PDA

View Full Version : தெரியாது போனவைகள்



ஆதவா
19-01-2008, 07:08 AM
எங்கள் வீட்டில் உயர்ரக நாய் ஒன்று உள்ளது
உருவியெடுத்த செம்மறியாட்டின்
வெற்றுக் குலையைப் போல
மடிந்து கிடக்கும் அதன் முகம்

ஜூஜூ என்று அதை அழைப்போம்
உயரம் அதிகமில்லை
அதன் விலையைவிடக் குறைவுதான்

என் மடியில்
என் அப்பா மடியில்
என் தங்கை மடியிலென
எல்லாருடைய மடியிலும் தவழும்.

ஜூஜூ இல்லாமல் சாப்பிடுவதோ
உறக்கமோ, ஏன் டிவிகூட பார்ப்பதில்லை
அதன் சலனத்தைத் தாங்காமல்
விடியாது என் தினம்

எத்தனை அழகு அது?
எத்தனை மிருது அது?

இதெல்லாம் உங்களைப் போல
நாய்களை ஏசும் நடுத்தர மக்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

- ஆதவன்

யவனிகா
19-01-2008, 07:30 AM
கலக்கல் ஆதவரே...சுடுகிறது.


எனக்கு ஒரு நாயின்
சிநேகம் கிட்டியது
பத்தாவது படிக்கும் போது...
தெரு நாய் அது..
பழுப்பு நிறத்தில் கரும் புள்ளிகள்...
என் சைக்கிளை எப்போதும் தொடரும்...

எழு பிறப்பில் தெரு நாய் பிறவியைப் பற்றி
நல்லதொரு அபிப்ராயம் எனக்குண்டு..
முற்றும் துறந்த முனிவர் போன்றவர் அவர்கள்...
யாதொரு கடமைகளும் இல்லை..
சுகவாசிகள்...

அந்த நாய்க்கு பிஸ்கெட்
வாங்கிப் போட ஆரம்பித்தேன்...
என் பள்ளிவரை அதனால் ஒடிவர முடியாது...
முடிந்த வரை வரும்...

கேரியரிலிருந்து தவறி விழுந்த என்
கெமிஸ்ட்ரி நோட்புக்கை எடுக்கும் முயற்சியில்
அது ஈடுபட்டிருந்த போது தான்...
லாரி அதை தூக்கி எறிந்து விட்டுப் போனது...

இன்று வரை ஒரே குறை எனக்கு...
நான் அதன் தலையைத்
ஆசையுடன்,தடவி விடுவேன் என்று
அது எதிர்பார்த்து ஏமாந்திருக்குமோ...
என்ன தான் இருந்தாலும் அது தெரு நாய் தானே?

சிவா.ஜி
19-01-2008, 08:14 AM
நல்ல நக்கல் ஆதவா.அசத்திட்டீங்க.....ஆமா இந்த நடுத்தரமக்களுக்கு என்ன தெரியும் இந்த வகை நாய்களைப் பற்றி,ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடத் தெரியாதவர்கள்...

மிக மிக பாராட்டுக்கள்.

ஆதவா
19-01-2008, 08:35 AM
கலக்கல் ஆதவரே...சுடுகிறது.


அது தெரு நாய் தானே?


நல்ல நக்கல் ஆதவா.அசத்திட்டீங்க.....ஆமா இந்த நடுத்தரமக்களுக்கு என்ன தெரியும் இந்த வகை நாய்களைப் பற்றி,ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடத் தெரியாதவர்கள்...

மிக மிக பாராட்டுக்கள்.


பின்னூட்டங்களுக்கு நன்றி யவனிகா மற்றூம் சிவா,ஜி./

நேராகச் சொல்வதா அல்லத் எதிராகச் சொல்வதா என்று கேள்வி வரும்போதும் நேரெதிராகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்ற நடுத்தரம் என்னுள் எழுகிறது. அந்த எழுச்சியின் விளைவுகள்தான் இக்கவிதையும்.. நாய் வளர்ப்பது குற்றமா இல்லை நாயையும் வளர்க்கிறார்களே என்ற பெருமிதமா என்பது தெரியவில்லை.

என்னிடம் சம்பாத்தியம் இருப்பதால் நாய் வளர்க்கிறேன் என்று சொல்வதும் தவறா இல்லை பணமின்மையால் நாயை வெறுக்கிறேன் என்று சொல்வதும் சரியானதல்ல.. பிராணிகள் வளர்ப்பது அவரவர் இஷ்டம். சிலருக்கு இதுவே பணக்கார புத்தி என்று அடைமொழியாகப்படுகிறது..

கவிதையில் நடுத்தர மக்களுக்குத் தெரியாது போனவை, பணக்கார புத்தி... ஒவ்வொரு இடத்திலும் அதுதான் கிடக்கிறது. அது நிச்சயம் நடுத்தரமக்களுக்குத் தெரியப் போவதில்லை.

இதயம்
19-01-2008, 08:37 AM
கடைசி வரிக்கருத்துடன் கவிதை அருமை..!

நான் ஆறாம் வகுப்பு படித்த நேரம்..!
பள்ளி போகும் வழியில் அந்த நாய்...
அத்தனை நேரம் எதையோ தேடும்
என்னை பார்த்தால் தன் தேடல் விடும்
பிறகு என்னை தொடர ஆரம்பிக்கும்..!!

எனக்கு நாய்களை பிடிப்பதில்லை
காரணம், அதைப்பற்றி நான் அறிந்தவை
நான் திரும்பி பார்த்து முறைப்பேன்
அதுவும் முறைக்கும்..
கல்லெடுத்தால் வந்த வழி ஓடும்
கல் வீசி மீண்டும் நடக்க தொடங்குவேன்.
திரும்பி பார்த்தால் என் வெகு அருகில்
மீண்டும் இணைந்த படி நடந்து வரும.்

எனக்கும் நாய்க்குமான உறவை
காலம் சேர்த்து வைத்தது..!
இருந்தாலும் எனக்கு ஈடுபாடே வரவில்லை
அதனை அதட்டியிருக்கிறேன்.. விரட்டியிருக்கிறேன்.
விலகி ஓடியிருக்கிறதே தவிர வெருட்டியதில்லை.
வாலாட்டியபடி எதற்கோ நன்றி சொல்லும்
என் கல்லெறிக்கு பதில் ஒரு ஈனக்குரல் மட்டுமே..!
இத்தனை செய்தும் என்னை ஒருநாளும் கடிக்கவில்லை..
அப்படி என்னை கடித்திருந்தால் அதை
நன்றியில்லா மனிதர்களுடன் சேர்த்திருப்பேனோ..?!!

ஆதவா
19-01-2008, 08:49 AM
மிக்க நன்றி இதயம்... உங்கள் இறுதிவரிகள் நன்றாக சாடுகின்றன.. இன்றைய சூழ்நிலையில் அனுபவப்பட்ட மனிதர்கள் நன்றியுள்ள ஒரு பிராணியையாவது வளர்ப்போம் என்று வளர்க்கிறார்கள். ஒருவகையில் அதுகூட நல்லதோ என்று தோணவைக்கிறது....

எனக்கு எதுவும் புலப்படவில்லை.. நான் மேற்கூறப்பட்ட நடுத்தர வர்க்கத்தில் இருக்கிறேன்... நீங்கள் (பணமிகுந்தவர்கள்) எதையோ வளர்த்துவிட்டு போங்கள்.. ஏனெனில் எனக்குத் தேவை உங்களை ஏசுவதில் வரும் சுகமில்லை.. அல்லது ஒரு நாயிக்கு காட்டும் பரிவு கண்டு வரும் பெருமிதமுமில்லை... இரண்டுக்கும் இடைப்பட்ட வெளியில்....

தனிப்பட்ட முறையில் எனக்கு குரைக்கும் நாய்களைப் பிடிக்காது.. மிக அமைதியாக சாந்தமாக இருக்கும் நாய்களை மிகவும் விரும்புவேன்.... அதன் நன்றியுணர்வும், பாசமும், தோற்றமும் வெகுவாக கவர்வன...

அமரன்
19-01-2008, 08:58 AM
பணத்தோட்டத்து செடிகளுக்கும் ஈரமுண்டு.. அவர்களை வாழவைக்கும் வேர்கள் இவ்வீரங்கள்தான்..வறுமைக்கோட்டில், கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் பலரால் எதிரியாக நோக்கப்படுவதால், பலரை எதிரியாக, தமது செல்வத்தை வறுகும் புலியாக உருவகப்படுத்துவதால் நெருக்கம் குறைகின்றது.. அதனால் இருசாராருக்குடையேயான புரிந்துணர்வு இடைவெளி உருவாகின்றது

இன்னொரு பக்கமாக, நடுத்தர வர்க்கத்தினர்மீதான நெருக்கடிகள், சுமைகள் போன்றவற்றின் அழுத்தத்தால் விழி பிதுங்கி பரிவுகள் பரிகாச்சத்துக்குரியயனவாக தெரிகிறது என்றும் சொல்லலாம்..

யார்மீதும் குற்றம் சுமத்தமுடியாத நிலை... நிலைகொண்ட இவ்விசச்செடிக்கான வேரைக் கண்டறிந்து நறுக்குதலே இதற்கான தீர்வு.. கண்டறிவது கடினமானாலும் நமக்குள் இருக்கும் அச்செடியின் வாசத்தை போக்குவோமே..

எல்லாரும்தான் பார்க்கின்றோம்.. எல்லாரும் சிந்திக்கின்றோம்.. ஒருசிலர் பார்வைக்கோணமும், சிந்தனாக்கோணமும் வேறுபடுகின்றது.. அவர்களில் வார்த்தைகளை வசப்பட்டவன் எழுதுவதும் பேசுவதும் தப்போ சரியோ கவிதை ஆகி விடுகின்றது... பாராட்டுகள் ஆதவா.

ஆர்.ஈஸ்வரன்
19-01-2008, 09:12 AM
கலக்கல் ஆதவரே...சுடுகிறது.


எனக்கு ஒரு நாயின்
சிநேகம் கிட்டியது
பத்தாவது படிக்கும் போது...
தெரு நாய் அது..
பழுப்பு நிறத்தில் கரும் புள்ளிகள்...
என் சைக்கிளை எப்போதும் தொடரும்...

எழு பிறப்பில் தெரு நாய் பிறவியைப் பற்றி
நல்லதொரு அபிப்ராயம் எனக்குண்டு..
முற்றும் துறந்த முனிவர் போன்றவர் அவர்கள்...
யாதொரு கடமைகளும் இல்லை..
சுகவாசிகள்...

அந்த நாய்க்கு பிஸ்கெட்
வாங்கிப் போட ஆரம்பித்தேன்...
என் பள்ளிவரை அதனால் ஒடிவர முடியாது...
முடிந்த வரை வரும்...

கேரியரிலிருந்து தவறி விழுந்த என்
கெமிஸ்ட்ரி நோட்புக்கை எடுக்கும் முயற்சியில்
அது ஈடுபட்டிருந்த போது தான்...
லாரி அதை தூக்கி எறிந்து விட்டுப் போனது...

இன்று வரை ஒரே குறை எனக்கு...
நான் அதன் தலையைத்
ஆசையுடன்,தடவி விடுவேன் என்று
அது எதிர்பார்த்து ஏமாந்திருக்குமோ...
என்ன தான் இருந்தாலும் அது தெரு நாய் தானே?

முதலில் படிக்கையில் யாரையோ தாக்குவது போல் உள்ளது. பின் அது தெரு நாய் என்று தெரிந்துகொண்டேன்.

ஆதவா
19-01-2008, 09:45 AM
நீங்கள் சொல்வதும் ஏற்கக்கூடியது அமரன்


இன்னொரு பக்கமாக, நடுத்தர வர்க்கத்தினர்மீதான நெருக்கடிகள், சுமைகள் போன்றவற்றின் அழுத்தத்தால் விழி பிதுங்கி பரிவுகள் பரிகாச்சத்துக்குரியயனவாக தெரிகிறது என்றும் சொல்லலாம்..
நிச்சயமாக... இதைவிட சரியாக எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை... உங்கள் விமர்சனம் மிக அருமை... நன்றி அமரன்..

ஷீ-நிசி
19-01-2008, 03:04 PM
நாய் இந்தப்பக்கம் வந்தால் அந்தப்பக்கம் போகிற ஆள் நான். அவ்வளவு பயம்...

என் மனைவியோட அம்மா வீட்டில் நாய் வளர்க்கிறாங்க.. கருப்பு நிறம்.. நல்ல புஸு புஸுனு முடி.. போக வர பழகிபோச்சி.. அந்த நாய்க்கு மட்டுதான் நான் பயப்படமாட்டேன். பேரு ஃபெமி.

சரி... இதெல்லாம் ஏன் சொல்றேன்... நாய் வளர்ப்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் என்றில்லை இப்போது. நடுத்தர குடும்பங்கள் பலவற்றிலும் இப்போது வளர்க்கிறார்கள்.

கவிதை ஒரு பணக்கார எஜமானின் பார்வையில் விரிகிறது. பின் தனக்குத்தானே அவர் சொல்லிக்கொள்ளும் வரிகள்தான் அந்த கடைசிவரிகள்..

"உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது" எல்லோரும் கடைசியில் தன்னைத் தேற்றிக்கொள்ள தன்னை நியாயபடுத்திக்கொள்ள ஏந்தும் கடைசி வார்த்தைகள்...

வித்தியாசமான கோணம்தான் ஆதவா... கவிதை.. வாழ்த்துக்கள்!

ஆதவா
20-01-2008, 01:25 AM
கவிதை ஒரு பணக்கார எஜமானின் பார்வையில் விரிகிறது. பின் தனக்குத்தானே அவர் சொல்லிக்கொள்ளும் வரிகள்தான் அந்த கடைசிவரிகள்..

"உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது" எல்லோரும் கடைசியில் தன்னைத் தேற்றிக்கொள்ள தன்னை நியாயபடுத்திக்கொள்ள ஏந்தும் கடைசி வார்த்தைகள்...

வித்தியாசமான கோணம்தான் ஆதவா... கவிதை.. வாழ்த்துக்கள்!


மிக்க நன்றி ஷீ! எங்கள் அண்ணி, சித்தி வீட்டில் கூட நாய் வளர்க்கிறார்கள்.... நான் யாரையும் குறை கூறவில்லை... மாறாக, இக்கவிதை இருவித கோணங்களையும் காட்டுவதைத்தான் சொல்கிறேன்....

நன்றி

சுகந்தப்ரீதன்
20-01-2008, 10:19 AM
மேலோட்டமாக படித்தால் சாதரணமாக தோன்றும் கவிதை...!

பின்னூட்டம் படித்து எழுதிய இருகோணங்களையும் உணர்ந்தேன் ஆதவா..! உண்மைதான் ஆதவா.. உலக வாழ்வில் எந்த ஒரு நிகழ்விலும் இருகோணங்கள் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு..! இதில் வேடிக்கை என்னவென்றால் இரு கோணங்களும் ஏற்ககூடியதாக இருப்பதுதான்..!

எனக்கு அழுகையை தரும் அதே செயல்.. இன்னொருவனுக்கு இன்பத்தை தரும்..! இருக்கும் இடத்தை பொறுத்தே சிந்தனைகளும் வாழ்க்கை முறையும் அமைகின்றன.. இதில் நானும் நீயும் என்ன விதிவிலக்கா..? எல்லாவற்றையும் ஏற்கும் பக்குவம் வரும்போது யாரையும் தூற்ற தோணாது யாருக்கும்..!

அருமையான கருவெடுத்து கவிதையாக்கியமைக்கு எனது வாழ்த்துக்கள்..!

ஓவியன்
21-01-2008, 04:17 AM
கத்தி என்றாலே நம் ஞாபக அலைகளுக்குள் சிக்குவது என்ன..?
அதன் கூர்மை தானே, ஆனால் உலகில் கூர்மையின்றி மழுங்கடிக்கப்பட்ட எத்தனை எத்தனை மொட்டைக் கத்திகள் உள்ளன.

எந்த ஒரு விடயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன என நாம் வாய் கிழியக் கத்தினாலும் ஏனோ மற்றைய பக்கத்தைத் திரும்பிப் பார்க்க மறந்து விடுகிறோம். பிரகாசமாக(!) கண்ணுக்குத் தெரியும் ஒரு பக்கத்தை உடனடியாகவே ஏற்றுக் கொண்டு பழக்கப்பட்ட ஒரு இயல்பு கூட மற்றைய பக்கத்தை மறக்க காரணமாகி விடுகிறது போலும்.

இருந்தாலும் எந்த ஒரு பக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் ஒரு சரியான முடிவுக்கு வர முடியாது, மாறாக இரண்டு பக்கத்தையும் ஆராய்ந்து அந்த இருபக்கத்தின் தோற்றப்பாட்டிற்கான காரணங்கள், பின்னணி பற்றி விளங்கி விளக்கினால் மாத்திரமே சரியான கோணம் ஒன்று கிடைக்கும்...

மொத்தத்தில் வேறுபட்ட கோணத்தில் ஆதவா படைத்த கவி அமுதுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்....!!

தாமரை
21-01-2008, 05:18 AM
என் டாமி (தாமரை இல்லிங்க)
வாலாட்டிக் குலைத்த போது..

என்று கவிதை எழுத தான் ஆசை.. ஆனால்

என் மனைவியின் பிரிவைத் தாங்காமல்
அவர்கள் வளர்த்த நாய் மூன்று மாதங்களில் இறந்ததைச் சொல்லவா?

இறந்ததைக் கூட ஒரு வருடம் சொல்லாமல்
மறைத்த மாமியாரைச் சொல்லவா?

இல்லை வளர்ப்பையே வெறுத்து விட்ட
அண்ணியைச் சொல்லவா?

ஒவ்வொரு நாய்க்கும்
ரேம்போ எனப் பெயரிட்டு அழைக்கும்
அனிருத்தைச் சொல்லவா?

ஒரு முறை மட்டுமே பார்த்தவன் நான்
ஒரு முறையும் பார்க்காதவன் அனிருத்
இவை ஒன்றுமே தெரியாத ஸ்வேதா..

மௌன சாட்சியாய்
அந்த வெள்ளை ராஜாபாளையத்துக் கோம்பை ஃபோட்டோ
அப்பப்போ அதற்கும் பூ கிடைக்கும்

வளர்த்த பாசம்
வளர்க்காத பாசம்
இதெல்லாம்
யாருக்குப் புரியும்..

ஆதவா
26-01-2008, 09:26 AM
மிக்க நன்றி சுகந்த ப்ரீதன்...
மிக்க நன்றி ஓவியன்.... உங்கள் விமர்சனம் அருமையாக இருந்தது.
---------------------------
அன்பு தாமரை அண்ணா, இங்கே எட்டிப் பார்த்தமைக்கு இக்கவிதை ஏதோ பாக்கியம் செய்திருக்கக் கூடும்.
நாய் வளர்ப்பு என்பதை விட பிராணி வளர்ப்பு என்றால் அதில் ஓரளவு பாசம் கொட்டியிருக்கிறேன். சிறுவயதில் இரு கோழிக் கொஞ்சுகளை வாங்கி வளர்த்து அதைப் பூனை வேட்டையாடியதைக் கண்டு அழுதது இன்னும் ஞாபகத்தில் உள்ளது...
வளர்ப்பில் கொஞ்சம் அதிகமே பாசம் கொட்டுவது வழக்கம் ஆனபின்னர் வளர்ப்பதையே வெறுத்துவிட்டேன்.. எனது ஐந்து வருட சைவ வாழ்வில் நான் கண்டு இரக்கப் படாத பிராணிகளே இல்லை எனலாம்.

எனது சித்தி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அவர் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அது என்னைப் பிடித்து கடிக்காது, மாறாக உமிழும்.. அது எனக்குப் பிடிக்காது. அத்தோடு ஒரு பிராணிக்குத் தரும் இடவசதி கூட சிலர் ஏழைமக்களுக்குக் கொடுப்பதில்லை....... அதுவும் எனக்குப் பிடிக்காது... அவர்கள் வளர்க்கும் பெரும்பாலான பிராணி நாயாக இருப்பதால் அதுவும் எனது பிடிக்காதவை லிஸ்டில் சேர்ந்துவிட்டது.


வளர்த்த பாசம்
வளர்க்காத பாசம்
வளர்த்தவனுக்குத் தெரியும்

நன்றி அண்ணா