PDA

View Full Version : சிறந்த பங்காளர் ஆங்கில வருடம்.



க.கமலக்கண்ணன்
21-01-2008, 05:10 AM
நிர்வாகிகளிடம் ஒரு சந்தேகம்

சிறந்த பங்களார்களின் தேர்வு முன்பு ஆங்கில ஆண்டும் மாதமும் இருந்தது தற்போது தமிழ் மாதமும் ஆங்கில ஆண்டும் இருக்கிறது.

வழக்கமாக தமிழில் திருவள்ளுவர் 2030ம் ஆண்டு என்று குறிப்பிடுவார்கள். எனவே அதையும் சிறந்த பங்காளர் கார்த்திகை 2030 என்று மாற்றினால் நன்றாக இருக்கும் இல்லவா?

.

அன்புரசிகன்
21-01-2008, 05:22 AM
இதில் எனக்கு சில முரண்பாடு உண்டு. காரணம் இது திருவள்ளுவர் பிறந்ததை அடிப்படையாக கொண்டது. அதாவது திருவள்ளுவர் யேசுநாதர் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்ததாக நம்பப்படுகிறது. நாம் தற்போது சொல்லும் அதாவது 2008 என்பது யேசுநாதர் பிறந்ததை அடி ஆண்டாக கொண்டது.
அதனால் தான் இதனை தமிழர் ஆண்டு என்று கூறமுடியாது. காரணம் ஆண்டு கணிப்பீடு ஆனதில் மொழிவேறுபாட்டை காணமுடியாது. ஆனால் மாதங்கள் யாரையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதல்ல.

அத்துடன் பலர் January க்கு தமிழ் ஜனவரி என்கிறார்கள். December க்கு தமிழ் டிசம்பர் என்கிறார்கள். இது சரி என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. January க்கு தமிழ் என்றால் அது தை என்பது தான் என் கருத்து. பெரியவர்களின் ஆலோசனையை இந்தவிடையத்தில் எதிர்பார்க்கிறேன்.


சாதாரணமாக 2038ம் ஆண்டு என்று கூறினால் அது சர்ச்சையையே உருவாக்கும் திருவள்ளுவர் ஆண்டு என்று குறிப்பிடவேண்டும். ஆனால் 2008ம் ஆண்டு என்றால் அது கி.பி 2008 என்று அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இது பிரித்தானியர்களின் ஆளுகையால் வந்த வினையோ என்று நான் நினைத்துக்கொள்வேன்.

உங்களின் கருத்துக்கள் என்னவோ???

.

அன்புரசிகன்
21-01-2008, 05:25 AM
விக்கிப்பீடியாவில் இருக்கும் வீடையம் இது.

<<<<<<<<<>>>>>>>>>>

திருவள்ளுவர் ஆண்டு என்பது ஆண்டுகளை வரிசையாக, தொடர்ச்சியாக குறிக்க எழுந்த காலம் காட்டும் முறை. இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81) முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். 2007 ஆண்டு என்று கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவதை 2038 ஆம் ஆண்டு என்று திருவள்ளுவர் ஆண்டு முறையில் குறிப்பிடப்படும்.

வரலாறு

தமிழ் ஆண்டுகள் என்னும் பெயரில் பிரபவ-விபவ என்னும் பெயர்களில் 60 ஆண்டுகள் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் வழங்குவது தமிழ் ஆண்டுகள் அல்ல என்றும், அவை வரலாற்றுக்குப் பயன்படாது என்றும் பலர் நினைத்து வந்தனர். தமிழர்களுக்கு என தனியாக தொடர்ச்சியாக கூடும்படி ஓர் ஆண்டு முறை வேண்டும் என எண்ணி தமிழறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் 1921 ஆம் ஆண்டு (கிரிகோரியன் ஆண்டு) பச்சையப்பன் கல்லூரியில் (http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF&action=edit) மறைமலை அடிகள் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D) தலைமையில் கூடி முன்பு செய்த ஆய்வின் பயனாக திருவள்ளுவர் இயேசு கிறிஸ்த்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என முடிவுகட்டினர். திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என முடிவெடுத்தனர். இம்முடிவை கூட்டாக எடுத்த தமிழ்ப்பெரியோர்களில் மறைமலை அடிகள் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D). தமிழ்த்தென்றல் என்றழைக்கப்பெற்ற திரு. வி. கலியாணசுந்தரனார் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D), தமிழ்க் காவலர் சுப்பிரமணியப் பிள்ளை (http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&action=edit), சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை (http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&action=edit). நாவலர் நா.மு. வெங்கடசாமி நாட்டார் (http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&action=edit), நாவலர் சோமசுந்தர பாரதியார் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D), முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் (http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%86._%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&action=edit) ஆகியோர் அடங்குவர்.
தமிழக அரசு (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81) 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. 1972 ஆண்டு அரசிதழிலும் (Gazette) வெளியிட்டு - தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப் பெற்று வருகின்றது.


<<<<<<<<<>>>>>>>>>>


நன்றி: விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81).

.

க.கமலக்கண்ணன்
21-01-2008, 06:57 AM
நன்றி அன்புரசிகன் அவர்களே உடன் கருத்து தெரிவித்தமைக்கு

பெரியவர்களின் ஆசோனைக்கு காத்திருக்கிறேன்...

ஆர்.ஈஸ்வரன்
21-01-2008, 10:01 AM
வருடங்கள் மாறாமல் இருந்தால் சரி

மனோஜ்
22-01-2008, 08:39 AM
குழப்பம் இல்லாது முன்பு நடத்தியது பொன்று நடத்தலாமே அன்பு

அன்புரசிகன்
22-01-2008, 09:02 AM
நல்லவிசயம் என்னால் மாறித்தானே ஆகவேண்டும் மனோஜ். தமிழ் மன்றம் என்று பெயரளவில் மட்டும் வேண்டாமே. கமலக்கண்ணன் கேட்டதும் சரி. அதற்கு இதுவரை எவரும் தகுந்த பதில் தரவில்லை. எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அறிஞர்
22-01-2008, 01:21 PM
திருவள்ளுவர் ஆண்டு.. பொதுவான வழக்கில் இல்லாததால், அதை உபயோகப்படுத்தவில்லை.

கார்த்திகை (தி.ஆ.2030) என உபயோகப்படுத்தலாமா....

பொதுவில் ஒரு ஓட்டெடுப்பை நடத்தி பார்ப்போமா...

க.கமலக்கண்ணன்
23-01-2008, 05:36 AM
கார்த்தினை - தி.ஆ 2030 என்று பயன்டுத்தினால் நன்றாக இருக்கும் தாங்கள் சொன்னவாறு பொதுவில் ஓட்டெடுப்பை நடத்தினால் நன்று அனைவரின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம்...

செல்வா
23-01-2008, 05:54 AM
வெறும் ஆண்டை மட்டும் உபயோகப் படுத்துவதோடு மட்டுமன்றி மாதங்களையும் ஆங்கில மாதங்களுக்கு இணையாகக் கொள்ளாமல் தமிழ் மாதங்கள் போன்றே ... கணக்கில் கொள்ளலாமே. குழப்பமாக இருக்கும் என நினைக்க வேண்டாம். மன்ற முகப்பிலேயே தமிழ் நாட்காட்டி ஒன்றை அமைத்து விடலாம். ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும் போகப் போகச் சரியாகிவிடும். நண்பர்களின் கருத்தை கேட்க ஆர்வமாயுள்ளேன்.

க.கமலக்கண்ணன்
23-01-2008, 05:57 AM
புதிதாக எந்த வசதி வந்தாலும்
புதிய முறை சற்று கடினமாக குழப்பமாக இருக்கும் உள்ளே
புகுந்துவிட்டால் பழகிவிடும் நீங்கள் சொன்னது சரியே செல்வா...

lolluvathiyar
23-01-2008, 02:13 PM
நல்லவிசயம் என்னால் மாறித்தானே ஆகவேண்டும் மனோஜ். தமிழ் மன்றம் என்று பெயரளவில் மட்டும் வேண்டாமே.

தமிழ் மன்றம் நாம் தமிழில் கருத்து பகிர்ந்து கொள்வதற்க்கு உதவுகிறது. ஆனால் தமிழ் காலன்டரை நாம் முற்றிலும் மறந்து விட்டோம். அதன் பயன்பாடு குரைந்து விட்டது (விவசாயிகளுக்கு மட்டும் பயன்படுகிறது).
தமிழ் விசேச காரியங்களுக்கு நாள் குறிக்க மட்டுமே பயன்படுத்த படுகிறது. அதுவும் ஹிந்துகளால் மட்டுமே பயன்படுத்த படுகிறது. வருங்காலத்தில் இதை பயன்படுத்த போவதில்லை.
இன்று நமக்கு சம்பளம், இபி போன் பில் வருவது கட்டுவது எல்லாம் ஆங்கில கேலன்டர் முரைதான். அப்படி இருக்கும் போது நாம் பிராக்டிகலாக இருக்கலாமே. ஏன் வாக்கெடுப்புக்கு தமிழ் காலன்டல் முரை பயன்படுத்த வேன்டும். குழப்பம் இல்லாமல் இருக்குமே. மொழி பற்றை இப்படிதான் காட்ட வேன்டும் என்று பிடிவாதம் அவசியமா?

அன்புரசிகன்
23-01-2008, 02:50 PM
வாத்தியாரே... நானும் கமலக்கண்ணனும் கூறவந்தது ஒன்று. நீங்கள் கூறுவது வேறு ஒன்று. நீங்கள் கூறுவது தமிழுக்கான திகதி முறை. நான் கூறுவது வேறு. அதாவது நீங்கள் கூறுவது ஆங்கில நாட்காட்டி படி ஏறத்தாள 15ம் திகதி என்றால் தமிழ் நாட்க்காட்டி படி அது 1ம் திகதியாக வரும். ஆனால் நான் கூறவந்தது வேறு. சரியாக படித்து புரிந்துகொள்ளுங்கள்.

அமரன்
24-01-2008, 07:36 AM
2007 தை, 2007 மாசி என்னும் முறையில் இருப்பதற்கு எனது ஆதரவு.