PDA

View Full Version : ஷிட்னி ஷெல்ட்டன்



மயூ
16-01-2008, 03:37 AM
1911 ல் அமெரிக்காவில் பிறந்தவர்தான் எங்கள் ஷிட்னி ஷெல்ட்டன். திரைப்படங்கள், தொலைக்காட்சிச் தொடர்கள் போன்றவற்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் பிரபலமான இவர் தனது 50வது வயதின் பின்னர் எழுதிய நாவல்கள் உலகை இவரை நோக்கிப் பார்க்க வைத்தது.


இவர் எழுதிய நாவல்களில் உலகப் புகழ் பெற்றது...

மாஸ்டர் ஒப் த கேம்
ரேஜ் ஒப் ஏன்ஞல்ஸ்
தி அதர் சைட் ஓஃப் த மிட் நைட்
இவர் ஒரு ஜூத இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தாயார் ருசிய யூத இனத்தையும் தந்தை ஜேர்மன் ஜூத இனத்தையும் சேர்ந்தவர்கள்.

உலக யுத்தம் II ல் விமான ஓட்டியாகப் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். Dooms day conspiracy எனும் நாவலில் இதன் தாக்கத்தைக் காணலாம்.

The Naked Face எனும் முதலாவது நாவலை 1969 ல் எழுதினார். அடுத்த நாவல் The Other Side of Midnight விற்பனையில் சாதனை படைத்ததோடு, பல விருதுகளையும் பெற்றது.

இவர் நாவல்கள் ஒரு சாதூரியமான ஒரு பெண் பாத்திரத்தை நோக்கியே அல்லது சுற்றியே நடக்கும். ரமணிச்சந்திரனைப் போல இவருக்கும் பெண் வாசகிகளே அதிகம்.திரைப்படங்களில் இல்லாத சுகந்திரம் நாவல் எழுதுவதில் கிடைப்பதால், நாவல் எழுதுவதையே தான் விரும்புவதாக கூறியிருந்தார்.

2005 ல் வெளி வந்த The other side of me, என்ற சுயசரித்தின்படி 17ம் வயதில் தற்கொலை முயற்சி செய்த போதும் அவரது தந்தையால் காப்பற்றப்பட்டாராம்.

இத்தனை சிறப்பான எழுத்தாளர் 2007ல் நியூமோனியாவால் பாதிக்கப்பட்டு இறையடி சேர்ந்தார்.

இவர் எழுதியுள்ள நாவல்கள்...

The Naked Face (http://en.wikipedia.org/wiki/The_Naked_Face) (1970)
The Other Side of Midnight (http://en.wikipedia.org/wiki/The_Other_Side_of_Midnight) (1973)
A Stranger in the Mirror (http://en.wikipedia.org/wiki/A_Stranger_in_the_Mirror) (1976)
Bloodline (http://en.wikipedia.org/wiki/Bloodline_%28novel%29) (1977)
Rage of Angels (http://en.wikipedia.org/wiki/Rage_of_Angels) (1980)
Master of the Game (http://en.wikipedia.org/wiki/Master_of_the_Game) (1982) வாசித்தாகி விட்டது
If Tomorrow Comes (http://en.wikipedia.org/wiki/If_Tomorrow_Comes) (1985)
Windmills of the Gods (http://en.wikipedia.org/wiki/Windmills_of_the_Gods) (1987)
The Sands of Time (http://en.wikipedia.org/wiki/The_Sands_of_Time) (1988) வாசித்தாகி விட்டது
Memories of Midnight (http://en.wikipedia.org/wiki/Memories_of_Midnight) (1990)
The Doomsday Conspiracy (http://en.wikipedia.org/wiki/The_Doomsday_Conspiracy) (1991) வாசித்தாகி விட்டது
The Stars Shine Down (http://en.wikipedia.org/wiki/The_Stars_Shine_Down) (1992)
Nothing Lasts Forever (http://en.wikipedia.org/wiki/Nothing_Lasts_Forever_%281994_novel%29) (1994)
Morning, Noon and Night (http://en.wikipedia.org/wiki/Morning%2C_Noon_and_Night) (1995) புத்தகம் வாங்கியாச்சு, ஆரம்ப்பிக்கணும்
The Best Laid Plans (http://en.wikipedia.org/wiki/The_Best_Laid_Plans) (1997)
Tell Me Your Dreams (http://en.wikipedia.org/wiki/Tell_Me_Your_Dreams) (1998)
The Sky is Falling (http://en.wikipedia.org/wiki/The_Sky_is_Falling_%28novel%29) (2001)
Are You Afraid of the Dark? (http://en.wikipedia.org/wiki/Are_You_Afraid_of_the_Dark%3F_%28novel%29) (2004)
Catoplus Terror (http://en.wikipedia.org/w/index.php?title=Catoplus_Terror&action=edit)இவர் படைப்புகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

lolluvathiyar
17-01-2008, 07:50 AM
மிக சிறந்த எழுத்தாளர். நான் இவரின் சில கதைகளை படித்திருகிறேன். எனக்கு இவர் கதைகளில் மிகவும் பிடித்ததுஇ ரேஜ் ஆப் ஏஞ்சில்ஸ்தான்.

மயூ
17-01-2008, 01:45 PM
ஆமாம் வாத்தியார் இக்கதை தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டதாம்!

செல்வா
18-01-2008, 08:59 AM
நான் ஆங்கில நாவல்கள் அவ்வளவாக வாசித்ததில்லை... அந்த அளவுக்கு அங்கில அறிவு இல்லாததே காரணம். ஆனால்... முயற்ச்சிக்கிறென் இனி வாசிக்க... பகிர்ந்தமைக்கு நன்றிகள் மயூ நீங்களெ.. வாசித்த கதைகளைப் பற்றிய விமர்சனங்களைத் தரலாமே...

ஆர்.ஈஸ்வரன்
18-01-2008, 09:51 AM
நான் ஆங்கில நாவல்கள் வாசித்ததில்லை... அந்த அளவுக்கு ....

மயூ
21-01-2008, 01:48 PM
நான் ஆங்கில நாவல்கள் அவ்வளவாக வாசித்ததில்லை... அந்த அளவுக்கு அங்கில அறிவு இல்லாததே காரணம். ஆனால்... முயற்ச்சிக்கிறென் இனி வாசிக்க...
சில வருடங்கள் முன்பு நான் கூட அப்படித்தான் நினைத்தேன். முயற்சித்தால் முடியாதது இல்லை.
:)

நிச்சயமாக எழுதுகின்றேன்!!!
:cool:

நான் ஆங்கில நாவல்கள் வாசித்ததில்லை... அந்த அளவுக்கு ....
ஒரு மாற்றத்திற்கு வாசித்துப் பாருங்கள்!!! :icon_b:

சாம்பவி
21-01-2008, 08:33 PM
இவையும்
இன்னாரின்
இன்னும் பலவும்
இ*புத்தகமாய்....
இங்கே
http://www.tamilmantram.com/vb/downloads.php

aren
22-01-2008, 01:18 AM
எனக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியர்களில் இவர் முதன்மையானவர். கல்லூரி படிக்கும்பொழுது இவருடைய ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் நாவலை இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை ஆறு மணிக்கும் தொடர்ந்து படித்து முடித்துவிட்டேன். இவருடைய நாவல்களை படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.

எனக்கு பிடித்த அவருடைய நாவல்கள் ரேஜ் ஆஃப் ஏன்சல்ஸ், அதர் சைடு ஆஃப் மிட்னைட், மாஸ்டர் ஆஃப் தி கேம், பிளட் லைன், ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிரர் ஆகியவை.

மயூ
22-01-2008, 02:03 AM
எனக்கு மிகவும் பிடித்த நாவலாசிரியர்களில் இவர் முதன்மையானவர். கல்லூரி படிக்கும்பொழுது இவருடைய ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ் நாவலை இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை ஆறு மணிக்கும் தொடர்ந்து படித்து முடித்துவிட்டேன். இவருடைய நாவல்களை படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.

எனக்கு பிடித்த அவருடைய நாவல்கள் ரேஜ் ஆஃப் ஏன்சல்ஸ், அதர் சைடு ஆஃப் மிட்னைட், மாஸ்டர் ஆஃப் தி கேம், பிளட் லைன், ஸ்ட்ரேஞ்சர் இன் தி மிரர் ஆகியவை.
பார்த்தீர்களா... இதைத்தான் சொன்னோம்... இவர் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினால் நிறுத்தவே முடியாது!!!! ஆரன் அண்ணா நல்ல உதாரணம்!!! :icon_b:

தங்கவேல்
22-01-2008, 01:14 PM
படிக்கனும்..

sarcharan
22-01-2008, 01:20 PM
தமிழு, தமிழ் நாவல் வேணும்

இளசு
25-01-2008, 08:54 PM
அம்புலிமாமா, மாயாவி, தமிழ்வாணன், சுஜாதா, ஜெயகாந்தன், திஜா என
தமிழ்ரசனையில் என் பயணக்கோடு என்றால்

சேஸ்,ராபின்ஸ்,ஷெல்டன், லுட்லம், ஆர்ச்சர், வாலஸ், ரயண்ட் , இப்போது
நாவல் அல்லாத அறிவியல் நூல்கள் - என ஆங்கிலத்தில் சொல்லலாம்.

கல்லூரியின் ஆரம்பக்காலங்களில் நானும் ஆரென் போலவே விடிய விடிய ஷெல்டனுடன் கழித்திருக்கிறேன்.

இவர் எவ்வளவு பிரபலம் என்றால் போலி நாவல்கள் இவர் பெயரில் எழுதி விற்று பலர் பிழைக்கும் அளவுக்கு..

ரேஜ் ஆஃப் ஏஞெல்ஸை ரா.கி.ரங்கராஜன் தமிழில் (குமுதம்) தொடராய் தந்தார்.

மலையாளிகள் இக்கதையை (ஓசியில்) சுட்டு ராஜாவிண்ட மகன் என படம் எடுக்க
கே பாலாஜி அதை காசு கொடுத்து காப்புரிமை வாங்கி மக்கள் என் பக்கம் என தமிழில் எடுக்க ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸின் பெண் வக்கீல், அவளைத் தாயாக்கிய அரசியல்வாதி, நல்ல தாதா என வாசனைகள்
மக்கள் என் பக்கத்தில் காணலாம்.

இன்னொன்றையும் (இஃப் டுமாரோ கம்ஸ்) மலையாளம் சுட்டு கமலஹாசனின் விரதம் என வந்தது..

காப்புரிமை காசு தரவில்லை என்றாலும்
தென்னகப் படவுலகம் இவர் மறைவுக்கு
மனதார நன்றியஞ்சலியாவது செய்திருக்க வேண்டும்..

சத்தியம்
26-01-2008, 08:03 AM
இது தெரியுமா?:fragend005:
அன்னியன் படத்தோட கதை இவரோட Tell Me about your Dreams Novelன் அப்பட்டமான ஜெராக்கிஸ்.
னான் படித்த முதல் நான் படித்த முதல் English நாவலும் இதுதான் best நாவலும் இதுதான்

lolluvathiyar
26-01-2008, 10:26 AM
மக்கள் என் பக்கம் சினிமாவும் சிட்னி செல்டனின் ரேஜ் ஆப் ஆஞ்சில்ஸின் அப்பட்டமான காப்பி கொஞ்சம் தமிழ் மசாலா சேர்க்க பட்டது. என்ன நம்ம கதையில் வில்லன் நல்லவனாகி விடுவான்

aren
26-01-2008, 10:29 AM
இளசு அவர்களும் இர்விங் வாலஸ் வாசகரா. இன்றும் என் மனதில் அழியாமல் அவர் எழுதிய Almighty, The Second Lady, Carpet Beggars அருமையோ அருமை.

Almighty - மலையாளத்தில் மம்மூட்டி நடித்த New Delhi ஒரு அப்பட்டமன காப்பியாகும். அதுவும் இந்தியில் வந்து பெரும் வெற்றி பெற்றது.

lolluvathiyar
27-01-2008, 05:03 AM
இளசு அவர்களும் இர்விங் வாலஸ் வாசகரா.

நானும் இர்விங் வாலஸின் பரம ரசிகன். நீங்கள் குறிபிட்ட ஆல்மைட்டி நான் படித்ததில்லை. ஆனால் செவென் மினிட்ஸ், ப்ரைஸ், ப்ளாட் ஆர் டாக்குமென்ட், மிராக்கிள் படித்திருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது தி பிரைஸ்

aren
27-01-2008, 05:23 AM
நானும் இர்விங் வாலஸின் பரம ரசிகன். நீங்கள் குறிபிட்ட ஆல்மைட்டி நான் படித்ததில்லை. ஆனால் செவென் மினிட்ஸ், ப்ரைஸ், ப்ளாட் ஆர் டாக்குமென்ட், மிராக்கிள் படித்திருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது தி பிரைஸ்

Almighty நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். Edward Amstead என்பவர் தன்னுடைய அப்பா எழுதி வைத்த உயிலால் அவர்களுடை குடும்ப தினசரியான நியூயார்க் என்ஸ்பிரஸின் சர்குலேஷனை ஏற்றுவதற்க்காக செய்யும் வேலைகள் அனைத்தும் அருமை. இதுவே நியூடெல்லி என்று மலையாள சினிமாவாக வந்து போடு போட்டது.

அதுபோல் இன்னொரு படிக்க வேண்டிய புத்தகம் Second Lady. அமெரிக்க அதிபரின் மனைவி போலவே உருவ ஒற்றுமை படைத்தை ரஷ்ய டிராமா நடிகை வோரா வேவலீவாவை நடிக்க வைத்திருப்பார்கள். புத்தகத்தை எடுத்தால் நிறுத்த முடியாது. சந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் படியுங்கள்.