PDA

View Full Version : கஞ்சரோடு கொஞ்சநாள்சிவா.ஜி
18-01-2008, 07:41 AM
வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கிறோம்.எல்லோருமே மனதில் நின்றுவிடுவதில்லை.சிலர் மட்டுமே என்றும் நிற்கிறார்கள்.அதில் சிலர் அவரவர்களின் பழகும் தன்மையாலும்,அல்லது பிரத்தியேக குனாதிசயங்களாலும் மறக்கமுடியாதவர்களாகிறார்கள்.

அப்படி நான் சந்தித்த ஒருவர்தான் தேசாய் என்ற குஜராத்தி நன்பர்.பொதுவாகவே குஜராத்திகள் பணவிஷயத்தில் கெட்டி.அதிலும் இவர் வடிகட்டின கஞ்சன்.அவரோடு எனக்கேற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சம்பவம்-1
அப்போது நாங்கள் கஜகஸ்தானில் இருந்தோம்.எனக்கு நேரெதிர் அறையில் அவர் இருந்தார்.ஒருநாள் இரவு 10 மணியளவில் அடுத்தடுத்த அறகளில் கதவு தட்டப்படும் சத்தமும்,சில பேச்சுக்குரல்களும் கேட்டது.சிறிது நேரத்தில் என் அறைக்கதவும் தட்டப்பட்டது.கதவைத் திறந்தால் பைஜாமாவில் தேசாய்.என்ன என்று கேட்பதற்குள் உன்கிட்ட சூப்பர் குளூ இருக்கா என்றார்.எதை ஒட்டுவதற்கு என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்.

டூத் பிரஷ் உடைந்துவிட்டது அதை ஒட்டவேண்டுமென்றார்.

அடப்பாவி 20 டிங்கே கொடுத்தால் கீழ் பகுதி கடையில் புதிய பிரஷ் கிடைக்குமே என்றதற்கு இன்னொரு ஏவுகனையை வீசினார்.

இந்த பிரஷ்...நான் ஊர்ல டூத்பேஸ்ட் வாங்கும்போது அதனோடு இலவசமாகக் கிடைத்தது.இன்னும் இரண்டு வாரத்தில் நான் ஊருக்குப் போகிறேனே அப்போது அதே பேஸ்ட்டை வாங்கினால் மீண்டும் ஒரு பிரஷ் கிடைக்குமே அதுவரை இதை ஒட்டி அட்ஜெஸ் செய்துகொள்கிறேன்

என்றார்.

சம்பவம்-2

அப்போது நான் வாக்மேன் உபயோகித்துக்கொண்டிருந்தேன்.ஒருநாள் ஹெட்டில் காந்தக் கழிவு சேர்ந்துவிட்டதால் அதை சுத்தம் செய்ய வேண்டும்.அப்போதைக்கு After Shave lotion -ஐக்கொண்டு சுத்தம் செய்யலாமென்று காதுகுடையும் பட்ஸ் இருக்கிறதா என்று பார்த்தால் தீர்ந்து விட்டிருந்தது.சரி எதிர் அறையிலிருக்கும் தேசாயிடம் வாங்கிக்கொள்ளலாமென்று அவரை அனுகினேன்.நான் பட்ஸ் கேட்டதும் என்னை மேலும் கீழுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு உள்ளே சென்று ஒரே ஒரு பட்-ஐ கொண்டுவந்தார்.கையில் கொடுக்கும்போது ஒன்று சொன்னார் பாருங்கள்.............

ஒரு பக்கத்தை உபயோகித்துவிட்டு திருப்பிக்கொடுத்துவிடு இன்னொரு முனையை நான் உபயோகிக்கவேண்டும்

மயக்கம் வராதகுறையாக அதை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தேன்.

சம்பவம்-3

சாதாரனமாக தேசாய் மனைவிக்கு அதிகமாக தொலைபேசியில் பேச மாட்டார்.ஏனென்றால் அந்த நாட்டில் தொலைபேசிக்கட்டணம் மிக அதிகம்(ஒரு நிமிடத்துக்கு இரண்டரை டாலர்கள்)அதனால் அவர் ஒரு வழி கண்டுபிடித்திருந்தார்.அதாவது நான் எதிர் அறையில் இருப்பதால் என்னுடைய அலைபேசி எண்ணை அவருடைய மனைவியிடம் கொடுத்திருந்தார்.ஏதாவது அவசரமென்றால் இந்த எண்ணில் அழைக்குமாறு சொல்லி வைத்திருந்தார்.

ஒருநாள் அவருடைய மனைவியின் அழைப்பு வந்தது.எனக்கு தேசாயிடமிருந்து கிடைத்த இன்ஸ்ட்ரெக்ஷென் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் தொடர்பை துண்டித்துவிட்டு இவரை அழைக்க வேண்டுமென்பது.ஆனால் அந்தமுறை அழைப்பவரின் எண் தெரியவில்லை நானும் அதை எடுத்து பேசிவிட்டேன்.அவர் குளிக்கப் போயிருந்தார் அதை சொல்லிவிட்டு பிறகு அழைக்குமாறு சொன்னேன்.

குளித்துமுடித்து திரும்ப வந்தவரிடம் விஷயத்தை சொன்னேன்.ஒரே ஆத்திரம் அவருக்கு.ஏன் பேசினாய்..எத்தனை நேரம் பேசினாய் என்று கோபமாகக் கேட்டார்.என்னடா வம்பாப்போச்சு என்று ஏன் உங்க மனைவிக்கிட்ட பேசினது தப்பா என்று கேட்டதற்கு அது தப்பில்லை...நீ பேசியதால் அநாவசியமாய் செலவாகியிருக்குமே...என்றார்.வெறுத்துவிட்டேன்.இனி எப்போது அழைத்தாலும் உங்களிடம் சொல்லவே மாட்டேன் என்று நானும் சொல்லிவிட்டேன்.

அதன் பிறகு அவர் மேற்கொண்ட உத்திதான் மிகப் பிரபலம்.வேறொரு நன்பரின் எண்ணை வாங்கி அதை மனைவிடம் கொடுத்துவிட்டு அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் ஒருமுறை மணியடித்துக் கட் ஆகிவிட்டால் நான் நலம் என்று அர்த்தம்.இரண்டுமுறை மனியடித்தால்..மனைவி திரும்ப அழைக்கவேண்டுமென அர்த்தம்...அதையும் தாண்டி மணியடித்தால், இவருக்கு ஏதோ பிரச்சனை அதனால் நன்பர் அழைக்கிறார் அதனால் எடுத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு அதன் படியே பைசா செலவில்லாமல் போனை உபயோகப்படுத்தினார்.

ஆதி
18-01-2008, 07:54 AM
அண்ணா இந்த மாதிரி பசங்க நெறையப் பேரு இருக்காங்க..

எனக்கும் இது மாதிரி நிறைய அனுபவம் இருக்கு..

நினைக்கும் போது சிரிப்புதான் வரும்.. அதுலையும் ஒருத்தன் சாப்டா காச கணக்கு எழுதுவான் பாருங்க.. எப்பா சாமி இப்படியும் இருக்கீங்கலா டா உலகத்துல னு யோசிக்கத் தோனும்..

சிக்கனம் வாழ்க்கையில் முக்கியம் கஞ்சத்தனம் தேவையில்லை என்பது என் சொந்தக் கருத்து..

அழகிய நகைச்சுவைப் பதிவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் அண்ணா..

-அன்புடன் ஆதி

sarcharan
18-01-2008, 08:03 AM
மாந்தோப்புக்கிளியே முதலில் தமிழில் தான் எடுத்தார்கள் என நினைத்தேன். குஜராத்தியிலும் எடுத்துள்ளார்கள் போல...

சிவா.ஜி
18-01-2008, 08:10 AM
ஆமா ஆதி...இப்படியிருக்கற ஆசாமிகளால் பெரிய தொந்தரவெல்லாம் ஒண்ணுமில்லை.காமெடிப் படம் பார்ப்பதைப்போல இருக்கும் இவர்கள் வாழ்க்கை.அவ்வளவுதான்.நன்றி ஆதி.

சிவா.ஜி
18-01-2008, 08:11 AM
மாந்தோப்புக்கிளியே முதலில் தமிழில் தான் எடுத்தார்கள் என நினைத்தேன். குஜராத்தியிலும் எடுத்துள்ளார்கள் போல...

ஹா..ஹா...இது ஜோக்கு....

அமரன்
18-01-2008, 08:12 AM
ஏறத்தாழ ஒரே அனுபவம். அனுபவக்கால எல்லை எனக்கு அதிகம்.
மனம் விட்டு சிரிக்கவைத்த அதே வேளை சற்று திரும்பிப் பார்க்கவும் வைத்தீர்கள்..

சாராகுமார்
18-01-2008, 08:20 AM
அன்பு நண்பர் சிவா அவர்களுக்கு வணக்கம்.உங்கள் அனுபவம் இனிமை.அதில் பல சுவைக்கொண்ட நகச்சுவை.வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
18-01-2008, 08:24 AM
ஏறத்தாழ ஒரே அனுபவம். அனுபவக்கால எல்லை எனக்கு அதிகம்.
மனம் விட்டு சிரிக்கவைத்த அதே வேளை சற்று திரும்பிப் பார்க்கவும் வைத்தீர்கள்..

அடடா...எல்லை அதிகமென்றால் சிரிப்பும் அதிகமாகுமே...இப்போதுமா அமரன்?

சிவா.ஜி
18-01-2008, 08:25 AM
அன்பு நண்பர் சிவா அவர்களுக்கு வணக்கம்.உங்கள் அனுபவம் இனிமை.அதில் பல சுவைக்கொண்ட நகச்சுவை.வாழ்த்துக்கள்.
நன்றி சாராகுமார்.நீண்டநாட்களுக்குப்பிறகு உங்களை மன்றத்தில் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நலமா?

அமரன்
18-01-2008, 08:26 AM
அடடா...எல்லை அதிகமென்றால் சிரிப்பும் அதிகமாகுமே...இப்போதுமா அமரன்?
அப்போ ஒரே கூரை..
இப்போ அப்பப்போ ஒரே கூரை..

சாராகுமார்
18-01-2008, 08:53 AM
நன்றி சாராகுமார்.நீண்டநாட்களுக்குப்பிறகு உங்களை மன்றத்தில் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நலமா?

நலம் சிவா அவர்களே.விடுமுறையில் ஊருக்கு சென்று வந்ததில் தாமதம்.

செல்வா
18-01-2008, 09:03 AM
எனக்கு இந்த கதை முன்னாடியே தெரியுமே..... ஆனாலும் முதல் இரண்டு நிகழ்ச்சியும் புதிது.........ஹா...ஹா.......

நுரையீரல்
18-01-2008, 01:11 PM
நல்ல இருக்கு, அவ்வளவு தானா கஞ்சத்தனம்?

sarcharan
18-01-2008, 02:21 PM
இதுக்கே ஆளை விடப்பா சாமின்னு ஊரப்பாக்க வந்திருப்பாரு...
இன்னும் என்னத்தை எழுதன்னு நினைச்சி விட்டுட்டீங்களா?

பென்ஸ்
18-01-2008, 06:11 PM
சிவா...
என்ன தான் சொல்லுங்க... இவர்களுடன் வாழுவதுதான் கஷ்டம்... ஆனால் இவர்களுடனான நினைவுகள் சுகம்தானே...!!!????

ஓவியன்
18-01-2008, 07:14 PM
சிக்கனம், கஞ்சத்தனம் இரண்டுமே கிட்டத் தட்ட ஒன்று போலிருந்தாலும் இரண்டுமே வேறு வேறல்லவா...

வேண்டிய செலவுகளை மட்டும் யோசித்து செய்வது சிக்கனம்...
வெண்டிய செலவுகளையும் செய்ய யோசிப்பது கஞ்சத்தனம்...

இதுதான் சிக்கனத்தையும், கஞ்சத்தனத்தையும் பற்றிய எனது கண்ணோட்டம், ஆனால் இந்த இரண்டுடிலுமே எனக்கு அனுபவமில்லை என்பது மிகக் கொடுமையான விடயம்...

எப்படிச் செலவழிக்கிறேன் என்றறியாமலே செலவு செய்து விடுவேன், ஆனால் இப்போது என்னை மாற்ற முயன்று கொண்டிருக்கின்றேன்....

எப்போதும் ஒரே தவறை செய்து கொண்டிருக்க முடியாதே...
சேமிப்பும் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தானே...

சிரிக்கவும் என்னைக் கொஞ்சம் சிந்திக்கவும் வைத்த பதிவுக்கு என் நன்றிகள் சிவா...

யவனிகா
18-01-2008, 07:28 PM
அசந்து போய் விட்டேன்..இப்படிக்கூட முடியுமா...
தொடருங்கள் அண்ணா...

சிவா.ஜி
19-01-2008, 04:29 AM
நுரையீரல் ரவுசு தாங்க முடியல....இன்னும் வேணுன்னா இருக்கு ஆனா சர்சரன் சொன்னமாதிரி இதுக்கே தாங்கல..இன்னுமா.....

சிவா.ஜி
19-01-2008, 04:32 AM
சிவா...
என்ன தான் சொல்லுங்க... இவர்களுடன் வாழுவதுதான் கஷ்டம்... ஆனால் இவர்களுடனான நினைவுகள் சுகம்தானே...!!!????

ஆமாங்க பென்ஸ் கஷ்டம்தான்.அதனாலத்தான் அவங்க குடும்பத்தார் அவரை இந்தியாவுல இருக்கவே விடறதில்ல,இப்பகூட ஆப்பிரிக்காவுலதான் இருக்கார்.
நீங்க சொன்ன மாதிரி இத்தனை காலம் ஆனாலும் அந்த நினைவுகள் சுகம்தான்.இப்பவும் நினைக்கிற மாதிரி அவர்களோட செயல்கள் இருக்கே.

சிவா.ஜி
19-01-2008, 04:33 AM
எப்படிச் செலவழிக்கிறேன் என்றறியாமலே செலவு செய்து விடுவேன், ஆனால் இப்போது என்னை மாற்ற முயன்று கொண்டிருக்கின்றேன்....

.

மாற்றிக்கொண்டுதானே ஆகவேண்டும்.இதுவரை தனிக்காட்டு ராஜா...இனி அப்படியா...ஒரு ரிங்மாஸ்டர் வரப்போறாங்களே....

சிவா.ஜி
19-01-2008, 04:35 AM
அசந்து போய் விட்டேன்..இப்படிக்கூட முடியுமா...
தொடருங்கள் அண்ணா...

இதுக்கே அசந்தா எப்படீம்மா....இன்னும் பல ரகத்துல ஆசாமிகள் இருக்காங்க.போகப்போக சொல்லிக்கிட்டே வரேன்.

இதயம்
19-01-2008, 07:14 AM
எப்படி இது தான் அழகு என்று அதற்கு இலக்கணங்கள் வரையறுக்கப்படவில்லையோ, அப்படி தான் கஞ்சத்தனம் என்பதும்..! தேவைக்கு மேல் ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள் தன் தேவைக்கு செலவு செய்பவர்களை பார்த்து கஞ்சன் என்பார்கள். சிவா சொன்னது போன்ற ஆட்கள் தன் தேவைக்கு செலவு செய்பவர்களை ஊதாரிகள் என்பார்கள். இந்த கஞ்சத்தனம் என்ற குணம் அடிப்படையில் பெரும்பாலும் வாழ்க்கையில் பணத்தை சம்பாதிக்கும் போது வாங்கும் அடி கொடுக்கும் அனுபவங்களால் வரும். உழைப்பின் வேதனை தெரிந்தவர்கள் ஒவ்வொரு காசையும் யோசித்து செலவு செய்வார்கள். வியர்வை சிந்த உழைத்தவன் 100 ரூபாயை செலவு செய்வதற்கும், கீழே கிடந்து எடுத்தவன் அதே 100 ரூபாயை செலவு செய்வதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கும்.

என் அப்பா பண விஷயத்தில் படு கெட்டி..! காரணம், அவர் அதை சம்பாதிக்க அவர் பட்ட கஷ்டம். அது தெரியாத நான் அவரின் பணத்தில் நல்ல உணவு, உடை, இருப்பிடம், படிப்பு என்று வளர்ந்தேன். ஆனால், அவர் ஒரு புது சட்டை வாங்க இன்றும் தயங்குவார். நான் இன்று உடல் உழைப்பில்லாமல் சுகமாக இருந்து சம்பாதித்து அந்த பணத்தை கொடுத்து வாங்கச்சொன்னாலும் கேட்பதில்லை. காரணம், பணம் கொடுத்த அனுபவம் அவருக்குள் அழியாத தழும்பாய் தன் அடையாளத்தை அவர் நெஞ்சில் பதித்து விட்டது. சரி.. அவர் தான் அப்படி செய்கிறார் என்றால் என் மனைவி வேறு வகை..! திருமணத்திற்கு முன் வரை பணம் செலவு செய்வதை பற்றி கவலையேப்படாத பெண். காரணம், என் மாமனார் உடல் உழைப்பு இல்லாமல் சொகுசாக சம்பாதித்தவர். ஆனால், நான் திருமணம் செய்தவுடன் என் மனைவி அப்படியே தலைகீழாக மாறிப்போனாள். அடிப்படைத்தேவையாக இருந்தால் கூட ஆயிரம் தடவை யோசிக்கும் குணம் வந்துவிட்டது. அவளிடம் நான் இது ஒன்றும் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சம்பாதித்த பணமில்லை, தயக்கமின்றி செலவு செய்..! என்றால் அதற்கு அவள் சொல்லும் பதில் நாம் இணைந்து வாழும் சந்தோஷ வாழ்க்கையை தொலைத்து, பிரிந்திருந்து கிடைக்கும் பணம் இது, மற்ற எல்லாவற்றையும் விட இது விலைமதிப்பற்றது என்கிறாள்.

ஆக, ஏதாவது ஒரு வகையில் பணத்தின் அருமையை உணர்ந்தவர்கள் ஆடம்பர செலவு செய்யமாட்டார்கள். ஆனால், பெரும் வலி கொடுத்த பணத்தின் மீது வெறியானவர்கள் கஞ்சனாக ஆகிப்போகிறார்கள் (பிறப்பால் கஞ்சனாக இருப்பவர்கள் அரிது). பணம் வாழ்க்கையில் நம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துவிடும் என்று நம்புகிறவர்களுக்கு பணமே வாழ்க்கையாகிப்போகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு உறவுகள் கசந்து போகும், அன்பு நடிப்பாக தெரியும். மற்றவர்களை நம்ப மறுப்பார்கள்..! அவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. குடும்பத்தார்கள் இதன் தீவிரம் உணர்ந்து மனநிலை சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். சிவா குறிப்பிட்ட குஜராத்திக்காரர் உண்மையிலே மனநிலை சிகிச்சை அளிக்கப்படவேண்டியவரே.! கஞ்சர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு, கோபத்தை விட அவர்கள் மேல் அனுதாபம் தான் வரும். காரணம், அவர்கள் வாழ்க்கை கண் முன்னே இன்பமயமாய் விரிந்து கிடந்தும் அதை அனுபவிக்க அறியாதவர்கள்..!!

பயனுள்ள அனுபவத்தை பகிர்ந்து கொண்ட சிவாவுக்கு என் நன்றிகளும், பாராட்டுக்களும்..!!

அக்னி
19-01-2008, 07:34 AM
கஞ்சரோடு கொஞ்சிய (கஞ்சரோடு கொஞ்ச நாள்) சிவா.ஜி யின் அனுபவங்கள் இன்னுமின்னும் வ(ள)ரட்டும்.

கருமி என்ற மூன்றெழுத்து வார்த்தை இருக்க, கஞ்சன் என்ற நான்கெழுத்து வார்த்தையைப் பயன்படுத்திய சிவா.ஜி அவர்களை, தேசாய் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

சிவா.ஜி
19-01-2008, 08:13 AM
ஆஹா...கஞ்சத்தனத்திற்கு இதயயத்தின் விளக்கம் அருமை.ஊதாரித்தனமென்பது உண்மையிலேயே கூடாது.அது எப்படி சம்பாதித்த பணமென்றாலும்.ஆனால் தேவைப்பட்டதைக்கூட தள்ளிவைத்துவிட்டு பணம் சேர்ப்பது சரியில்லை.
கடந்தகாலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்,எதிர்காலத்தைப்பற்றிய பயம் இதுதான் ஒருவரை இந்தளவுக்கு கஞ்சத்தனம் செய்ய வைக்கிறது என்பது இதயத்தின் பதிவிலிருந்து தெரிகிறது.நன்றி இத் யம்.

சிவா.ஜி
19-01-2008, 08:15 AM
கஞ்சரோடு கொஞ்சிய (கஞ்சரோடு கொஞ்ச நாள்) சிவா.ஜி யின் அனுபவங்கள் இன்னுமின்னும் வ(ள)ரட்டும்.

கருமி என்ற மூன்றெழுத்து வார்த்தை இருக்க, கஞ்சன் என்ற நான்கெழுத்து வார்த்தையைப் பயன்படுத்திய சிவா.ஜி அவர்களை, தேசாய் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

வாங்கய்யா வாங்க...இதுக்குத்தான் நம்ம அக்னி வேணுங்கறது.....அடடா என்ன ஒரு சிந்தனை...தேசாய் அவர்களை எப்போது பார்க்க நேர்ந்தாலும் உங்களுக்கு சீடராகும் தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார் என்று கட்டாயம் சொல்கிறேன்.சரியா....??

ஆதவா
20-01-2008, 05:22 AM
விடாம சிரிச்சேன் அண்ணா... இருந்தாலும் கொஞ்சம் ஓவர் கஞ்சம் தான் அவர்.....

பொதுவாக, பண விசயத்தில் ரொம்பவே கெடுபிடியான ஆள் நான். அதிகம் செலவுசெய்யமாட்டேன்... (அம்பது பைசாவாக இருந்தாலும் என்னிடம் கணக்கு உண்டு) அதையே என் நண்பர்கள் என்னைக் கஞ்சன் என்று சொல்வார்கள்....

இன்னும் இருந்தால் கொடுங்கள்......

சிவா.ஜி
20-01-2008, 06:48 AM
கணக்குப் பார்த்து செலவு செய்வதென்பது வேறு...கருமித்தனமென்பது வேறு ஆதவா.நானே உங்களைப் பார்க்க திருப்பூர் வருகிறேனென்று சொல்லியிருந்தாலும்,என்னை சந்திப்பதற்காக மட்டுமே செலவு செய்துகொண்டு வந்த நீங்கள் கண்டிப்பாக கஞ்சனில்லை.

அதேசமயம் கணக்கு வழக்கில்லாமல் செலவும் செய்யக்கூடாது...(ஆனால் இதை சொல்லும் தகுதி எனக்கில்லை...என் கை மகா ஓட்டை)

செல்வா
20-01-2008, 08:11 AM
.(ஆனால் இதை சொல்லும் தகுதி எனக்கில்லை...என் கை மகா ஓட்டை)

ஆஸ்பத்திரி போறத விட்டுட்டு இங்க என்ன அரட்டை.... :p

சிவா.ஜி
20-01-2008, 08:13 AM
உங்களோட ஒரே வார்த்தைக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தேன் செல்வா.ஜெத்தாவுல ஒரு ஆஸ்பத்திரியப் பாருங்க...மறக்காம நீங்கதான் ஸ்பான்சர்ன்னு அவங்கக்கிட்ட சொல்லிடுங்க சரியா...அடுத்தவாரம் வரேன்.

செல்வா
20-01-2008, 08:34 AM
அடுத்த வாரம் வர காத்திருக்க முடியும்னா அப்புறம் ஆஸ'பத்திரி தேவையில்ல.... பக்கத்துல கட்டடம் கட்டிட்டுருக்காங்க.... நல்ல கான்கிரீட் இருக்கு ஓட்டைய அடைக்க....
(வேணும்னா மினரல் வாட்டர் கொஞ்சம் உபயோகப் படுத்திக்கலாம்)

மனோஜ்
20-01-2008, 08:39 AM
இப்படியும் மனிதர்கள்
நல்ல அனுபவித்திருக்கிறீகள் நல்ல வேலை நீங்க அவர் ருமில் இல்லாமல் போனது உங்கள் நல்ல நேரம் இல்லாவிட்டால் கொடுமையாகியிருக்கும்
பகிந்தமைக்கு நனறி

சுகந்தப்ரீதன்
20-01-2008, 08:48 AM
கஞ்சரை பத்தி கஞ்சதனமா மூனு சம்பவத்த மட்டும் எழுதியிருக்கீங்க..?மிச்ச சொச்சத்தையும் எழுதலாமே அண்ணா..! இப்படி இருக்காங்களான்னு சொல்ல வந்தேன்..ம்ம்கூம்ம்ம்ம் அத சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கு..?! ஹி..ஹி.. கஞ்ச மகா பிரபு..!

சிவா.ஜி
20-01-2008, 08:51 AM
ஆமா மனோஜ்.என்னோட நல்ல நேரம்தான் நான் அவருடைய அறையில இல்லாதது.ஏன்னா அவருடைய அறைத்தோழர் அடிக்கடி புலம்புவார்..அவ்ரு பல்லையும் நான் தான் விளக்க வேண்டியதாயிருக்குன்னு(அதாவது இவரோட பேஸ்ட்டுதான் அவ்ர் உபயோகிப்பதும்).நல்ல மனிதர்கள்.

சிவா.ஜி
20-01-2008, 08:54 AM
கஞ்சரை பத்தி கஞ்சதனமா மூனு சம்பவத்த மட்டும் எழுதியிருக்கீங்க..?மிச்ச சொச்சத்தையும் எழுதலாமே அண்ணா..! இப்படி இருக்காங்களான்னு சொல்ல வந்தேன்..ம்ம்கூம்ம்ம்ம் அத சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கு..?! ஹி..ஹி.. கஞ்ச மகா பிரபு..!

சுபி நீங்க கண்டிப்பா கஞ்சரே இல்லை...இருந்தா இப்படி மூணு வார்த்தையை உபயோகிச்சிருப்பீங்களா...சிம்பிளா மாகருமி அப்படீன்னு சொல்லியிருக்க மாட்டீங்க....ஹி...ஹி..ஹி.

நேசம்
21-01-2008, 06:37 AM
ஆளு கஞ்சன் இல்லை.கருமி.ஏன்னா கஞ்சன் தனக்காவது செலவு செய் வாரு இல்லையா சிவாண்ணா

சிவா.ஜி
21-01-2008, 07:08 AM
ஆமாம் நேசம்.இந்த ஆளு தனக்காக கூட செலவுசெஞ்சிக்கமாட்டார்.ஆனா அதுக்கெல்லாம் சேத்து வெச்சி அவரோட பசங்க தூள் கிளப்பறாங்க.அதையும் என்கிட்ட சொல்லி அழுவார் மனுஷன்.

அக்னி
21-01-2008, 12:55 PM
ஆமாம் நேசம்.இந்த ஆளு தனக்காக கூட செலவுசெஞ்சிக்கமாட்டார்.ஆனா அதுக்கெல்லாம் சேத்து வெச்சி அவரோட பசங்க தூள் கிளப்பறாங்க.அதையும் என்கிட்ட சொல்லி அழுவார் மனுஷன்.அப்போ குறைச்சு செலவு செய்வாரோ...
என்ன ஆக்களையா நீங்க...
கூட செலவு செய்தால் செலவா செலவாளி, குறைய செலவு செய்தால் கருமி என்றால் தேசாய் என்ன செய்வார்?

ஆமா... அழும்போதாவது கண்ணீர் ஓடுமா அல்லது துளிதானா அதிலும்?

சிவா.ஜி
21-01-2008, 12:59 PM
அவர் அழனுமெண்டால் அடுத்தவரை முதலில் அழவைத்துவிட்டு ஆக்டிங் மட்டும் குடுப்பார்.

மயூ
21-01-2008, 02:53 PM
ஆஹா... புழைக்கத் தெரிந்த மனிதர்...!!! :(

எங்க வீட்டு தொலைபேசி 2 தடவை ஒலித்தால் அம்மா தங்கையின் நகர் பேசியை அழைப்பார்..!!! 3 தடவை ஒலித்தால் அம்மா என் நகர் பேசியை அழைப்பார்...