PDA

View Full Version : சான்றோர் சொல்mgandhi
17-01-2008, 04:28 PM
நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.ஒரு பெண்ணின் உண்மேயான ஒரே ஆபரணம் ஏது தேரியுமா?
நாணம்
- அன்னை சாரதாதேவி

இறைப்பணிக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்கிறவர்கள் வைராக்கியசித்தம் உள்ளவர்களா இருந்தால் மட்டும் போதாது நல்ல ஆரோக்கிய உடலை உடையவர்களாவும் இருந்தல் வேண்டும்

- அரவிந்தர் ஆசிரமம்


முன்ஜென்மத்து உறவால் நாம் இணைந்திருக்கிறோம் எனவே ஓருவருக்கொருவர் சகோதர்ர் போல அன்பாய் இருந்து சேவை சேய்தும் மனமகிழ்ச்சியுடன் இருப்போம்.செல்வமும் சுபிட்சமும் நுலையற்றது இம்மை மறுமை பொருட்களின் மீதுள்ளபற்று அனைத்தையும் விட்டு விட்டு உனது கடமையைசெய்

- ஷிர்டி சாய்பாபா

எந்தப் பணியும் உத்தம்மானதுதான். மதிப்பு மிகுந்ததுதான்.செய்யும் தொழிலே தெய்வம் என்ற ஓர் உள்ளப்பாங்கு இங்கு எல்லாரிடமும் மலர்ந்து நிற்கிறது. தன்கையே தனக்கு உதவி தன்னாலான உதவியை அடுத்தவனுக்கு செய்ய வேண்டும்.இப்படி ஓரு மனப்பான்மை வேண்டும்.

- சத்தியசாயிபாபா

வயறு புடைக்க இரண்டு வேளை சாப்பிடுவதை விட மூன்று அல்லது நான்கு வேளை அரைவயிற்றுக்கு சாப்பிட்டால் உடல் லேசாகவும் இயக்கத்துக்கு உகந்ததாகவும் இருக்கும்
அறிவாற்றலால் கடவுளை அறிய இயலாது ஆன்மீக சக்தியால் உணரலாம்

- அரவிந்தர்.


. நாம் நல்லவனாக இருக்க வேண்டும் கெட்ட காரியமே செய்யக்கூடாது என்றெல்லாம் நினைத்துக் கொள்கிறோம் அடுத்த கணமே நம் விருப்பத்துக்கு விரோதமாக காரியங்கள் நடந்து விடுகின்றன இப்படி நினைக்கிறபடி நாம் நடந்துகொள்ள முடியாமல் கட்டுப்பட்டிரிக்கிறேம். இதற்குதான் பந்தம் என்று பெயர் இந்த பந்தத்திலிருந்து விடுபடுவதுதான் மோட்சம்

- சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்


உண்ணாவிரதம் என்பது மனதளவில் இருக்க மேண்டும் வெறும் பட்டினி கிடப்பது என்பது எந்த நன்மையும் செய்யாது , அது மனதைக் கூட பாதிக்கும். உண்ணாவிரதம் என்றால் கட்டுப்பாடான உணவு முறையே ஆகும் தகுதியான உணவை உண்பவனின் மனதில் ஆன்மிக எண்ணங்கள் விரிவடைகிறது.

மனப் பட்டினியே உண்மையான விரதம் வயிற்றை பட்டினி போடுவது மனதை பலவினமாக்கும். எனவே தினமும் குறைவாகவேணும் சாப்பிட்டு ஆன்மிக பயாற்சியை தொடற வேண்டும்,

- ரமண மகரிஷி

mgandhi
17-01-2008, 04:29 PM
நான் எனது என்ற இரண்டையும் மதம் அரசியல் பொருளாதாரம் முதலியவற்றிலிருந்து ஒழித்துவிட்டல். தெய்வலோகத்தையும்,பூலோகத்துக்குக் கொண்டுவந்து விடுவோம்.
-மகாத்மா காந்தி.

ஒருவன் உண்மையே பேசவேண்டும் .மனதிற்க்கு இன்பம் அளிப்பதையே பேச வேண்டும்.ஆனால்,மனத்திற்குப் பிடிக்காத உண்மையைப் பேசக்கூடாது.
-மனுஸ்மிருதி.

உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது.சேவைதான் வெளிப்படுத்தும்.
-மகாத்மா காந்தி.

உன் சொந்த முயர்ச்சியால் சம்பாதிக்கும் செல்வம் சிறிதளவாயினும் அதைக்கொன்டு
மனத்திருப்தி பெறு.
-ஸ்ரீ ஆதிசங்கர்ர்.

நான் பயப்படாதவன் போல் என்னை எண்ணிக்கொண்ட காரணத்தால்.படிப்படியாக
என்னிடத்திலிருந்து பயம் ஒழிந்து விட்டது.
-ரூஸ்வெல்ட்.

உடல்,வாய்,மனம்,பணம்என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம்
செய்ய வேண்டும்.உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது,
மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்.
-ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்