PDA

View Full Version : இறைவனின் இன்முகம்



சாலைஜெயராமன்
20-01-2008, 03:49 AM
http://www.tamilmantram.com/photogal/images/3960/medium/1_RyanSmile1.jpg

இறையின் இருப்பை இன்முகத்தில் காட்டும்
இனிய நிலைதானே இறைவன் தந்தது
கள்ளங்கபடில்லா இந்னிலை காலமும் கனிந்து நிற்க
வள்ளலின் வாய்மையை வணங்கி வாழ்த்துவோம்
அறத்தின் அழகை அள்ளித் தந்தான் இறைவன்
காலத்தால் இக்குணம் கலங்காமல் காக்க
காத்து நிற்போம் பதம் பணிந்து

சிவா.ஜி
20-01-2008, 05:50 AM
கள்ளமில்லா பிள்ளைச் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.அழகான இந்த புத்தம்புதியபூவின் சிரிப்பு உள்ளத்தைக் கொள்ளைகொள்கிறது.அதற்கான கவியும் அருமை ஜெயராமன் அவர்களே.வாழ்த்துகள்.

மனோஜ்
20-01-2008, 07:55 AM
குழுந்தைகள் போன்ற மனம் யாருக்கும் இருக்காது
கல்லம் கபடற்ற உள்ளம்
கவிதை அருமை நன்றி ஜெய்

அமரன்
24-01-2008, 08:45 AM
அன்பே சிவம்..
எல்லாருக்கும் பொதுவாகச் சொன்னால் அன்பே ஆண்டவன்...
அன்பு சிரிக்கவைக்கும், அழவைக்கும், சோதிக்கும் எல்லாம் செய்யும்...
எல்லாருக்கும் பிடித்தமான அன்பு சிரிக்கவைக்கும் அன்பு.!!!!!:confused::confused:
அறவழி ஒழுகும் அப்பழுக்கற்ற அன்பைப் பேணுவோம்

சுகந்தப்ரீதன்
02-02-2008, 11:19 AM
உலகில் இறைத்தன்மை எஞ்சி இருப்பது பிஞ்சு முகத்தில் மட்டுமே...!!

வாழ்த்துக்கள் நண்பரே..!!

இளசு
12-02-2008, 10:07 PM
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
இறைவன் மனித இனத்தின் மேல்
இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பதின்
எடுத்துக்காட்டே என்பார்கள்..

சாலையாரின் கவிதை அதை நிரூபிக்கிறது மீண்டும்.. வாழ்த்துகள்!