PDA

View Full Version : தடையுடைத்த பயணம்



சிவா.ஜி
17-01-2008, 09:55 AM
தேடிச் சென்ற இடத்தில்
தேடியவை கிட்டவில்லை
இருந்தும்
தேடுவதை விடவில்லை!

சிலை வடிக்க கல் தேடி
உளியோடு உலா போனேன்
கிடைத்த கல்லில்
வடித்த சிலையில்
வடிவம் வரவில்லை
இருந்தும்
வசமான கல்தேடி
பயணம் தொடர்கிறேன்!

தொட்ட இடமெல்லாம்
தோல்விகள் தீண்டின
நட்ட விதையெல்லாம்
முளைக்காமல் மாண்டன
இருந்தும்
தட்டி தடையுடைத்து
முட்டி முன்னே செல்கிறேன்!


இடக்கையில் எதிர்ப்பையும்
வலக்கையில் அவமானத்தையும்
சுருட்டி அக்குளில் அடக்கிவிட்டு
அடுத்த அடியை
அயராது வைக்கவே விருப்பம்
பட்டறிவு பக்கமிருக்க
பாதை கடினமில்லை.........
பள்ளம் மேடு பெரிதேயில்லை......

ஆர்.ஈஸ்வரன்
17-01-2008, 10:04 AM
இடக்கையில் எதிர்ப்பையும்
வலக்கையில் அவமானத்தையும்
சுருட்டி அக்குளில் அடக்கிவிட்டு
அடுத்த அடியை
அயராது வைக்கவே விருப்பம்
பட்டறிவு பக்கமிருக்க
பாதை கடினமில்லை.........
பள்ளம் மேடு பெரிதேயில்லை......
__________________
சிறந்த வரிகள். கவிதை அருமை.

சிவா.ஜி
17-01-2008, 10:13 AM
பின்னூட்டத்திற்கு நன்றி ஈஸ்வரன்.

யவனிகா
17-01-2008, 10:25 AM
தேடுதலே வாழ்க்கையாகிப் போனது அண்ணா...குறைவதைத் தேடுகிறோம்...சில நேரம் என்ன குறைகிறது என்றே தெரியாமலே தேடுகிறோம்...

பட்டறிவு உங்களுக்கு பக்கமிருக்கிருக்கிறது..தப்பிக்கலாம்.இனி தான் படப் போகிறவர்கள் எப்படித் தப்பிப்பது...

நல்ல வரிகள் அண்ணா...தட்டுங்கள் திறக்கப்படும்...தேடுங்கள் கிடைக்கும்...கிடைச்சிச்சின்னா தங்கச்சியோட பங்கை மறக்காம எடுத்து வைங்க...

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

ஆதி
17-01-2008, 10:33 AM
சாலையில் போது தனி வழிப் பயணம்
சாலையின் முடிவில் வருவது மரணம்..

- கவியரசர் - கண்ணதாசன் கவிதைகள் - ஐந்தாம் தொகுதி

இப்படி கண்ணதாசன் கவிதைப் போல ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தத்துவக்கவிதைப் படிக்கிறே சிவா அண்ணா..

ஒரு கையில் என் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டு
மறு கையில் ஆடைகள் தைத்தேன்

- வைரமுத்து - இதுவரை நான்

மூச்சுக்கூட விட இயலா நிலையில்..
முட்டி முட்டி முளைத்தது
முயற்சி..

காப்பு காய்த்த
கைகளின் உழைப்பில்..
கரைந்து போனது
வாழ்க்கையின் இருட்டு..

மண்ணைப் பார்த்த
கண்கள்
மலையைப் பார்த்து
மலைத்த போதும்..
மனது கொஞ்சமும் அஞ்சவில்லை..
மலைகள் என் பாதையில்
எஞ்சவில்லை..

இடறி விழுந்த
இடத்தில் எல்லாம்
எழுந்து நின்றதால்
என்னைத் தொட்டது வெற்றி..

அடங்கி நின்ற
அவைகள் எல்லாம்
அடங்கிப் போனது என்
அடக்கத்தாலே..

அறிந்ததை எல்லாம்
அளந்த போதுதான்
அறிந்து கொண்டேன்
அறியாததை எல்லாம்..

அடைந்ததை வைத்து
அறிந்து நடக்கிறேன்
அறிய இருப்பதை
அறியும் ஆவலில்..

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.. சிவா அண்ணா.. கண்ணதாசனைப் பார்க்கிறேன் உங்கள் வரிகளில்..

-அன்புடன் ஆதி

சிவா.ஜி
17-01-2008, 10:33 AM
தேடுதலே வாழ்க்கையாகிப் போனது அண்ணா...குறைவதைத் தேடுகிறோம்...சில நேரம் என்ன குறைகிறது என்றே தெரியாமலே தேடுகிறோம்...
அருமையான வரிகள் தங்கையே....அதைத்தான் நானும் சிந்திக்கிறேன்...எனக்கு என்ன தேவை?....எதைத்தேடி இந்த பயணம்?
கிடைத்ததில் திருப்தியா? ஆனாலும் தேடல் தொடர்கிறது.நம்பிக்கையுடனான இந்த தேடல் நிச்சயம் நல்லதைத் தரும்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றான்
ஞானத்தங்கமே

நன்றிம்மா.

வசீகரன்
17-01-2008, 10:45 AM
வாழ்க்கைப்பாதையில் இடர்ப்படும் தடைக்கற்களை
படிக்கற்ககளாகி சொல்லும் இது போன்ற நல்ல கவியை மீண்டுமொரு முறை மன்றத்தில் உங்களிடமிருந்து பெறுகிறோம் அண்ணா...

இடக்கையில் எதிர்ப்பையும்
வலக்கையில் அவமானத்தையும்
சுருட்டி அக்குளில் அடக்கிவிட்டு
அடுத்த அடியை
அயராது வைக்கவே விருப்பம்
பட்டறிவு பக்கமிருக்க
பாதை கடினமில்லை.........
பள்ளம் மேடு பெரிதேயில்லை......

அருமையான வரிகள்...!

சிவா.ஜி
17-01-2008, 10:52 AM
மிக்க நன்றி வசீகரா.இன்றைய இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மிக அதிகம்.கூடவே இப்படி சில ஊக்கவரிகளும் கிடைக்குமென்றால் அவர்களுக்கு வானமே எல்லை.

சிவா.ஜி
17-01-2008, 12:08 PM
ஆதி....என்ன சொல்வது....பிரமாதமான வரிகள்.அசத்திவிட்டீர்கள்.

அறிந்ததை எல்லாம்
அளந்த போதுதான்
அறிந்து கொண்டேன்
அறியாததை எல்லாம்..

அடைந்ததை வைத்து
அறிந்து நடக்கிறேன்
அறிய இருப்பதை
அறியும் ஆவலில்..

ஆஹா.....அகர வரிசையில் ஒரு அற்புதம்.வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் ஆதி.

செல்வா
17-01-2008, 12:24 PM
தொட்ட இடமெல்லாம்
தோல்விகள் தீண்டின
நட்ட விதையெல்லாம்
முளைக்காமல் மாண்டன
இருந்தும்
தட்டி தடையுடைத்து
முட்டி முன்னே செல்கிறேன்!

இத ஒருத்தருக்கு இப்பவே அனுப்பிட்டன் அண்ணா.......
மனச ரொம்ப கவர்ந்துட்டுது..... சுவரில் எழுதி வைத்து தினம் பாடித்து வாழவேண்டியது....

சிவா.ஜி
17-01-2008, 12:27 PM
நன்றி செல்வா....நான் எப்போதோ படித்த ஒரு வாக்கியம்.
தொடங்காமைதான் தோல்வியைத்தரும்.
அதனால் எந்த தடையோ தொடங்கிவிட வேண்டும்....தடைகளை உடைத்துவிடலாம்.

பென்ஸ்
17-01-2008, 01:18 PM
சிவா.. நலமா...

என்னடா பின்னுட்டத்தில் நலம் விசாரிக்கிறனே என்று நினைக்க வேண்டாம்...
பணி பளு.. குடும்ப வாழ்க்கைக்கு கொஞ்சம் முன்னுரிமை, என மன்ற வரவு குறைவாவது உண்மைதான்..
இருந்தாலும் இந்த வாழ்க்கை சக்கரம் மீண்டும் சுழன்று சீக்கிரமே பழைய நிலைக்கு வரும்....

சில கவிதைகள் வாசிக்கும் போது நமக்கு மனதில் தோன்றும்
உவமைகளோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வது வழக்கம்.
முதலில் இந்த வகை "திறந்த பொருள்" வரிகளை கொடுப்பதற்க்கு நன்றி....

நான் இந்த வகை கவிதைகளை மிகவும் விரும்புவேன்...
தோழி கவிதா கொடுக்கும் கவிதைகள் இதை போன்றவை.
இந்த வகை கவிதைகளுக்கு பின்னூட்டம் இடும் போது நானும்
கொஞ்சம் கவனமாகவே பதில் இடுகிறேன்.

தேடல்...
தனக்காக சிலை வடிக்க உளி கொண்டு நெடுவழி பயணம்.
தேடலில் மனம் சிறு கல்லுக்கு ஆசை பட்டு போவதும்,
அந்த கல்லை வடிக்க முயன்று தோற்று போவதும்...
அதனாலே நல்ல கல் தேடி பயணம்.

ஆனால் சிவா பாருங்கள் சில நேரங்களில் சமுதாயம் நம்மோடு சிலையை சுமக்கவும் வைத்துவிடுகிறது.

கல்லோ...!!!மனிதனோ...!!!!
நாம் நினைப்பதுபோல் அமையவேண்டும் என்று கல்லை
செதுக்குவதாய் நினைத்து உடைத்துவிடுவதும் உண்டு....

அவமானமும் எதிற்ப்பும் எங்கிருந்து வருகிறது... ?
சமுதாயத்தில் இருந்து தானே... !!!
பயணம் தான் சமுதாயத்தை தாண்டி போகிறது,
பிறகு எதற்க்காக அவற்றை அக்குளில் சுமந்து கொண்டு...
தூர எறிந்து செல்லலாம் என்பது என் கருத்து....

நல்ல கவிதைக்கு நன்றியும்... பாராட்டும்.

சிவா.ஜி
17-01-2008, 02:24 PM
மிக நலமே பென்ஸ்.

உங்களின் வித்தியாசப்பார்வையில் வந்த பின்னூட்டம் பார்த்து வியக்கிறேன்.என்ன ஒரு கோணம்?....சரியான கருத்து.பல நேரங்களில் நாம் கல்லை உடைத்துதான் விடுகிறோம்.

ஏன் அந்த அவமானத்தையும்,எதிர்ப்பையும் தூர எறியவில்லை என்றால்...அது எங்கேயாவது சுற்றிக்கொண்டு மீண்டும் நம் முன்னால் வந்து பாதை மறிக்கும்.அடக்கி அக்குளில் வைத்துக்கொண்டால் எதிர்வராதல்லவா...அதைத்தான் சொன்னேன்.

சமுதாயம் நமக்கு நல்லதையும் தரும்,கெட்டதையும் தரும்.அதை பட்டறிவினால்தான் வகைபிரித்து வழிதேட முடியும்.

மிக்க நன்றி பென்ஸ்.

ஷீ-நிசி
17-01-2008, 03:03 PM
தோல்வியில் இருக்கும் ஒவ்வொரு மனங்களுக்கும் ஒரு உத்வேகம் தரும் வரிகள் தான் இவைகள்...

தேடியவை கிடைத்தபின்னும்,
மீண்டும்.....
தேடலை உருவாக்கிக்கொள்கிறவனே,
சிறந்த கலைஞனாக இருக்க முடியும்!

வாழ்த்துக்கள் சிவா.ஜி

ஓவியன்
17-01-2008, 03:03 PM
சிலை வடிக்க கல் தேடி
உளியோடு உலா போனேன்
கிடைத்த கல்லில்
வடித்த சிலையில்
வடிவம் வரவில்லை
இருந்தும்
வசமான கல்தேடி
பயணம் தொடர்கிறேன்!......

லாஜிக் சரிதானா சிவா....??
கிடைத்த கல்லில் சிலை வடிவம் சரியாகவில்லை என்பதற்காக வசமான கல்லைத் தேடிப் போக வேண்டுமென்பது....???

வாய்ப்புக்களை நாம் தேடிப் போகக் கூடாது, வாய்ப்புக்களை நாமே உருவாக்கணும் என்ற கொள்ளை உடையவன் நான்...

அந்த எண்ணத்துடன் பார்க்கையில், மேற்கண்ட வரிகள் நெருடுவதாக ஒரு எண்ணம் எனக்கு...

மற்றும் படி, எதிர்ப்புக்கள் பழிப்புக்களை புறந்தள்ளி, முட்டி முன்னேறு என்று சொல்லி நிற்கும் அழகுக் கவிதைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

ஷீ-நிசி
17-01-2008, 03:14 PM
லாஜிக் சரிதானா சிவா....??
கிடைத்த கல்லில் சிலை வடிவம் சரியாகவில்லை என்பதற்காக வசமான கல்லைத் தேடிப் போக வேண்டுமென்பது....???

வாய்ப்புக்களை நாம் தேடிப் போகக் கூடாது, வாய்ப்புக்களை நாமே உருவாக்கணும் என்ற கொள்ளை உடையவன் நான்...

அந்த எண்ணத்துடன் பார்க்கையில், மேற்கண்ட வரிகள் நெருடுவதாக ஒரு எண்ணம் எனக்கு...

மற்றும் படி, எதிர்ப்புக்கள் பழிப்புக்களை புறந்தள்ளி, முட்டி முன்னேறு என்று சொல்லி நிற்கும் அழகுக் கவிதைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

ஓவியன் உனக்கு தோன்றின அதே எனக்கும் தோன்றியது.. ஆனால் அடுத்த நிமிடமே அதற்கான காரணமும் வந்து சேர்ந்தது...

கிடைக்கின்ற எல்லா கல்லிலியுமே நம்மால் சிலைவடிக்க இயலாது. சில கல்கள் மட்டுமே சிற்பம் வடிக்கபயன்படும்...

எப்படி எல்லா மண்களுமே வீடுகட்ட பயன்படாதோ அதுபோல....

ஆனால், நாம் கிடைத்தகல்லில் சிலை வடிக்காமல், அதிலே நேரத்தை வீணாக்கிடாமல், தேர்ந்தெடுக்கும் கல்லை சரியாக தேர்ந்தெடுத்தால், உழைப்பும் வீணாகாது.. நேரமும் விரயமாகாது...

ஓவியன்
17-01-2008, 03:21 PM
உண்மைதான் ஷீ..!!

நீங்கள் தந்த காரணம் மெத்தச் சரியே...

சிவா.ஜி
18-01-2008, 04:23 AM
லாஜிக் சரிதானா சிவா....??
கிடைத்த கல்லில் சிலை வடிவம் சரியாகவில்லை என்பதற்காக வசமான கல்லைத் தேடிப் போக வேண்டுமென்பது....???

வாய்ப்புக்களை நாம் தேடிப் போகக் கூடாது, வாய்ப்புக்களை நாமே உருவாக்கணும் என்ற கொள்ளை உடையவன் நான்...

அந்த எண்ணத்துடன் பார்க்கையில், மேற்கண்ட வரிகள் நெருடுவதாக ஒரு எண்ணம் எனக்கு...


அன்பு ஓவியன்...இதில் நான் சொல்ல வருவது...உளி என்ற திறமையை உடன் வைத்துக்கொண்டு அதை வெளிப்படுத்த நல்ல கல்லாய் தேடிப்போகிறோம்.அதாவது கல் என்பது இங்கே ஒரு நிறுவனத்தைக் குறிக்கும்.நம் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தியும் கல் சரியானதாக இல்லாவிட்டால் சிற்பம் வடிவாக வராது.அதைப்போலத்தான் அந்த நிறுவனத்தில் நம் திறமை பிரகாசிக்கவில்லையா...அதை விட்டுவிட்டு வேறொன்றைத் தேடவேண்டும்.
நமக்கு முந்தைய தலைமுறையினர்தான் விசுவாசம் அது இது என்று சொல்லிக்கொண்டு வாழ்நாள் முழுவது ஒரே கல்லை செதுக்கிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.நீங்களே சொலவதைப்போல வாய்ப்பை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதால் அடுத்தக்கல்லை நாடிப் போகிறோம்.இதில் ஷீ-நிசி சொன்னது ஏற்கக்கூடியதாக உள்ளது.வாகான கல்லாக முன்னமே தேர்ந்தெடுத்துவிட்டால் காலவிரயமும்,உழைப்பு வீணாவதையும் தடுக்கமுடியும்.

அந்த தேர்ந்தெடுக்கும் நேரம்தான் கல்தேடும் நேரம்.ஆனால் வெறுமனே காசில்லாமல் தேடிக்கொண்டிருப்பதைவிட ஒரு நிறுவனத்தில் சேர்ந்து சம்பாதித்துக்கொண்டே அடுத்த இன்னும் மேன்மையான கல்லை தேடி அடையலாம்.

அப்பா....நீண்ட விளக்கம்...மூச்சு வாங்குது...நன்றி ஓவியன்.

நேசம்
18-01-2008, 04:54 AM
தேடல் தான் ஒருவனை வெற்றியாளராக ஆக்குகிறது என்பதை உணர்த்தும் கவிதை.அருமை சிவாண்ணா

சிவா.ஜி
18-01-2008, 05:25 AM
தேடல் தான் ஒருவனை வெற்றியாளராக ஆக்குகிறது என்பதை உணர்த்தும் கவிதை.அருமை சிவாண்ணா

கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் தேடல் அவசியம் நேசம்.மிக்க நன்றி. நீங்கள் நலமா? எப்போது பயணம்?

அமரன்
18-01-2008, 07:36 AM
பார்வையில் படும்
எல்லா கல்லும் சிலை ஆவதில்லை.
எல்லார் பார்வை பட்டும்
கற்கள் சிலை ஆவதில்லை.

அழகான சிலைக்கு காரணம்
கல்லாகலாம்;
சிற்பியும் ஆகலாம்.
பாராட்டு அப்போது பங்கிடப்படும்.

செதுக்கையில் கல்லு சிதறினால்
ஒருதலைபட்சமாக பங்கீடு
சிற்பி தலையில் பாறாங்கல்.
தலைக்குப் பின்னால் கறுப்பு வட்டம்.
பாதையில் சிதறிய பரள்கள்
பாதங்களை குத்திக் கிழித்தபடி

பார்த்து பதமாக பதிக்கவேண்டும்
உளி முனையை..
சறுக்கினால் உடைவது கல்மட்டுமல்ல..

சிந்தனையைதூண்டும் கவிதை பாராட்டுகள்.:icon_b:

சாராகுமார்
18-01-2008, 08:00 AM
சிவா அவர்களின் தடையுடைத்த பயணம் தேடல் கவிதை அருமை.அதற்கு பின்னூட்டமாக வந்த கவிதைகளும் அருமை.அனைவருக்கும் பாராட்டுக்கள்.

சிவா.ஜி
19-01-2008, 08:20 AM
செதுக்கையில் கல்லு சிதறினால்
ஒருதலைபட்சமாக பங்கீடு
சிற்பி தலையில் பாறாங்கல்.
தலைக்குப் பின்னால் கறுப்பு வட்டம்.
பாதையில் சிதறிய பரள்கள்
பாதங்களை குத்திக் கிழித்தபடி

அருமையான வரிகள் அமரன். சிற்பி தலையில் பாறாங்கல். உண்மைதான் பெரும்பாலான சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது. இருந்தும் தளரக்கூடாது.அதே பாறாங்கல்லை திரும்பவும் சிலையாக்கும் சிந்தனை வேண்டும்.
மிக்க நன்றி அமரன்.

சிவா.ஜி
19-01-2008, 08:21 AM
சிவா அவர்களின் தடையுடைத்த பயணம் தேடல் கவிதை அருமை.அதற்கு பின்னூட்டமாக வந்த கவிதைகளும் அருமை.அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஆமாம் சாராகுமார்.பின்னூட்டக்கவிதைகள் அத்தனையும் மிக அருமை.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.