PDA

View Full Version : 'ரிலையன்ஸ் பவர்' சாதனைஇராசகுமாரன்
16-01-2008, 01:22 PM
http://www.rupya.com/img/logo/reliance_power.jpg

தீருபாய் அம்பானியின் இளைய மகன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம், பொதுப் பங்குகளை நேற்று (ஜனவரி 15, 2008) முதல் வெளியிட்டுள்ளது.

26 கோடி பங்குகள் வெளியீடு செய்கிறது, இதன் மூலம் ரூ.11 ஆயிரத்து 700 கோடி (2.97 பில்லியன் அமெரிக்க டாலர்) திரட்ட ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை, நமது நாட்டின் பல மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக இந்த நிதியை திரட்டுகிறது.


இது தான் இந்திய பங்கு வரலாற்றிலேயே மிகப்பெரிய பங்கு. இதற்கு முன் சமீபத்தில் வெளியான DLF பங்குகள் (ரூ. 9,188 கோடிகள்) தான் இதுவரை மிகப் பெரிய பங்காக இருந்து வந்தது.


நேற்று இந்த பங்கு வெளியிடப்பட்ட 60 வினாடிகளிலேயே எட்ட வேண்டிய தொகைக்கு விண்ணப்பம் செய்யப் பட்டு சரித்திரம் படைத்துள்ளது. இதுவரை இந்திய பங்கு சந்தையில் இது போன்று நிகழ்ந்தது கிடையாது.


நேற்று மட்டுமே இது 10 மடங்கு பங்குகளுக்கு மேல் மனு செய்யப்பட்டு விட்டது. இன்னும் 3 நாட்கள் உள்ளன, அதில் இன்னும் பல சரித்திரம் படைக்க இருக்கிறது.


ஒரு பங்கின் விலை: 450 ரூ
சிறிய பங்குதாரர்களுக்கு: 20 ரூ தள்ளுபடி
NRI அதிக பட்சமாக 225 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். (இந்தியாவிலும் இப்படி தானா?)
துவக்க நாள்: 15-ஜனவரி-2008
முடிவு நாள்: 18-ஜனவரி-2008


பொதுப் பங்கில் விண்ணப்பத்த அளவு கிடைக்க வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால், 6 மாதத்திற்குள் 100% உயர்வு அடைய வாய்ப்புகள் அதிகம்.

அறிஞர்
16-01-2008, 01:26 PM
வியாபார உலகில்.. பலவித முன்னேற்றங்கள்.

இந்த பங்குகளை!! நம் மக்கள் யாரு யாரு வாங்கியிருக்காங்க....

சூரியன்
16-01-2008, 01:30 PM
மிகவும் பயனுள்ள தகவல்.

சிவா.ஜி
16-01-2008, 01:32 PM
நாங்க சவுதியில இருக்கோம் பங்குகளை எப்படி வாங்குவது?

இராசகுமாரன்
17-01-2008, 04:10 AM
நாங்க சவுதியில இருக்கோம் பங்குகளை எப்படி வாங்குவது?

பங்கு வணிகத்தில் இறங்க முதல் தேவை PAN (Permanent Account Number) கார்ட்.

அதன் பின் ஒரு Demat Account, பிறகு ஒரு Trading Account + NRI account.

இவை அனைத்தையும் ஒரு பங்கு வணிக சேவை நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம், அல்லது PAN கார்டை நாம் தனியாக பெற்றுக் கொண்டு மற்ற சேவைகளை அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

வளைகுடா நாட்டில் பங்கு வணிக சேவையை தற்போது மூன்று/நான்கு நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன.

அவை ICICIDirect, Geojit, ShareKhan ஆகும். (Kotak Mahindra மற்றும் Motilal Oswal சமீபத்தில் தான் வந்துள்ளது, அவர்கள் சிறு முதலீட்டார்களுக்கு உகந்தவர்களல்ல).

இவற்றை தொடர்பு கொண்டு, அவர்களின் சேவை உங்கள் நாட்டில் இருந்தால், அவர்களுடன் உங்கள் பங்கு வணிக கணக்கை துவங்கிக் கொள்ளலாம்.

எனக்கு தெரிந்து;
யூஏஇ-யில் - ICICIDirect, Geojit, ShareKhan மூன்றும் உள்ளது
ஒமன்-ல்- ICICIDirect, Geojit முதலிரண்டு மட்டும்.
சவுதி,குவைத்,கத்தார்,பஹரைன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு ICICIDirect மட்டுமே தற்போதுஉள்ளது

சிவா.ஜி
17-01-2008, 05:48 AM
மிகத்தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி ராசகுமாரன் சார்.இதுவரை வருமான வரி செலுத்தவேண்டிய அவசியம் வராததால் PAN கார்ட் வாங்கவில்லை.இந்தமுறை முயற்சிக்கவேண்டும்.ICICI-யை தொடர்புகொண்டு கேட்டுப்பார்க்கிறேன். மிக்க நன்றி.

sarcharan
17-01-2008, 08:45 AM
இதை வாங்க இங்க போட்டா போட்டி காட்டா குஸ்தி...

arsh
18-01-2008, 02:52 PM
ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு 73 மடங்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ரூ. 11,700 கோடி x 73, அடேயப்பா!

ICICIDirect போல் HDFC Securities நிறுவனமும் பங்கு வணிக சேவை வழங்குகிறது.

anna
19-01-2008, 11:56 AM
நல்ல பயனுள்ள தகவல்

srimariselvam
19-01-2008, 12:51 PM
சந்தையை கரடிப்பிடியிலிருந்து ரிலையன்ஸ் பவர்தான் காப்பாற்றும் போலிருக்கு.

sarcharan
22-01-2008, 01:45 PM
மின்னஞ்சலில் எனக்கு வந்த நகைச்சுவை..

Latest Blockbuster "SAARE ZAMEEN PAR" ..
Premiered Yesterday at BSE and NSE..
Directed and Produced by Ambani Bros,
POWER ON.. MARKET GONE

க.கமலக்கண்ணன்
23-01-2008, 05:53 AM
சந்தையை கரடிப்பிடியிலிருந்து ரிலையன்ஸ் பவர்தான் காப்பாற்றும் போலிருக்கு.

அதில் சந்தேகமே இல்லை அன்பரே
அதுதான் நடக்க போகிறது.

ஆர்.ஈஸ்வரன்
23-01-2008, 06:04 AM
பயனுள்ள தகவல்

aren
23-01-2008, 06:54 AM
இன்று ரிலையன்ஸ் பவரின் விலை என்ன?

இந்தப் பங்கு அதற்குள் இண்டெக்ஸிற்கு வந்துவிட்டதா? அப்படி வரவில்லையென்றால் இதனால் இண்டெக்ஸிற்கு எந்தவிதமான ஏற்ற இறக்கமும் இருக்காது. இதனால் இண்டெக்ஸை நிறுத்தமுடியாது.

இராசகுமாரன்
23-01-2008, 12:38 PM
ஆரன்,

இந்த பங்கு இன்னும் லிஸ்டிங் ஆகவில்லை. ஜனவரி 18-ம் தேதி தான் ஐபிஓ முடிவு பெற்றது.

பொதுவாக ஐபிஒ முடிந்த இரண்டு வாரத்தில் லிஸ்டிங் ஆகும். அனேகமாக இன்னும் 8-10 நாட்களில் லிஸ்டிங் ஆகலாம்.

துவக்க விலை ரூ. 450 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. லிஸ்டிங் ஆன முதல் நாளிலேயே 100% முதல் 150% வரை செல்ல வாய்ப்பு இருந்தது. அதை எதிர்பார்த்து தான், குறுகிய காலத்தில் பெரிய இலாபம் காண பலர் இதில் முதலீடு செய்தார்கள்.

ஆனால், சமீபத்திய சரித்திரம் காணா சரிவுக்கு பிறகு, நிர்ணயித்த விலையில் இருந்து 10%-20% கூடினாலேயே பெரிய விசயம் என்று தோன்றுகிறது.

ஆனால், எது எப்படியோ, நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த பங்கு. இது குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு உகந்ததல்ல.


இன்று ரிலையன்ஸ் பவரின் விலை என்ன?

இந்தப் பங்கு அதற்குள் இண்டெக்ஸிற்கு வந்துவிட்டதா? அப்படி வரவில்லையென்றால் இதனால் இண்டெக்ஸிற்கு எந்தவிதமான ஏற்ற இறக்கமும் இருக்காது. இதனால் இண்டெக்ஸை நிறுத்தமுடியாது.

இளஞ்சூரியன்
26-01-2008, 07:10 PM
சந்தையை கரடிப்பிடியிலிருந்து ரிலையன்ஸ் பவர்தான் காப்பாற்றும் போலிருக்கு.

அம்பானிகளின், சந்தையின் கை முறுக்கும் திறன், அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களின் அப்பா இதில் எம்டன். மணிரத்னத்தின் குரு படம் இவர்களின் அப்பாவின் வாழ்க்கை என்பது போல் வந்தது. இந்திரா காந்தி காலத்தில் அவர் பாலியஸ்டரில் விளையாடியதையும், அவர், போட்டி உற்பத்தியாளர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியதையும் பார்த்தவர்கள், பிள்ளைகளையும் அது போல் உணர்வதில் வியப்பில்லை.

பிள்ளைகளுக்கும் அந்த அளவுக்கு சந்தையை திசை திருப்பும் திறன் (Manipulating tactics) இருப்பதாக பலர் உணர்கிறார்கள். எது எப்படியோ, பிள்ளைகள் இருவருக்கும் காங்கிரஸ் அல்லது பி ஜே பி என எது ஆட்சியில் இருந்தாலும் அவர்களை சரி செய்யும் திறன் இருப்பதென்னவோ உண்மை.

இது போன்ற சந்தைகளில் நானும் அரை வேக்காடுதான். ஒரு வங்கியில் சிறிது காலம் பணி புரிந்த அனுபவம் இப்போதும் கை கொடுக்கிறது.

saguni
24-02-2008, 02:40 PM
இன்று இலவச பங்குகளை அளிப்பதாக அனில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு 5 பங்குகளுக்கும் 3பங்குகள் இலவசமாம். நல்ல செய்திதான்