PDA

View Full Version : செக்குறுட்டி கோட் மறந்தால் என்ன பண்ணுவது



தீபன்
20-01-2008, 02:48 AM
வணக்கம் நண்பர்களே...

நான் 6610i நோக்கியா போன் பாவித்துவருகிறேன். சிலகாலங்களுக்குமுன் ஏதோ தேவைகருதி அதில் செக்குறுட்டி கோட் மாற்றி பாவித்தேன். பின் அதை நீக்கிவிட்டேஎன். அண்மையில் வேறு சிம் காட் போட்டு பாவிக்க முற்பட்டபோது செக்குறுட்டி கோட் கேட்கிறது... ஆனால் அதை நான் மறந்துவிட்டேன். இப்ப என்ன பண்ணலாம்...!? (முதல் பாவித்த சிம் காட்டிற்கு செக்குறுட்டி கோட் கேட்காமல் இப்பவும் வேலை செய்கிறது..!).

அன்புரசிகன்
20-01-2008, 03:05 AM
எனக்கு தெரிந்த வரை நீங்கள் உங்கள் அலைபேசியின் Factory Settings ஐ Restore செய்து பாருங்கள். இதனால் நீங்கள் சேமித்த புதிய ring tones ஐ இழக்க நேரிடலாம். இல்லாவிட்டால் அந்த அலைபேசி உங்களுடையது தான் என உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் உங்கள் அலைபேசி இணைப்பு வழங்குனரிடம் சென்று அதை நிவர்த்திசெய்யலாம்.

(வெளியிடங்களில் குறுக்குவழிகளிலும் செயற்படுத்தலாம். ஆனால் அது சட்டவிரோதம். தற்காலங்களில் தமிழரான நீங்கள் வெளிப்பிரதேசங்களில் இவ்வாறான வேலைகளை செய்யமுயன்றால் உங்களை விடுதலைப்புலிகள் என கருதி மாட்டிவிடுவார்கள். கவனம்.)

இதயம்
20-01-2008, 03:23 AM
நண்பர் குறிப்பிட்டிருப்பது சிம் கார்டின் பின் கோட் அல்ல, அலைபேசியின் செக்யூரிட்டி எண் என நினைக்கிறேன். இந்த பிரச்சினையை சரி செய்வது மிகவும் எளிது. இணையத்தில் அலைபேசியின் செக்யூரிட்டி கோட் எண்ணை Reset செய்ய நிறைய செயலிகள் கிடைக்கின்றன. அது தொடர்பான தலைவலியே வேண்டாம் என்றால் அலைபேசி பழுதுபார்க்கும் கடையில் கொடுத்தால் அவர்கள் 1 நிமிடத்தில் Reset செய்து தருவார்கள்.

Factory Settings என்பது நோக்கியாவின் Default settings கொண்டு வர மட்டுமே பயன்படுகிறது. நாம் அலைபேசியில் ஏதாவது தெரியாமல் எக்குத்தப்பாக செட்டிங்ஸ் மாற்றி விளையாடி, அதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இது பயன்படும். அதுமட்டுமல்லாமல் அதை தேர்ந்தெடுத்து மாற்ற வேண்டுமெனில் அலைபேசி இவர் மறந்ததாக சொல்லும் கோட் எண்ணை தான் கேட்கும். எனவே இது பயனளிக்காது. செட்டிங்ஸ் மாற்றும் போது நம் ரிங் டோன்ஸ் எதுவும் இழக்கப்படாது. மாறிப்போகும் அவ்வளவு தான்..!! சிம் கார்டின் பின் கோட் எண் மறந்து போனால் தான் நீங்கள் பயன்படுத்தும் சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும்..!!

நுரையீரல்
20-01-2008, 03:41 AM
தீபன் நீங்கள் உபயோகப்படுத்தும் அலைபேசியானது, அலைபேசி சேவகம் செய்யும் குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படி வாங்கியிருந்தால் அந்த அலைபேசியில் குறிப்பிட்ட சிம்கார்டு மட்டுமே வேலை செய்யும்.

வேறோரு நிறுவனத்தின் சிம்கார்டை போட்டால் செக்யூரிட்டி கோடு கேட்கும். நான் சொன்னது போல் இருந்தால், எந்த சிம்கார்டு போட்டால் வேலை செய்கிறதோ.. அந்த சிம்கார்டு நிறுவனத்திடம், உங்கள் தொலைபேசியைக் கொடுத்து Reset செய்யட் சொல்லுங்கள்..

அன்புரசிகன்
20-01-2008, 08:40 AM
அது தெரியும் இதயம். அதாவது நொக்கியா என்றால் 12345 என்ற இலக்கம் சாதாரணமாக வரும். செயலியைப்பயன்படுத்தி நீங்களே செய்வது சட்டவிரோதம். அவற்றை பற்றி இங்கு கூறமுடியாது. (மன்ற விதிகளின் படி) இதற்கு தகுந்த ஒரே வழி நுரையீரல் கூறியது போல் எந்த சிம் காட் இயங்குகிறதோ அந்த வழங்குனரிடம் சென்று செயற்படுத்துவது தான் சாலச்சிறந்தது. இலங்கையில் தற்போதய நிலையில் வேறு குறுக்கு வழியில் சென்று பின்னர் சிக்கலில் மாட்டிவிடவேண்டாமே என்றுதான் சொன்னேன்.

(ஒரு விடையம் Factory reset செய்தால் உங்கள் அலைபேசியின் பாதுகாப்பு குறி மீண்டும் பழையதற்கு வந்துவிடும். ஆனால் அது செய்வதற்கு அது அந்த பாதுகாப்பு குறியை கேட்கும். ஆகவே அந்த முறை சரிவராது)

தவிர சிம் காட் சிறைப்பட்டால் அதை அந்த வலையமைப்பு வழங்குனர் தவிர்ந்த வேறு எவரிடமும் சென்று செயற்படுத்தமுடியாது.. காரணம் அந்த PUK எண் அவர்களுக்கு உரித்தானது. மற்றயவர்கள் அதை கையாளுவதும் சட்டவிரோதம். ஆனால் ஒரு சிம் சிறைப்பட்டால் வேறு வழங்குனரின் சிம் ஐ பயன்படுத்த முடியும். முன்பெல்லாம் சாதாரண வீதிக்கடைகளில் 200-300 ரூபாவிற்கு இதனை செய்துகொடுப்பார்கள். தற்போதய காவல் மற்றும் இராணுவ கெடுபிடிகளால் இவற்றை செய்ய பயப்படுகிறார்கள்.

Take your Own risk to release.

இதயம்
20-01-2008, 08:49 AM
இது ஒரு மிகச்சாதாரண விஷயம். இங்கே சவுதியில் ஒரு நாளைக்கு பல பேர் வந்து சரி செய்து எடுத்துச்செல்கின்றனர். யாரும் அதைப்பற்றி எந்த கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், இலங்கையில் இது ஒரு குற்றம் போல் நினைக்கப்படுவது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி அன்பு..!

அன்புரசிகன்
20-01-2008, 09:11 AM
முன்பு நீங்கள் கூறுவது போல் தான் இருந்தது. திருட்டு அலைபேசிகள் என்ற ஒரு காரணம் ஒன்று. இன்னொன்று அரசாங்கத்தின் பாதுகாப்பு கெடுபிடிகள். வேறு ஒன்றுமில்லை. ஆனால் வாங்கிய பற்றுச்சிட்டு இருந்தால் ஒரு பெரியவிடையமல்ல. ஒரு சில வினாடிகளில் நொக்கியா கம்பனியில் (பம்பலப்பிட்டி-கொழும்பு 4 - இலங்கை) இதை செய்து தருவர்.

தீபன்
21-01-2008, 03:48 PM
நன்றி தோழர்களே. இதயம் குறிப்பிட்டதுபோல்தான் என் பிரச்சினை. சிம்மில் பழுதில்லை. போனில்தான். மேலும் போன் வாங்கிய பற்றுச்சீட்டும் தர்போது என்னிடமில்லை. நான் விரும்பியது, நானே இலகுவாக இப்பிரச்சினையை தீர்க்கமுடியுமா என அறிவதற்குத்தான். மற்றபடி, சில இடங்களில் இவற்றை சரி செஇவதற்கு முயன்று அது சாத்தியமென அறிந்துமிருக்கிறேன். இணையம்மூலம் முயன்று பார்த்தும் சரிவர அதற்கான வழியை காண முடியவில்லை. அந்த வழியைத்தான் உங்களிடம் கேட்டேன். அதற்கு மன்ற விதிகள் இடம்தராதெனில் விட்டுவிடுவோம்.
அன்புரசிகா, உங்கள் அக்கறைக்கு நன்றி. உங்கள் கருத்து முற்றிலும் உண்மையானதே.