PDA

View Full Version : 'மதி'ய உலா



மதி
20-01-2008, 11:11 AM
மதிய உலா

சுரீரென்று கோபம் தலைக்கேறியது. ஞாயிற்றுக்கிழமை காலை உணவருந்தி உடல்நிலை சற்று சரியில்லாதது போல தோன்றியதால் விஜய் டி.வியில் ஆங்கிலப்படம் பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன். திடீரென்று ஏதோ சுமை உடல் மீது இறங்குவதாய் தோன்றிற்று. தலை பாரமாய் இருந்த போது கண்ணை பாதி விழித்துப் பார்க்கையில் அறை நண்பன் ஒரு மார்க்கமாய் என்மீது சாய்ந்து உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். உடலுக்குள் ஏதேதோ மாற்றங்கள். எங்கே வலிக்கிறது என்றே தெரியவில்லை. அவன் உட்கார்ந்த போது முதுகில் ஏதோ கடமுடவென்று சத்தம். அடிவயிற்றில் கடுமையான வலி. என்னாயிற்று எனக்கு? மறுபடியும் ஏதேனும் பிரச்சனையா? உடல்நிலை தான் சரியில்லை என்று தெரியுமே, அப்புறம் ஏன் இப்படி மடார்னு உட்கார்ந்தான். கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா?

மறுபடி தூங்க முயன்றேன். முடியவில்லை. எழுந்து போய் மடமடவென்று தண்ணீர் குடித்தேன். சற்று வயிற்றுவலி குறைந்தாற்போல் தோன்றிற்று. சிறுநீரகம் வேலை செய்யவே கழிவறைக்கு சென்று வந்தேன். 'உடலில் ஏதேதோ உணர்வுகள். வலிக்கிறதா? இல்லை ஏதோ குடைவது போலுள்ளதே.. என்ன தான் ஆயிற்று எனக்கு?' இன்னும் நண்பன் மேல் கோவம் தீரவில்லை. அறைக்குள் சென்று படுக்க முயன்றேன். ம்ஹும். வலியுடன் சேர்ந்து கோவமும் தலைக்கேறியிருந்ததால் தூக்கம் வரவில்லை.

வேகவேகமாக எழுந்து முகம் கழுவி பேண்ட் போட்டு கிளம்பிவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தும் யாரிடமும் பேசவில்லை. மொபைல் போன் கூட எடுத்துக் கொள்ளவில்லை. பர்ஸை மட்டும் எடுத்து செருப்பை மாட்டி கிளம்பிவிட்டேன். எங்கே போவது? தெரியவில்லை. எங்கியாவது போகணும்.' வீட்டுக்கு வெளியில் வந்தால் வெயில் சுரீரென்று உறைந்தது. இதில் போய் தான் ஆக வேண்டுமா? எவ்வளவு தூரம் நடப்பது?

எங்கேயாவது போகணும், நடந்து போகணும், இங்கிருந்து போகணும். மனம் பலவாறு அசைபோட கோவம் கொப்பளிக்க நடக்க ஆரம்பித்தேன். மெதுவாக, மிக மெதுவாக. அப்படி ஒன்றும் எங்கேயும் போய் வெட்டி முறிக்கிற காரியம் ஏதுமில்லையே. தளர்ந்த நடையுடன் மாருதிநகர் மெயின் ரோட்டில் நடைபயணம். மணி இரண்டரை ஆயிருந்தது. வழியில் ஜூஸ் கடை. குடிப்போமா? மதியம் தான் இன்னும் சாப்பிடலையே! சரி. ஜூஸ் குடிக்கவாவது பணம் இருக்கிறதா? துலாவிப்பார்த்ததில் சட்டைப்பையில் நாற்பது ரூபாய் இருந்தது. பர்ஸில் சுத்தமாய் பணமில்லை. கடையில் நுழைகையில் குடித்து தான் ஆகணுமா?. மனம் மாறி நடக்க ஆரம்பித்தேன். பணம் இல்லை. போய் ஏ.டி.எம் மில் பணம் எடுத்து வந்தால் என்ன? நல்ல யோசனை. அதே வழியில் நடக்க ஆரம்பித்தேன். முதலில் ஏ.டி.எம் போய் பணமெடுத்து வந்து அத்வைத் பெட்ரோல் பங்க் எதிரில் இருக்கும் பூங்காவில் போய் உட்கார்ந்திருக்கலாம்.

கங்கோத்ரி சர்க்கிள் தாண்டி திரும்பினேன். அட, மனுசன் திரும்புவதற்குள் ஏன் தான் வண்டியை இடிக்கற மாதிரி ஓட்டுறாங்களோ? உரசி சென்ற வேனை திட்டியது மனது. அட இது என்ன, இப்போ தான் குளித்து முடித்து வருகிற பெண். மொபைலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டே என்னைக்கடந்தாள். ஆஹா. என்ன பர்ப்ஃயூம் யூஸ் பண்ணுகிறாள். ரொம்ப நல்லாருக்கே. முனைதாண்டி இடது திரும்பி நடை தொடர்ந்தது. இது என்ன வீட்டின் முன் நின்று கும்மாளம் அடிக்கின்றனர். ஏதோ விசேஷமாயிருக்கும். பூங்கா பக்கம் கால்கள் திரும்பியது. உள்ளே போய் உட்காராமல் இவன் ஏன் வெளியே உட்கார்ந்திருக்கிறான். இவனுக்கு என்ன சோகமோ?. பூங்கா வாசலில் நாலு பெரியவர்கள் உட்கார்ந்திருந்தனர். வாசல் பூட்டியிருந்தது. கன்னடம் படிக்கத் தெரியாது. ஆனாலும் அங்கிருந்த தட்டியில் எழுதியிருந்ததை பார்க்கையில் நாலு மணிக்கு தான் திறக்கப்படும் என்று புரிந்தது. சரி. போய் பணமாவது எடுத்து வரலாம்.

எப்பவுமே பரபரப்பாக இருக்கும் பி.டி.எம் சிக்னலை கடந்தாயிற்று. ஆமாம் ஞாயிற்றுக்கிழமை அதுவும், மக்கள் கூட்டம் கூட்டமாய் எங்கே தான் போகிறார்கள். ஆங்காங்கே தென்பட்ட ஜீன்ஸ் போட்ட மகளிர் கூட்டத்தை பார்த்து மனம் அசைபோட்டது. உடுப்பி கார்டன் தாண்டி.. அட வழக்கம் போல் கொய்யா வியாபாரி இருக்கிறானே. வயிறும் சற்று பசியால் துடிக்க ஆரம்பித்திருந்தது. அவனிடம் சென்று ஒரு கொய்யா வாங்கி நடக்க ஆரம்பிதாகிவிட்டது. அடுத்து எங்கு செல்வது? நேராக ஏ.டி.எம் போகலாமா? இல்லை. வேறு எங்கேனும் வெட்டிய கொய்யா துண்டினை சுவைத்தபடி மறுபடி சிந்தனை. எங்கியாவது போகலாம். வலப்புறம் திரும்பாமல் நேராக கால் நடந்தது.

எதிரில் ஒரு ஜோடி. இதென்ன இவர்கள் நண்பர்களா.. காதலர்களா.. இல்லை தம்பதியா?. பையன் நல்ல உயரம். கருப்பாய் இருந்தான். பெண் மாநிறமாயிருந்தாலும் ஏக லட்சணமாய் இருந்தாள். அவனுடன் பேசுகையில் கண்ணில் வெட்கம். காதலுக்கும் கலருக்கும் சம்பந்தமே இல்லை தான். பேசிக்கொண்டே அவர்கள் என்னைக் கடக்கையில் தமிழர் என்று புரிந்தது. இந்நேரம் எங்கே போகிறார்கள். சாப்பிட இருக்கலாம். மற்றுமொரு கொய்யா துண்டை வாய்க்கு கை கொண்டு போனது. இதென்ன கொய்யா பழமாவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல். சுற்றி நடக்கும் மக்கள் வேகமாக மிக வேகமாய் இயங்குவதாய் தோன்றிற்று. எனக்கென்ன வேலை. பொறுமையாய் கொய்யாவின் ஒவ்வொரு விதையாய் நாவில் துழாவி பற்களுக்கிடையில் கொடுத்து கடிப்பதில் சுகமாய் இருந்தது. கால்கள் நடந்தாலும் கண்கள் பாதையைப் பார்த்தாலும் மனம் கொய்யாவின் விதைகளில் இருந்தது. அட.. கொய்யாவின் விதை இப்படியா சுவைக்கும். இதுவரை தனியே பிரித்து கடித்ததில்லையே. பொறுமையாக அந்தத் துண்டு கொய்யாவை முடித்திருக்கையில் நின்றிருந்த ஒரு பேருந்து அருகே வந்திருந்தேன்.

பக்கத்தில் ஒரு மைதானம். கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். பேருந்தினுள் பார்த்தேன். அது தான் கிளம்பும் இடம் போலும். கிளம்பும் நேரமாகாததால் யாருமில்லை. நடத்துனர் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தார். பலத்த சிந்தனை போலும். சரி. திரும்பலாம் என்று எண்ணிய மனம் கால்களுக்கு கட்டளையிட்டது. சோர்வைடைய ஆரம்பித்திருந்த கால் திரும்ப எத்தனிக்க கண்கள் வழி நோக்கி அருகில் வாகனம் வந்து கொண்டிருப்பதை தெரிவிக்க கால்களை துரிதப்படுத்த மூளை கட்டளையிட சாலையை கடந்தாயிற்று. வந்த வழி வேண்டாம். வேறு வழி போகலாம். அடுத்த தெருவின் வழியாக பயணம். இதற்குள் கொய்யா முழுவதுமாய் முடிந்திருந்தது. இடப்பக்கத்தில் குப்பைக்கூளம் குவிந்திருந்தது. துர்நாற்றம். பக்கதிலேயே பத்தடி தூரத்தில் குடிசைகள். இதிலேயும் மக்கள் வாழ்கிறார்களே. எனக்கு நிற்கவே முடியவில்லை. வயிற்றை பிரட்டுகிறது. ஆமாம். வயிறு வலித்ததே. என்னாயிற்று?. வயிற்று வலி சுத்தமாய் நின்றிருந்தது. ஆமாம். முதுகும் இடுப்பும் வலிப்பது போலிருந்ததே. கெண்டைக்காலில் நரம்பி இழுத்தது. காலில் குடைச்சலாய் இருந்தது. ஓ..சரி. நமக்கு பிரச்சனை இருக்கிறது. மேலும் போவோம்.

சின்ன தெரு அது. தெருவையே அடைத்து கார்கள் நின்றிருந்தது. என்னமாய் வீடு கட்டுகிறார்கள். அழகழகாய், விதவிதமான வண்ணங்களில், வடிவமைப்பில். நாமும் கார் வாங்கணும். இப்போதைக்கு முடியுமா? இல்லை. வாங்கினால் சோற்றுக்கு லாட்டரி தான்.

கால்கள் உடலைத் தாங்கி மெயின் ரோட்டை அடைந்திருந்தது. எதிரில் தனியார் வங்கி. அதனருகில் இளநீர் கடை. அங்கே பார். ஒரு பெண் இளநீர் கொண்டு ரோட்டைக் கடக்கிறாள். கல்யாணமாயிற்று போலும். எவ்வளவு அழகாய் உயரமாய் லட்சணமாய் இருக்கிறாள். அவள் கட்டிருக்கும் புடவை பாந்தமாய் இருக்கிறதே. மனமும் உடலும் அவளைக் கடந்தது. எல்லாக் கடைகளிலும் இப்படி தானா? ஒரே கூட்டமாய் இருக்கிறது. அதிலும் எக்கச்சக்கமாய் பெண்கள். ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிகிறது. பெண்கள் இருவராய் எங்கேயும் போவதில்லை. ஒன்று ஆண் துணையுடன் போகின்றனர். இல்லை மூன்று பெண்களாய் போகின்றனர்.

கடைகள் தாண்டி பழைய வீடு ஒன்று வந்தது. புதுப்பித்துக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை கூடவா வேலை செய்யணும். இவங்க இவ்ளோ கஷ்டப்படுறாங்க. நாம சொகுசா பிடிச்சா தான் வேலை செய்வோம். வருமானம் சரியில்ல. அது இதுன்னு சொல்லியே காலத்த ஓட்டுறோமே?

வந்தாயிற்று ஏடிஎம். முன்னே இரண்டு பெண்கள். உள்ளே ஒருவன் பணம் எடுத்துக் கொண்டிருந்தான். பெண்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். ஆண் வெளியே வர ஒரு பெண் உள்ளே சென்றாள். சற்று பருமனானாலும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். பார்வையை திருப்பி ரோட்டில் வாகனங்களை பார்த்திருந்தேன். நேரமாயிற்று இந்த பெண் வந்த மாதிரி தெரியவில்லையே. உள் நோக்கினேன். ஏடிஎம் ஸ்லிப் எடுத்து கிழித்து கீழே போட்டாள். பார்வை கீழே சென்றது. இதென்ன இந்த பெண் கால்கள் இவ்வளவு கலராய். அங்கே பார் அவள் தோலினூடே செல்லும் பச்சை நரப்பு கூட தெரிகிறதே. அடேய்..இப்படி பார்ப்பது தப்புடா. சட்டென்று பார்வையை வேறுபக்கம் திருப்பினேன்.

அவள் வந்து நான் சென்று பணம் எடுத்தாயிற்று. அடுத்து என்ன பண்ணலாம். வீட்டை விட்டு வந்து முக்கால் மணிநேரத்திற்கும் மேலிருக்கும். வீட்டிற்கு போகலாமா? இல்லை பார்க்கில் போய் உட்காரலாமா?

தேடிகிட்டு இருக்க போறாங்க. ஒன்னும் சொல்லாம வந்துட்டோம். வீட்டுக்குப் போகலாம். வழியில் அந்த இளநீர் கடையில் நின்று தண்ணியாய் வாங்கி இளநீரை குடித்தேன். அவ்வளவு சுவைக்கவில்லை. வீட்டுக்குப் போகலாம். சீக்கிரம் போகணும். தேடப் போறாங்க. சாப்பாடு வேற ஆர்டர் பண்ணியிருந்தாங்க.
கால்கள் துரிதகதியில் நடக்க சிக்னல் தாண்டி நடந்தேன். மனம் கால்கள் மேலே இருந்தது. பத்தே நிமிடங்கள். இதோ வீடு அருகில். மனம் அமைதியாய் சலனமில்லாமல். சீக்கிரம் போகணும். காத்துட்டு இருக்கப்போறாங்க. ஆமாம். நடக்க ஆரம்பித்து ஒரு மணிநேரத்துக்கு மேலிருக்கும். ஆனாலும் முதுகிலோ இடுப்பிலோ வலியில்லையே. ஆனா அந்த டாக்டர் ரொம்ப நேரம் நடக்கக்கூடாது. நடந்தா பிரச்சனை அப்படி இப்படின்னு சொன்னார். நாமளும் இவ்ளோ நாளா நடக்காம இருந்துட்டோம். கால்ல கூட வலியில்லையே. இந்த டாக்டருங்களே இப்படித் தான். சரியாவே ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க.

அபார்ட்மெண்ட் படிகளில் ஏறும் போது டாக்டர் மேல் கோவம் கோவமாய் வந்தது.

சிவா.ஜி
20-01-2008, 12:11 PM
அட அட அட....என்னா ஒரு வீதியுலா...மதி கையைக் குடுங்க.அபாரமான கவனிப்பு.சின்னச் சின்ன விஷயங்களைக் கூட விடாமல் கவனித்திருக்கிறீர்கள்.அப்படி கவனித்ததை நினைவுதகட்டில் பதிந்து இங்கே பதிவேற்றியிருக்கிறீர்கள்.அருமை.

எப்போதுமே அப்படித்தான் மதி.ஒரு பிரச்சனையை நினைத்துக்கொண்டிருந்தால்தான் அது இன்னும் வீரியமடையும்.அதை மறந்து வேறு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் மனம் லேசாகிவிடும்.அதோடு அந்த பிரச்சனையும் அப்போதைக்கு மறந்துவிடும்.
உங்கள் வயிற்று வலியும் கால்வலியும் மாயமானது அப்படித்தான்.
சூப்பர். பாராட்டுக்கள் உங்கள் எழுத்துவன்மைக்கு.

மதி
20-01-2008, 12:28 PM
உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சிவாண்ணா...

நீண்ட நாள் கழித்து எனது மொக்கையில்லா படைப்பு இது.

இந்த கதையில் 90 சதவிகிதம் உண்மை.. இன்று மதியம் நடந்தது. இன்னும் நிறைய இருக்கு.. ஆயினும் ரொம்பவும் இழுப்பது போல் தோன்றியதால் விட்டுவிட்டேன்.. இதை எழுதிய காரணத்தை சொல்லலாம்னு நினைக்கிறேன்.

மனம் எல்லைக்கப்பாற்பட்டது. அதை அடக்குதல் மிகக் கடினம். இங்கேயும் அப்படி தான். மனம் நினைப்பதை அப்படியே வெளிப்படுத்தினால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். அதனாலேயே நினைப்பதற்கு வேறு ஒரு வடிவம் கொடுத்து பேசுகிறோம். எழுதறோம். இதில் நினைத்த கொச்சையான அருவருப்பான விஷயங்களை தவிர்க்கிறோம். இது நம் 'இமேஜ்' சம்பந்தப்பட்ட விஷயம்.

இதிலும் உள்ளவாறே தான் சொல்லிருக்கிறேன். அசிங்கமாக ஏதும் நினைக்கவில்லை. நினைத்திருந்தாலும் எழுதியிருக்க மாட்டேன். ஏன்னா மன்றத்தில் 'மதி'ன்னு ஒரு உருவம் இருக்கு.

மேலும் நடக்க ஆரம்பித்த பத்தடிக்குள்ளேயே கவனிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. நாம இதுல எதையும் கவனிக்காம வேகவேகமா எது எதையோ நோக்கி மின்னல் வேகத்தில் பயணிக்கிறோம். பக்கத்தில் நடப்பதை கவனித்தாலென்ன என்பதன் வடிவமே இது..

பூமகள்
20-01-2008, 12:29 PM
'மதி'ய உலா..
கோபத்தோடு கிளம்பி..
கண்ணுக்கு குளிர்ச்சி பல கண்டு..
சாந்தமாக திரும்பிய வரை...

ஒவ்வொரு வினாடியும் நினைத்ததை நினைவு கூர்ந்து சொல்லிய விதம் அசர வைக்கிறது.
அதிலும், முக்கியமா கால் வலி இடுப்பு வலி கூட மாயமானது மிக நல்ல செய்தி.

இடையில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றி மனம் சொல்லியது ஒரு நல்ல உள்ளம் உங்களுக்குள் ஒளிந்திருப்பதை இன்னும் அழகாக காட்டியிருக்கிறது..(தப்பா நினைக்காதீங்க..:icon_ush: ஏற்கனவே நல்ல உள்ளம் உங்களுக்கு நிறைய இருக்குங்க..!:D)

எல்லாவற்றிக்கும் மேல், எத்தனை பேரு தனது இமேஜ் கடந்து நினைத்தவற்றை வெளியில் சொல்ல துணிகிறார்கள்...??!! :rolleyes::icon_b:

இப்படி வெளிப்படையாய் இருப்பது மிகுந்த ஆச்சர்யமாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது. :icon_rollout:

சமீப காலங்களில் எழுத்து வன்மை உயர்ந்து கொண்டே செல்கிறது.:aktion033:

பாராட்டுகள் மதி. :icon_b:

மதி
20-01-2008, 12:31 PM
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பூமகள்..

சிவா.ஜி
20-01-2008, 12:47 PM
சரிதான் மதி.இந்த இமேஜ் என்ற வளையம் யாரையும் விட்டுவைப்பதில்லை.தெரிந்தோ தெரியாமலோ நமக்கென ஒரு இமேஜ் உண்டாகிவிட்டால் அதை தக்க வைத்துக்கொள்ள பிரம்மப் பிரயத்தனப்படுகிறோம்.அதற்காக நம் கருத்துக்கு ஒவ்வாத சில விஷயங்களுக்குக்கூட ஆமாம் போட வேண்டியதாகிவிடுகிறது.ஆனால் சிலர் உண்மையான முகம் மறைத்து தங்களின் இமேஜை நல்லவனாகக் காட்டவேண்டுமென்றே திட்டமிட்டு செய்கிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் மிக ஆபத்தானவர்கள்.ஆனால் பரிதாபம் பாருங்கள் அப்படிப்பட்டவர்களைத்தான் இந்த பெண்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.பாவம் அவர்கள்.

உங்களின் எண்ணமும்,அதன் வெளிப்பாடும் மிக வெளிப்படையாக இருக்கிறது.நீங்கள் சொன்னதைப் போல பத்தடி நடந்தாலே பல விஷயங்களை கவனிக்க முடியும்.ஆனால் நாம் என்ன செய்கிறோம்....எதையும் கவனிக்காமல் எதையோ சிந்தித்துக்கொண்டு நல்ல பல விஷயங்களை விட்டுவிடுகிறோம்.இந்த மதிய உலாபோல சில உலாக்கள் தேவை மதி.மிக ஆரோக்கியமானது.நிறைய மன அழுக்குகளைக்கூட களைந்துவிடும்.உடல் உபாதை நீங்குவது ஒரு நன்மையென்றால்,மன உபாதைகளும் சேர்ந்து நீங்குவது இதன் சிறப்பு.

அனுபவித்துப் படித்தேன்.மிக அருமை.

யவனிகா
20-01-2008, 04:00 PM
நிஜமாவே ரொம்ப நல்லா இருந்தது மதி...

முற்றிலும் வேறுபட்ட மதியை பார்க்க முடிந்தது...

நடையிலும் கூட வேறு பரிணாமம்...ஆனால் எனக்கு கலகல மொக்கை மதி தான் பிடிக்கும்...அப்பப்ப கொஞ்சம் சீரியஸா எழுதிட்டு, மறுபடி மொக்க போட திரும்பி வந்திடனும் தெர்தா...

அது சரி உங்க கூடவே...நடந்து வந்தமே...வாங்கின கொய்யாப் பழத்தில பாதி தரணும்னு தோணுச்சா....

உங்களுக்கு இப்படி முணுக்குன்னு கோபம் வருமா மதி? என் கற்பனையில், என்ன கலாய்த்தாலும், தட்டி விட்டுப் போகிற ஜாலி இளைஞன் மதி என்று நினைத்திருந்தேன். சரி உடல் நலக் குறைவின் போது மற்றவர் மேல் கோபம் வருவது இயற்கைதானே...அழகாக கூட்டவே பயணித்த உணர்வு மதி...அடுத்த தடவ கோவிச்சிட்டுப் போகும் போது கொஞ்சம் கூட காசு எடுத்து வைங்க பாக்கெட்ல...அப்புறம் போன் அடிச்சு சொல்லுங்க...அக்கா...நான் கோவிச்சிட்டேன்...ரெடி ஸ்டார்ட் அப்படின்னு...நாம ஒரு கண்டன ஊர்வலம் நடத்தலாம் சரியா...பேனர் கோஷம் எல்லாம் என் பொறுப்பு...பூ, தொடங்கற இடத்தில பெருசா கோலம் போடுமாம்...சிவா அண்ணா சரவெடிக் கவிதைகள் ஸ்பான்சர்...தாமரை நடைப்பயணம் அலுக்காம இருக்க அப்பப்ப எல்லாரையும் கடிப்பார்...நம்ம ஜெயாஸ்தா ரொம்ப யோசிப்பார்...ஆனா பேஸ்மாட்டார்...முதல் கோசம் போட இதயம்..அவருக்கு அடுத்தது பின் பாட்டு நுரையீரல்....பேங்களூர் பேதி ஆகப் போகுது...

மதி கெட்ட மடையா எங்கள் மதியை இடிப்பாயா?

பனை மரத்துல வௌவாலா?
மதிப் பயனுக்கே சவாலா?

குடிக்காதே குடிக்காதே
கொக்ககோலா குடிக்காதே
இடிக்காதே இடிக்காதே
மதிய நீயும் இடிக்காதே...


எப்படி இருக்கு ஒப்பனிங்...அக்கா மனசு தாங்கல மதி தாங்கல...இன்னி யாராவது உன்னை எக்குத்தப்பா இடிச்சா நீ, ம்ம்ம்னு ஒரு வார்த்த சொல்லு நான் ஹெலிகாப்டர் அனுப்பறேன்...

மதி
20-01-2008, 05:11 PM
அட அட அட..
தன்யனானேன் அக்கா..

இப்படி ஒரு சப்போர்ட்டா..! கோவம் வருவது இயற்கை தானே... சில வருடங்களாய் கோவத்தை மிகவும் குறைத்துள்ளேன். இப்பவும் மொக்கைத் தனமாய் தானுள்ளோம். வெங்காய பாய்ஸ் தான். ஆயினும் அத்திப்பூத்தாற் போல் கோவம் வருகிறது.. எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றாலும் திரும்பத் திரும்ப அதே எண்ணங்கள் வருவதால் வெளியே போவதென்று நினைத்து.. நடந்தவை இவை.

இப்படி மற்ற விஷயங்களை கவனித்து போனதால் கோவம் சுத்தமாய் போய்விட்டிருந்தது. உள்ளே நுழைந்தவுடன் ஆளாளுக்கு விசாரணை.'சாப்டியாடா? உனக்கு சாப்பாடு இருக்கு. சாப்பிடு' அது இதுன்னு. அப்புறம் சாப்பிடறேன்னு உட்கார்ந்து யோசிச்சப்ப எழுதத் தோன்றியது. உடனே எழுதிட்டேன்.. இதிலேர்ந்து கத்துக்கிட்ட மற்றொரு பாடம், என்ன தான் கோவம் வந்தாலும் கொஞ்சம் நிதானித்தால் போதும். உறவுகளுக்குள் என்றும் பிரிவேற்படாது.

அடுத்த முறை உங்களுக்கும் சேர்த்து ஒருகொய்யா வாங்கிடறேன்..

மறுபடி உங்க ஆதரவுக்கு நன்றி..

மனோஜ்
20-01-2008, 06:06 PM
மதி நடந்து நடந்து வாழ்கையின் சாரி ஏடியம்மின் இருதி வரை சென்றது அருவை சாரி சாரி அருமை

மயூ
21-01-2008, 02:04 PM
மதி அவர்கள் கையில் ஒரு நோட்டுடன் அலைந்து திரிவதாக்ப் பேசிக்கிட்டாங்க... இதுதான் அதன் ரிப்போர்ட்டோ???

மதி
21-01-2008, 02:09 PM
மதி அவர்கள் கையில் ஒரு நோட்டுடன் அலைந்து திரிவதாக்ப் பேசிக்கிட்டாங்க... இதுதான் அதன் ரிப்போர்ட்டோ???

:D:D:D:D:icon_ush::confused::confused::confused::icon_ush::icon_ush:

மயூ
22-01-2008, 01:40 AM
மதி நடந்து நடந்து வாழ்கையின் சாரி ஏடியம்மின் இருதி வரை சென்றது அருவை சாரி சாரி அருமை
மதி நடந்தார்... நடந்தார்... நகர எல்லையில் இருக்கும் ATM வரை நடந்தார்... அங்கே.. ஸ்கேர்ட்டு போட்ட ஆண்டி நின்றதால் திரும்பி வந்துவிட்டார்!!!! :rolleyes:

மலர்
06-02-2008, 03:06 PM
மதி..
உண்மையிலே படிச்சி ரசிச்சேன்..
நம்ம மனசு இருக்கே அது எவ்ளோ வேகமா சிந்திக்குது.. பாருங்களேன்
யார்கிட்டயாச்சும் பேசுறப்போ ரோட்டில் நடந்து போறப்போ பஸ்ல போறப்போ நானும் எவ்வளவோ நினைச்சிருக்கேன்.. ம்ம் அதைவிட சில சமயம் தனியா இருக்கிறப்போ ஏதாச்சும் நினைச்சி சிரிப்புவந்திரும் அப்புறம் சிரிச்சிற கூடாது அப்படிங்கிறதுக்காக கஷ்டப்பட்டு உதட்டைகடிச்சி அடக்குவேன்..
அதெ மாதிரி தான் சிலவற்றை பார்ப்பேன் அப்புறம் மல்ரு தப்புன்னு கவனத்தை வேற எங்கேயாச்ச்சும் திசைதிருப்புவேன்..
நான் நினைச்சதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது..
ஆனால் இவ்ளோ அழகா வெளிப்படையா எழுதின மதிக்கு ஒரு ஓஓ...
மதி இப்போ எல்லாம் உங்கள் எழுத்து மெருகேரிக்கிட்டே இருக்கு...
ம்ம்ம் இன்னும் நிறைய எழுத நிறைய வாழ்த்துக்கள்....


பெண்கள் இருவராய் எங்கேயும் போவதில்லை. ஒன்று ஆண் துணையுடன் போகின்றனர். இல்லை மூன்று பெண்களாய் போகின்றனர். மதி....பொண்ணுங்கள் இப்படித்தான்னு யாராலையுமே அவ்ளோ ஈசியா கணித்து சொல்லிட முடியாது....
ம்ம்ம் இப்போ பாருங்க நானும் அக்காவும் தான் எங்கேயும் ஒண்ணா சுத்துவோம்...

மதி
06-02-2008, 03:14 PM
விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி மலர்..
அப்போ இருந்த மனநிலையில் எழுதியது... திரும்ப அதை நினைத்தால் சிரிப்பாய் வருகிறது.. கோச்சுக்கிட்டு வீட்ட விட்டு போனேனோ..? இப்படி தான் எல்லா செயல்களுமே வெவ்வேறு தருணங்கள்ல வெவ்வேறு பிரதிபலிப்பை ஏற்படுத்துது..

உண்மை தான்.. யாராலும் பெண்களை புரிந்து கொள்ள(ல்ல) முடியாது தான்.. அன்று நான் பார்த்ததைத் தான் எழுதினேன்.. வேறொன்றும் இல்லை.. ஹிஹி... அவங்க யார் கூடவாவது போனா என்ன..? தனியா போனா என்ன..? என் கூட வரலியே..????

aren
06-02-2008, 03:15 PM
எப்பொழுதும் மூன்று பெண்கள் இல்லையென்றால் ஆண்துணையுடன். ஆனால் பணம் எடுக்கும்பொழுது மட்டும் இரண்டு பெண்கள்.

நல்லாவே கவனித்து எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

இவ்வளவுகாலம் உங்கள் திறமைகளை எங்கே பூட்டி வைத்திருந்தீர்கள். இனிமேலாவது ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடுங்கள்.

மதி
06-02-2008, 03:21 PM
நன்றி ஆரென்..
திறமையெல்லாம் ஒன்றும் இல்லை..
ஏதோ தோணியது எழுதியாயிற்று..!

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க... பணம் எடுக்கும் போது ரெண்டு பெண்கள்.. நடந்து கொண்டிருந்த பெண்களை பற்றி யோசித்தவன்.. இவர்கள் இருவராய் இருந்ததை யோசிக்கவில்லை.. :)

aren
06-02-2008, 03:22 PM
நன்றி ஆரென்..
திறமையெல்லாம் ஒன்றும் இல்லை..
ஏதோ தோணியது எழுதியாயிற்று..!

கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க... பணம் எடுக்கும் போது ரெண்டு பெண்கள்.. நடந்து கொண்டிருந்த பெண்களை பற்றி யோசித்தவன்.. இவர்கள் இருவராய் இருந்ததை யோசிக்கவில்லை.. :)

நாங்க எப்போதும் ஸ்டடி கண்ணா!!! கரீக்டா கவனிப்போம்!!!

மலர்
06-02-2008, 03:40 PM
நாங்க எப்போதும் ஸ்டடி கண்ணா!!! கரீக்டா கவனிப்போம்!!!
இதையெல்லாம் மட்டும் கரீட்டா கவனிப்பீங்களே....... :eek: :eek:

aren
06-02-2008, 03:44 PM
வேறு எதை கவனிக்கலேன்னு சொல்லுங்களேன்!!!

முடியாது மலரு முடியாது!!!

மலர்
06-02-2008, 03:45 PM
ஹிஹி... அவங்க யார் கூடவாவது போனா என்ன..? தனியா போனா என்ன..? என் கூட வரலியே..???? நல்லதுன்னு நினைச்சிக்கோங்க...மதி
அப்புறம் அய்யோ என் எடிம்ல இருந்த மனியை காணோமேன்னு இதேமாதிரி இன்னொரு உலா வருவீங்க..... :D :D

aren
06-02-2008, 03:48 PM
நல்லதுன்னு நினைச்சிக்கோங்க...மதி
அப்புறம் அய்யோ என் எடிம்ல இருந்த மனியை காணோமேன்னு இதேமாதிரி இன்னொரு உலா வருவீங்க..... :D :D

அத்தோட நிறுத்துவாரா. பினாத்த ஆரம்பிச்சுடுவாரே.

இன்னிக்கு இ-பணம் வேண்டும் என்று காலையிலிருந்து ஒரே புடுங்கல். அந்த தருமியே போதும்னு ஆயிடுச்சுன்னா பார்த்துக்கொள்ளுங்களேன்.

மலர்
06-02-2008, 03:48 PM
முடியாது மலரு முடியாது!!!
ஆரென் அண்ணா....
மலருக்கு எங்கிட்ட இருக்கிற அய்கேஷ் 12000யிரத்துல ஒரு பத்தாயிரத்தை கொடுக்காம இருக்க என்னால முடியவே முடியாது.... ன்னு தானே சொல்ல வாரீங்க....
ஹீ..ஹீ.... உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லைன்னா.... :icon_rollout: :icon_rollout:

aren
06-02-2008, 03:50 PM
மலர் எவனாவது ஜிட்டு வைச்சுக்கிட்டு இருப்பான் அவன்கிட்டே போய் கேளுங்கள். கொடுப்பான்.