PDA

View Full Version : முடிவே தொடர்வாயா - 2



நுரையீரல்
18-01-2008, 11:57 AM
முடிவே தொடர்வாயா - 1


டேய் பெரியவனே... "சின்னவன் தூங்கிட்டு இருக்கான், அவன் எழுந்திரிச்சதும் கிச்சன் டேபிள் மேல இருக்க பால் பாட்டில குடுத்திடும்மா.." என்றேன் நான்.

"சரிங்கப்பா.. அம்மாவைக் கூப்பிடத் தானே போறீங்க.. வரும்போது McDonnels-ல இருந்து HAPPY MEAL வாங்கிட்டு வாங்கப்பா.." என்றான் பெரியவன்.

என்றுமே தோனாத விதமாக இன்று மட்டும் மனதில் ஒரு குறுகுறுப்பு. என் ஆசைச் செல்வங்களை உச்சி முகர முத்த வேண்டும் போன்ற துடிதுடிப்பு. பெரியவன் அருகே சென்று அவனை கட்டி அணைத்து, நெற்றியில் முத்தமிட்டேன். பிறகு, பெட்ரூமில் தூங்கிக் கொண்டிருக்கும் சின்னவனை நோக்கி நகர்ந்தேன். பெட்ரூமின் விளக்கு அணைந்திருந்ததால், மின்விளக்கை உயிர்ப்பித்து என் உயிரினும் மேலான, சின்னவனின் அன்பான முகத்தைப் பார்த்து ரசித்தேன். அவன் அருகே பெட்டில் படுத்து, மிகவும் இறுக்கமாக அணைத்து நினைத்த இடத்திலெல்லாம் முத்தமிட்டேன்..

ஆழ்ந்த உறக்கத்திலும், "அப்பா.. இன்னொடு முத்தம் தா அப்பா.." என்று சிணுங்கினான் சின்னவன்.

இதற்கு மேல் கொஞ்சிக் கொண்டிருந்தால், சரியான நேரத்துக்கு மருத்துவமனை செல்ல முடியாது. அவள் வேற வெளியே வந்து வெயிட் பண்ணுவா பாவம்... இப்பவே கிளம்பினாத் தான், சீக்கிரம் கூட்டிட்டு வரமுடியும் என்று வீட்டை விட்டு கிளம்பினேன்.

வீட்டின் கதவை உள்ளும், வெளியும் இருந்து லாக் பண்ணக் கூடிய dual lock system இருப்பதால், வெளிப்புறம் லாக் செய்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

காரினுள் ஏறி அமர்ந்து, ஸ்டார்ட் செய்து காரை நகர்த்தினேன். எப்போதும் பாட்டு கேட்டுக் கொண்டே கார் ஓட்டும் பழக்கம் என்பதால், அப்போது பிளேயரில் இருந்த மெலோடி சி.டியைப் போட்டு பாடல் கேட்கலானேன். கடந்த பத்து வருடத்தில் வந்த தமிழ் பாடல்களில், மிகச்சிறந்த மெலோடி பாடல்களை ஒரு சி.டியில் அடைத்திருப்பதால், அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் தேனருவியாய்க் கொட்டும். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான்,

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும், சிறகு இல்லையே
உறவும் இல்லையே..

என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே சிறிதளவு தூரம் நகர்ந்திருப்பேன்.

அப்போது தான், எனது காரை ஓவர்டேக் செய்து கொண்டு மற்றொரு கார் சீறிப் பாய்ந்தது. ஓவர்டேக் செய்யும்போது நார்மலாகச் செய்தால் பிரச்சினை இல்லை தான். ஆனால் எனது காரில் உரசுவது போன்ற கோணத்தில் ஓவர்டேக் செய்தது, என் கோபத்தை பன்மடங்காக்கியது.

எனது கோபம், காரின் ஆக்ஸிலேட்டரை பலமாக அழுத்த, ஸ்பீடாமீட்டரின் முள் 110 லிருந்து 120, 130.. 140 என்று அதிகரிக்கிறது. அதிவேகத்தில் கார் ஓட்டும்போது, கேட்டுக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்திவிடுவேன் (அ) ஆங்கில ராக் மியூசிக் பாடல்களை அதிக வால்யூம் வைத்து கேட்டுக் கொண்டே மேலும் வேகத்தை அதிகரித்து ஓட்டுவேன்.

எனது கார் தற்போது ஹைவேயில் ஓடிக் கொண்டிருப்பதாலும், என்னை ஓவர்டேக் செய்து என் காரை உரசுவது போல பயமுறுத்தியவனை கிலியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்வதாலும், எனது காரின் வேகம் 160 - 170-ல் போய்க் கொண்டிருக்கிறது.

அவனது காருக்கும் எனது காருக்கும் உள்ள இடைவெளி 100 லிருந்து 200 மீட்டர் தூரம் தானிருக்கும். எனது காரின் ஸ்பீட் கியரை மாற்றி, வேகத்தை மேலும் அதிகரிக்கும்போது, எங்களுக்குள்ள இடைவெளி குறைந்து 30 - 40 மீட்டர் தானிருக்கும்.

அப்போது தான் அந்த எதிர்பாராத சோகம் நிகழ்ந்தது. முன்னால் சென்றுகொண்டிருக்கும் சவுதி, தனது காரின் வேகத்தை திடீரென்று நிறுத்த, எங்கள் கார்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைகிறது என்று அறிந்த நான், எனது பிரேக்கை முடிந்த மட்டில் சவுட்டினேன்.

அதிவேகத்தில் குறைந்த இடைவெளியுடன் செல்லும் காரின் பிரேக் என்ன மேஜிக்கா? கிட்டத்தட்ட 150கி.மி வேகத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த சவுதியின் கார் பம்பரில் பலமாய் முட்ட, அவனது கார் மேலே பறப்பதை மட்டும் தான் உணர்ந்தேன்.

அவனது கார் மேல் இடித்த வேகத்தில், எனது கார் அப்பளமாக நொறுங்கியது. அப்ப எனக்கு என்ன ஆயிற்று?

ஆம்.. நானும் தான் சுக்கு நூறாக நொறுங்கினேன். அப்பளமாக நொறுக்கப்பட்ட காரினை ஓட்டிய எனது வயிறு ஸ்டியரிங் வீலில் பட்டு இரண்டாக கிழிந்தது. எனது கால்களிரண்டும் தனித்தனியா பிய்ந்து, டேஷ்போர்டுக்குள் நசுங்கிக் கிடந்தது. ஒரு கை தோளிலிருந்து பிய்ந்து எங்கே சென்றது என்று தெரியவில்லை. காரின் முன்பாகம் உள்ளுக்குள் வந்ததால், எனது முகம் அதற்குள் சிக்கி, சின்னாபின்னமாகிவிட்டது.

இவ்வளவு நடந்தும் உயிரோடு இருக்கிறேனா? ஆம் என்றால் யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள்.

அதுவாவது பரவாயில்லை, யாரும் என் பேச்சை செவிகொடுத்து கேட்பாரில்லை. ஆம் ஆக்சிடெண்டு நடந்த இடத்தில், காருக்குள் சிக்கியிருக்கும் என் உடம்பை என்னால் காணமுடிகிறது. அதற்குள் டிராபிக் போலிஸாரும், பொதுமக்களும் குவிந்துவிட்டார்கள்.

அனைவரது கவனமும், நொறுங்கிய காருக்குள் சின்னாபின்னமாக கிடக்கும், எனது உடம்பை வெளியே எடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நான் இறந்துவிட்டதாக எண்ணி, அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்கின்றனர். அவர்கள் பேசுவதெல்லாம் என் காதுக்குள் கேட்கிறது. நானும் அவர்களது கூட்டத்திற்குள், ஆன்மாவாய் நிற்கிறேன்.

நான் சாகவில்லை, நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்கிறேன். யாரும் என்னை காது கொடுத்து கேட்பாரில்லை.

ஐய்யோ... என்ன செய்வேன்... நான் சொல்வதை ஏன் யாரும் கேட்கமாட்டேன் என்கிறார்கள்.. நான் சாகவில்லை.. நான் உயிருடன் தான் இருக்கிறேன்.. என் ஆன்மாவை யாராவது புரிந்து கொள்ளுங்களேன். சீக்கிரமாக அந்த உடம்புக்குள் என்னை நுழையுங்களேன்.. என்று கூறிக்கொண்டே, உடலுக்குள் நுழைய என்னாலான முயற்சிகளை எடுக்கிறேன். எனது உடல் நசுங்கி கிடந்தாலும், எனது ஆன்மா உயிருடன் இருக்கிறதே..

என்னால் உள்ளே நுழையவே முடியாதே... ஐய்யோ என்ன ஆச்சு, என்ன இது, எனது சொந்த உடலை என்னால் தீண்ட முடியவில்லையே... ஆஆஆஆஆ... என்னைப் புரிந்து கொள்ள இங்கே யாருமே இல்லையா..... அம்மா..... பாரும்மா நீ பெத்த உடலு நசுங்கி கிடக்குது...

நீ என்கூட இருந்திருந்தாலாவது, என் உயிர் பேசுறதை காது கொடுத்து கேட்டிருப்பயேமா.... உன்னை விட்டு எதுக்குமா நான் இந்த வெளிநாட்டுக்கு வந்தேன்... பாரும்மா உன் அருமை எனக்கு இப்பத்தான் புரியுது...

ஐய்யோ... அன் ஆசை மனைவியே.., எப்பவும் அடிக்கடி ஃபோன் பண்ணுவியேடி... நீயாவது இப்ப என் மொபைல் போனுக்கு கூப்பிடுடி... நான் உயிரோடத்தான் இருக்கேன், நான் செத்துப்போயிட்டேனு எல்லாரும் சொல்றாங்கடி... நீயாவது வந்து என்னைக் காப்பாத்துடி...

நான் தான் உன் உயிர்னு சொல்லுவியேடி... நான் செத்துப் போயிட்டேனு எல்லாரும் சொல்றாங்க கேளுடி என் செல்லமே... உன் உயிர் இப்ப ஊசலாடிட்டு இருக்கு பாருடி என் உயிரே... ஒரே ஒரு முறை மொபைல் போனுக்கு கூப்பிடுடி.. உன் இனிமையான குரலை ஆசையாக கேட்வ வேண்டும் என் செல்லமே...

எப்பவும்.. என்னங்க என்னங்கனு ஆசையா கூப்பிடுவியேடி.. இப்ப, உன் என்னங்க உடல் தனியா, உயிர் தனியா தவியாய் தவிக்கிறேன் செல்லமே... என்னைக் காப்பாத்து, என் உடலையும் உயிரையும் ஒன்றாக சேர்த்துடி என் செல்லமே...

ஐய்யோ எனக்கு பயமா இருக்கு... பாரு, பாரு என்னோட உடலை காருக்குள்ள இருந்து எடுக்கிறாங்க...

ஹலோ போலீஸ் கார்.. நான் உயிரோடத்தான் இருக்கேன்.. பாருங்க நான் உங்களத் தொட்டு பேசுறேன். பிளிஸ் என்னப் பாருங்க... நான் தொடுறது நீங்க உணரலையா...

பிளீஸ் என்னையும் அந்த ஆம்புலன்ஸ்குள்ள வையுங்க... அட்லீஸ்ட் டாக்டருக்காவது நான் உயிரோட இருக்கிறது புரியும்.. என் உடலையும், என்னையும் பிரிக்காதீங்க... பிளீஸ், பிளீஸ்..

இப்போது ஆம்புலன்ஸுக்குள் வைக்கப்பட்ட எனது உடலுடன் ஆம்புலன்ஸ் நகர ஆரம்பிக்கிறது. ஓடிச்சென்று ஆம்புலன்ஸுக்குள் இருக்கும் என் உடலுக்கு அருகில், சோகமாய் அமர்ந்தேன்.

அப்போது என் பேண்ட் பாக்கெட்டுக்குள் இருக்கும் மொபைல் ஃபோன் சிணுங்க ஆரம்பிக்கிறது. ஆம், இது என் ஆசை மனைவியே தான். என்னங்க.. எவ்வளவு தூரத்திலே இருக்கிங்கணு கேட்கிறதுக்காக கூப்பிடுறாளே... "ஐய்யோ ஆசைக்கிளியே... நான் உன்னை விட்டு வெகுதொலைவிற்கு செல்கிறேனே, அதை எப்படி சொல்வேன்.."

ஆன்மாவான நான் மொபைல் போனை எடுக்க எத்தணிக்கிறேன். ஆனால் அதை எடுக்குமளவுக்கு சக்தியில்லை.

ஹலோ ஆம்புலன்ஸ் டிரைவரே, நீங்களாவது இந்த மொபைல் போனுக்கு பதில் சொல்லுங்களேன்.. மொபைல் போனுக்கு ரிங் போயி, பதில் இல்லைனா எவ்வளவு சங்கடப்படுவாளோ... இன்னிக்கு பதில் சொன்னாலும் ரொம்ப சங்கடமில்ல படப்போறா...

என் சோக கீதம் பாடி முடிவதற்குள், மொபைல் இரண்டாவது முறையும் சிணுங்க ஆரம்பித்தது.. இப்படியே பலமுறை சிணுங்கியும் பயனில்லாததால், சற்று நேரம் ஓய்வெடுத்தது...

அதற்குள் பொதுமருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆஸ்பத்திரி முழுக்க பரபரப்பு. Emergency Ward-க்கு உடலை கொண்டு செல்கிறார்கள், நானும் என் ஆன்மாவை கையில் பிடித்துக் கொண்டு தொடர்கிறேன். E.R-ல் வைக்கப்பட்ட உடலை, அங்குள்ள நர்ஸ்களும், டாக்டர்களும் சுற்றி நின்று பரிசோதனை செய்கிறார்கள்...

டாக்டர்.. டாக்டர்... ஐயாம் லைவ் டாக்டர், பிளிஸ் ஹெல்ப் மீ டு கெட் இன்சைட் மை பாடி.. என்றேன் நான்.

டாக்டருடைய உடம்பை பிடித்து ஆட்டுகிறேன். குலுக்குகிறேன்.. எந்த ரியாக்ஷனும் இல்லை. ஐய்யோ... நான் சொல்றதை கேளுங்க டாக்டர், நான் சாகலை.. ஏண்டா இப்படி இருக்கிங்க நீங்களெல்லாம்.

ஒரு உயிர் அழுகறதை கேட்க முடியலை, நீங்கெல்லாம் என்னடா டாக்டர்... சாகாதவனை செத்துப்போயிட்டானு சொல்றீங்களே நீங்கெல்லாம் மனுஷனாடா... என்று ஒப்பாரி வைத்தும் பிரயோஜனமில்லை..

அப்போது தான் மீண்டும் அந்த ரிங்டோன் கேட்கிறது. "ஹலோ.. மே ஐ நோ ஹூ இஸ் ஆன் லைன்", இது டாக்டர்.

"டாக்டர் ஐயாம் மிசஸ் ஆஃப் எக்ஸ், மே ஐ டாக் டு ஹிம்.." இது மனைவி.

"சீ மிசஸ் எக்ஸ், ஐயாம் E.R டாக்டர் ஆஃப் ஜெனரல் ஹாஸ்பிடல், வில் யூ பிளிஸ் கம் ஹியர்.."

"ஐயோ என்ன ஆச்சு, வாட் ஹேப்பண்ட் டாக்டர்.." இது மனைவி.

"பிளிஸ் யு கம் ஹியர்" என்று சொல்லிவிட்டு லைனை துண்டித்துவிட்டார் டாக்டர்.


(தொடருமா!!!??)



முடிவே தொடர்வாயா - 2 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=318549&postcount=30)

ஓவியன்
18-01-2008, 01:19 PM
வரிகளில் தான் என்ன ஒரு வீரியம்....
இப்படி ஒரு கதையை கற்பனைக்காக கூட என்னால் நினைக்க முடியவில்லை....!! :frown:

மதி
18-01-2008, 01:22 PM
நுரையீரல் மாமா...

சில நேரங்களில் சில தவறுகள்... ஆனால் விளைவோ பெரியவை. உங்களிடமிருந்து சீரிய சிந்தனையுள்ள தொடர் என்று நினைக்கிறேன். நீங்கள் முடித்தவரையில் ஆன்மா சம்பந்தப்பட்டதா? இல்லை வேகம் சம்பந்தப்பட்டதா என்று தெரியவில்லை..

ஆயினும் ஒன்று மட்டும் நிச்சயம்.. தானத்தில் சிறந்தது அது இதுவென்று பலவும் சொல்கிறார்கள்.. ஆயினும் என்னைப்பொறுத்தவரை "நிதானமே" சிறந்தது. அதனால் நமக்கும் தொல்லையில்லை.. நம்மை சார்ந்தவருக்கும் தொல்லையில்லை. தொடருங்கள்..

நுரையீரல்
18-01-2008, 02:48 PM
வரிகளில் தான் என்ன ஒரு வீரியம்....
இப்படி ஒரு கதையை கற்பனைக்காக கூட என்னால் நினைக்க முடியவில்லை....!! :frown:
எனது இலட்சியக் கதையே இது என்று சொல்வேன்..

இந்தக் கதை முடித்தவுடன், எனது இலட்சியம் வேறொன்றாக மாறிவிடும்..

இந்தக் கதையின் மூலம், வெறும் சோகத்தை மட்டும் சொல்ல முயலவில்லை. அறிவியல் சார்ந்த பல விஷயங்களையும் சொல்ல விளைகிறேன்.

வாழ்க்கை என்பது வாழ்வதற்காகவே!

இவ்வாழ்க்கையின் மூலம் பல விஷயங்களைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பது என் ஆவல்.

ஒருமுறை போயிருச்சுன்னா... இட்ஸ் கான், போயிந்தே.. போயே போச்சுதான்.. இழந்தவனுக்கு மட்டும் தான் நஷ்டம். உறவுகளுக்கு மூணு நாளோ, ஏழு நாளோ (அ) வருடம் ஒரு முறையோ தான்..

நுரையீரல்
18-01-2008, 02:58 PM
சில நேரங்களில் சில தவறுகள்... ஆனால் விளைவோ பெரியவை. உங்களிடமிருந்து சீரிய சிந்தனையுள்ள தொடர் என்று நினைக்கிறேன். நீங்கள் முடித்தவரையில் ஆன்மா சம்பந்தப்பட்டதா? இல்லை வேகம் சம்பந்தப்பட்டதா என்று தெரியவில்லை..

ஆயினும் ஒன்று மட்டும் நிச்சயம்.. தானத்தில் சிறந்தது அது இதுவென்று பலவும் சொல்கிறார்கள்.. ஆயினும் என்னைப்பொறுத்தவரை "நிதானமே" சிறந்தது. அதனால் நமக்கும் தொல்லையில்லை.. நம்மை சார்ந்தவருக்கும் தொல்லையில்லை. தொடருங்கள்..
இந்தக் கதை முதலில் நீதிக்கதைகள், சுவையான சம்பவங்களில் தான் இருந்தது. இந்தக்கதையில் கண்டிப்பாக நீதி இருக்கிறது. வெறுமனே பந்தா காண்பிப்பதற்காக, அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி, கரணம் தப்பினால் மரணம் என்னும் சூழலில் பலர் இருக்கிறார்கள்.

ஒருவேளை மரணமாகிவிட்டால் அந்தத் தருணத்தில் ஆன்மா எப்படி தவிக்கும், மரித்தவனின் உறவுகள் எப்படி தவிக்கும் என்பதனை உணர்ந்தால், சிலர் வேகத்தை குறைக்கலாமல்லவா மதி..

எந்தப் பொருளும் இருக்கும்போது, அதன் அருமை தெரியாது...

என்னைப் பொறுத்தவரையில், ஆன்மா இருப்பதாக நம்பவில்லை. ஆனால், ஆன்மா இருப்பதாக நம்பி, அவ்வாறு இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் தான் இதை எழுதினேன்.

கதையைப் படித்தபலர் என்மேல் கொண்ட அன்பால், என்னைத் தொடர்பு கொண்டு அன்பால் திட்டினர். யவனிகா அழுது ஒரே ஆர்ப்பாட்டம். அறிஞரிடம் சொல்லி கதையையே அழிக்கச் சொல்கிறேன் என்றார்.

என்மேல் கொண்ட அன்பால், பலர் பின்னூட்டம் கொடுக்கத் தயங்கிய சூழலிலும் நீங்களும், ஓவியனும் கொடுத்த பின்னூட்டம் என் கதையை மெருகூட்டச் செய்யும் என்று நினைக்கிறேன்.. நன்றிகள் பல...

அமரன்
18-01-2008, 04:40 PM
அச்சாத்திய துணிச்சல் சொல்லமுடியா திறமை
ஒருங்கே அமையப்பெற்றது கற்பனைப் பறவை..
எந்த உயரத்தையும் மிகச்சாதாராணமாக
தொட்டு விடுகின்றது இதன் வல்லமை!!!

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில்-உடல்
மட்டும் தகனத்தில் அடைக்கலமாகிறது.
பின்னான உயிரின் நிலைமை என்ன?
கற்பனைக்கு மட்டுமே எட்டக்கூடியது.

கண்டுபிடிப்புகளின் கரு கற்பனைதானே..
யாருக்குத்தெரியும்..
இப்பதிவும் புதிதாக ஏதும் பெற்றுத்தரலாம்.

வரிவரிக்கு பார்வையால் மேய்ந்த பின்பு
அந்த எதிர்பார்ப்பு மட்டுமே மிஞ்சுகிறது

மதி
19-01-2008, 01:45 AM
மாமா..
இதை நான் கதையா மட்டும் பார்த்தேன்... நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். ஒரு பாலக்குமாரனின் நாவலில் இறந்தபிறகு அவரது ஆவி அல்லது ஆன்மா அவனது வீட்டைச் சுற்றி வரும். இவரின் ஆன்மாவிற்கு தாகம் எடுக்கையில் இவரை நினைத்து யாரேனும் யாருக்காவது தண்ணீர் குடுக்கையில் இவரின் தாகம்தணியும்.. உங்க விஷயத்திலும் அது தான் தோன்றுகிறது. ஒருவன் சந்திக்கும் பிரச்சனைகளையும் தோல்விகளையும் தன்னிலிருந்து விலகி மூன்றாம் மனித பார்வையில் பார்க்கையில் தன் தவறு புரியும். ஆயினும் இந்த மாதிரி இறந்த தன் ஆவியை கற்பனை பண்ணி எழுத மனோதைரியம் வேண்டும்..

ஆனாலும் உங்களுக்கு செல்ல குட்டு. அக்காவின் மனம் வருந்தியதற்கு..வருத்தப்பட செய்ததற்கு..

நுரையீரல்
19-01-2008, 02:58 AM
கண்டுபிடிப்புகளின் கரு கற்பனைதானே..
யாருக்குத்தெரியும்..
இப்பதிவும் புதிதாக ஏதும் பெற்றுத்தரலாம்.
உங்களுடைய வரிகள் என்னை உற்சாகப்படுத்தி, என்னை மேலும் சிந்தித்து தெளிவுடன் எழுதத் தூண்டுமோ என்ற அச்சம் என் சோம்பேறி மனதுக்குள் எழுகிறது.

இந்தக் கதைக்கரு நெடுநாளாக மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த ஒன்று. அதையே எழுதுகிறேன்.

தனது மரணம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எவராலும் நிர்ணயிக்க முடியாது. ஆனால், மரணத்திற்குப் பின்னால் இப்படி இருந்தால் நல்ல இருக்குமே என்று எனக்கே எனக்கான சில ஆசைகள் / கற்பனைகள் இருக்கின்றன. அதைத் தான் பின்வரும் பகுதிகளில் எழுதப்போகிறேன்.

நுரையீரல்
19-01-2008, 03:02 AM
இதை நான் கதையா மட்டும் பார்த்தேன்... நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன். ஒரு பாலக்குமாரனின் நாவலில் இறந்தபிறகு அவரது ஆவி அல்லது ஆன்மா அவனது வீட்டைச் சுற்றி வரும். இவரின் ஆன்மாவிற்கு தாகம் எடுக்கையில் இவரை நினைத்து யாரேனும் யாருக்காவது தண்ணீர் குடுக்கையில் இவரின் தாகம்தணியும்.. உங்க விஷயத்திலும் அது தான் தோன்றுகிறது. ஒருவன் சந்திக்கும் பிரச்சனைகளையும் தோல்விகளையும் தன்னிலிருந்து விலகி மூன்றாம் மனித பார்வையில் பார்க்கையில் தன் தவறு புரியும். ஆயினும் இந்த மாதிரி இறந்த தன் ஆவியை கற்பனை பண்ணி எழுத மனோதைரியம் வேண்டும்..
எனக்கு பாலகுமாரன் படிக்கும் பழக்கம் இல்லை.

நான் சொல்ல நினைத்தது, சற்று அறிவியலுடன் ஒட்டி இருக்க வேண்டும் என்ற ஆசையே.

ஆன்மா இருக்கிறதா? இல்லையா? என்பதனை உறுதிசெய்ய வேண்டிய கடமையும் எனக்கில்லை மதி.. கோமாவில் படுத்திருக்கும் ஒருவரது மனசு எதையெல்லாம் சொல்ல நினைத்து, முடியாமல் ஏங்கித் தவிக்குமோ, அதையே மரணத்திற்குப் பின்னர் நடந்தால் எப்படி இருக்கும் என்பதே எனது கற்பனை..

இருந்தாலும் தங்களுடைய இரண்டாம் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

சிவா.ஜி
19-01-2008, 03:47 AM
அய்யா நுரையீரல்(கஷ்டம்டா சாமி)உங்க எழுத்து வன்மையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.அத்தனை வீரியமிருக்கிறது.ஆழ்மன எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும்....கதை என்று வந்துவிட்டால் பாத்திரங்களை கற்பனையாக கொடுத்தால் உறுத்தலின்றி படிக்கமுடியும்.
எழுதுபவர் அவருடைய பெயரையே அவரின் கதாபாத்திரத்துக்கும் கொடுக்கும்போது கதையில் சொல்லும் குணாதிசியங்களைவிட அவரைத் தெரிந்தவர்கள் அவருடைய உண்மையான கேரக்டரோடு சம்பந்தப்படுத்தித்தான் யோசிப்பார்கள்.அதே மாதிரி கூடுமானவரை கதைக்களனையும் பரிச்சயமில்லாததாகத் தருவது மிக நல்லது.சம்பந்தப்பட்டவர்களுக்கு உறுத்தலில்லாமல் இருக்கும்.

மற்றபடி எடுத்துக்கொண்ட கரு மிக அருமையானது.அதை சொல்லும் விதமும் அசத்தல்.தன் தேகத்தை தானே தள்ளி நின்று பார்த்து,உணர்ந்து அதை எழுதுவதற்கு தனித் திறமைவேண்டும்.எழுதுங்கள்...ஆனால் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றிவிடுங்கள்.அப்படியே அந்த மனைவியின் மருத்துவமனை பணி....வீட்டு சூழல் இதிலும் கொஞ்சம் மாற்றம் வேண்டும்.

அதுவும் இந்தக் கதை மன்ற உறுப்பினரல்லாதோர் வாசிக்கும்போது என்ன பெயர் இது நுரையீரல் என்று எண்னத்தோன்றும்.முதலாவதாக உண்மையிலேயே ஒரு நுரையீரல்தான் அதன் கதையை சொல்லுகிறதோ என்று கூட நினைக்கத்தோன்றும்.

வித்தியாசமான கருவை கையாள முயலும் உங்கள் தைரியத்துக்கு என் பாராட்டுக்கள்.

இதயம்
19-01-2008, 04:28 AM
மற்றவர்களை தன் சிறந்த நகைச்சுவைப்படைப்பால் சிரிக்க வைத்தே பழகிப்போன ராஜாவிடமிருந்து இப்படி ஒரு படைப்பா என்று என்னால் நம்பமுடியவில்லை. ஒரு எழுத்தாளனின் பார்வையும், அவன் உலகமும் மிகப்பெரியது. அவன் தன்னை சுற்றி ஒரு சிறு வட்டத்தை போட்டுக்கொண்டு, அதற்குள்ளேயே பயணித்தல் கூடாது என்பது உண்மை தான். அந்த வகையில் ராஜாவின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே. ஆனால், தான் என்ன நினைத்தாரோ அதை வெளிப்படுத்துவதில் தன் நிஜப்பெயர், குடும்பம் இவற்றை இணைத்து கதையின் சீரான போக்கை தடுத்து, வாசகர்களை அவரையும் அறியாமல் குழப்பி விடுகிறாரோ என்று தோன்றுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த கதை நம் மன்றத்தில் எந்தப்பிரிவிற்கானது என்பதை அவராலேயே தீர்மானிக்கமுடியாமல் திணறியிருக்கிறார் என்றால் அவர் கதையை அளிக்கும் விதத்தில் (Presentation) பலவீனம் இருக்கிறது என்பதையும், தன் படைப்பையே இனங்கான முடியா ஒரு ஒரு படைப்பாளியாக அவர் இருந்திருக்கிறார் என்ற கசப்பான உண்மையையும் சொல்லாமல் சொல்லுகிறது.

ஒரு விஷயத்தில் அவரை நான் பாராட்டியே ஆக வேண்டும். அத்தனை எளிதாக மற்றவர்களால் கையாள முடியாத ஒரு அற்புதமான கதைக்கருவை எடுத்திருக்கிறார். தான் எடுத்துக்கொண்ட கருவை மிக துல்லியமாகவும் புரிந்து உணர்ந்திருக்கிறார் என்பதை அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் உணர்த்துகின்றன. ஆக, தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவில் தெளிவாக தெரியும் கதாசிரியர், அதை நகர்த்த கதாபாத்திரங்கள், சம்பவங்களை கொண்டு போகும் விதத்தில் தள்ளாடுவது ஏன் என்று தெரியவில்லை. இது அப்போது தான் வாங்கிய புத்தம்புதிய வண்டி சரியாக செயல்படமுடியாமல் போகும் இம்சையை தான் கொடுக்கிறது. ஆன்மாவை பற்றி பேசப்போகும் ஒரு கதையில் இரத்தம், சதை என்று ஏன் இத்தனை வன்முறையை வம்பாய் உள்நுழைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. விபத்து என்பதும், அதன் கோரங்களும் நம்மில் யாரும் அறியாத ஒன்றல்ல. இவரின் இந்த கதைக்கான நோக்கம் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்துவதா அல்லது உடல், ஆன்மா தொடர்பான உறவை வெளிப்படுத்துவதா..? ஆன்மாவுக்கும், உடலுக்குமான உறவை ஒரு சொட்டு இரத்தம் இல்லாமலேயே அருமையாக எழுத முடியும். ஒரு வேளை இதற்கு வேறு ஏதாகிலும் உள்நோக்கம் இருந்து, அதை பிறகு தெரியப்படுத்துவாரோ என்பது என் கணிப்பு.

ராஜா யார், அவர் குடும்பத்தினர் யார், ராஜாவின் இயல்புகள் என்ன என்று அறிந்த மன்றத்தவருக்கு இந்த கதை திருப்தி மற்றும் சந்தோஷத்தை விட அதிருப்தியை தான் கொடுக்கும் என்பதை அவர் புரிந்து, ஒரு கதைக்கு அவசியப்படும் இலக்கணங்களை மட்டும் வாசகர்களுக்கு கொடுப்பது நலம் என்று தோன்றுகிறது. இந்த கதையில் தன் சொந்த குடும்பத்தை உள்ளிழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதும் எனக்கு புரியவில்லை. இது ஒரு கதையாக இருந்தால் அவசியப்படாது. அனுபவமாக இருந்தால் அதில் கற்பனை அல்லாத உண்மை சொல்லப்படல் வேண்டும். ஏன் இந்த குழப்பம்..? அது மட்டுமல்லாமல், இந்த கதையை படித்த வகையில் அவரின் கதை ஓட்டம், வர்ணனைகளை வைத்துப்பார்க்கும் பொழுது எழுத்தாளனான தன் மீது வாசகர்களின் அனுதாபம் வர பெரிதும் முயற்சிக்கிறார் என்பதை புரிய முடிகிறது. அது ஏனென்றும் தெரியவில்லை. கதையின் கதாபாத்திரத்தின் மீது வாசகர்களுக்கு அனுதாபம் ஏற்படுவது என்பது எழுத்தாளனின் வெற்றி. ஆனால், எழுத்தாளனின் மீதே ஏற்படும் அனுதாபம் என்பது அது அவர் எழுத்தின் தோல்வி என்பது என் கருத்து.!

லொள்ளுக்கு பெயர் போன சத்யராஜை பார்த்து சிரித்த இரசிகர்கள், ஒன்பது ரூபாய் நோட்டில் அவரை பார்த்து அழுதார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம், அவர் தேர்ந்தெடுத்த கதையும், தங்கர்பச்சான் சிறப்பாய் அதை அளித்த விதமும் தான். கொடுப்பது எதுவாக இருந்தாலும் அதை ஏற்கும் விதத்தில் கொடுத்தால் நிச்சயம் வெற்றி தான்..!!

நான் எழுதியிருப்பவை அனைத்தும் அவரின் எழுத்தார்வத்தை குறைக்கவோ, நசுக்கவோ சொன்னதில்லை (அதைப்பற்றியும் அவர் கவலைப்படமாட்டார்). ஒரு சராசரி எழுத்தாளனின் இடத்தில் இருந்து படித்த நான், ராசாவின் நலம் விரும்பி என்ற வகையில் நான் உணர்ந்தவற்றை சொன்னதன் மூலம் கதையின் பலவீனங்களை குறைக்க இயலும் என்பதே என் பின்னூட்டத்தின் நோக்கம். கதை எழுத்தாளர் என்ற வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கும் ராசாவுக்கு என் வாழ்த்துக்கள்.. மற்றபடி இந்த தொடரை படித்தவரை பாராட்ட மகிழ்ச்சியை விட, அதிருப்தியை தான் அதிகம் இது ஏற்படுத்துகிறது என்பதால் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராசா..!!

நுரையீரல்
19-01-2008, 05:36 AM
ஆனால் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும்....கதை என்று வந்துவிட்டால் பாத்திரங்களை கற்பனையாக கொடுத்தால் உறுத்தலின்றி படிக்கமுடியும்.
எழுதுபவர் அவருடைய பெயரையே அவரின் கதாபாத்திரத்துக்கும் கொடுக்கும்போது கதையில் சொல்லும் குணாதிசியங்களைவிட அவரைத் தெரிந்தவர்கள் அவருடைய உண்மையான கேரக்டரோடு சம்பந்தப்படுத்தித்தான் யோசிப்பார்கள்.அதே மாதிரி கூடுமானவரை கதைக்களனையும் பரிச்சயமில்லாததாகத் தருவது மிக நல்லது.சம்பந்தப்பட்டவர்களுக்கு உறுத்தலில்லாமல் இருக்கும்.
இந்தக் கதை மிகவும் சென்சிடிவ்வான விஷயத்தைப் பற்றியது. அதுவும் உலக மக்கள் யாவருமே அறியாத, சிலர் மட்டும் அறியத் துடிக்கிற / பலர் அறியப் பயப்படுகிற விஷயம் சிவாண்ணா..

ஒருவன் தன்னுடைய ஆத்மாவையே அறிந்து கொள்ள முடியாதபோது, அவன் எப்படி வேறொரு கற்பனையான ஆன்மாவைப் பற்றி எழுதமுடியும். அதனால், இந்தக் கதையின் நாயகனுக்கு (ஆன்மா) ஒரு கற்பனைப் பெயர் கொடுக்க என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை அண்ணா.

நுரையீரல்
19-01-2008, 06:04 AM
இந்த கதை நம் மன்றத்தில் எந்தப்பிரிவிற்கானது என்பதை அவராலேயே தீர்மானிக்கமுடியாமல் திணறியிருக்கிறார் என்றால் அவர் கதையை அளிக்கும் விதத்தில் (Presentation) பலவீனம் இருக்கிறது என்பதையும், தன் படைப்பையே இனங்கான முடியா ஒரு ஒரு படைப்பாளியாக அவர் இருந்திருக்கிறார் என்ற கசப்பான உண்மையையும் சொல்லாமல் சொல்லுகிறது.
ரொம்ப புத்திசாலித்தனமா இருக்கு உங்க பின்னூட்டம். அதே சமயம் உண்மை என்னவென்று அறியாமல் எழுதுவதை நினைத்தால் எனக்கு பத்தாம் பசலித்தனமா இருக்கு.

இந்தக்கதையை நீதிக்கதைகள், சுவையான சம்பவங்களில் தான் முதலில் பதித்தேன். இந்தக்கதையில் கண்டிப்பாக நீதி இருக்கிறது. வெறுமனே பந்தா காண்பிப்பதற்காக, அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி, கரணம் தப்பினால் மரணம் என்னும் சூழலில் பலர் இருக்கிறார்கள்.

ஒருவேளை மரணமாகிவிட்டால் அந்தத் தருணத்தில் ஆன்மா எப்படி தவிக்கும், மரித்தவனின் உறவுகள் எப்படி தவிக்கும் என்பதனை உணர்ந்தால், சிலர் வேகத்தை குறைக்கலாமல்லவா அதற்காகத்தான் அங்கே பதித்தேன்.

ஒருசிலரது அன்பான வேண்டுகோளுக்கிணங்க, ஒரு பொறுப்பாளர் தான் இதை சிறுகதைக்கு மாற்றினார் புரிஞ்சுதோ...???

வேண்டுகோள் விடுத்தவரின் அன்புக்கும், பொறுப்பாளரின் செய்கைக்கு மரியாதையும் கொடுக்க வேண்டிய கட்டாயம் என் வாயைக் கட்டிப்போட்டது.


தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவில் தெளிவாக தெரியும் கதாசிரியர், அதை நகர்த்த கதாபாத்திரங்கள், சம்பவங்களை கொண்டு போகும் விதத்தில் தள்ளாடுவது ஏன் என்று தெரியவில்லை.
தண்ணியடித்ததால் தள்ளாடுகிறதோ என்னவோ? but படிக்கிறவங்களும் தள்ளாடுற சூழ்நிலையில் இருந்தால், ஒருவேளை ஒட்டுமொத்த கதையும் தள்ளாடலாம்...


ஆன்மாவை பற்றி பேசப்போகும் ஒரு கதையில் இரத்தம், சதை என்று ஏன் இத்தனை வன்முறையை வம்பாய் உள்நுழைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
ஏன் நுழைக்கக் கூடாது நண்பரே?

ஆன்மாவைப் பற்றி யாருக்கும், எதுவுமே தெரியாத பட்சத்தில் என்னுடைய கற்பனைக் குதிரையை ஓடவிடுகிறேன். இது ஒரு பொய்க்கால் குதிரை... இது ஒன்றும் புனிதநூலல்ல இதயம், நம்பவேண்டாம்.. ஜஸ்ட் ஒரு கற்பனை..


ஆன்மாவுக்கும், உடலுக்குமான உறவை ஒரு சொட்டு இரத்தம் இல்லாமலேயே அருமையாக எழுத முடியும்.
என்னால அந்த லெவலுக்கு எல்லாம் எழுத முடியாதுங்க / தெரியாதுங்க...

உங்களால முடிஞ்சா எழுதுங்க, கண்டிப்பா என்ன சொல்ல வர்றீங்க என்று படித்து.. தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்..


ஒரு வேளை இதற்கு வேறு ஏதாகிலும் உள்நோக்கம் இருந்து, அதை பிறகு தெரியப்படுத்துவாரோ என்பது என் கணிப்பு. .
உள் ஒன்று வைத்து
புறமொன்று பேசும் அளவுக்கு பழக்கமும் கிடையாது. அறிவும் இல்லை. நான் எழுதிய ஒவ்வொரு வரியும் எனது கற்பனை. ரொம்ப நாளா எழுதணும்னு நெனச்சு எழுதினது.. அதுக்குனு headingla இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்துபவை அல்ல... அப்படினு போட முடியுங்களா??


இந்த கதையை படித்த வகையில் அவரின் கதை ஓட்டம், வர்ணனைகளை வைத்துப்பார்க்கும் பொழுது எழுத்தாளனான தன் மீது வாசகர்களின் அனுதாபம் வர பெரிதும் முயற்சிக்கிறார் என்பதை புரிய முடிகிறது. அது ஏனென்றும் தெரியவில்லை..
ஐயா சாமி,, உங்களோட அனுதாபத்தை சம்பாதித்து எனக்கென்ன லாபம். இல்லை மற்றவர்களுடைய அனுதாபம் தான் என்னை என்ன செய்துவிடும்.

விடையைத் தேடும் கேள்வி இது.. யாருக்கும் விடை தெரியாத பட்சத்தில், என் ஓட்டத்திலே சென்று அறியவிரும்புகிறேன்.

ஒருவனுடைய ஆன்மா, அவன் இறந்தவுடன் இரண்டு வானவர்களால் கொண்டு செல்லப்பட்டு பின்னர் judgement day-ல் திறந்துவிடப்படும்... ப்ளா, ப்ளா, ப்ளா.. என்பதனை மனதில் தெளிவாக எழுதிவிட்ட உங்களுக்கு -> இந்தக் கதை ஒரு rubbish ஆகத் தான் தெரியும் என்பதை புரிந்தமட்டில் சொல்கிறேன். நீங்கள் எழுதிய எதுவும் என் எழுத்தார்வத்தை குறைக்கவோ, நசுக்கவோ செய்யாது.


கதை எழுத்தாளர் என்ற வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கும் ராசாவுக்கு என் வாழ்த்துக்கள்..
அன்பு இதயம்.. இது எனது முதல் கதையல்ல.. இதே மன்றத்தில் ஏற்கனவே நான் ஒரு நாள் ஒரு கனவு....! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12624) என்ற கதையை எழுதியிருக்கிறேன்..


மற்றபடி இந்த தொடரை படித்தவரை பாராட்ட மகிழ்ச்சியை விட, அதிருப்தியை தான் அதிகம் இது ஏற்படுத்துகிறது என்பதால் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ராசா..!!
அப்பவும் நான் நம்பாத லக் என்ற வார்த்தையையே சொல்கிறீர்கள்...

இதயம்
19-01-2008, 07:03 AM
ரொம்ப புத்திசாலித்தனமா இருக்கு உங்க பின்னூட்டம். அதே சமயம் உண்மை என்னவென்று அறியாமல் எழுதுவதை நினைத்தால் எனக்கு பத்தாம் பசலித்தனமா இருக்கு.
வஞ்சப்புகழ்ச்சியில என்னை போட்டு தாக்கியிருக்கீங்களே ராசா..!! அது எப்படி உண்மையை அறியாத பத்தாம்பசலித்தனமான எழுத்து புத்திசாலித்தனமா இருக்கும்..!! இது கூட தெரியாத பச்சப்பிள்ளையா நான்..?!! போங்க ராசா எப்ப பார்த்தாலும் என்கிட்ட காமடி பண்ணிக்கிட்டு..!!


இந்தக்கதையை நீதிக்கதைகள், சுவையான சம்பவங்களில் தான் முதலில் பதித்தேன். இந்தக்கதையில் கண்டிப்பாக நீதி இருக்கிறது. வெறுமனே பந்தா காண்பிப்பதற்காக, அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி, கரணம் தப்பினால் மரணம் என்னும் சூழலில் பலர் இருக்கிறார்கள்.

நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன். இது கதைன்னா கற்பனை சம்பவங்களும், கற்பனை கதாபாத்திரங்களும் தான் வரும்..! ஆனா, உண்மை கதாபாத்திரங்கள் வருது. இது அனுபவம்னா உண்மைச்சம்பவமும், உண்மையான கதாபாத்திரங்களும் வரும். இதில் கதாப்பாத்திரம் உண்மை... சம்பவங்கள்..?? ஆக, உங்களுக்கு ஏற்பட்ட குழப்பம் நிச்சயம் எங்களுக்கும் உண்டு..!! உங்களுக்கு ஏற்பட்ட நிலை தான் இப்ப எனக்கும். என் வாய் கட்டப்பட்டிருக்கு..! (அப்புறம் எப்படி இவ்ளோ வாயடிக்கிறீங்கன்னு கேட்காதீங்க.. ரொம்ப சிக்கலான கேள்வி..! ஹி..ஹி..!!!:D:D)


ஆன்மாவைப் பற்றி யாருக்கும், எதுவுமே தெரியாத பட்சத்தில் என்னுடைய கற்பனைக் குதிரையை ஓடவிடுகிறேன். இது ஒரு பொய்க்கால் குதிரை... இது ஒன்றும் புனிதநூலல்ல இதயம், நம்பவேண்டாம்.. ஜஸ்ட் ஒரு கற்பனை..

பொய்க்கால் குதிரை ஓடாது.. ஆடும்..!! ஒரு வேளை இரசனையான அந்த ஆட்டம்தான் என் நொள்ளைக்கண்ணுக்கு தள்ளாட்டமாக தெரிகிறதோ..?!!



என்னால அந்த லெவலுக்கு எல்லாம் எழுத முடியாதுங்க / தெரியாதுங்க...

உங்களால முடிஞ்சா எழுதுங்க, கண்டிப்பா என்ன சொல்ல வர்றீங்க என்று படித்து.. தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்கிறேன்..

உங்க தன்னடக்கம் இங்க தான் தலை நிமிர்ந்து நிக்குது..! இவ்ளோ அருமையா எழுதுற நீங்க ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுறதுக்கு காரணம் உங்க தன்னடக்கம்..!! இது இருக்கும் வரை உங்களை யாரும் அசைச்சிக்க முடியாது..!!



உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் அளவுக்கு பழக்கமும் கிடையாது. அறிவும் இல்லை. நான் எழுதிய ஒவ்வொரு வரியும் எனது கற்பனை. ரொம்ப நாளா எழுதணும்னு நெனச்சு எழுதினது.. அதுக்குனு headingla இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்துபவை அல்ல... அப்படினு போட முடியுங்களா??
இத்தனையும் போடுறதுக்கு பதிலா எங்க மனசை புண்படுத்தக்கூடாதுன்னு நினைச்சிருந்தா உங்க பேருக்கு பதிலா ஒரு குப்புசாமியோ, கந்தசாமியோ போட்டிருக்கலாம்..!!


ஐயா சாமி,, உங்களோட அனுதாபத்தை சம்பாதித்து எனக்கென்ன லாபம். இல்லை மற்றவர்களுடைய அனுதாபம் தான் என்னை என்ன செய்துவிடும்.
இன்னைக்கு என்ன மூட் அவுட்டா..? ஏன் ரொம்ப விரக்தியா பேசுறீங்க ராசா..?! அம்ரூ கிட்ட வாயை விட்டு வாங்கி கட்டுனீங்களா..?



ஒருவனுடைய ஆன்மா, அவன் இறந்தவுடன் இரண்டு வானவர்களால் கொண்டு செல்லப்பட்டு பின்னர் judgement day-ல் திறந்துவிடப்படும்... ப்ளா, ப்ளா, ப்ளா.. என்பதனை மனதில் தெளிவாக எழுதிவிட்ட உங்களுக்கு -> இந்தக் கதை ஒரு rubbish ஆகத் தான் தெரியும் என்பதை புரிந்தமட்டில் சொல்கிறேன். நீங்கள் எழுதிய எதுவும் என் எழுத்தார்வத்தை குறைக்கவோ, நசுக்கவோ செய்யாது.

உங்களுடைய கதை குப்பை என்று நான் எப்போ சொன்னேன். அதில் நிஜ மாந்தர்களை உலவவிட்டது கதை ஓட்டத்தின் தன்மையை பாதிக்குது. உங்களுக்கு எப்படி ஆன்மா விஷயத்தில் தெளிவான கருத்து இல்லையோ அப்படி தான் எனக்கு மரணத்துக்கு பின்னாடி என்ன நடக்குதுங்கிறது. ஏதோ ஒரு நம்பிக்கை (பலருக்கு மதம் கொடுக்கிறது) தான் அதுக்கு பதிலா இருக்கு. ஆக, நாம ரெண்டு பேரும் இந்த விஷயத்தில் ஒரே கட்சி மாதிரி தான். நான் அதிருப்தியானதுக்கு காரணம், உங்க மேல இருக்கிற அன்புன்னு தான் சொல்றேன். அதை புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க..!! காலம் பதில் சொல்லும்..!!


அன்பு இதயம்.. இது எனது முதல் கதையல்ல.. இதே மன்றத்தில் ஏற்கனவே நான் ஒரு நாள் ஒரு கனவு....! என்ற கதையை எழுதியிருக்கிறேன்..

அது கதையில்ல.. சுத்தமான அக்மார்க் அனுபவம்..!! அதை படிச்சி, பின்னூட்டமும் போட்டாச்சி.. சொன்னதுக்கு நன்றி..!!


அப்பவும் நான் நம்பாத லக் என்ற வார்த்தையையே சொல்கிறீர்கள்...

உங்களுக்கும் லக் மேல் நம்பிக்கை இல்லையா..? நான் இருக்குமோன்னு நினைச்சி சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க..!!

ஒரு வாசகன் படைப்புகள் பிடிக்கலைன்னு சொல்றது படைப்பாளிக்கு வருத்தம் தான். ஆனா, சொல்றவன் படைப்பாளியின் அன்புக்குரியவனா இருந்தா யோசிக்க வைக்கும், இல்லேன்னா அதை இரசிக்க வைக்கும்..!! அப்பன் மாதிரி சைத்தான்னு ஒரு தாய் பிள்ளையை சொன்னா புருஷனுக்கு கோபமா வரும்..?!! அப்படித்தான் நானும் சொன்னேன். இரசிக்காட்டியும் பரவாயில்லை, வருத்தப்படாதீங்க..!! என்னையுமறியாம உங்களை வருத்தப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க ராசா..!!

நுரையீரல்
19-01-2008, 07:24 AM
அன்புள்ள இதயத்துக்கு...

என்னை ஏன் புரிஞ்சுக்கமாட்டேன்கிறீங்க... இந்தக் கதையின் நாயகனாக குப்புசாமியோ (அ) முனுசாமியாகவோ இருந்தால் இந்தளவுக்கு பின்னூட்டம் போடமாட்டிங்கனு எனக்கும் தெரியும்.

இந்தக் கதையில் சொல்லப்படும் சம்பவத்திற்கு ஒரு அழுத்தம் தேவைப்படுகிறது. அதற்கு என் பெயர் பயன்படுத்தினேன். என்மேல் கொண்ட அன்பினால் தான் சிவாண்ணா, நீங்க கூட நேத்து பின்னூட்டம் போடலைன்னும் எனக்குத் தெரியும்.

உங்க அனைவரது மனசிலயும் ஒரு நெருடலை ஏற்படுத்த இந்தக் கதையை எழுதவில்லை. என் மனதை நானே அறியவிரும்பும் முயற்சி இது.. இக்கதையின் மூலம் தெளிவில்லாத என் சிந்தனைக்கு, ஒரு பதில் கிடைக்கலாம். அந்தப் பதில் எனக்கு மட்டுமானதல்ல. ஆன்மா நம் அனைவரும் அறிய முற்படும் விஷயம்.

அச்சச்சோ நுரையீரல் சாமியார் ஆயிட்டாரோனு கவலைப்படாதீங்க... நான் ஒரு மனிதனாக இருக்க ஆசைப்படுகிறேன். இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டேன். இனிமேல் வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குத் தெரியும்.

ஆனால், இறப்பிற்குப் பின்னர் என்ன? யாருக்காவது தெரியுமா?, தெரியுமா?, தெரியுமா?... (2வதும், 3வதும் எக்கோ)

இதயம்
19-01-2008, 07:31 AM
இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்னவென்று புரிந்து கொண்டேன். இனிமேல் வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்குத் தெரியும்.

அப்ப திருந்திடலாம்-நு (நன்றி: வாத்தியார்:D)முடிவே பண்ணிட்டீங்களா..? என்னால நம்பவே முடியலை..!!:icon_rollout::icon_rollout:

அமரன்
19-01-2008, 08:35 AM
பெரியவங்க பெரியவங்கதான்:icon_b:

சிவா.ஜி
19-01-2008, 08:37 AM
ராசாவுக்கு: ராசா...தொடருங்க.நல்ல சப்ஜெக்டை தொட்டிருக்கீங்க....நல்லாவும் எழுதறீங்க....ஆனா பேரை மட்டும் மாத்திட்டீங்கன்னா நல்லாருக்கும்.உங்களை வெச்சுத்தான் யோசிக்கிறீங்கன்னாலும்...அது உங்க கதாப்பாத்திரத்தின் மூலமாத்தான் வெளிப்படனுமே ஒழிய உங்க பேராலேயே வெளிப்படனுன்னு இல்ல.
ராமசாமியோ,குப்புசாமியோ வெச்சுக்கலாம் தப்பில்ல.வாழ்த்துகள்.

தங்கை யவனிகாவுக்கு:-உங்களுக்கு இனிமேல் வேலை அதிகமாகிவிடும்.ரெண்டு செட் காவி உடையும்,மான்தோலும்துவைக்கனும்,கமண்டலத்தை கழுவனும்..அப்பப்பா,,,எவ்ளோவேலை......ஒரு ராசானந்தா சுவாமிகள் உருவாகிட்டார்.

இதயம்
19-01-2008, 08:43 AM
ஒரு ராசானந்தா சுவாமிகள் உருவாகிட்டார்.
என்ன சிவா.. அவர் திருந்திட்டார்னு கேள்விப்பட்டேன். நீங்க என்னன்னா அவரை கேடி லிஸ்ட்ல சேர்க்கிறதுக்கு வழி சொல்றீங்க..!!:D:D

நுரையீரல்
19-01-2008, 08:46 AM
பெரியவங்க பெரியவங்கதான்:icon_b:
யாரைச் சொல்றீங்க அமரன்?

குத்துமதிப்பாச் சொல்லாம, குறிப்பாச் சொல்லலாமே

நுரையீரல்
19-01-2008, 08:48 AM
அப்ப திருந்திடலாம்-நு (நன்றி: வாத்தியார்:D)முடிவே பண்ணிட்டீங்களா..? என்னால நம்பவே முடியலை..!!:icon_rollout::icon_rollout:
நான் திருந்தினதுக்கப்புறம், நிறையப் பேரை திருத்தவேண்டிய கடமை இருக்குமே..

இதயம்
19-01-2008, 08:52 AM
நான் திருந்தினதுக்கப்புறம், நிறையப் பேரை திருத்தவேண்டிய கடமை இருக்குமே..
எனக்கென்னவோ நாம திருந்திட்டா மத்தவங்க தானா திருந்திடுவாங்கன்னு தோணுது..!!

அமரன்
19-01-2008, 09:04 AM
யாரைச் சொல்றீங்க அமரன்?
குத்துமதிப்பாச் சொல்லாம, குறிப்பாச் சொல்லலாமே
குறிப்பிட்டுச் சொல்லனும்னா அனுபவ நெடுஞ்சாலையில் நெடுந்தூரம் நான் போகவேண்டும்..
நெடுந்தூரம் போனவர்களில் நீங்களும் ஒருவர்..
எது சரி? எது தவறு என்பதினை எளிதாக தெரிந்துகொள்ளமுடியுமே!

யவனிகா
19-01-2008, 10:32 AM
குறிப்பிட்டுச் சொல்லனும்னா அனுபவ நெடுஞ்சாலையில் நெடுந்தூரம் நான் போகவேண்டும்..
நெடுந்தூரம் போனவர்களில் நீங்களும் ஒருவர்..
எது சரி? எது தவறு என்பதினை எளிதாக தெரிந்துகொள்ளமுடியுமே!

அப்ப இருந்து சொல்றேன்...வகை தொகை இல்லாம ஏத்தி விடாதீங்கன்னு..நேராச் சொன்னாலே அவரு அகராதி தேடி அப்புறம் தான் புரிஞ்சுக்குவார்...பூடகமா சொன்னா...அவர ஓவரா பாராட்றீங்கன்னு நினைச்சு என்ன தெரியுமா செய்வார்?

அடுத்த பகுதில...இவர பக்க ஹாஸ்பிட்டல் வர்ற வழியிலயே...என் காரையும் ஆக்ஸிடண்ட் செய்து..என்னையும் பீஸ்..பீஸா ஆக்கிடுவாரு...(எனக்கு இதெல்லாம் பிடிக்காது அமரு..தூங்கும்போதே சிரிச்சாப்பில போய் சேந்திடணும்...)அப்புறம் கேளுங்க...ஆன்மாவா நான் மட்டும் சும்மா இருப்பணா?

இவரயும் வர்ற வழில பிகப் பண்ணிட்டு நேரா உங்களப் பாக்கத்தான் வருவேன்...நாங்களாவது பரவாயில்லை...ஏதோ கொஞ்சம் வாழ்ந்திட்டோம்...உங்கள நினைச்சாத்தான் பாவமா இருக்கு...

இனிமே இந்தத் திரிப் பக்கமே வரக் கூடாது...மீறி யாராவது வந்தா எலுமிச்சம்பழம் மந்திரிச்சு ஏவி விட்டுடுவேன்.

இதயம்
19-01-2008, 10:49 AM
இனிமே இந்தத் திரிப் பக்கமே வரக் கூடாது...மீறி யாராவது வந்தா எலுமிச்சம்பழம் மந்திரிச்சு ஏவி விட்டுடுவேன்.

நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க.. கை வசம் எங்ககிட்ட பாசமலர்கள் பூவும், மலரும் இருக்கிற வரை எந்த காத்து கருப்பும் எங்களை அண்டாதுல்ல.!!:D:D

சிவா.ஜி
19-01-2008, 10:59 AM
அடுத்த பகுதில...இவர பக்க ஹாஸ்பிட்டல் வர்ற வழியிலயே...என் காரையும் ஆக்ஸிடண்ட் செய்து..என்னையும் பீஸ்..பீஸா ஆக்கிடுவாரு....
என்ன நெனைச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க ரெண்டுபேரும்..விளையாட்டுக்குக்கூட இனிமே அப்படி சொல்லாதீங்க...அவருதான் எல்லாத்தையும் விட்ட மாதிரி தத்துவம் பேசறாருன்னா நீங்களுமா யவனிகா....?

இனிமே இப்படியெல்லாம் பேசப்ப்டாது...ஆமாம்.

இதயம்
19-01-2008, 11:02 AM
என்ன நெனைச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க ரெண்டுபேரும்..விளையாட்டுக்குக்கூட இனிமே அப்படி சொல்லாதீங்க...அவருதான் எல்லாத்தையும் விட்ட மாதிரி தத்துவம் பேசறாருன்னா நீங்களுமா யவனிகா....?

இனிமே இப்படியெல்லாம் பேசப்ப்டாது...ஆமாம்.

என்னாச்சு இவங்களுக்கு..? ஏன் வாயை திறந்தாலே அபசகுணமாவே பேசறாங்க..?!! உண்மையில் மந்திரிக்க வேண்டியது இவங்களுக்கு தான் சிவா..!!!

மதி
19-01-2008, 01:45 PM
...

இனிமே இந்தத் திரிப் பக்கமே வரக் கூடாது...மீறி யாராவது வந்தா எலுமிச்சம்பழம் மந்திரிச்சு ஏவி விட்டுடுவேன்.

என்னாச்சு..???
சரிக்கா... இப்ப சொல்லுங்க..மாமாவோட உறவையெ கட் பண்ணிக்கறேன்...
ரொம்ப வருத்தப்படாதீங்க.. ப்ளீஸ்..

மனோஜ்
19-01-2008, 02:34 PM
அன்பு ராஜா மாம்ஸ் குடும்பத்தில் ஏன் பிரச்சனை ஏற்படுத்தும் மனதை கஸ்படுத்தும் வகையில் எழுதுகிறீர்கள் பாருங்க யவனி(ய)க்கா விட்டா உங்களை துக்கி சாப்பிட்டுவிடுவஙாக்க போல பெயரை மாத்திதான் எழுதுங்கலேன்

நுரையீரல்
21-01-2008, 07:16 PM
முடிவே தொடர்வாயா - 2


"ஐயோ என்ன ஆச்சு, வாட் ஹேப்பண்ட் டாக்டர்.." இது மனைவி.

"பிளிஸ் யு கம் ஹியர்" என்று சொல்லிவிட்டு லைனை துண்டித்துவிட்டார் டாக்டர்.

எனது கண்கள் இரண்டும் ஒளியிழந்து, இருட்டில் தவிப்பது போல் உணர்ந்தேன். டாக்டர் யாரிடம் பேசினார் என்பது எனக்குத் தெரிந்தாலும், அவர் சொன்ன செய்தியைக் கேட்ட மனைவியின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.

எது எப்படியாயினும், மற்றவரைப் பற்றி யோசிக்கக்க நேரமில்லை. எப்படியாவது எனது உடலுடன், உள்ளத்தைச் சேர்த்துவிட வேண்டும்.

ஹலோ, யாராவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்களேன்.. பிளீஸ் யாராவது ஹெல்ப் பண்ணுங்க என்று கத்திக் கொண்டே E.R அறை முழுவதும் சுற்றித் திரிந்தேன்.

அப்போது தான் இன்னொரு ஆம்புலன்ஸின் சத்தம் கேட்டது. E.R-ல் இருக்கும் மருத்துவர் குழு வாயிலை நோக்கி ஓட, E.R-ன் மையப்பகுதியில் இருந்த நானும் வாயிலை நோக்கி ஓடினேன்.

அங்கே நான் கண்ட காட்சி, உடலுடன் சேர வேண்டும் என்ற எனது ஆசையை கட்டிப்போட்டது. 20 வயதுமிக்க ஒரு இளைஞரின் உடல், அது முழுதும் கருகிப்போய் வெந்த புண்களுடன் சதைப் பிண்டமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் உடல்.

அந்த இளைஞரின் உடல் ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டு, E.R நோக்கி கொண்டு போகப்பட்டது. உடலுக்குள் உயிரிருக்கும் போல, எரியுது.. தாங்கமுடியலை, காப்பாத்துங்க.. என்று அரபியில் அரற்றிக் கொண்டிருந்தான். .

டாக்டர்களும், நர்ஸ்களும் ஏதேதோ ஆறுதல் சொல்லிக் கொண்டே, அந்த இளைஞரின் எரிந்த உடல் முழுதும் ஒரு திரவம் ஊற்றினார்கள். ஐயோ.. என்று அவன் அலறும் சத்தத்துடன் ஓலமிட்டான்.

நானும் அருகே சென்றேன், இளைஞரின் உடல் நெளிகிறது. டாக்டர்களின் முகத்தில் பதட்டம், கமான் பாஸ்ட்.. என்று நர்ஸ்களை அதட்டுகிறார்கள்.

புண்பட்ட இளைஞனின் உடலிலிருந்து, ஒரு ஒளி எழும்புவது போன்று தோன்றியது. எனது கண்களை கூர்மையாக்கி, ஒளியின் திசையை நோக்கியபோது, ஒளி, இப்போது முழு உருவமாக மாறியிருந்தது..

அழகானதொரு சவுதி இளைஞர், அந்த ஒளிக்குள் புகுந்திருந்தார். என்னைப் பார்த்து புன்முறுவல் செய்த இளைஞர், என்னருகில் வருகிறார்.

இவன் இறந்துவிட்டான், உறவினர்களிடம் சொல்லிவிடுங்கள்.. என்று நர்ஸ்களிடம் சொல்கிறார் டாக்டர்.

என்னருகில் வந்த இளைஞனைப் பிடித்து உலுக்கினேன். ஹேய்.. நீ இறந்துவிட்டாய் என்று டாக்டர் சொல்கிறார்.. வா.. அவர்களிடம் சொல்லி உதவச் சொல்வோம்.. என்றேன்.

அவன் பதிலேதும் சொல்லாமல், என்னருகில் வந்து என்னை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

ஏன் மிகவும் சங்கடமாய் இருக்கிறாய், என்ன பிரச்சினை உனக்கு.. என்றான். நடந்ததை ஒருவரி விடாமல் அவனிடம் ஒப்பித்தேன்.

என்னை மன்னித்துவிடு.. என்று கையைப் பிடித்து பேசினான்.

எதற்காக மன்னிக்க வேண்டும்.. என்றேன்.

நீ ஓட்டிச் சென்ற காருக்கு முன்னர் சென்ற காரை ஓட்டியவன் நான் தான்.. என்னால் தான் இதெல்லாம் ஆகிற்று, ஏதோ ஒரு விளையாட்டுப் புத்தியில் சடாரென பிரேக் அடித்துவிட்டேன், அதனால் தான் உன் கார், எனது கார் மீது பலமாக மோதியது.. அதனால் தான் நம் இருவருக்கும் இந்த நிலைமை.. என்றெல்லாம் என்னிடம் சொல்லி ஏதேதோ பேசினான்.

உன் காருக்கு என்னாயிற்று, என்றேன்.

நீ பலமாக மோதியதால் தூக்கியெறியப்பட்ட கார், அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி தீப்பிடித்துவிட்டது. அதனால் தான் இந்தக் கோரம் என்றான். கார் 15 நிமிடம் எரிந்தது, யாரும் என்னருகில் வரமுடியவில்லை. எனது உடல் முழுக்க தீக்காயங்கள்.. நான் நரகவேதனையை அனுபவித்தேன்.. எப்போது உயிர்போகும் என்று நினைக்கும் அளவுக்கு தள்ளப்பட்டேன்.

நல்லவேளை பட்ட வேதனை போதும். நான் செத்ததே நல்லது, என்று மிகச்சாதாரணமாகச் சொன்னான்.

அவன் ஒரு தைரியசாலி போல, அவ்வளவு தான் எல்லாம் முடிந்துவிட்டது, இனி ஆகப் போகும் காரியம் பற்றி பேசலாம்.. என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வெளியே சென்றுவிட்டான்.

ஹலோ ஒரு நிமிஷம்.. எங்கே போறீங்க, நில்லுங்க.. என்னைப் பார்க்க முடிந்த, என்னுடன் பேசக்கூடிய ஒரே ஜீவன் நீங்கள் தான், நீங்களும் இப்படி என்னை தவிக்கவிட்டுச் சென்றால் என்ன செய்வேன்.. என்று அவரிடம் கூறினேன்.

அதற்கு அவன், தற்போது நான் பஹ்ரைன் சென்று கொண்டிருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் நீ அங்கு வா.. என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்..

அப்போது தான் எனக்குத் தெரிந்த முகங்கள் ஒவ்வொன்றாய் ஹாஸ்பிடலுக்குள் வருகின்றனர். நான் E.R கதவின் முன்புறம் நின்று வருபவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்க்கிறேன். யாரும் என்னை கவனிக்கவில்லை. எனது நண்பன் ஒருவன் அழுதுகொண்டே உள்ளே வந்தான்.

நண்பனின் தோளைத் தொட்டு, அவனிடம் பேச முயன்றேன். எனது விரல்களால் அவனை தீண்ட முடியவில்லை. அவனைத் தொட்டும் தொடு உணர்ச்சி எனக்கேயில்லை, அவன் எப்படி உணருவான் எனது தீண்டலை.

ஏதேதோ சொல்லி அழுதான்.. வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கும் எனது உடலை பார்ப்பதற்குக் கூட மறுத்தான். ஒரு நர்ஸ் வெள்ளைத் துணியை திறக்க, ஒரு நொடிகூட எனது முகத்தை பார்த்திருக்கமாட்டான்.. ஓ.. வென்று அழுதான்.. எனது பேரைச் சொல்லி, ஐயோ, ஐயோ என்று கதறினான்.

வேறொரு நண்பன் இவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறான். அனைத்தையும் வெறித்த முகத்துடனும், எல்லையில்லா சோகத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனது நெஞ்சம் முட்டி மோதுகிறது, கண்களுக்குள் கண்ணீர் பெருக்கெடுப்பது போன்ற உணர்வு.. யாரிடம் என்ன சொல்வது, எதைச் சொல்வது என்று ஆயிரம் கேள்விக் கணைகள்..

அப்போது அழுது கொண்டிருந்த நண்பனின் மொபைல் போன் சிணுங்கியது.. ஹலோ.. சொல்லும்மா.. இங்கே தாம்மா இருக்கிறேன்.. ஒண்ணும் பயப்பட வேண்டாம்மா.. நீ ஒரு டாக்ஸி புடிச்சு ஹாஸ்பிடல் வாம்மா.. பசங்க என் வீட்டில தாம்மா விளையாடிட்டு இருக்காங்க.. நீ வாம்மா என்று பேடிக்கொண்டிருந்த நண்பர் ஐயோ, ஐயோ நாங்களெல்லாம் இருக்கோம் கவலைப்படாதம்மா: என்று பயங்கரமாக அழுதான்.

இவரிடமிருந்து மொபைலைப் பிடுங்கிய மற்றவர் ஹலோ.. ஹலோ.. என்று பேசுவதும், மறுமுனையில் அழுகையாய் அழுது கொண்டிருப்பவர் மயக்கம் போட்டதாகவும் பேசிக் கொண்டனர்.

யாரிடம் பேசியிருப்பார்கள், யார் மயக்கம் போட்டு விழுந்திருப்பார் என்பதனைப் புரிந்தாலும், மயக்கம் போட்டவர் எப்போது வருவார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தேன்.

யார், யாரோ வருவது என்னவெல்லாமோ பேசுவதுமாக நடந்து கொண்டிருக்க. டாக்டர் குழு என் உடல் அருகே வந்தார்கள். ஸ்ட்ரெச்சரை போஸ்ட்மார்ட்டம் செய்யும் அறைக்கு எடுத்துச் சொல்வதாகக் கூறி எடுத்துச் சென்றனர்.

போஸ்ட்மார்ட்டம் அறைக்குள் சென்று எனது உடல் அறுக்கப்படுவதை, நானே பார்க்க விருப்பமில்லாததாலும், எனது அன்புக்குரியவள் வருவதைக் காணவேண்டும், அவளாவது என்னை அடையாளம் கண்டு கொள்வாளா என்ற ஏக்கத்தாலும், நண்பர்கள் குழுமியிருக்கும் E.R ரூமிலேயே இருந்தேன்..

என்னங்க.. என்னங்க.. என்னங்க என்று எனக்குப் பிடித்த என்னங்க இன்று மிகவும் சோகமயத்தில் காதில் ஒலிக்க, ஒலிவரும் திசையை நோக்கினேன். அங்கே என்னவள், வேறொரு நண்பியின் கைத்தாங்கலுடன் அழுது கொண்டே உள்ளே வருகிறார்.

நான் அவள் முன்னால் சென்று, தொடுகிறேன், அவளைப் பிடித்து குலுக்க முயற்சி செய்கிறேன். என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. நான் உன் முன்னாடி தான் நிற்கிறேன்.. என்று ஹை டெசிபலில் கத்துகிறேன் பலனில்லை..

(தொடருமா!!!??)



முடிவே தொடர்வாயா - 1 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=317820&postcount=1)

சிவா.ஜி
22-01-2008, 09:35 AM
அட இது நல்லாருக்கே....அந்த சவுதியும் வந்து சேர்ந்துவிட்டானா?ஆனால் அவனுக்கு இந்தக் கதையின் நாயகனைப் போல அவனுடைய உடலுக்கு திரும்பிப்போக விருப்பம் கண்டிப்பாக இருக்காது.முழுதும் கருகிவிட்ட அந்த உடலை அவன் எப்படி விரும்புவான்.அதான் அவன் பஹ்ரைன் போய்விட்டான்.(அன்னைக்கு புதன்கிழமையா)அடுத்து யாரை பார்க்கப்போகிறார்,அவரைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரென்று ஆவலைத் தூண்டிவிட்டுவிட்டார்.தொடருங்க நுரை.நல்லா போய்ட்டிருக்கு.

பூமகள்
22-01-2008, 10:54 AM
:traurig001::traurig001:
:medium-smiley-100::medium-smiley-100:


அற்புதமான கருத்தோடு, ஆன்மாவோடு பேச வைத்து ஆனால், நிஜத்தின் கதாப்பாத்திரங்களை ஏன் உலவவிட்டீங்க???????????????:sauer028::sauer028: :sauer028::sauer028::sauer028: :sauer028::sauer028::sauer028: :sauer028::sauer028::sauer028:

என்னாலேயே தாங்க முடியவில்லையே... அக்கா நிலை என்னால் உணர முடிகிறது...!

தயது செய்து இனி எப்படி வேண்டுமானாலும் கதை எழுதுங்க.. ஆனா நிஜ கதாப்பாத்திரங்களை அங்கு கொண்டு வராதீங்க னா... ப்ளீஸ்...!!:traurig001:

உடனே கால் பண்ணி நல்லா திட்டனும்னு தோனுது.. என் சார்பா.. யவனி அக்காவே அதை செய்வாங்க... அக்கா.. நல்லா நங் நங்னு குட்டு வையுங்க அக்கா...! :sauer028::sauer028:

அழுது முடிச்சி... :frown::frown:
இதையெல்லாம் கடந்து யோசிச்சி பார்த்தால், ஈகோவினால் ஏற்பட்ட ஆபத்து.. ஆன்மா தவிப்பு... எல்லாம் கற்பனை திறனை எங்கோ இட்டுச் செல்கின்றன..:icon_b:

என்னிடம் ரொம்ப நாளாய் சொல்லிட்டு இருந்த கதை இது தானா அண்ணா???!! :traurig001::traurig001:

எல்லா கற்பனையையும் ஒன்றாக்கி எழுதி, அதில் உங்கள் எழுத்து வன்மை கண்டு பாராட்டுவதைக் கூட மறந்து எல்லாரையும் அழ வைக்கனும்னு திட்டமா???:mad::mad::frown:

அக்னி
22-01-2008, 10:25 PM
மிகவும் யதார்த்தமான, அனைவர் நினைவிலும் அடுத்தது என்ன என்ற கேள்வியை எழுப்பக் கூடிய விடயம் கதையாக வருவது அபூர்வமான விடயமே.
அந்த வகையில் நுரையீரல் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ஆனால், மற்றெல்லாரும் சொல்லுவது போல, இத்தொடரின் பாத்திரங்கள் உங்களைச் சார்ந்திருப்பது மனதில் இனம்புரியாத வேதனையையும், படபடப்பையும் தருகின்றது.
ஒரு நாள் பேசிய எனக்கே இவ்வளவு பதைப்பதைப்பு என்றால், பழகியவர்களால் எப்படி ஜீரணித்துக்கொள்ள முடியும்?
அதனால் எழுகின்ற உணர்வலைகளே, இந்த தொடரில் எழுகின்ற எதிர்ப்பலைகள்.

கவிதைகளில் மரணம் என்னை அணைக்காதோ என்று எழுதும்போது பதைக்காத என் மனது, இந்தத் தொடரில் திகில் கொள்கின்றது.
யாவும் கற்பனையே என்று சொன்னாலும், சில விடயங்களின் விவரிப்புக்களை ஏற்றுக்கொள்ள மனதால் இயலாது. அந்தவகையில் அடங்குகின்றது இந்த தொடரும்.

மரணத்தின் பின்னரான தேடல்களில், வாழும் மனங்கள் வேதனைப்படலாமா?
சுவாசம் தாங்கும் நுரையீரல், பாசம் உணர மறுக்கலாமா?

இந்த தொடர் தொடர வேண்டும். ஆனால், மற்றவர் வேதனையோடு வேண்டாமே... வியப்போடு தொடருமா..?

நுரையீரல்
23-01-2008, 02:49 AM
எல்லா கற்பனையையும் ஒன்றாக்கி எழுதி, அதில் உங்கள் எழுத்து வன்மை கண்டு பாராட்டுவதைக் கூட மறந்து எல்லாரையும் அழ வைக்கனும்னு திட்டமா???:mad::mad::frown:[/COLOR]
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி தங்கையே..

அழவைக்கும் திட்டம் என்னவோ உண்மைதான். ஆனால் ஆழமாக சிந்திக்கவும் வைக்க வேண்டும் என்பது தான் எனது திட்டம்.

நுரையீரல்
23-01-2008, 02:55 AM
ஒரு நாள் பேசிய எனக்கே இவ்வளவு பதைப்பதைப்பு என்றால், பழகியவர்களால் எப்படி ஜீரணித்துக்கொள்ள முடியும்?
நன்றி அக்னி...

ஒரு நாள் பேசினாலும், நூறு நாட்கள் பேசியது போலல்லவா, நாம் பேசினோம். எப்படி மறக்க முடியும்? அப்படி மறக்கும் சூழல் உருவானால், ஆன்மா இத்தாலிக்கே வந்துவிடும்.


அதனால் எழுகின்ற உணர்வலைகளே, இந்த தொடரில் எழுகின்ற எதிர்ப்பலைகள். இந்த தொடர் தொடர வேண்டும். ஆனால், மற்றவர் வேதனையோடு வேண்டாமே... வியப்போடு தொடருமா..?
அதுக்குனு இந்தக் கதையில் நகைச்சுவையை திணிக்க முடியுமா சகோ..?

கண்டிப்பாக நகைச்சுவையை திணிப்பேன். ஆனால், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலையை கதையில் உருவாக்கிவிட்டு, திணிப்பேன்.

அக்னி
23-01-2008, 03:05 AM
அதுக்குனு இந்தக் கதையில் நகைச்சுவையை திணிக்க முடியுமா சகோ..?
நகைச்சுவையைத் திணிப்பது பற்றி நான் குறிப்பிடவில்லை.
கதையில் திணிக்கப்பட்டிருக்கும் உங்களை வெளியேற்றிவிட கேட்கின்றேன்.
கற்பனைக் கதாபாத்திரங்களே போதும் என்று நினைக்கின்றேன்.

நுரையீரல்
23-01-2008, 04:22 AM
நகைச்சுவையைத் திணிப்பது பற்றி நான் குறிப்பிடவில்லை.
கதையில் திணிக்கப்பட்டிருக்கும் உங்களை வெளியேற்றிவிட கேட்கின்றேன்.
கற்பனைக் கதாபாத்திரங்களே போதும் என்று நினைக்கின்றேன்.
ஐயோ என் மேல எவ்வளவு பாசம்... ஐ லவ் யூடா செல்லம்..

உண்மையிலேயே நிறைய நண்பர்கள் என் மேல் கொண்ட அன்பால், சொல்லும் அதே வேண்டுகோளைத் தான் நீங்களும் வைத்திருக்கிறீர்கள் அக்னி..
நன்றி சொல்லவே எனக்கு என் அக்னி வார்த்தையில்லையே.. ஹே ஹெஹ்ஹே..

மனோஜ்
23-01-2008, 02:42 PM
மிக மிக அருமை
தொடாந்து தாருங்கள் கதையாக படிக்கிறோன் நனறி