PDA

View Full Version : தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சி



agniputhiran
19-01-2008, 01:53 AM
தாய்மொழி ஒரு இனத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கும் ஒரு கருவி. தாய்மொழியில் சிந்தித்துச் செயல்படுவதுதான் குழந்தைகளுக்கு இயற்கையாகவே சிறப்பாக அமையும் என்பது மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தாய்மொழியில் கல்வி கற்பித்து வரும் பல நாடுகளில் குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் அறிவுசார்ந்த பொருளாதார வளர்ச்சி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஜப்பான் நாட்டில் படிப்பெல்லாம் ஜப்பானிய மொழியிலேயேதான் சொல்லித் தருகிறார்கள். இளம் சமுதாயத்துக்குச் நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவதிலும், மாணவர்களைப் பண்படுத்தி நல்ல குடிமக்களாக உருவாக்குவதிலும், நற்பண்புகளை விதைத்துச் சான்றோராக்குவதிலும் தாய்மொழியின் பங்கு இன்றியமையாதது. ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டுக்குரிய உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டுமானால் அந்த நாட்டு இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வி மட்டுமின்றி அனைத்துக் கல்வியையும் தாய்மொழி மூலமாகவே கற்பிக்க வேண்டும் என்பது அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பொன்மொழியாகும்.

இவ்வாறு ஒரு இனத்தின் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அவ்வினத்திற்குரிய மொழியே முக்கியக் காரணமாக அமைகிறது. அதனால்தான் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவ்வினம் பயன்படுத்தும் மொழியை முதலில் அழிக்க முயற்சித்தாலே போதுமானது. விரைவிலேயே அவ்வினமே அழிந்துவிடும் என்பது மொழி ஆய்வாளர்களின் கூற்றாகும். எனவே தாய்மொழியைப் போற்றிப் பாதுகாப்பது அவ்வினத்தில் பிறந்த ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். அப்போதுதான் அந்த இனத்தின் தொன்மையையும், பெருமையையும், அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் கட்டிக்காக்க முடியும்.

இவ்வகையில் பார்த்தால், ஏறத்தாழ மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிக வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள் என்பது புலனாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்றத் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன. உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளதாக அறியப்படுகிறது. இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச்சிறந்து விளங்கும் ஒரு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழ்மொழி விளங்கி வருகின்றது.

ஈராயிரமாண்டுகளாத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது, பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி. ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைத் தன்னகத்தே கொண்டு கருத்து வளமுடன் விளங்கிய உயர்தனிச் செம்மொழி. தமிழ் மக்களின் நாகரிகமும் பண்பாடும், அரசியல் அமைப்பும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், முன்னேற்றம் மிக்க சிறந்த அரசியல், பொருளாதார, நாகரிகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.

சாலைஜெயராமன்
19-01-2008, 11:51 AM
ஈராயிரமாண்டுகளாத் தொடர்ச்சியான இலக்கிய வளர்ச்சியும் வரலாறும் கொண்டது நம் தமிழ்மொழி. தமிழின் பொற்காலம் என்று சொல்லப்படும் சங்க காலத்தில் இன்று உலகில் புழக்கத்தில் உள்ள சில மொழிகள் தோன்றவே இல்லை. ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது, பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி. ஆனால் தமிழ் மொழியோ சங்க காலத்திலேயே ஆயிரக்கணக்கான சொற்களைத் தன்னகத்தே கொண்டு கருத்து வளமுடன் விளங்கிய உயர்தனிச் செம்மொழி. தமிழ் மக்களின் நாகரிகமும் பண்பாடும், அரசியல் அமைப்பும் பற்றிய சங்க இலக்கியப் பாடற் செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், முன்னேற்றம் மிக்க சிறந்த அரசியல், பொருளாதார, நாகரிகம் கொண்டவன் தமிழன் என்பது தெற்றெனப் புலப்படும்.


சிறந்த கருத்துக்கள் அக்னிபுத்திரன்.

ஒரு வேதனையான விஷயம். மொழியின் மீது அக்கறையின்மையில் தமிழ் இனம் மட்டும்தான் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மற்ற எந்த மொழி இனத்தவரும் கூடிக்கொள்ளும் இடங்களில் தங்கள் தாய்மொழியை மறவாது உறவாடிக் கொள்வதில் பெருமையடைவர். ஆனால் தமிழன்மட்டும்தான் பிற மொழி தெரியும் பட்சத்தில் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பான். நீங்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சியைக் கவனித்தீர்களென்றால் ஆங்கிலம் கலந்து நிகழ்ச்சிகளைத் தருவதில் தமிழ் சேனல்கள்தான் முதன்மை வகிக்கிறது. ஹிந்தி சேனல்களைப் பொருத்தவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் பல மணி நேரங்கள் நிகழ்ச்சிகளின் விறுவிறுப்புக் குறையாமல் நடத்துவதில் கவனமாயிருப்பர்.

ஏனெனில் மாற்று மொழிக்காரர்களுக்கு மற்ற எல்லா மொழிகளிலும் கொஞ்சம் பரிச்சியம் இருக்கும். குறிப்பாக ஹிந்தியை எல்லா மாநிலத்தவரும் கற்றுத் தேர்ந்துள்ளனர். பிற மொழியைத் தெரிந்து கொள்வதால் தம் தாய்மொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. எனவே பிற மொழியாளர்கள் தங்கள் தாய்மொழிக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் இயல்பினை இயற்கையாகவே பெற்றிருக்கின்றனர்.

இதில் நம் மொழியின் பெருமையைக் குறைத்ததில் பெரும் பங்கு அரசியல்வாதிகளையே சாரும். தமிழை வளர்க்கிறேன் என்று பிறமொழிக்குத் தடைவிதித்ததால் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் நமது மக்கள் அதிகம் அறிந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. ஆங்கிலம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றதற்கு நமது அரசியல்வியாதிகள் தான் காரணம்.

ஏனெனில் ஆங்கிலம் (ஆங்கு+இலம்) ஆங்கு எதுவும் இல்லாததால் ஆங்கிலம் பலவீனமான நம்மிடைய இங்கு வந்து ஆட்சியைப் பிடித்தது. 200 சொற்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அவ்வளவு கூட இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

மலர்
03-02-2008, 12:58 AM
ஆனாலும் எனக்கு மிகபெரிய வருத்தம் என்னவென்றால், இப்படியான திரிகளை தமிழ் மன்றில் உள்ளவர்களே வாசிப்பது மிக குறைவாக உள்ளது என்பதுதான்.
அன்பான சகோதரரே.....
எந்தபகுதியையும் வாசிக்ககூடாது என்பது யாருடைய விருப்பம் இல்லை....
ஆனால் சில சமயம் காலம் ஒத்துழைப்பது இல்லை..
தினசரி வேலைகள், எவ்வளவோ பிரச்சனைகளுக்கு மத்தியில் மன்றம் வரும் போது தொடர்ச்சியாக பார்வையிடும் பகுதிகளை மட்டும் பார்த்துட்டு ஓடிவிடுவது தான்....:icon_rollout: :icon_rollout:

சுகந்தப்ரீதன்
03-02-2008, 05:23 AM
தாய்மொழின் தொன்மையையும் அதன் சிறப்பியல்புகளையும் எடுத்துரைத்த நண்பர் அக்னிபுத்திரனுக்கு எனது நன்றிகள் பல..!! தாய்மொழியை இனியாவது நேசிப்பார்களா..? அறியாமையில் ஆங்கில மோகம் கொண்டு திரியும் நம்மவர்கள்..?!

lolluvathiyar
03-02-2008, 07:13 AM
தாய் மொழியை பற்றி மிக அருமையாக எழுதி இருந்தீர்கள் அக்னி அதில் உங்கள் ஆதங்களையும் வடித்திருந்தீர்கள். அருமை பாராட்டுகள்.



ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அவ்வினம் பயன்படுத்தும் மொழியை முதலில் அழிக்க முயற்சித்தாலே போதுமானது. விரைவிலேயே அவ்வினமே அழிந்துவிடும் என்பது மொழி ஆய்வாளர்களின் கூற்றாகும்.

மொழியை அழிக்க முடியாது முதலில் மொழிகாரர்களின் தெய்வபக்தி பாடல்களை அழிக்க வேன்டும். நமது மொழிக்கு அது தான் நேர்ந்திருகிறது. நமது மொழியின் சிறப்புகள் எல்லாம் கோவில் கல்வெட்டுகளிலும், பக்தி பாடல்களிலும் இருகிறது. பகுத்தறிவு என்ற பெயரில் அதை அழித்து கொன்டு வருகிறார்கள். பிறகு மொழி மீது அன்பு தானாக போய் விடும்.

மொழிகாரர்கள் பாரம்பரியத்தை அழிக்க முற்படுவார்கள். அதில் ஒன்று தமிழ் புத்தான்டு, சித்திரை முதல் நாள் அனைவருக்கு தமிழ் புத்தான்டு என்றுதான் அன்றாவது நினைவுக்கு வரும், ஆனால் விரைவில் அது நிறுத்தபடும். தை முதல் புத்தான்டு என்று மாற்றி விடுவதால், அந்த நாளை பொங்கல் நாளாகவே மக்கள் கொன்டாடுவார்கள், புத்தான்டாக நிச்சயம் கொன்டாட மாட்டார்கள், காரனம் அ ந்த நாளில் பொங்கல் தான் சிறப்பு முதலிடம் பெரும். அதனால் தமிழ் புத்தான்டு என்று தனி சிறப்பு அழிந்து விடும்.

இப்படி பகுத்தறிவு, மத சாயாம் பூசி நமது பாரம்பரியத்தை முதலில் அழித்து விட்டால் மொழி அழிந்து விடும் என்ற முயற்ச்சி ஆன்டவன் அருளால் பலிக்காது என்று நம்புகிறேன்.


இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு

அந்த காலத்தில் தமிழ் காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்படுத்தி வந்தனர். ஆனால் இன்று இல்லை.



ஆங்கில மொழி இன்று உலக மொழியாக விளங்கினும், ஆங்கிலோ சாக்சான் காலத்தில் அது வெறும் இருநூறு சொற்களை மட்டுமே வைத்திருந்தது. அது, பிற்காலத்தில் பிறமொழிகளில் கடன் பெற்று வளர்ந்த மொழி.

அதே போல தமிழிலும் சமஸ்கிருத சொற்கலில் இருந்து கடன் பெற்று வளர்ந்து வந்தது வார்த்தைகளும் கடன் பெற்றது. இந்த மாற்றத்தை அனுசரிக்க வேன்டும். அப்பொழுதுதான் பொழி கடினமில்லாமல் இருக்கும். ஆனால் கடந்த சில காலங்களாகா அனைத்து அறிவியல் வார்த்தைகளை மொழி பெயர்கிறார்கள். அது மொழியை வெறுக்க வைக்கும்.
ஏ.கா சிடி என்பதை மக்கள் சிடி என்றே அழைக்கலாம். கம்யூட்டர் என்பதை கம்யூட்டர் என்றே அழைக்கலாம். அதைவிட்டு விட்டு வட்ட ஒலிதட்டு கனினி என்று அழைப்பது உன்மையில் தமிழை கடினமாக்குகிறது.
சார் அம்மாவை டாடி என்று அழைக்க வேன்டியதில்லை. ஆனால் எஸ்டிடி, போன், ஜெராக்ஸ் இதை எல்லாம் தமிழில் அழைக்க வேன்டும் என்று வற்புறுத்தினால் தமிழ் மீது வெறுப்புதான் வருகிறது. அப்புஇரன் அம்மாவும் மம்மி ஆகி விடுகிறது.

வேறு நாட்டு பொருள் அல்லது பெயரை அந்த நாட்டு மொழியை கடன் வாங்கியே அழைக்க வேன்டும். அப்பதான் மொழி நன்றாக வளரும்.


தமிழை வளர்க்கிறேன் என்று பிறமொழிக்குத் தடைவிதித்ததால் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் நமது மக்கள் அதிகம் அறிந்துகொள்ள இயலாமல் போய்விட்டது.

மிக சரியாக சொன்னீர்கள் ஜெயராமன். ஆங்கிலமும் பிற மொழிதான் நீங்கள் சொன்னது மிக சரி, தினிக்கபடும் எந்த விசயத்தை உன்மையில் மக்கள் வெறுப்பார்கள்.



ஒரு வேதனையான விஷயம். மொழியின் மீது அக்கறையின்மையில் தமிழ் இனம் மட்டும்தான் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

அறியாமையில் ஆங்கில மோகம் கொண்டு திரியும் நம்மவர்கள்..?!

ஆங்கில மோகம் இருகிறது ஆனால் மக்களிடம் தமிழ் மோகம் எந்த விதத்திலும் குரைய வில்லை. இது பற்றி நான் விளக்கமாக இந்த திரியில் எழுதி இருகிறேன்.

தமிழ் என்றுமே சாகாது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8663)


நன்றி