PDA

View Full Version : சென்னை சங்கமம்



namsec
17-01-2008, 01:22 PM
தமிழர்களின் பன்பாடு மறையாமல் இருக்க சென்ற ஆண்டு தமிழ்மையம் என்ற அமைப்பின் மூலம் சென்னை சங்கமம் என்ற தலைப்பில் நம் பண்டைய கலைகளை நடத்துகின்றனர்.

நான் கடந்த 16/01/2008 அன்று கண்டுகளித்தேன் அருமையாக இருன்ந்தது இது பொன்று தொடர்ந்தால் நம் கிரமியகலைகள் அழியாது

http://www.chennaisangamam.com/

அறிஞர்
17-01-2008, 01:48 PM
கண்டு களித்ததை இன்னும் விவரமாக எழுதலாமே..

இது பற்றி நண்பர் உதயசூரியன் ஒரு பதிவு கொடுத்துள்ளார்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=316733#post316733

ஷீ-நிசி
17-01-2008, 01:59 PM
சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஃபிலிம்சேம்பர் இடத்தில் 14-01-08 அன்று காலை சென்று இருந்தேன்....

"எப்படி படைப்பாளியானேன்" என்ற தலைப்பில், திரு. எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு. சா. கந்தசாமி, மற்றும் கருக்கு என்ற நாவலை எழுதின பத்மா அவர்கள் மற்றும் பேபி ஹல்தா நால்வர் உரையாற்றினர்..

"கருக்கு" என்ற நூலை எழுதின பத்மா அவர்கள் பேசும்பொழுது, மனம் கனத்துபோனது. அவர்கள் ஒரு தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். அந்த நூலில் தலித் மக்களின் ஒடுக்கபடுதலையும், அவர்களுக்கு எதிராக இழைக்கபடும் அநீதிகளையும் அவருடைய வாழ்க்கையையும் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

அங்கே போனது ஒரு படைப்பாளி என்ற முறையில் எனக்கு பயனுள்ளதாகவே அமைந்தது.

virumaandi
18-01-2008, 10:55 AM
சென்னை சங்கமமும்...சென்னை புத்தக கண்காட்சியும் உங்களுக்கு உதவியாயிருக்கும் என்று நினைக்கிறேன்..ஷீ நிஷி அவர்களே....