்,பளபளப்புக்கும் அந்த அழகு இல்லை.நான் சொன்ன அழகும் அதுதான்.உங்கள் கவிதைகளில் எளிமையான வரிகளில் எத்தனையோ அர்த்தம் பொதிந்திருக்கும்.அதுதான் உங்கள் சிறப்பம்சமே..ஆனால் இதில் அந்த சிறப்பு சுமார்தான்.ஏனென்றால் எந்த மறைபொருளையும் உணர்த்தாத உரையாடலாகத்தான் கடைசி பத்திக்கு முன்வரை கவிதை பயணிக்கிறது.கடைசி வரிகளில் எடுத்துக்காட்டிய அந்த உதாரணம்..சட்டென்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.முத்தாய்ப்பாய் ஒரு சீரியஸான பொருளை சொல்லுமுன் அதன் கட்டுமானம் அதற்குத் தக்க தேவைப்படுகிறது.அது வெறும் நக உடைதலில் இல்லை.

ஒரு நகம் போனால் போகிறதென்று விடாமல் அத்தனை நகத்தையும் கடித்துகுதறிய அந்த செயலில் வேண்டுமானால்(நீங்கள் சொன்னதைப்போல)ஒரு வித்தியாசம் தெரிகிறது.சிறு குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடும்போது ஒருபக்கம் மண் சரிந்துவிட்டால் அனைத்தையும் கலைத்துவிடும் கோபம் தெரிகிறது.

சரி விடும்மா....என்னவோ என் மண்டையில் கவிதையின் மறைபொருள் ஏறவில்லை.

ஷீ-நிசி
22-01-2008, 03:30 PM
கவிதை மற்றும் கவிதையின் காரசாரமான விவாதங்களை விடவும்...

கடைசியாய் நீங்கள் கொடுத்திருக்கும் தன்னிலை விளக்கம்... பிரமாதம்..

வாழ்த்துக்கள்!

நுரையீரல்
23-01-2008, 04:18 AM
இதுக்குத் தான் நாங்களெல்லாம் கவிதை எழுதுறதுமில்லை... பின்னூட்டம் இடுவதுமில்லை..

இதுக்கு யாராவது பதில் கொடுத்து என்னை உசுப்பிவிட்டீங்க.. அப்புறம் நானும் கவிதை எழுத ஆரம்பிச்சுடுவேன்.. அப்புறம் கவிஞர்கள் கவிபாடும் வார்த்தைகளை மறந்துவிடுவீர்கள்..

வசீகரன்
23-01-2008, 04:18 AM
பூனை, குட்டியைத் தின்பது அதற்கான புரோட்டீன் தேவைக்குத்தான். மற்ற குட்டிகளுக்கு பால் குடுக்க வேண்டி. நமது புத்தி அதை கொடூரம் என்கிறது. இதே போலத் தான் நகத்தை கடித்து எறிதல்..."மனதின் விகாரத்திற்கு வடிகால் என்றும் அதனால் அதனுடைய ஸ்ட்ரெஸ் குறைக்கப்படலாம்". இதைத்தான் கவிதையில் கையாண்டிருந்தேன். தெளிவாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அது என் தவறு.


மனதில் பட்டதை பட்டென பேசுகிறீர்கள்.... உள் எழுந்த கருத்துக்களை எந்த தயக்கமும்
கூச்சமும் இன்றி எழுதுகிறீர்கள்.... உண்மையாக உங்களுக்கு ஒரு இதார்க்கு ஹாட்ஸ் ஆஃப் யூ சகோதரி....! உங்களின் விளக்கம் அனைத்தும் உண்மையான உண்மை.... நாம் கண்ணை மூடிக்கொண்டாள் உலகம் இருண்டு விடாது... நம்மை சுற்றி எவ்வளவோ
அசீங்கங்களும் அழுக்குகளும் வக்கிராங்களும் நடந்தெரிக்கொண்டுதான் இருக்கிறது.... இது போன்ற ஒரு பெரிய சபையில் பலர் பார்ப்பார்கள் என்று தெரிந்து... மனதில் பட்டதை போட்டு உடைத்து விட நிச்சயமாக ஒரு நெஞ்சுரம் வேண்டும்...

நன்றி

ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 05:45 AM
விளக்கங்கள் ரொம்பவும் அருமை.