PDA

View Full Version : ஒரு நுரையீரல் சுவாசிக்கிறதே!!!



நுரையீரல்
17-01-2008, 01:06 PM
என்னடா கவிதைபோல தலைப்பு இருக்குதே, நம்மாளு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டானானு நினைக்காதீங்க... இந்தத் திரியே ஒரு சுயவிளக்க கட்டுரை தான். இதை எங்கே பதிப்பது என்ற பெருங்குழப்பம் இருக்கவே, இப்போதைக்கு நீதிக்கதைகள், சுவையான சம்பவங்களில் பதிக்கலாம் என்று பதிக்கிறேன். பொறுப்பாளர்கள் தான் தக்க இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். சரி சொந்தக்கதை சோகக்கதையை கேட்க எல்லாரும் தயாரா?

25% உண்மை + 25% பொய் + 25% நல்லவன் + 25 கெட்டவன் = நுரையீரல் (இது தான் நான்)

அட என்னடா புரியலையே... யாரு இவன்? என்ன சொல்ல வர்றானு... உங்களுக்கு சந்தேகம் இருக்கும்.

படிக்கிறவங்களுக்கு சந்தேகம் வரும்னு தெரிஞ்சுதுனா.. அதைக் களைய வேண்டியதும் என்னோட பொறுப்பு தான்.

குயிலுக்கு யாராவது பாட்டுச் சொல்லிக் கொடுப்பாங்களா...
நானும் என் ஃபிரண்ட்ஸும் சேர்ந்தா...
குயிலுக்கு பாட்டுச் சொல்லியும் கொடுப்போம்..
மயிலுக்கு ஆடச் சொல்லியும் கொடுப்போம்..

ஹேய்.. இது அவனே தான், பேர மாத்திட்டு வந்தாலும், குசும்பு போகலையேனு நினைப்பீங்க.. என்ன பண்றதுங்க என்னோட ரத்தத்திலே இருக்கிற குசும்பு அணுக்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகம்..

வெங்காய பாய்ஸ நம்பினீங்கனா.. நான் சொன்ன குயிலுக்குப் பாட்டையும், மயிலுக்கு ஆட்டத்தையும்... நம்பித்தான் ஆக வேண்டும்.

அதே போல் தான் நான் சொல்லப் போகும், பெயர் விளக்க கதையையும் கேட்க வேண்டும்..

எனக்கு occasional-ஆக தம் அடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதை எப்படியாவது விட வேண்டும் என்று நினைப்பேன். விட்டுவிடுவேன்.. ஆனால் மீண்டும் போர் அடிக்கும், அதை மீண்டும் தொடங்குவேன்.. எனக்கென்று எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. என்னை ஒரு கட்டுக்குள் கொண்டுவர யார் முயற்சி செய்தாலும், அது பலிக்காது. எதுவுமே நானாக உணர்ந்து, அதை செய்தால் தான் உண்டு.

தம் அடிப்பது (புகை பிடிப்பது) தண்ணி அடிப்பது இரண்டையும் ஒப்பிடுக என்றால் புகை பிடிப்பதில் தான் தீங்குகள் அதிகம் என்று என் மனசாட்சி சொல்லும். தண்ணி அடித்தால் அடிப்பவனின் குடலும், அவனின் குடும்பமும் வெறுத்துப் போகும். ஆனால் புகை பிடிக்கும்போது, அடிப்பவனின் நுரையீரல் பழுதாகும், அவன் விடும் புகையை சுவாசிக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் பழுதாகும். அதுமட்டுமா ஒட்டு மொத்த உலகமே இந்த நச்சுப்புகையால் நாசமடையும்.

ஆஹா,, நம்மாளு உணர்ந்துட்டாண்டா, அதுவும் இவ்வளவு சூப்பரா உணர்ந்துட்டான். அப்போ இனிமே ஜென்மத்துக்கும் தம் அடிக்கமாட்டான் அப்படினு நெனச்சீங்கனா... அதுக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்.

இந்த உணர்வு எல்லாம் முதல் தம் அடிக்கறதுல இருந்து இருக்கு.. தம் அடிக்காம இருக்கலாம்னு இருக்கும்போது தான் அந்தக் குரங்கு குசாலாக் கூட்டங்கள் வரும்... ஏய் மாப்பிள வாடா தம் அடிக்கலாம்பான்.. சேச்சே,, நான் இப்ப தம் அடிக்கறது இல்லப்பா...

எப்பலயிருந்துடானு கேப்பான்.. நேத்து ராத்திரில இருந்தும்பேன்.. ஏன் அடிக்கறது இல்லேன்னா... அடிப்பவனின் நுரையீரல் பழுதாகும், அவன் விடும் புகையை சுவாசிக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் பழுதாகும். அதுமட்டுமா ஒட்டு மொத்த உலகமே இந்த நச்சுப்புகையால் நாசமடையும்னு சொல்வேன்.

அதுக்கு அவன் சொல்வான்.. மச்சான் நீ அடிக்காததால வேற எவனாவது அடிக்காம நிறுத்தப் போறானாடா... அவன் அடிச்சாலும் அந்தப் புகை உன் உடலுக்குள்ள போகும்.. அவனோட எச்சிப்புகை உன் உடம்புக்குள்ளே போறதுக்கு, உன் புகையே போகட்டுமேடா... இந்தா அடிம்பான்.. உடனே வாங்கி அடிப்பேன்.. அப்புறம் மீண்டும் ஒரு மாசம் கழிச்சு ஞானம் பிறக்கும்... இப்படியே தொடருவதும், நிறுத்துவதுமாக...

உணர்ந்து தடுத்தாலும்.. அதை எவ்வளவு காலத்திற்கு தொடர முடியும் என்பது சந்தேகமே. மனம் ஒரு குரங்கு என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். குரங்கு தான் என் மனம் என்று சொன்னாலும் அது மிகையாகாது. எனக்குள் இருக்கும் அந்த ஒருவன் தான் எனது மனசாட்சி. மனசாட்சி படி நடக்கிறேனோ இல்லையோ, என் மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்போதும், எல்லோருக்கும் தெளிவாக தெரிவிப்பதில் ஆனந்தம் எனக்கு.

நான் மிகவும் நல்லவனும் கிடையாது. அதே வேளையில் ரொம்பக் கெட்டவனும் கிடையாது. ஆனா என் மனசில பட்டத சட்டுனு சொல்ற தைரியம் இருக்கு.. அந்த தைரியம் அசட்டுத் தைரியமா? இல்லை வறட்டுக் கௌரமா? என்று எனக்கேத் தெரியாது. யார் என்ன சொன்னால் என்ன? நான் இப்படித் தான் இருப்பேன். என்னை யாருக்காகவும், எப்போதும் மாற்றிக் கொள்ளும் தன்மை எனக்கு கிடையாது.

நான் ஒரு சுயநலவாதி... எப்போதும் எனக்குப் பிடிச்சதை செய்வேன்.. எனக்காக வாழ்வேன்... அதை வெளியே சொல்வதினால் இமேஜ் கெட்டுப்போகும் என்று வருத்தப்படுவது கிடையாது.. நம் மன்றத்தில் கூட நான் அடிக்கடி நமிதா, நமிதா என்று பேசுவேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்கு நமிதாவைப் பிடிக்காது.. அதுக்குனு மும்தாஜை பிடிக்காதுனு சொல்லமாட்டேன். எல்லாரும் என்னை தீவிர நமீதா ரசிகர் என்று தான் நினைத்திருப்பார்கள்... அவ்வாறு நினைத்தால் கீழ்கண்ட பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்..
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்..

என்னடா பாம்பு, பசுனு சொல்றானேனு நினைக்காதீங்க... நான் பாம்பாக இருந்தாலும் பாம்பு என்று தான் சொல்வேன். அந்த பாம்புக்கு பால் ஊத்தி கும்பிடுபவர்கள் மத்தியில், பாம்பைக் கண்டால் தடியால் அடிக்கும் மக்களும் இருக்கின்றனர் என்பதனை மறக்கக் கூடாது.

என்னைப் பொறுத்தவரையில் நுரையீரல் என்பது எனக்குப் பிடிச்சிருக்கு. அதை எனது பெயராக வைத்துக் கொள்வதில் ஆனந்தம் கொள்கிறேன். என்ன இதுவரை ------- அண்ணா என்று சொன்ன தங்கைகள், இனிமேல் நுரையீரல் அண்ணா என்று சொல்ல வேண்டும். சொல்வதற்கு கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும்.

நான் பெயரை மாற்றியவுடனே ஏகப்பட அன்புக் கேள்விகள்... என்னுடைய பதிலைக் கண்ட பொறுப்பாளர் ஒருத்தர் தனது பதிலில் தெரிவித்திருந்தார் -> அவருக்கு மூளை என்று பெயர் மாற்ற ஆசையாம். என்ன காரணம் என்று கேட்டதற்கு பெயரிலாவது மூளை இருந்திட்டு போகட்டுமே என்கிறார். இன்னொருத்தருக்கு சிரிப்பு என்று பெயர் வைக்க ஆசையாம். நல்லவேளை செருப்பு என்று தவறாய் நான் படிக்கவில்லை.

எப்படியோ என் தயவால், நமது மன்ற மக்களுக்கு அங்க அவயங்களின் சிறப்புகள் அறிந்தால் போதும்.

உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்..
நான் செய்த தீங்கு என்ன....

மலர்
17-01-2008, 01:10 PM
கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை நான்.... இத விட்டுட்டீங்களே...

காலையில மன்றம் வந்த உடனே யாரோ புதுசா நுரையீரல்ன்னு வந்திருக்காங்கன்னு நினைச்சிட்டேன்..
அப்புறம் அண்ணன் சொன்ன பிறகு தான் அது நம்ம ..அண்ணான்னு தெரிஞ்சது...

ஹீ..ஹீ.. இந்த பெயர் மாற்றம்...
இத் யம் அண்ணாவுக்கு போட்டியா... :icon_rollout: :icon_rollout:

நுரையீரல்
17-01-2008, 01:20 PM
கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை நான்.... இத விட்டுட்டீங்களே...
உள்ளே கடவுள், வெளியே மிருகம் விளங்க முடியா கவிதை நான்..
எனக்குள் இருக்கும் நல்லவன் சதவீதம், கெட்டவன் சதவீதத்தை விட அதிகம்..


ஹீ..ஹீ.. இந்த பெயர் மாற்றம்...
இத் யம் அண்ணாவுக்கு போட்டியா... :icon_rollout: :icon_rollout:
என்னுடைய பெயர் மாற்றத்துக்கான விளக்கத்தை ஒரு திரியாக கொடுத்த பின்பும் புரியாத மாதிரி கேள்வி கேட்கப்பிடாது...

ஓவியன்
17-01-2008, 01:42 PM
ஒரு நுரையீரலின் பின்னால் இந்தளவு பெருமூச்சா........??!! :sprachlos020:

___________________________________________________________________________________________

ஹீ,ஹீ...!!

பெயரிலாவது மூளை இருக்கட்டும்னு சொன்ன மன்றப் பொறுப்பாளர் நம்ம அன்புதானே...!! :icon_rollout: :confused:

இதயம்
17-01-2008, 01:47 PM
நேத்து ஆஃபீஸ் முடியற நேரம்..! எனக்கு பக்கத்துல இருக்கிற சிவா வெடிச்சிரிப்போட பரபரப்பா என்கிட்ட வந்து யாருங்க அது நம்ம மன்றத்துல நுரையீரல்..?-னு கேட்டார். எனக்கு ஒண்ணும் புரியலை. அப்புறம் எதை சொல்றார்னு புரிஞ்சிக்கிட்டதும் எனக்கு ஆச்சரியம்.. இப்படியெல்லாம் யாராவது பேர் வச்சிக்கிட்டு மன்றத்துக்கு வருவாங்களா..?-ன்னு..! அது யாரு அப்படி ஒரு புரட்சியாளர்னு சும்மா யோசிச்சப்போ என் மூளைக்குள் ஒரு மின்னல்..! இந்த மாதிரி குறும்பு வேலையெல்லாம் நம்ம ராஜாவை விட்டா வேறு யார் செய்வாங்க..?! உடனே சிவா கிட்ட சொன்னேன்.. இது நம்ம ராஜா தான்னு.! அவர் என்னை நம்பாம பார்த்தார்..! அவரை விட ராஜாவை நான் அதிகம் புரிஞ்சதாலோ என்னவோ, நான் என் கருத்தில் கொஞ்சமும் பின்வாங்கலை. உடனே அவர் ப்ரொஃபைல் போய் காட்டி ராஜா தான்னு சொன்னதும் நானும் அவரும் சிரிக்க ஆரம்பிச்சோம் பாருங்க.. கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சோம். சிவா அந்த நேரத்துல வீட்டுக்கு கிளம்புற அவசரத்துல இருந்தார். நான் இந்த நகைச்சுவையை இடையில் நிறுத்த விரும்பாம கொஞ்சம் உட்காந்து சிரிச்சிட்டு லேட்டா போகலாமேன்னு கேக்கற அளவுக்கு அவ்ளோ இண்ட்ரஸ்டா இருந்தது இந்த மேட்டர்.!

எனக்கும் ராஜாவுக்கும் முன்பு நடந்த ஒரு உரையாடல் நினைவுக்கு வருது. நான் என் பேரை மன்றத்தில் இதயம்னு மாத்திய பிறகு அவரும் நானும் பழகிய புதிதில் ஒரு தடவை அவர் என்கிட்ட அது என்னங்க பேரு இதயம், நுரையீரல்..?-னு என்னிடம் கிண்டலா கேட்டார். நான் கூட இதயம்-னு நான் பேர் தேர்ந்தெடுக்க காரணமானதை என் அறிமுகப்பதிவுல சொன்னதை போலவே அவர்க்கிட்டயும் சொன்ன நினைவு. இப்படியெல்லாம் என்கிட்ட கேட்டுட்டு, இப்ப என் பேரோட பாதிப்போ என்னவோ இன்னைக்கு அவரே நுரையீரலா மாறி நிக்கிறார். அவர் தன்னோட பேர்க்காரணத்துக்கு கொடுத்த விளக்கம் ரொம்ப அற்புதம். நானும் அவரும் இதயம், நுரையீரலா இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா ஒரு உடலுக்கு இன்றியமையாத உறுப்புகள்ல இவையும் முக்கியமானதாச்சே..! யார் கண்டா...? இனி கிட்னி, மூளைன்னு நிறைய பேர் கிளம்பி வரலாம்..!! மொத்தத்தில் மன்ற உடலை சீரா இயங்குற மாதிரி வச்சிக்கிட்டா சரிதான்...!!

ராஜாவோட இந்த பதிவை படிச்சிட்டு விகல்பமில்லாத அவர் குறும்பை இரசிக்கிறதா..? தனக்குன்னு எந்த இமேஜையும் உருவாக்கிக்காத அவரோட நல்ல மனசை பாராட்டுறதான்னு தெரியலை. என்கிட்ட, எல்லார்க்கிட்டயும் நல்ல, கெட்ட குணங்கள் இருக்கிற மாதிரியே இவர்க்கிட்டயும் எல்லாம் இருக்கு. நான் அவர்கிட்ட இருக்கிற நல்ல குணத்தை மட்டும் தான் பார்க்கிறேன். ராஜாக்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் அவரோட விரியத்திறந்து வச்ச மனசு. அவர் மனசில் என்ன பட்டாலும் அதை யாருக்காகவும், எதற்காகவும் மறைச்சதே இல்லை. பட்டுன்னு சபையாக இருந்தா கூட போட்டு உடைச்சிடுவார். இந்த குணம் பல நேரங்கள்ல அவருக்கு நிறைய பேர்க்கிட்ட கெட்ட பேரை வாங்கி கொடுத்திருக்க வாய்ப்பிருக்கு. ஆனா, அதைப்பத்தி அவர் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் மனசுக்குள்ள இருக்கிற குழந்தையை நான் வெகுவா இரசிக்கிறேன். ஆனா அந்த குழந்தையோட சேஷ்டைகள் சில நேரங்களில் எல்லை தாண்டி போகும் போது எல்லாரும் அதை இரசிப்பாங்களான்னு எனக்கு தெரியலை. ஆனா, அதைப்பத்தி கவலைப்படுற ஆளும் இல்லை, தன் பதிவில் அவர் சொன்னது மாதிரியே..!!

ராஜாவை நான் இடைவெளியோட பார்க்க முடியல. காரணம், அவர் என்னை மனசால், செயலால் ரொம்ப நெருங்கினவர். அவரை நேர்ல சந்திச்சி வந்தது எனக்கு கிடைச்ச இனிய அனுபவம். நான் அவரைப்பத்தி என்னவெல்லாம் மனதில் உணர்ந்தேனோ அதை என் மனைவிக்கிட்ட அப்படியே பகிர்ந்துக்கிட்டேன். இதை சொல்ல காரணம், அப்படி எல்லாத்தையும் சொல்ற அளவுக்கு அவர்கிட்ட இருந்த நல்ல குணம் இருந்தது தான்..!! சிறந்தவர் எங்கே இருந்தாலும், என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும், என்ன பேர் வச்சிக்கிட்டாலும் சிறப்பு தான். அது நம்ம ராஜாவுக்கு கச்சிதமா பொருந்தும். அவர் முன்பை காட்டிலும் இந்த நுரையீரல்ங்கிற பேரைக்கொண்டு இன்னும் நிறைய புகழடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாராட்டுக்கள் ராஜா... மன்னிக்க.. நுரையீரல்..!!

ஓவியன்
17-01-2008, 01:56 PM
நுரையீரல் அண்ணா, நுரையீரல் அண்ணா...!! :icon_hmm:

இந்தப்படத்தை உங்க அவதாரா வைச்சுக்கோங்கோ....!!


http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/lungs.gif



:icon_good: :icon_wink1:

நுரையீரல்
17-01-2008, 02:06 PM
இதயம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. இவர் தான் ராஜா என்று சொல்வதற்காக எழுதினது போலவே இருக்கிறது பின்னூட்டம். என்னைப் பற்றி நீங்கள் கொண்ட மதிப்புக்கு நன்றி.

என்னைப் பொறுத்தவரையில் மன்ற மக்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஒன்று தான். அதெப்படி இதயம் என்று பெயர் வைத்தால் ஏற்றுக் கொள்ளப்பழகிவிட்ட மனசு, நுரையீரல் என்றால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

இதைவிட ஜோக் என்னவென்றால், நுரையீரல் என்பதற்குப் பதிலாக சிறுநீரகம் என்று மாற்றத்தான் நினைத்திருந்தேன். அறிஞர் கண்டிப்பாக ஒத்துக் கொள்ளமாட்டார் என்பதாலும், அவரை ஒத்துக் கொள்ள வைக்க பக்கம், பக்கமாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதாலும், நுரையீரலை விட அதிகமாகப் பிடித்த சிறுநீரகம் என்பதை வைக்கமுடியவில்லை என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு சிறுநீரகம் இருந்தாலும், ஒன்றின் செயல்பாடு இழந்தாலும் கஷ்டம், கஷ்டம் தான்..

சிவா.ஜி
17-01-2008, 02:09 PM
அடடா நான் மறந்தே போனேனே...நேற்றே என்கிட்ட ஒரு நுரையீரல் வேணுன்னு...சாரி அவதார் வேணுன்னு கேட்டிருந்தார்.இப்ப ஓவியன் கொடுத்துட்டார்.சூப்பர்...நுரையீரலே நலமா...

நுரையீரல்
17-01-2008, 02:16 PM
அடடா நான் மறந்தே போனேனே...நேற்றே என்கிட்ட ஒரு நுரையீரல் வேணுன்னு...சாரி அவதார் வேணுன்னு கேட்டிருந்தார்.இப்ப ஓவியன் கொடுத்துட்டார்.சூப்பர்...நுரையீரலே நலமா...
அண்ணா.. மூளை என்று பெயர் மாற்றத்துடிக்கும் ஒருவர், அடுத்தவரை கையைக்காட்டி எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.

நீங்கள் எதுவாவது பெயர் மாற்றம் உங்களுக்கு செய்யுங்க அண்ணா..

இந்த பெயர் மாற்றம் செய்ததாலோ என்னவோ, மனசில கவிதை சும்மா அருவி மாதிரி கொட்டுது...

கவிச்சமர்ள இன்னிக்கு ஒரு கவிதை எழுதினேன் என்றால் பாருங்களேன்.. இனி கவிதையும் வரும் எனக்கு.. அடுத்தது ஒரு சோகக்கதை ஒன்று எழுத வேண்டும்.. மிகவிரைவில் அதையும் முடிக்கிறேன்.

இதயம்
17-01-2008, 02:18 PM
இதயம் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. இவர் தான் ராஜா என்று சொல்வதற்காக எழுதினது போலவே இருக்கிறது பின்னூட்டம். என்னைப் பற்றி நீங்கள் கொண்ட மதிப்புக்கு நன்றி.



இங்கே உங்களுக்கு ஒரு சின்ன விளக்கம் கொடுக்கணும். பொதுவாவே இதயம்கிறது மனிதர்கள் மத்தியில ரொம்ப இலகுவா, அதிகமா புழங்குற வார்த்தை. அதுக்கு முக்கிய காரணம், இதயம்கிறதை மக்கள் யாரும் உடல் உறுப்பா பேசுறதை விட மனசா தான் பேசுறாங்க. உதா. நடந்ததை நினைச்சி என் இதயம் தாங்கலை, உன்னை பார்த்ததும் இதயத்துக்கு இதமா இருக்கு, இவ்ளோ கொடுமை பண்றானே, அவனுக்கு இதயமே இல்லையா..?? இப்படி நிறைய உதாரணம் சொல்லலாம்..! அதான் இதயம்கிற பேர் அளவுக்கு மக்களால மத்த உடல் உறுப்புக்களை ஏத்துக்க முடியாத காரணம்.

அவ்வளவு ஏன் உலகமே தலை மேல வச்சி கொண்டாடுற காதலுக்கும், இதயத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதயம் வெறும் இரத்தம் சுத்திகரிச்சி கொடுக்கிற ஒரு உறுப்பு மட்டும் தான். ஆனா, காதல் உணர்வுகளை, செயல்பாடுகளை செய்யற, உணர்வுகளை கட்டுப்ப்படுத்துற காதலுக்கு ஆதாரமான மூளையை பத்தி யாருமே பேசுறதில்ல..! இதயம்கிறது ரொம்ப சுலபமா அந்த பேரை தட்டிக்கிட்டு போய்டுது..! இது கூட ஒரு பெரிய ஓரவஞ்சனை தான். ஆக கூடி இதயம்கிறது ஒரு உறுப்பு இல்ல.. மனசு..!!

இவர் தான் ராஜான்னு நான் சொல்லாட்டியும் உங்களுக்கே எழுத்தில் உள்ள அந்த ஸ்பெஷல் டச் உங்களை இனங்காண வச்சிடும்.! அதான் உங்களோட தனித்தன்மை..!!

புதுப்பேரு..புது அவதாரு.. கலக்கற நுரையீரல்..!!:icon_b:

அறிஞர்
17-01-2008, 02:20 PM
நேற்று ராஜாவிடம் இருந்து தனிமடல்...

என் பெயரை நுரையீரல் என மாற்றித்தாருங்கள்.. எனக்கு என்னடா இது இப்படி வில்லங்கமா கேட்கிறாரே.. பார்க்கிறவங்க.. ஏது நினைக்கப்போறாங்க என எண்ணி.... அவரிடம் "என்ன ராஜா இப்படி ஒரு பேரு.. மேடம் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டாங்களா" என்றேன்...

பெயர் விளக்கத்திற்கு இது போல சிறிய விளக்கம் கொடுத்துவிட்டு, "இந்தப் பேரு மாத்தறதுக்கு எல்லாம், அம்மிணியைப் பயந்தா காலம் தள்ள முடியுங்களா?". அப்புறம் நான் என்னத்த சொல்றது... உடனே மாற்றிக்கொடுத்துட்டேன்.

இப்ப அவரின், பெரிய விளக்கம்.....

இப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...
அப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...

ஓவியன்
17-01-2008, 02:29 PM
புதுப்பேரு..புது அவதாரு.. கலக்கற நுரையீரல்..!!:icon_b:

ஆமா கலக்குறீங்க நுரையீரல்..........!! :icon_b:

(இதயத்தோட வயத்தைத் தான்........!! :D)

ஓவியன்
17-01-2008, 02:32 PM
இப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...
அப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...

ஆமா, நேற்று நான் ஒருவரிடம் கூறிய வார்த்தை இது.......

சின்னப்பிள்ளைங்க அப்படி பெயரை மாற்றுங்க, இப்படி பெயரை மாற்றுங்கணு கேட்டா நம்ம அறிஞரும் யோசிக்காம மாற்றிக் கொடுக்கிறாரே என்று கவலைப் பட்டேன்....!! :D:D:D

அன்புரசிகன்
17-01-2008, 02:34 PM
என்னடா கவிதைபோல தலைப்பு இருக்குதே, நம்மாளு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டானானு நினைக்காதீங்க... இந்தத் திரியே ஒரு சுயவிளக்க கட்டுரை தான். இதை எங்கே பதிப்பது என்ற பெருங்குழப்பம் இருக்கவே, இப்போதைக்கு நீதிக்கதைகள், சுவையான சம்பவங்களில் பதிக்கலாம் என்று பதிக்கிறேன். பொறுப்பாளர்கள் தான் தக்க இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். சரி சொந்தக்கதை சோகக்கதையை கேட்க எல்லாரும் தயாரா?

முதலில் உங்களை எங்கு கொண்டு சென்று சேர்ப்பது என்று சொல்லுங்கள். பிறகு உங்கள் பதிவை எங்கு சேர்க்கலாம் என்று வாத்தியாரின் உய்த்தறிவோம். :D


25% உண்மை + 25% பொய் + 25% நல்லவன் + 25 கெட்டவன் = நுரையீரல் (இது தான் நான்)

பொய். பொய் பொய்.

என்னுடைய பதிலைக் கண்ட பொறுப்பாளர் ஒருத்தர் தனது பதிலில் தெரிவித்திருந்தார் -> அவருக்கு மூளை என்று பெயர் மாற்ற ஆசையாம். என்ன காரணம் என்று கேட்டதற்கு பெயரிலாவது மூளை இருந்திட்டு போகட்டுமே என்கிறார்.

இதுக்காவது உண்மைய சொல்லுங்க. அது ஓவியன் தானே........



இப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...
அப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...

அட. இதுங்க வேற வரப்போகுதா? :icon_rollout: அறிஞருக்கு என்ன பெயர் வைக்கலாம்?????

நுரையீரல்
17-01-2008, 02:35 PM
நேற்று ராஜாவிடம் இருந்து தனிமடல்...

பெயர் விளக்கத்திற்கு இது போல சிறிய விளக்கம் கொடுத்துவிட்டு, "இந்தப் பேரு மாத்தறதுக்கு எல்லாம், அம்மிணியைப் பயந்தா காலம் தள்ள முடியுங்களா?". அப்புறம் நான் என்னத்த சொல்றது... உடனே மாற்றிக்கொடுத்துட்டேன்.

இப்ப அவரின், பெரிய விளக்கம்.....

இப்ப தோழர்.. நுரையீரல், இதயம்,...
அப்புறம் மூளை, கண், காது, மூக்கு என என்ன என்ன வரப்போகுதோ...
பெயர் மாற்றத்தில் உள்குத்து ஏதும் இல்லைங்க அறிஞரே...

என்னைப் பொறுத்தவரையில் எனக்கென்று ஒரு இலக்கணம் வைத்திருக்கிறேன். அந்த இலக்கணப்படி பார்த்தால் நாம் அனைவரும் சமுதாயத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, ஒரு சில சொற்களை தமிழில் சொன்னால் ஏற, இறங்கப் பார்க்கும் சமுதாயம், அதே சொல்லின் அர்த்தம் கொண்ட ஆங்கிலச் சொல்லை ஏற்றுக் கொள்கிறது. காரணம் காலாகாலமாய் சொல்லித்தரப்பட்ட பண்பாடு என்போம்.

உதாரணத்துக்கு: நடந்ததை நினைச்சி என் இதயம் தாங்கலை, உன்னை பார்த்ததும் இதயத்துக்கு இதமா இருக்கு, இவ்ளோ கொடுமை பண்றானே, அவனுக்கு இதயமே இல்லையா..?? இப்படி எல்லாம் இதயத்தை வர்ணித்து சொல்கிறோம். ஆனால் அந்த வர்ணிப்புகளுக்கு காரணம் எது இதயமா? இல்லை மூளை...

அதுபோல வானம் என்று ஒன்று இல்லவேயில்லை. ஆனால் ஏழுவானம், ஏழு பூமி என்று பேசுவோம்.

நுரையீரலுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது. அதை உணர்ந்த நான், என் பெயரை மாற்றித்தர வேண்டுகோள் வைத்தேன். மற்றபடி கலாய்க்கும் எண்ணமெல்லாம் இல்லை. அதுவும் அறிஞர் அண்ணாவை யாராவது கலாய்ப்பாங்களா???

ஜெயாஸ்தா
17-01-2008, 02:43 PM
ஆமா கலக்குறீங்க நுரையீரல்..........!! :icon_b:

(இதயத்தோட வயத்தைத் தான்........!! :D)

இந்த நுரையீரல் இருக்கே... நுரையீரல் அது வாயுப்பரிமாற்றம் தவிர வேறு சில வேலைகளையும் செய்கிறதாம்.

1.சிரைகளில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை உடலின் பிற பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பது
2.சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது
3.வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்க செய்வது
4.இருதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருப்பது மற்றும் இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது

நுரையீரலைப்பற்றி படிக்கும் போது அந்த நாலாவது பாயிண்ட்தான் கொஞ்சம் இடிக்குது..!!!

ஆனா... நம்ம நுரையீரல் அப்படியில்லை நல்லவரு...வல்லவரு... பலாப்பழம் மாதிரி இனிமையானவரு(கந்தா, கடம்பா, கடற்கரையாண்டி.. இப்படி பொய் சொல்றதுக்கு மன்னிச்சிருங்க...)

ஓவியன்
17-01-2008, 02:45 PM
அதுவும் அறிஞர் அண்ணாவை யாராவது கலாய்ப்பாங்களா???

இது என்னது புதுக் கரடி........???? :sprachlos020::sprachlos020::sprachlos020:

நுரையீரல்
17-01-2008, 02:46 PM
முதலில் உங்களை எங்கு கொண்டு சென்று சேர்ப்பது என்று சொல்லுங்கள். பிறகு உங்கள் பதிவை எங்கு சேர்க்கலாம் என்று வாத்தியாரின் உய்த்தறிவோம். :D
எந்தரோ மஹாணுபாவலு அந்தரிகி வந்தணமு

எக்கட எக்கட தர்பாரு உஸ்தாரு - அக்கட அக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு
எக்கட எக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு - அக்கட அக்கட தர்பாரு உஸ்தாரு
அய்ட்டி லேது ஒய்ட்டி லேது


பொய். பொய் பொய்.
பொய் சொன்னாலும் திருந்தச் சொல்லணும்..


இதுக்காவது உண்மைய சொல்லுங்க. அது ஓவியன் தானே........
அதுனா? எது? இப்படி குத்துமதிப்பாக் கேட்டா, எப்படி பதில் சொல்றதாம். எனக்கும் மூளை இருக்குல்ல...


அறிஞருக்கு என்ன பெயர் வைக்கலாம்?????
இப்படியெல்லாம் யோசிக்க கிட்னி வேண்டும் என்று சொன்னால், மூளை இல்லை என்று அர்த்தமா?

அன்புரசிகன்
17-01-2008, 02:47 PM
ஆனா... நம்ம நுரையீரல் அப்படியில்லை நல்லவரு...வல்லவரு... பலாப்பழம் மாதிரி இனிமையானவரு

இந்தக்கூற்றால் நீங்கள் மோட்சம் என்பதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அடைய முடியாது. அத்தகைய ஒரு மிகப்பாரிய பெரிய பாவத்தை செய்துவிட்டீர்கள். :lachen001:

செல்வா
17-01-2008, 02:48 PM
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்..
நான் செய்த தீங்கு என்ன....


இப்போ என்ன நடந்து போச்சுண்ணு இப்படி ஒரு கேள்வி...........

நல்ல வேளை ... இராசானந்த சுவாமிகள்னு பேரு வக்கல.... மன்றம் தப்பிச்சுடுச்சு

அன்புரசிகன்
17-01-2008, 02:50 PM
எந்தரோ மஹாணுபாவலு அந்தரிகி வந்தணமு

எக்கட எக்கட தர்பாரு உஸ்தாரு - அக்கட அக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு
எக்கட எக்கட கொள்ளக்கூட்டுக் காரு உஸ்தாரு - அக்கட அக்கட தர்பாரு உஸ்தாரு
அய்ட்டி லேது ஒய்ட்டி லேது


பொய் சொன்னாலும் திருந்தச் சொல்லணும்..


அதுனா? எது? இப்படி குத்துமதிப்பாக் கேட்டா, எப்படி பதில் சொல்றதாம். எனக்கும் மூளை இருக்குல்ல...


இப்படியெல்லாம் யோசிக்க கிட்னி வேண்டும் என்று சொன்னால், மூளை இல்லை என்று அர்த்தமா?

அப்புறமா நான் சிங்களத்தில் ஆரம்பித்துவிடுவேன். துணைக்கு மயூவும் வருவார். :D

அது என்ன கடைசில் கிட்னி சட்னி என்று..? கிட்னிக்கும் மூளைக்கும் என்ன சம்பந்தம் யவனிகா அக்கோ.....................ய்.... :rolleyes:

நுரையீரல்
17-01-2008, 02:50 PM
இது என்னது புதுக் கரடி........???? :sprachlos020::sprachlos020::sprachlos020:
செல்வா தாடி வச்சாலும் டி.ராஜேந்தர் மாதிரியா இருப்பாரு

தாமரை
17-01-2008, 02:52 PM
எல்லாஞ்சரி.. அதெப்படி யாருக்கும் தெரியாதுன்னு கற்பனைப் பண்ணிகிட்டீங்களோ தெரியலை,, ஆனா.. உங்களை அப்படி ஆஃப் பண்ணிருவேண்ணு எதிர் பார்க்கலை இல்லையா!

என்ன நஈங்க வரும்பொழுது உங்களுக்கு விருந்தா நாலு ஆக்ஸிஜன் சிலிண்டரும் அம்மிணிக்கு வகைவகையா சிக்கனும், மட்டனும், மீனும் சமைச்சுப் போடலாம்.. நாலும் அடங்கிய மனுஷன்னு சொல்லிட்டீங்க.. இப்ப கொஞ்சம் லொள்ளும் அடங்கிருச்சு..

ஒரு சந்தேகம் நிவர்த்திப் பண்றீங்களா.. ஆமாம் இந்த நல்ல்வன் நல்லவன்னு சொல்றீங்களே.. .அதாருங்க?

நுரையீரல்
17-01-2008, 02:56 PM
அப்புறமா நான் சிங்களத்தில் ஆரம்பித்துவிடுவேன். துணைக்கு மயூவும் வருவார். :D

அது என்ன கடைசில் கிட்னி சட்னி என்று..? கிட்னிக்கும் மூளைக்கும் என்ன சம்பந்தம் யவனிகா அக்கோ.....................ய்.... :rolleyes:
தம்பிக்கண்ணா சும்மா சுத்தி சுத்தி சுதியோட அடிப்பேன்..

உங்களை அடிப்பேனு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா நான் பொறுப்பில்லை.

யாரையாவது அடிப்பேனு ஏன் நினைக்கிறீங்க.. எதையாவது அடிக்கலாமில்ல...

அன்புக்கண்ணா இன்னிக்கு வியாழக்கிழமை ராத்திரி, நாளைக்கு வெள்ளிக்கிழமை -> இப்போ அங்கே விஷேசமாமே? அப்படியா?

நுரையீரல்
17-01-2008, 03:03 PM
எல்லாஞ்சரி.. அதெப்படி யாருக்கும் தெரியாதுன்னு கற்பனைப் பண்ணிகிட்டீங்களோ தெரியலை,, ஆனா.. உங்களை அப்படி ஆஃப் பண்ணிருவேண்ணு எதிர் பார்க்கலை இல்லையா!
படிச்சு எழுதினா பாஸ் ஆகலாம். பாஸ் (boss) ஆக முடியுமா?


என்ன நஈங்க வரும்பொழுது உங்களுக்கு விருந்தா நாலு ஆக்ஸிஜன் சிலிண்டரும் அம்மிணிக்கு வகைவகையா சிக்கனும், மட்டனும், மீனும் சமைச்சுப் போடலாம்..
அப்பவும் எனக்குத் தானே காஸ்ட்லி அயிட்டம். அம்மிணிக்கு சிக்கன் (100 ரூ), மட்டன் (200 ரூ) மீன் (150 ரூ). ஆக மொத்தம் 450 ரூ.

எனக்கு நாலு ஆக்ஸிஜன் சிலிண்டர், கேஸ் நிரப்பப்படாத வெற்று சிலிண்டரை வித்தாலே ஆயிரக்கணக்கில தேறுமே... உங்களுடைய அன்புக்கு நன்றி..


நாலும் அடங்கிய மனுஷன்னு சொல்லிட்டீங்க.. இப்ப கொஞ்சம் லொள்ளும் அடங்கிருச்சு..

ஒரு சந்தேகம் நிவர்த்திப் பண்றீங்களா.. ஆமாம் இந்த நல்ல்வன் நல்லவன்னு சொல்றீங்களே.. .அதாருங்க?
உங்க நெஞ்சு மேல கையவச்சு சொல்லுங்க, யாருனு தெரியலையாக்கும்...

தாமரை
17-01-2008, 03:54 PM
என் நெஞ்சு மேல கையை வச்சா?

அப்ப என் கை என்னையில்ல காட்டும்

ஓ நல்லவன்னா நான்தானா (25% நல்லவன் ஓ.கே)

நீங்க பேரை மாத்தினாலும் பழைய காலி சிலிண்டரைக் காயலான் கடையில போடற புத்தி மாறலையே (25% கெட்டவன் ஓ.கே)..

படிக்காம இருந்தா அரசியல்வாதி ஆகலாம்.. BOSS ஆக முடியாது

ஆமாம் நீங்க கவனிக்கலையா ஆக்சிஜன் சிலிண்டரைத் தர்ரேன்னு தானே சொல்லி இருக்கேன். ஆக்சிஜன் தர்ரதா சொல்லலியே.. சிலிண்டரைச் சாப்பிட்டா பாக்கப் போறீங்க?

அன்புரசிகன்
17-01-2008, 05:31 PM
அன்புக்கண்ணா இன்னிக்கு வியாழக்கிழமை ராத்திரி, நாளைக்கு வெள்ளிக்கிழமை -> இப்போ அங்கே விஷேசமாமே? அப்படியா?

யோவ் ஈரல்......... என்ன புதுசு புதுசா புசத்துறியள்??? :D இன்னிக்கு வியாழன் இரவு என்றால் நிச்சயமாக நாளை வெள்ளிக்கிழமையாகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன விசேஷம் இருக்கிறது.??? இதுல அப்படியா என்று கேள்வி வேறு... என்ன ஆயிற்று?

அக்கோய்.... ஆள முதியோர் பாடசாலையில் சேர்த்திடுங்க.

நமக்கு தினமும் விசேடம் தான். காரணம் செய்யும் தொழிலே தெய்வம் என்பது எனது எண்ணம். தெய்வத்திற்கு தினமும் ஆராதனை செய்வேன். அதுதான் எனது விசேடம். :D

அ ஆ இ ஈ இலிருந்து ஃ வரை முதல் நாள். பின் 1 2 3 இருந்து 10 வரை அடுத்தநாள். அப்படியே சிறிதுகால பயிற்சியின் பின் கிழமைகள் மாதங்கள் போன்றவற்றையும் கற்பித்துவிடுங்கள்.
:lachen001:

பென்ஸ்
17-01-2008, 05:38 PM
ரசித்தேன் ராஜா (சாரி நுரையீரல்) ...
உங்கள் லொள்ளுகளுக்கு இங்கு ஒரு ரசிகன் இருப்பது தெரியும்தானே (நான் தான் பா)

அன்புரசிகன்
17-01-2008, 05:52 PM
ரசித்தேன் ராஜா (சாரி நுரையீரல்) ...
உங்கள் லொள்ளுகளுக்கு இங்கு ஒரு ரசிகன் இருப்பது தெரியும்தானே (நான் தான் பா)

வெகுவிரைவில் உயிரியல் பாடம் நடாத்தக்கூடிய நிலைக்கு நம் நண்பர்கள் வருவர். :D

நுரையீரல்
17-01-2008, 06:04 PM
ரசித்தேன் ராஜா (சாரி நுரையீரல்) ...
உங்கள் லொள்ளுகளுக்கு இங்கு ஒரு ரசிகன் இருப்பது தெரியும்தானே (நான் தான் பா)
நுரையீரல்னு பேர வச்சு, ரவுசையெல்லாம் மறந்து சோக கீதம் / கதை எழுதலாம்னு இருந்தா, லொள்ளுக்கு ரசிகன் என்று உசுப்பேத்தி விடுறீங்களே...

நுரையீரல்
17-01-2008, 06:09 PM
வெகுவிரைவில் உயிரியல் பாடம் நடாத்தக்கூடிய நிலைக்கு நம் நண்பர்கள் வருவர். :D
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...

ஓவியன்
17-01-2008, 06:25 PM
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...

ஹீ,ஹீ..!!

அன்புவை மாடாக நினைத்து நீங்கள் பாடிய பாடலை நிரம்பவே இரசித்தேன் நு.ஈ அண்ணா...

யவனிகா
17-01-2008, 06:54 PM
ஆளாளுக்கு கடுப்பக் கிளப்பறீங்களா?ஏத்தி விடறதெல்லாம் என் தலையில தான் வந்து விடியும்...

கொஞ்சமாவது தங்கச்சிப் புள்ள மேல அக்கறை இருக்கா...சிவா அண்ணங்கிட்ட நேத்தே மூக்கால அழுதேன்...புத்தி சொல்லுவார்னு பாத்தா...சேர்ந்து சிரிச்சிருக்கார் இத்யம் பிரதர் கூட...

அன்பு,ஓவி,அமரு ஒருத்தர் கூட இல்லையா என் பக்கம்...

சுகந்தா நீயாவது வந்து ஏன்னு கேக்க மாட்டியா?உன்னத் தான் மலை மாதிரி நம்பி இருக்கேன்...

நேத்து பேர மாத்தரன்னு சொன்னப்ப, நான் சொன்னேன் அறிஞர் அறிவாளி, புத்திசாலி, சின்னப் புள்ளத்தனமா இப்படியெல்லாம் மாத்த மாட்டாருன்னு...இப்ப எங்கே கொண்டு போய் நான் மூஞ்சிய வெச்சுக்கிறது...

அமரன்
17-01-2008, 07:44 PM
நீங்கள் அதிகமாகப் பங்கெடுக்கும் அரங்குகளில்
உங்கள் ஆசனத்தில் வெறுமை அமர்ந்திருக்க
புதிய பெயரில் உங்கள் உயிர்ப்பு..


இரண்டுக்கும்
முடிச்சுப் போடும் தீவிரத்தில்
பாழாய்ப்போன மனசு.


பெயர் கவர்ந்தளவுக்கு
மாற்றத்தில் ஈர்ப்பில்லை.

மீள் மாற்ற வேண்டுகோள் எண்ணமில்லை.
என்றும் நீங்கள் நீங்களாக இருக்க என்னாசை.

அமரன்
17-01-2008, 08:02 PM
மலரும் நினைவு ஒன்று...

மன்றத்தில் வேறு பெயரில் அறிமுகமானேன்.
பெயர்மாற்றம் விரும்பியபோது பல பெயர்கள் போட்டியில்.. இறுதிவரை களத்தில் இருந்தது
அமரனும் ஏகன் என்ற பெயரும்..

அமரன் வென்றதுக்கு காரணம் சொல்லி உள்ளேன்.


உள்ளங்கை இணைத்தாலும்
விரல்களை விரித்து சேர்த்துப் பிடியுங்கள்..
பிரிவினை வாதிபோல் தனித்து நிற்கும் கட்டை விரல்..
முயன்று சேர்த்தாலும் சிறுது நேரத்தில் சோர்ந்துவிடுவோம்

ஆனால்...
அவனின்று எழுத்தாணி அசைவது எவ்வளவு கடினமானது..
எழுத்தாணி அசைவு எவ்வளவு வீரியமானது ????


முஷ்டியை மடக்கி குத்தும்போது,
கட்டைவிரலை தனிமைபடுத்துங்கள்.
புயபலத்தை அளவிட்டுக் கொள்ளுங்கள்..

கட்டைவிரலால்
மூடிய மற்ற விரல்களை அழுத்திப் பிடித்து
புயபலத்தை அளவிட்டுக் கொள்ளுங்கள்..
வித்தியாசத்தை கணித்துபாருங்கள்..
கட்டைவிரலின் தாக்கம் அறியலாம்.

ஒருவிரல் முன்னிற்பவன் மீது குற்றம் சுமத்த,
மூன்று விரல்கள் என்னையே குற்றவாளி ஆக்க,
நடுநிலைமையுடன் கட்டைவிரல் ஏகனாக..
எதையும் முன்றாவது கோணத்தில் அலசுங்கள் என்றபடி.


ஒருத்தனுக்கு தைரியம் சொல்வதுக்கும்,
ஜெயத்தை பறைசாற்றவும்,
வெற்றியில் பங்கெடுத்துளதை இயம்பும் பரிபாசையாகவும்,
சவால் விடுப்பதை முரசறையவும்
இன்னும் பல சமயங்களில் தம்ஸ் அப் காட்டுகின்றோம்..

அங்கேயும் ஏகன் பலவற்றின் பிரதிநிதியாக..


இதைவிட ஏகலைவன் கட்டைவிரலின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளான். ...

இப்படி ஏகப்பட்ட இடங்க்ளில் ஏகனாக இருந்தாலும்
பயன்களில் ஏகப்பிரதிநிதியாக இருக்க என் விருப்பம்.

அப்படி ஒரு காரணத்துகாகவா இப்போது நீங்களும்????

அறிஞர்
17-01-2008, 08:31 PM
நேத்து பேர மாத்தரன்னு சொன்னப்ப, நான் சொன்னேன் அறிஞர் அறிவாளி, புத்திசாலி, சின்னப் புள்ளத்தனமா இப்படியெல்லாம் மாத்த மாட்டாருன்னு...இப்ப எங்கே கொண்டு போய் நான் மூஞ்சிய வெச்சுக்கிறது...
ஆஹா கடைசில என் தலையை உருட்டுறீங்க...

முதல் கொடுக்கவில்லை என்றேன்.

அப்புறம் வீட்டு அம்மிணியை கேளுங்க என்று சொல்லி பார்த்தேன்...

மனுஷனை கேட்கலை... "இந்தப் பேரு மாத்தறதுக்கு எல்லாம், அம்மிணியைப் பயந்தா காலம் தள்ள முடியுங்களா?" என்றார். அப்புறம் நான் என்னத்த சொல்றது...

ஏதோ கெட்ட பழக்கத்தை விடுவதற்காக சிந்திக்கிறார் போல என்று நினைத்து நல்ல விசயத்துக்காக மாற்றிக்கொடுத்தேன். (அவருக்கு போட்டியாக உங்களுக்கு பெயர் மாற்றிவிடலாமா...)

யவனிகா
17-01-2008, 09:13 PM
[FONT=Arial Unicode MS][SIZE=3]அப்படி ஒரு காரணத்துகாகவா இப்போது நீங்களும்????

அமரன்...சில நேரம் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கவிதை எழுதுவோம்...
இல்லை சேந்தாப்போல ரெண்டு கோடு கிறுக்குவோம்...அதை சிலர் வந்து புதுக்கவிதை,மாடர்ன் ஆர்ட்...ஆஹா..ஒஹோ என்று பாராட்ட...ஒன்றுமில்லா விசயங்கள் கூட பெரிதாகிவிடும்.
கிறுக்கல்களுக்கு அதற்குரிய அர்த்தம் போதும்.அனர்த்தம் கொள்வது தவறு...வர வர தமிழ் மன்றம் வெறும் விளையாட்டுக் களம் ஆகிவிட்டதோ என்று வேதனைப் படுகிறேன்.

அறிஞர்
17-01-2008, 09:21 PM
...வர வர தமிழ் மன்றம் வெறும் விளையாட்டுக் களம் ஆகிவிட்டதோ என்று வேதனைப் படுகிறேன்.
பிரம்பை எடுக்க வேண்டியது தான் போல....

யவனிகா
17-01-2008, 10:28 PM
அ ஆ இ ஈ இலிருந்து ஃ வரை முதல் நாள். பின் 1 2 3 இருந்து 10 வரை அடுத்தநாள். அப்படியே சிறிதுகால பயிற்சியின் பின் கிழமைகள் மாதங்கள் போன்றவற்றையும் கற்பித்துவிடுங்கள்.
:lachen001:

ஏன் எனக்கு வேற வேலை இல்ல...

நான் சொல்லிக்குடுத்தா...அவரு "ஒள" விலிருந்து தான் ஆரம்பிப்பாரு...அது தான் சரின்னு வேற சொல்லுவாரு..எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரம்...

1,2 மட்டும் ஒழுங்கா எழுதுவாரு...அப்புறம் 3 எழுதச் சொன்னா...மூனத் தொட்டது யாருன்னு வேற ரவுசு பன்னுவாரு..ஏஸ்.ஜே. சூர்யான்னு சொன்னா...இல்ல எஸ்.ராஜா ன்னு சொல்லும்பாரு...

அன்பு நீங்களே ஒரு எட்டு சவுதி பக்கம் வந்து அ,ஆ,இ....சொல்லிக் குடுத்துட்டுப் போங்க...ஆனா உங்க உசிருக்கு நான் உத்தரவாதம் இல்லை....

தாமரை
17-01-2008, 11:26 PM
யவனிகா, சீரியஸா சொல்றீங்களா இல்லை கலாய்க்கிறீங்களா?

புரியலை நிஜமாவே! அமரனுக்கு போட்டிருக்கும் பதிலைப் பார்த்தால் பயமா இருக்கு.

மதி
17-01-2008, 11:45 PM
புதுசா ஒரு பெயர்.. ஃப்ரொஃபைல பாத்தவுடனே புரிஞ்சுடுச்சு.. இவர் தானு.. இதுக்கு ஒரு விளக்கம் வேற. எல்லாம் சொன்னீங்க சரி.. நடுவுல ஏன் வெங்காய பாய்ஸ இழுத்தீங்க.. நீங்களாவது 25% உண்மை..25% பொய்.. வெங்காய பாய்ஸ்ஸின் வரலாறு முழுக்க முழுக்க உண்மை..

மாமோவ்.. அப்புறம் அக்காகிட்ட பர்மிஷன் கேட்டுட்டு உங்க மேல மானநஷ்ட வழக்கு போட வேண்டிவரும்.. சொல்லிட்டேன்.

அக்னி
18-01-2008, 01:55 AM
நுரையீரல் அவர்களே...
முதலில் நான் நினைத்தேன் இதயத்திற்குப் போட்டியாக வந்த பெயர் என்று. ஆனால், நுரையீரல் ஆக மாறியதில் இத்தனை காரணங்கள் பின்னுள்ளனவா?
சிந்தனையைத் தூண்டுகின்றது. சிந்தனையே துண்டிக்கின்றது.

அன்புரசிகன்
18-01-2008, 03:16 AM
அன்பு,ஓவி,அமரு ஒருத்தர் கூட இல்லையா என் பக்கம்...


விட்டுத்தள்ளுங்க அக்கா... ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும். வுடுங்க. எத்தனைநாளுக்கு இது......... :wuerg019:

ஆனாலும் என்னால் தாங்கமுடியாதது,:eek: வியாழன் இரவுக்கு அடுத்தநாள் வெள்ளிக்கிழமை என்ற கண்டுபிடிப்புத்தான். இதை இந்த பெயர் மாற்றத்தின் பிறகு தான் வெகுவிமெரிசையாக கண்டுபிடித்திருக்கிறார் இந்த ரவுசுஈரல். :traurig001:

சிவா.ஜி
18-01-2008, 04:11 AM
யவனிகா...நான் அன்று மாலையே அந்தப் பெயர் ரவுசுவினுடையதுதான் என்று இதயம் உறுதி செய்ததும் உடனே ராசாவிடம் பேசினேன்...பின்னூட்டங்களில் நுரையீரல் நன்றாய் இருக்கிறது என்று எழுதுவதற்குக்கூட கொஞ்சம் சங்கடமாக இருக்குமே என்று.எனக்கும் இதே கதையைத்தான் சொன்னார்.சரி மனுஷன் சிகெரெட்டை விடுவதற்கான முயற்சியில்தான் இதை செய்கிறார் என்பதால் நானும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.எப்படியோ அந்த பழக்கத்தை விட்டால் சரி.தற்போதுள்ள கடுங்குளிரில் அடிக்கடி பால்கனிப்பக்கம் போய் குளிரில் உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமலிருக்கலாமே..

நேசம்
18-01-2008, 04:38 AM
நுரையீரல் கெட்டு போகுதுன்னு இந்த பெயரை வச்சுகிட்டார்.நல்ல வேலை மூளை கெட்டு போகமால் இருந்தால் மூளைன்னு வைத்து இருப்பார்.

அமரன்
18-01-2008, 07:18 AM
அமரன்...சில நேரம் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கவிதை எழுதுவோம்...
இல்லை சேந்தாப்போல ரெண்டு கோடு கிறுக்குவோம்...அதை சிலர் வந்து புதுக்கவிதை,மாடர்ன் ஆர்ட்...ஆஹா..ஒஹோ என்று பாராட்ட...ஒன்றுமில்லா விசயங்கள் கூட பெரிதாகிவிடும்.
கிறுக்கல்களுக்கு அதற்குரிய அர்த்தம் போதும்.அனர்த்தம் கொள்வது தவறு...வர வர தமிழ் மன்றம் வெறும் விளையாட்டுக் களம் ஆகிவிட்டதோ என்று வேதனைப் படுகிறேன்.

பல சமயங்களில்,
என் எழுத்திலும் பேச்சிலும்
வெளிப்படை இருப்பதில்லை.

எல்லாமே செய்யும்போது சரி என்றே படுகின்றது..
காலக் கல்லூரியில் தேர்வுத்தாள் திருத்தபடுகையில்
சரி என நினைத்தவைகள் தவறு எனப்படுகின்றது.
தவறு எனப்பட்டவை சரி எனப்படுகின்றது..

நுரையீரல்
18-01-2008, 12:04 PM
பெயர் மாற்றத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ எதிர்ப்புகள் அதிகம் இருக்கிறது. எதையும் தாங்கும் ஈரல் இது...

ஓவியன்
18-01-2008, 01:09 PM
பெயர் மாற்றத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ எதிர்ப்புகள் அதிகம் இருக்கிறது. எதையும் தாங்கும் ஈரல் இது...

ஹலோ...!!

உங்களோட பெயர் நுரையீரல், ஈரல்னு சொல்ல முடியாது...
ஏன்னா ஏற்கனவே ஈரல் என்ற பெயரை ஒருவரி ரிசேர்வ் பண்ணிட்டாராம்...!! :lachen001:

மனோஜ்
18-01-2008, 01:38 PM
நானும் மன்ற சொந்தங்கள் என்ற பகுதியில் நுரையிரல் என்று இருக்கு என்ன பெயரை விட்டுடிங்களே என்று வேறு கேட்கவும் நான் யாரு இது புதிதாக இருக்கிறார் ஆனால் இதழ் தொகுப்பாளர் என்று இருக்கே என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் நுரையிரல் தொடர்ந்து அதிகமாக கலக்க வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
20-01-2008, 06:49 AM
சுகந்தா நீயாவது வந்து ஏன்னு கேக்க மாட்டியா?உன்னத் தான் மலை மாதிரி நம்பி இருக்கேன்......

வந்துட்டேன் அக்கா..!வந்துட்டேன்..!


ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?
ஏன்?

எங்க மாமாவுக்கு இந்த ஈரல் திங்கிற புத்தி...?!:rolleyes: ஆளை காணுமே வயசாயிட்டதால:sprachlos020: அமைதியாயிட்டாரு என் மாமனாருன்னு நினச்சிட்டு இருந்தேனே..? இப்படி திருட்டுதனமா ஈரல்ல தின்னுட்டு பேர மாத்தி வச்சிக்கிட்டு வருவாருன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலியே..?!:traurig001:

ஏன் அக்கா யாரு பேச்சையும் கேட்க மாட்டேங்கிறதையே கொள்கையா(?) வச்சிக்கிட்டு இருக்குற உன் புருசன் என் பேச்சை மட்டும் கேட்கவா போறாரு..?!:icon_p: எப்படியும் ஈரல் தின்ன குரங்கு (எத்தனை நாளைக்குதான் இஞ்சி தின்ன குரங்குன்னே சொல்றது..?) ஊருல உதபட்டு ஊட்டுக்கு தானா வந்து சேந்துடும்.. அதுக்காக நீங்க வருத்தபட வேணாம் அக்கா..!:confused:

யோவ் மாமா இது உனக்கு... நீ கிட்னின்னு பேரு வச்சாலும் சரி சட்னின்னு சைட்:icon_ush:டிஸ் வச்சிக்கிட்டாலும் சரி எங்க அக்காவையும் அது பெத்த சிங்க குட்டிகளையும்:icon_rollout: முக்கியமா உங்க அருமை புத்திரியையும்(?!):aetsch013: பட்னி போடாம இருந்தா போதும்..!

கடைசிய ஒன்னு மட்டும் தெரியுதுங்கோ... புள்ளி ராசாவுக்கு புத்தி மட்டும் இன்னும் மாறலைன்னு..:cool:

எப்படியோ ஈரல் திங்க ஆசைபட்டு நுரையீரல்ன்னு பேர வச்சிகிட்டாரு என் மாமனாரு.. ஆனா எனக்கு நுரை சுத்தமா பிடிக்காது ஆனா ஈரல் ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே பிடிக்கும்... அதனால என் மாமனார நான் ஈரல் மாமான்னுதான் கூப்பிடுவேன்..(இதுக்கும் அறிஞரோட அனுமதி வாங்கனுமாங்க..?)

கடைசியா யக்கா நீ காதலிச்சி கல்யாணம் கட்டிக்கிட்ட என் மாமனாரு ரொம்ப ஈர(ல்)மாணவருக்கா..!:icon_b:

பூமகள்
31-01-2008, 11:15 AM
வேலை பல இருந்ததால்..
உடன் பதிவிட இயலவில்லை..!

காலம் தாழ்த்தினாலும்
கடமை தவறமாட்டாள் பூ..!

வந்தேன்.. படித்தேன்
வியந்தேன்.. புகழ்வேன்..!

தன்னிலை காட்டாமல்
தவிர்ப்பவர் பலர்..
தன்னியல்பு காட்டிய
தமையன் நீங்கள்..!

புரியாமல் பெயர் பார்த்து
புரியாமல் கேள்வி ஒன்று
பூந்தங்கை கேட்டமைக்கும்
புரிதலுடனான விளக்கமிட்டு
அசத்திவிட்டீர்..!!

கொடிய புகையால்
மனத்தின் சண்டையை
மன்றத்தில் உரைத்து
உயர்ந்து நிற்கிறீர்..!

பெயர் மாற்றமல்ல..
புகையில்லா மாற்றமும்
பூவிரும்பி கேட்கிறேன்..!!

-------------------------------------

காலம் தாழ்த்தி வந்து பின்னூட்டமிட்டமைக்கு என் அன்பு நுரை அண்ணா மன்னிச்சிருங்க..!! :)