PDA

View Full Version : மெக்காலே சதிசிவா.ஜி
19-01-2008, 07:51 PM
[quote]http://i194.photobucket.com/albums/z250/sivag/mekaley.jpg


வாத்தியார் இந்த மெக்காலேவின் கல்விமுறை பற்றி சொல்லிக்கொண்டிருப்பார்.அது எத்தனை சரி என்பது இதன் மூலம் நிரூபனமாகிறது.என்னா ஒரு வில்லத்தனம்.....
(எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி இது)

சாலைஜெயராமன்
19-01-2008, 08:02 PM
ஒத்த கருத்துடைய ஒரு பின்னூட்டத்தில் இதற்கான பதிலுடன் ஒத்து வருகிறது

இங்கே பார்க்கவும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=318066&postcount=2)


ஒரு அந்நியன் பொறாமைப்படும் அளவுக்கு நாம் பொருளாதார ரீதியாக எவ்வளவு உயர்ந்து இருந்து இன்று தாழ்ந்திருக்கிறோம் என்பதை அறியும் போது மனத்திற்கு நெருடலாக இருக்கிறது

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்

கவிஞர் என்றோ பாடியது.I propose that we replace her old and ancient education system................they will lose their self esteem........ they will become what we want them, a truly dominated nation.

அந்நியன் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்திருக்கிறான் பாருங்கள். ஆனால் அவன் நினைத்ததை அதிகமாகவே சாதித்திருக்கிறான். நம் இந்திய நாட்டைத் தவிர எந்த நாடும் பிற மொழியை இவ்வாறு ஆட்சி மொழி ஆக்கிக் கொள்ளும் கேவலத்தைச் செய்ய வில்லை. ஆங்கிலேயன் நினைத்தவாறே மொழியால் நம் அனைவரையும் கூறு போட்டானே. அவனுடைய முயற்சியில் வெற்றியும் அடைந்துள்ளான். அதைவிடக் கொடுமை அதைப் போல நடவடிக்கைகளை தற்போது நம் மக்களே செய்வதுதான் வேதனை

lolluvathiyar
20-01-2008, 05:58 AM
அன்புள்ள சிவாஜி அவர்களே இதே படத்தை நமது தளத்தில் சிவசேவர் அவர்கள் ஆங்கிலேயர்கள் நம்மை என்ன செய்துள்ளார்கள என்ற திரியில் பதித்துள்ளார். இதோ அதன் சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9498


அதில் கூட என் கருத்தை பதித்திருகிறேன்நம் இந்திய நாட்டைத் தவிர எந்த நாடும் பிற மொழியை இவ்வாறு ஆட்சி மொழி ஆக்கிக் கொள்ளும் கேவலத்தைச் செய்ய வில்லை.

மெக்காலே திட்டம் என்பது வெறும் மொழி தினிப்பல்ல சாலைஜெயராமன், வாழ்கை எப்படி வாழவேன்டும், சமுதாயம் எப்படி அமைய வேன்டும் என்று ஒரு கல்வி முரையை மாற்றி கிளார்க் வேலை செய்யும் கல்வி முரையாக மாற்றியது தான் நமது பலத்துக்கு முதல் அடி. இது நமது மன்னர்கள் சுய சிந்தனையுடன் திகழ்ந்த பழைய சில வரலாற்றை படித்து பார்த்தால் நன்றாக புரியும்

சிவா.ஜி
20-01-2008, 06:04 AM
மன்னிக்கவும் வாத்தியார்.நான் அந்த திரியைப் பார்க்கவில்லை.அதனால்தான் இங்கே பதித்துவிட்டேன்.எப்படியாயினும்,எத்தனைதூரம் அந்த ஆங்கிலேயர்களின் குறுக்கு ச்ந்தனை வேலை செய்திருக்கிறது பாருங்கள்.அப்பாவியாய் இருந்த அந்த நாட்களின் இந்தியரை(ஏன் இப்போதும் பலர் அப்படித்தானிருக்கிறார்கள்)எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறார்கள்.அதனால்தான் தடி எடுததவனெல்லாம் தண்டல்காரனாகியிருக்கிறார்கள்.
சரி போகட்டும் விடுங்கள்.இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு நாடாக ஆக்கி அவர்கள் பாவத்தைக் கழுவிக்கொண்டார்கள்.அதுவரையில் சந்தோஷமே.

சாலைஜெயராமன்
20-01-2008, 06:14 AM
உண்மைதான் வாத்தியார் அவர்களே.

தொழிற் சார்ந்த கல்வி முறையைமாற்றி தொழிற் புரட்சி அடையாமல் அவர்களைச் சார்ந்திருக்கச் செய்வதே முதலில் அவர்களது நோக்கமாக இருந்தது. நிர்வாகத்தில் கண்டிப்பாண அணுகுமுறை இருந்ததால் அது சாத்தியமாயிற்று.

நம்மிடையே கல்வியாளர்களுக்கும், சிந்தனாவாதிகளுக்குமா பஞ்சம்.
டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்தால் நமது பணத்திற்கு மதிப்பு உயர்வுதானே. ஆனால் டாலரின் மதிப்பு குறைந்திடாவண்ணம் பார்த்துக் கொள்வதற்கு இன்று நமது ஆட்சியாளர்கள் படும் பாடு. இன்னும் நாம் அடிமையாகத்தான் இருக்கிறோம். அவ்வாறு செய்யாவிட்டால் அந்நிய முதலீடு செய்த நம்மவர்கள் பாடு திண்டாட்டம் தான். சுய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி திறனையும் உள் நாட்டினைச் சார்ந்தும் நாம் இருந்தால் நமக்குப் பெருமைதானே. குறுகிய வட்டத்துள் வாழும் தொழிலதிபர்களுக்கு யார் அறிவு புகட்டுவது ?

சுரண்டலை அன்று அவன் செய்தான். இன்று நம்மவர்களே சுரண்டுகிறார்கள். பரவாயில்லைதானே. அன்னியன் சுரண்டுவதைக் காட்டிலும் நம்மவர்கள் மேலேனவர்கள்தானே.