PDA

View Full Version : தமிழ் எழுத்துருவிலிருந்து யூனிகோடிற்கு



ஆர்.ஈஸ்வரன்
19-01-2008, 10:18 AM
தமிழ் எழுத்துருவில் இருப்பதை அப்படியேவோ அல்லது தட்டச்சு செய்தோ எனது கவிதை, சிறுகதை, கட்டுரைகளை இம்மன்றத்தில் மாற்றம் செய்து வெளியிட இயலுமா?

அன்புரசிகன்
19-01-2008, 12:34 PM
தமிழ் எழுத்துரு என்றால் எந்த முறையான எழுத்துரு நீங்கள் பாவிக்கிறீர்கள்? நீங்கள் யுனிக்கோடல்லாத வேறுமுறையை பயன்படுத்தினால் நம்மன்றத்தின் பங்கங்களில் கீழ்ப்பகுதியிலுள்ள Unicode Converter மூலம் மாற்றி பதிக்க வேண்டும்.

உங்கள் கேள்வி சற்று தெளிவில்லாமல் உள்ளது. சற்று விளங்க கேளுங்களேன்.

ஆர்.ஈஸ்வரன்
19-01-2008, 01:06 PM
தமிழ் எழுத்துரு என்று நான் சொல்வது
தாரகை, கணேஷ், பாமினி, ஷருகேஷி முதலிய எழுத்துருக்களில் இருப்பதைச் சொன்னேன்.

அன்புரசிகன்
19-01-2008, 04:07 PM
ஈஸ்வரன்... கீழ்க்காணும் முறைகளில் முயன்றுபாருங்கள்.
முறை 1
நமது யூனிகோட் கன்வர்ட்டரில் பாமினி எழுத்துருவை யூனிக் கோடிற்க்கு மாற்றும் போது ஒரு சிறிய மாற்றம் தேவைப் படுகிறது.

[அ] உங்கள் எழுத்துருவை பாமினியில் இருந்து யூனிகோடிற்கு மாற்றுமுன் உலாவியில் IE --> View --> Encoding --> Unicode UTF-8 என்று யூனிகோட் என்கோடிங்கிற்கு மாறிக் கொள்ளுங்கள்.

[ஆ] பிறகு உங்கள் பாமினி படைப்பை Unicode Converter இடது புற பெட்டியில் வெட்டி ஒட்டுங்கள் அல்லது தட்டச்சு செய்யுங்கள்.

[இ] பிறகு நடுவில் உள்ள ரேடியோ பட்டனை அழுத்தி Bamini எழுத்துருவை தேர்ந்தெடுங்கள்.

இப்போது வலது புற பெட்டியில் தமிழில் ஒழுங்காக தெரியும்.

[ஈ] அதை அப்படியே மன்றத்தில் Copy செய்து Paste செய்யாதீர்கள். Copy மட்டும் செய்து கொள்ளுங்கள்....

[உ] உங்கள் உலாவியில் பழைய default என்கோடிங்கிற்கு திரும்புங்கள், அதாவது IE --> View --> Encoding --> Western European ISO என்று இருந்திருக்க வேண்டும்.

[ஊ] இப்போது எங்கே உங்கள் படைப்பை பதிக்க வேண்டுமோ அங்கே நீங்கள் காப்பி செய்து வைத்திருந்ததை Paste செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது மீண்டும் ஒரு முறை உலாவில் என்ன என்கோடிங்கில் இருக்கிறீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளவும்.

-----------
முறை 2
முதலில் என்கோடிங்கை Unicode-க்கு மாற்றாமல் convert செய்ததை அப்படியே பதிந்து விடலாம். (இது default-ல் ஒழுங்காக தெரியாது, Unicode-ல் ஒழுங்காக தெரியும்)

பிறகு என்கோடிங்கை Unicode-க்கு மாற்றிவிட்டு, பதிந்ததை Copy செய்ய கொள்ள வேண்டும்.

பிறகு, என்கோடிங்கை default-க்கு முன்பிருந்ததைப் போல மாற்றி விட்டு, பதிப்பில் உள்ள Edit பட்டனை சொடுக்கி, உங்கள் பழைய பதிப்பின் மீது Copy செய்ததை அதன் மீதே Paste செய்யலாம்.

இதுவும் அதே மேலே கூறியதும் ஒன்றே.

நன்றி: இராசகுமாரன் அண்ணா.

ஆர்.ஈஸ்வரன்
20-01-2008, 09:24 AM
தகவலுக்கு நன்றி. முடியுமா என்று முயற்சி செய்கிறேன்